சென்ற வாரம் முதல் முறையாக புத்தகக் கண்காட்சிக்கு முதல் முறை சென்ற போது ஏனோ ஒன்றுமே வாங்கத் தோன்றவில்லை. பாரதி புத்தகாலயத்தில் சிறுவர்கள் எழுதிய [பச்சை யானை - பின்நவீனத்துவம்?] சிறுகதை புத்தகங்கள் மட்டும் 50 ரூபாய்க்கு வாங்கி வந்தேன். இப்போது தான் தேசிகனின் வலைப்பதிவு மூலம் தெரிந்தது நான் புத்தகம் வாங்காததால், புத்தக வியாபாரமே டல் அடித்து விட்டது என்று! அடித்து பிடித்துப் போய் வாங்கி வந்தேன். இந்த முறை சிறுகதைகள் அதிகமாய் வாங்குவதில்லை என்று முடிவு கட்டியிருந்தேன். என் மனைவி, என் மகளுக்கு ஒரு புத்தகம் வாங்கி வரச் சொன்னாள். என் மகளுக்கு நகைச்சுவை உணர்வு கொஞ்சம் அதிகம். உனக்கு என்ன புத்தகம் வேண்டும் என்று கேட்டால் கூட சிரிக்கிறாள்! விசேஷம் என்னவென்றால் அவளின் அம்பதாவது நாள் இன்று!

புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்கள்:

1. மதில்கள் - வைக்கம் முகம்மது பஷீர்
2. அறியப்படாத தமிழகம் - தொ. பரமசிவம் - அறிவோம் என்று வாங்கி இருக்கிறேன்.
3. அம்மா வந்தாள் - தி. ஜானகிராமன் - கடைசியில், என்னிடம் வந்தே விட்டாள்!
4. தமிழர் உணவு - பக்தவத்சல பாரதி  - டிவைன்!
5. நிழல் வீரர்கள் - பி. ராமன் - ஒரு ரா அதிகாரியின் நினைவுக் குறிப்புகள்.
6. காடு - ஜெயமோகன் - வெகு நாட்களாய் படிக்க நினைக்கும் புத்தகம். ரப்பரும் வாங்க வேண்டும். [காட்டை அழிக்கவா என்று கேட்காதீர்கள்!]
7. தாயம் - ரா - வாழ்க்கை பாடம். 
8. தாய் - கார்க்கி - என்ன வெலை கொடுத்தாலும் உன்னால ஒரு "தாயை" வாங்க முடியுமாடா? [கடைக்காரரிடம்] ஒரு தாய் கொடுப்பா! படம்: கன்னி ராசி!
9. பேயோன் 1000 - பேயோனின் ட்வீட்டுகள். இவருடைய சமத்காரமான நகைச்சுவை எனக்குப் பிடிக்கிறது. உதாரணம்: புத்தகத்தில் இருக்கிறது! [இப்படி.] [எப்படி? :-)]


4 Responses
  1. Anonymous Says:

    nee school padikkum podu...tamil puthagam padichiyaada?
    --KRS


  2. school padikkumbothu naan padicha buthakangal:

    Ambulimama
    Poonthalir
    Siruvar Malar
    Kumutham [iraval]
    Vikatan [iraval]


  3. காமிக்ஸ் படிக்க மாட்டீர்களா ?

    இந்த தடவை லயன் முத்து காமிஸ் ஸ்டால் செமையாக இருந்தது.


  4. காடு படித்துவிட்டு (எவ்வளவு வருடங்கள் ஆனாலும் சரி) ஒரு விமர்சனம் போடுங்கள். உங்கள் விமர்சனம் பார்த்த பின்பு 37ஆம் புத்தகக் காட்சியில் அந்த புத்தகம் வாங்க அவா.

    யானை டாக்டர் படித்தீர்களா - ஜெயமோகன் வெப்சைட்டில்.. அது படித்ததில் இருந்து காடு ஜீரம் பற்றிக் கொண்டது