எல்லா சிறந்த நகைச்சுவையும் ஒரு கட்டத்தில்
இதற்குத் தானா அப்படிச் சிரித்தோம்
என்று ஆகி விடுகிறது!
 ------------------------------------------------------
ரொம்ப நாட்களாய் என்னை நானே கேட்டுக் கொண்டிருக்கிறேன். இன்று, உங்களை கேட்கிறேன்.
தனியாய் ஒரு பெண் மட்டும்
ஒரு ஹோட்டலில் அமர்ந்து
உணவருந்துவதை பார்த்திருக்கிறீர்களா?
[KFC, Mc Donalds போன்ற இடங்களைத் தவிர்த்து!] 
 -----------------------------------------------------
பெண்கள் தினத்துக்கு அலுவலகத்தில் ஸ்டால் போட்டு
சேலை, சுடிதார், தோடு, வளையல், செயின் என்று
கொள்ளையடித்தார்கள்.
 
நூற்றி முப்பது ரூபாய்க்கு நான் வாங்கிய தோடுகளும், வளையலும்
வனவாசத்தில் சீதா தேவியார் உபயோகப்படுத்தியது போலிருந்தது!
-------------------------------------------------------------
கணையாழியின் கடைசி பக்கங்கள் படிக்கும்போது
சுஜாதாவின் வாசிப்பு பிரமிக்க வைக்கிறது!
அதே சமயம், அவர் மனைவியிடம் 
எவ்வளவு நேரம் பேசியிருப்பார் 
என்ற கேள்வியை தவிர்க்க முடியவில்லை!!

7 Responses
 1. சுஜாதாவைப் பற்றி நீங்கள் சொன்னது உண்மைதான்.


 2. Anonymous Says:

  padhivugal niraiya vendum. thirukkural pola siriyathaga ullathu.


 3. Anonymous Says:

  இந்த அனானி KRS பாலாஜி?


 4. athai ketkum intha anony yaar enRu sollavillaye?


 5. //அவர் மனைவியிடம்
  எவ்வளவு நேரம் பேசியிருப்பார்
  என்ற கேள்வியை தவிர்க்க முடியவில்லை!!//

  ஊர் மெச்சும் பிரபலங்கள் எல்லாம் தாங்கள் அறிந்ததை மனைவியிடம் பேசியோ, பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுத்தோ இருக்க மாட்டார்கள். புகழுக்கு அடிமை இவர்கள்!

  உங்கள் எழுத்துக்கள் நன்றாக இருக்கின்றன.

  பாராட்டுக்கள்!

  ranjaninarayanan.wordpress.ocm


 6. மிக்க நன்றி ரஞ்சனி. உங்களை பற்றியும் உங்கள் வலைப்பதிவில் படித்தேன். சுவாரஸ்யமாக இருக்கிறது! தொடருங்கள்...


 7. நன்றி பிரதீப்!