தமிழ்நாட்டில் தேர்தல் முடிவுகள் எகிப்து அரசை எதிர்த்து நடந்த புரட்சியை போல இருக்கிறது! முடியாட்சியை  எதிர்த்து மக்களாட்சி வந்தது போல் அத்தனை பேருக்கும் அத்தனை மகிழ்ச்சி! குடும்ப அரசியலுக்கு ஆப்பு வைத்ததில் அத்தனை பெருமிதம்! ஜனநாயகத்தின் சக்தியை நினைத்து பூரித்துக் கிடக்கிறோம்! அதிலும் அம்மா பதவி ஏற்ற நாளிலிருந்து அம்மா தான் வரும்போது போக்குவரத்தை நிறுத்தி மக்களுக்கு இடையூறு செய்யக்கூடாது என்று உத்தரவிட்டுவிட்டார், அமைச்சர்களுக்கு பவர்பாய்ன்ட் மூலம் பாடம் எடுக்கிறார், மூன்று மணி நேரம் ஆய்வு செய்தார், ஏழு கோப்புகளில் கையெழுத்திட்டார் என்று பல செய்திகள்! ஒரு வேலை நாட்டுக்கு நல்ல காலம் வந்து விடுமோ என்று வழக்கமான ஒரு நம்பிக்கை பிறக்கிறது. ஆனால் இது இன்னும் எத்தனை நாட்கள் என்று உள்ளூர ஒரு பயமும் கலந்தே பிறக்கிறது! ஒரு இருபது ஆண்டுகள் தொடங்கி பின்நோக்கிப் பார்த்தால், 91 ல் அதிமுக, 96 ல் திமுக, 2001 ல் அதிமுக, 2006 ல் மறுபடியும் திமுக, 2011 ல் மறுபடியும் அதிமுக என்று ஒரு அமைப்பு/கோலம் தெரிகிறது! இதே ரீதியில் பார்த்தால் 2016 ல் மறுபடியும் திமுகாவா? இது எத்தனை பரிதாபகரமான விஷயம்! தமிழ்நாட்டில் திமுக, அதிமுகவை போல் சக்தி வாய்ந்த வேறு ஏதாவது கட்சி இருந்திருந்தால் மக்கள் ஒரு தடவை அவர்களுக்கு வாய்ப்பளித்துப் பார்த்திருப்பார்கள்! அதற்கு தான் நமக்கு வாய்ப்பே இல்லையே![ஒருவேளை அடுத்த முறை தேமுதிக வந்து விடுமோ?] கலைஞர் கொள்ளை அடிக்கிறாரா, அம்மாவுக்கு போடு; அம்மா கொள்ளை அடிக்கிறாரா கலைஞருக்கு போடு என்று மாற்றி மாற்றி வாக்களித்து ஒவ்வொரு தடவையும் சில நாட்கள் விரலில் கரையுடனும் , வாழ்க்கை முழுதும் முகத்தில் கரியுடனும் வாழப் பழகி விட்டோம்! அரசியல்வாதிகளும் வாக்குறுதிகளை கோடி காட்டி விட்டு அவர்களின் கல்லாக்களில் கோடிகளை கட்டிக் கொள்கிறார்கள்! ஐந்து வருடம் ஊழல் செய்து சம்பாதிக்கும் பணத்தை அவர்கள் ஆற அமர தீர்த்து விட்டு வருவதற்கும், ம்ம்...என்னப்பா பணம் தீந்து போச்சா, இந்தா ஆட்சி! ஜமாய், இந்தாப்பா நீ நல்ல சாம்பாதிச்சியா, கீழே எறங்கு போய் காலி பண்ணிட்டு வா என்று அனுப்பவது மாதிரி இருக்கிறது! என்ன அநியாயம்! இதற்கு பெயர் ஜனநாயகம்! இதற்குப் பெயரா ஜனநாயகம்? இந்த முறையாவது ஏதாவது நல்லது நடக்குமா பார்ப்போம்!

