இது விமர்சனம் அல்ல! அவன் இவன் படத்தைப் பற்றி என்னுடைய ஒரு (ஒன்றரை!) பார்வை!
என்ன தான் சைக்கோத் தனமாக பாலாவின் முந்தைய படங்கள் இருந்தாலும், அவரின் படங்களில் வரும் அவருக்கே உரிய அக்மார்க் நக்கல்/எள்ளல் எனக்கு மிகவும் பிடிக்கும். உதாரணமாக:
சேது: மாமி, உங்க மயில் குட்டி போட்டா நேக்கும் ஒண்ணு தர்றேளா?
நந்தா: ந்தா, நீ எல்லாம் ஒரு டவுசர்/கிவுசர்னு மாட்டிட்டு வந்தா என்ன? அந்த அழகு தெய்வத்தின் மகனா இவன்?
பிதாமகன்: எதுக்குடி ஃபைவ் ஹண்ட்ரட்? ம்ம்...நீ கக்கூசுக்கு போனதுக்கு!
நான் கடவுள்: [வாக்கி டாக்கியை காட்டி] பந்த் கர்!
அதே போல் இதிலும் சில நக்கல்கள் ஆங்காங்கே [அதாவது எங்கோ ஒரு ஆங்காங்கே!] தெறிக்கின்றன...
அப்பாவின் திருவளையாடல்களை பக்தர்களிடம் வைத்துக் கொள்ளக் கூடாதா? என்னிடமும் காட்ட வேண்டுமா?
ஏன்டா பக்தர்கள் மட்டும் என்ன இளிச்சவாயங்களா?
பக்தா உன் தவத்தை கண்டு மெச்சினோம்! வேண்டிய வரத்தை கேள்!
ஏன்டா, அவனுக்கு என்ன வரம் வேணும்னு தெரியலை, நீ என்ன சாமி?
ஹி இஸ் எ லையர்!
என்ன லாயரா? இவன் எப்போ படிச்சி லாயர் ஆனான்?
அவ்வளவு தான்! அவ்வளவே தான் அவன்-இவன்!
பத்திரிக்கையாளர்கள், பாலு மகேந்திரா போன்றோர்கள் தொடர்ந்து விமர்சித்து பாலாவை ஒரு வழியாய் அவருடைய அரக்கத்தனமான சினிமாவிலிருந்து மீட்டு விட்டார்கள் என்று நினைத்து சந்தோஷப்பட்டேன். அனால் அதுவே வினையாய் போய் விட்டது! இனிமேல் நான் சினிமாக்காரர்களை நம்பப் போவதில்லை!! படம் எடுக்க ஆரம்பிக்கும்போது முழு நீள காமெடி என்றார்கள். படம் எடுத்து முடிய முடிய கடைசி பதினைந்து நிமிடம் வரை காமெடி தான் என்றார்கள். விஷால் வேறு பேட்டிகளில் எல்லாம் நீங்கள் எதிர்ப்பார்க்கும் பாலா படம் போல் இது இருக்காது, உங்களுக்கு பாலா ஒரு ஷாக் கொடுக்க போகிறார்! நான் ஒன்றரை கண் வைத்தது [மனிதர் அநியாயத்துக்கு உழைத்திருக்கிறார்! ஆனால்....] எல்லாம் சும்மா கெட்டப் சேஞ் என்பதற்காக அல்ல, அது எதற்கு என்று கிளைமேக்சில் தெரியும் என்று ஏகத்துக்கு அள்ளி விட்டார்! அக்மார்க் சினிமா பொய்!
பசுத்தோல் போர்த்திய புலி போல் காமெடி தடவிய (என்று சொன்னா) வழக்கமான பாலா படம் தான் அவன்-இவன்! நான் நினைக்கிறேன், பாலா மட்டும் பாலுமகேந்திராவிடம் சேர்ந்து ஒரு இயக்குனர் ஆகியிருக்காவிட்டால், நிச்சயமாய் ஆட்டோ ஷங்கர் மாதிரி ஒரு சீரியல் கில்லர் ஆகியிருப்பார்! அவனை போல் இல்லாமல் இவர் அநியாயம் செய்பவர்களை அடித்தே கொன்று ஒரு பெரிய பரபரப்பை உண்டு பண்ணியிருக்கக்கூடும்! மனதில் அத்தனை கொலை வெறி இருக்கிறது! அதனால் தான் படத்தின் கலைஞர்களையும் படாத பாடு படுத்துகிறார் என்று தோன்றுகிறது! சினிமா ஃபைட் எல்லாம் கிடையாது! அடி ஒவ்வொன்னும் நிஜம்மா விழனும்!! ஆமா...அப்படி செய்யும் போது அவருக்கு ஒரு மகிழ்ச்சி, திருப்தி ஏற்பட வேண்டும் என்று நினைக்கிறேன். குழந்தைகளை பாலா படத்திற்கு கூட்டிப் போகக் கூடாது! எப்போது யாரை அம்மணமாய் காட்டுவார், யார் தலையில் யார் கல்லை போட்டு கொல்வார்கள் என்று ஒன்றும் சொல்ல முடிவதில்லை! பாலிவுட்டில் அமீர் கான் என்று ஒரு மனிதர், இல்லை கலைஞன்! நிஜமான கலைஞன்!! ஏன் அப்படி சொல்கிறேன் என்றால், அமீர் கான் தயாரிப்பில் லகானில் தொடங்கி தோபி கட் வரை எல்லாமே நல்ல தரமான குடும்பத்துடன் பார்க்கக் கூடிய படங்கள்! அவர் தற்போது "டெல்லி பெல்லி" என்று ஒரு படத்தை தயாரித்திருக்கிறார்! அதனுடைய Tag line என்ன தெரியுமா? "SHIT HAPPENS!"
இது ஒரு காமெடி படம்! ஆனாலும், படத்தில் பல பச்சை பச்சையான மோசமான வசனங்கள் வருகிறது! தயாரிப்பாளராய் அவர் இந்தப் படத்தை விளம்பரப்படுத்த செல்லும் இடமெல்லாம் இது குழந்தைகளுக்கான, குடும்பத்துடன் பார்க்கக் கூடிய படமல்ல என்று விடாமல் கூறிக் கொண்டே இருக்கிறார்! நல்ல சுத்தமான படத்தை விரும்புபவர்கள் இதை பார்க்க முடியாது என்று எச்சரிக்கிறார்! பாலா எங்கே இப்படி எல்லாம் சொல்றது, அவர் பேசுறதே, நன்றி வணக்கம் தான்! சரி விடுங்க...எனக்கு அமீர் கான் நேர்மை புடிச்சுருக்கு!
படத்தை பொறுத்தவரை நான் மேல் சொன்னா படி பாலாவின் கிளிஷேக்கள் நிரம்பிய வழக்கமான ஒரு தமிழ் சினிமா தான்! அதாவது கீழ் வரும் கிளிஷேக்கள்:
ஒரு முரட்டு ஹீரோ
ஒரு அழுக்கான பெண் [நாம் நினைத்தே பார்க்க முடியாத ஒரு நல்ல அழகான நடிகையை தேர்ந்தெடுத்து அவளை அழுக்காக்கி, பீடி குடிக்க, பீடா போட, தண்ணி அடிக்க விடுவார்!]
ஒரு சிவப்பான ஒல்லிபிச்சான் லூசு ஹீரோயின் [என்ன கேரக்டராய் இருந்தாலும் ஹீரோவை காதலிக்கும் இந்த லூசு!]
ஒரு வாட்டசாட்டமான அல்லது அழுக்கான வில்லன்
அசிங்க அசிங்கமாய் பேச வேண்டியது! [யதார்த்தம்?]
கடைசியில் காட்டில், மேட்டில், சாணியில், சகதியில் என்று முட்டி மோதி ஒரு ஃபைட்!
அவ்வளவு தான்...
அப்புறம், மிகவும் நெருங்கிய நட்பு/உறவுள்ளவரை வில்லன் கொன்று விடுவான். பாலாவின் வழக்கப் படி, ஹீரோ மிருகமாய் மாறி அவரை அடித்தோ, கடித்தோ, தலையில் கல்லை போட்டோ, உயிருடன் கொளுத்தியோ கொன்று விட்டு ஸ்லோ மோஷனில் நடந்து வருவான்! பாலா படம் என்று டைட்டில் போட்டு படத்தை முடித்து விடுவார்கள்! அதே கதை தான் இதுவும்.
ஏதோ ஒரு பேட்டியில் படித்தேன். பாலா அடிக்கடி இரவு நேரங்களில் வாழ்க்கையை உணர [?] சுடு காட்டுக்குச் சென்று வருவாராம்! இப்போது அவருக்கு மகள் பிறந்த பிறகு அங்கு போவதில்லையாம்! இனிமேலாவது அவருக்கு வாழ்க்கையில், அதன் அழகியல்களில் நம்பிக்கை வரும் என்றும் அதுவே, அவரின் படைப்புகளில் பிரதிபலிக்கும் என்றும் நம்புவோமாக!
மிக நன்றாக எழுத வருகிறது நண்பரே..கண்டினியு..சூப்பர், ஃபன்டாஸ்டிக் , எக்சலன்ட், பலே..
Nandri Nataraj!
/*
வழக்கமான பாலா படம் தான் அவன்-இவன்! நான் நினைக்கிறேன்
படத்தை பொறுத்தவரை நான் மேல் சொன்னா படி பாலாவின் கிளிஷேக்கள் நிரம்பிய வழக்கமான ஒரு தமிழ் சினிமா தான்
ஒரு முரட்டு ஹீரோ
ஒரு அழுக்கான பெண் [நாம் நினைத்தே பார்க்க முடியாத ஒரு நல்ல அழகான நடிகையை தேர்ந்தெடுத்து அவளை அழுக்காக்கி, பீடி குடிக்க, பீடா போட, தண்ணி அடிக்க விடுவார்!]
ஒரு சிவப்பான ஒல்லிபிச்சான் லூசு ஹீரோயின் [என்ன கேரக்டராய் இருந்தாலும் ஹீரோவை காதலிக்கும் இந்த லூசு!]
ஒரு வாட்டசாட்டமான அல்லது அழுக்கான வில்லன்
அசிங்க அசிங்கமாய் பேச வேண்டியது! [யதார்த்தம்?]
கடைசியில் காட்டில், மேட்டில், சாணியில், சகதியில் என்று முட்டி மோதி ஒரு ஃபைட்!
அவ்வளவு தான்...
*/
பெய்யென பெய்யும் மழை அது எப்பொழுதும் ஒரு போலதான் பெய்கிறது அதை நாம் எடுத்துகொள்ளும் மனதை பொருத்து,
சில நேரம் 'மழை என்ன அழகாக இருக்கு என்று சிலாகிப்பதும்',
சில நேரம் 'இந்த மழைக்கு வேற வேலையே இல்லை' என்று சொல்வதும், நான் என்று குடை, மழை கோட் கொண்டுவரவில்லையோ அன்றுதான் இந்த பாழாய் போன மழை பெய்யும் என பிதற்றுவதும் என அவர் அவரின் மனநிலைக்கு எற்ப புலம்புவார்கள்
அதுபோலத்தான் உங்க விமர்சனமும் இருக்கிறது.
உனக்கு புடிக்கவில்லை என்றால் ஒதுங்கிகொள் இனி பாலா படம் எதுவும் பார்க்காத.
கிளிஷேக்கள் என்பது காலிவுட் முதல் கோலிவுட்வரை இருக்க கூடியது அதை ஒரு குற்றம் என்று சொல்வது மடமை.
/*
படத்தில் பல பச்சை பச்சையான மோசமான வசனங்கள் வருகிறது! தயாரிப்பாளராய் அவர் இந்தப் படத்தை விளம்பரப்படுத்த செல்லும் இடமெல்லாம் இது குழந்தைகளுக்கான, குடும்பத்துடன் பார்க்கக் கூடிய படமல்ல என்று விடாமல் கூறிக் கொண்டே இருக்கிறார்! நல்ல சுத்தமான படத்தை விரும்புபவர்கள் இதை பார்க்க முடியாது என்று எச்சரிக்கிறார்! பாலா எங்கே இப்படி எல்லாம் சொல்றது, அவர் பேசுறதே, நன்றி வணக்கம் தான்! சரி விடுங்க...எனக்கு அமீர் கான் நேர்மை புடிச்சுருக்கு
*/
இதுவே ஒருவகை விளம்பரம்தான், அப்படி சொல்வதால் மறைமுகமாக இந்த படம் பார்க்க தூண்டும் என்று அவரின் கணிப்பாக இருக்கலாம்.
அப்பறம் தேவையில்லாமல் எதற்காக பாலவை வேறு ஒரு நடிகனிடம் ஒப்பிடுகிறாய்
அவருக்கு குறைவாக பேசுவது பிடித்திருக்கலாம் இது ஒரு குத்தமா, பாலா ஏன் அடுத்தவர் போல் பேச வேண்டும், நடக்க வேண்டும்,
படம் எடுக்க வேண்டும். ,
அது என்னனு தெரியல சிலபேர் தமிழ் படத்திபேசும் போது அதை எதாவது ஒருவகையில் இந்தி படத்துடன் ஒப்பிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள், இது ஒருவகை மனவியாதியாக இருக்கனும் இல்லனா தான் இந்திபடத்தை பத்தி பேசினா தன்னை மற்றவர்கள் பெருமையாக நினைக்ககூடம் என்ற மடமையா என்று தெரியவில்லை.
தேசிய அலைவரிசைகள் என சொல்லிகொள்ளும் என.டி.டி.வி, ஐ.பி.என், டைம்சு நவ் ... என எதுவும் தமிழ் படங்கள் பற்றி அலசுவது இல்லை ஆங்கில படங்கள்கூட விமர்சிப்பார்கள் ஆனால் மருந்துக்குகூட தமிழ் படத்தை பற்றி விமர்சிப்பதில்லை, எதையாவது விமர்சனம் செய்ய அது அங்கே புகழ் அடைந்துவிட்டால் அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா தமிழ் சினிமா அங்கு பரவினால் பொருக்குமா அவர்களுக்கு.
தேசியம் என்றாலே இந்தியுடன் தமிழும் அடக்கம்தானே,
தமிழ் இயக்குனர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், இசை அமைப்பாளர்கள், நடிகர்கள் என எந்த விதத்திலும் இந்திகாரனுங்களுடன் குறைந்தவர்கள் அல்ல, அதையும் மீறி தமிழ் சினிமாவை அவர்கள் விமர்சிக்க, அலச மறுக்கிறார்கள் என்றால் அதில் உள்நோக்கம் இருக்கிறது
தாமிரபரணி
1. நான் பாலாவின் கிளிஷேக்கள் என்று நான் பார்த்தவரை பட்டியளிட்டிருக்கிறேனே ஒழிய அதை குறை சொல்லவில்லை. அது அவருடைய style of making! என்னுடைய வருத்தம் பாலாவின் க்ளிஷேக்களில் அல்ல, அவரின் இந்த படம் தான்! நீங்கள் சொல்வதை போல் சிலாகிப்பதும், விமர்சிப்பதும் அவரவர் மனநிலையை பொறுத்தது தான்! ஒத்துக் கொள்கிறேன்! so, நான் கண்டிப்பாக பாலாவின் அடுத்த படத்தை ஆவலுடன் எதிர்பார்ப்பேன்!
2. இதிலும் நான் சொல்ல விரும்புவது இந்த மாதிரி படங்களை குழந்தைகளை கூட்டிச் செல்லக் கூடாது என்பது தான்! இதை போன்ற விஷயங்களை கலைஞர்கள் வலியுறுத்த வேண்டும்! அதை பாலா பேச வேண்டும், இல்லையென்றால் தயாரிப்பாளர் பேச வேண்டும். அமீர் கானை போல் தமிழில், தெலுங்கில் யாராவது நேர்மையாய் நடந்து கொண்டால் அதை கண்டிப்பாய் நான் பதிவேன்!
படத்துக்கு போனோமா, படம் பாத்தோமா சந்தோசமா திரும்பி வந்தோமா இருக்கணும் அத விட்டுட்டு!
வெங்கடேஷ்
//படத்துக்கு போனோமா, படம் பாத்தோமா சந்தோசமா திரும்பி வந்தோமா இருக்கணும் அத விட்டுட்டு!
வெங்கடேஷ்
//
repeatu