சென்னையில் வெயில் வாட்டி எடுக்கிறது! கடவுள் ஒருவர் இருப்பதாய் கற்பனை செய்து கொண்டால் அவர் சூரியனை ஒரு கயிற்றில் கட்டி வைத்திருப்பதாக கற்பனை செய்து கொண்டால் ஒவ்வொரு கோடை காலத்திற்கும் அவர் கொஞ்சம் கொஞ்சமாய் கயிற்றை சென்னையை நோக்கி இறக்கி விட்டு விடுகிறாரோ என்று தோன்றுகிறது! கயிர் அந்து சூரியன் சென்னையில் விழாமல் இருந்தால் சரி! சாலையில் பதினோரு மணி வெயிலில் வண்டியை ஓட்டினால் ஏதோ பாலைவனத்தில் போவது போல் இருக்கிறது. வெப்பக் காற்றில் மூச்சு முட்டுகிறது! சூரியனார் ஸ்ட்ரா போட்டு ஒவ்வொருத்தனின் ஆற்றலையும் உறிஞ்சி கொண்டிருக்கிறார்! இதில் நாள் முழுதும் வெட்ட வெளியில் வேலை செய்பவர்கள், பஸ் டிரைவர்கள், மெட்ரோ பணியாளர்கள், கட்டட தொழிலாளர்களின் நிலை....நினைக்கவே பயமாய் இருக்கிறது! தப்பித் தவறி ஒரு மரத்தின் கீழ் நிற்கும் போது தான் மரத்தின் பெருமை புரிகிறது! 2011 ல் இப்படி இருந்தால் 2041 ல் நடந்து செல்லும் ஒவ்வொருத்தனையும் சூரியன் சுட்டுக் கொள்ளும் என்று நினைக்கிறேன். மரம் வைக்கலாம் வாங்கப்பா!

வானம் படம் பார்த்தேன். நல்ல படம் என்றாலும் இதே போன்ற பல படங்களை ஏற்கனவே பார்த்து விட்டதால் ஒன்றும் பிரமிப்பாய் இல்லை. "பாசமலர்" சிலாகித்த தலைமுறையினருக்கு இந்தப் படம் புரியவேயில்லை! இது தான் நான் சிம்பு படத்துக்கே வர்றதில்லை என்கிறார்கள்! சிம்புவே இப்போது தான் திருந்திக் கொண்டிருக்கிறார்; இந்த சமயத்தில் இபப்டி ஒரு பேச்சா அவருக்கு! படத்தின் முதல் பாதி மதுரை பட்டர் பன்னை வாயில் போட்டது போல் வழுக்கிக் கொண்டு சென்றது! தப்புத்தாளங்கள் சரசுவையும் வானத்தின் சரோஜாவையும் ஒப்பிட்டுப் பார்த்தால் தமிழ் சினிமாவின் வளர்ச்சி புரியும்! அந்தக் கிழவரும் சரண்யாவும் கண்ணிலேயே நிற்கிறார்கள். ஒரு புறம் ஒரு இரவு விருந்துக்காக 40,000 செலவழிக்கும் கூட்டம், மற்றொரு புறம் அதே அளவு பணம் இருந்தால் வாங்கிய கடனை அடைத்தாவது மகனை படிக்க வைக்க வேண்டுமே என்று போராடும் ஒரு குடும்பம்! என்ன ஒரு கேடு கெட்ட சமுதாயத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற கேள்வி எழுகிறது! எப்படியாவது இவர்களுக்கு உதவி கிடைத்து விடாதா என்று மனம் ஏங்குகிறது. படத்திலாவது கடைசியில் அவர்களுக்கு நல்லது நடக்கிறது; ஆனால் நிஜத்தில் கடன் கொடுத்தவன் இப்படி மனம் மாறுவானா? இப்படி நம் நாட்டில் கேட்க நாதி இல்லாமல் இருக்கும் எத்தனை பேரை ஏமாற்றி பிழைக்கிறார்களோ என்று நினைக்கும்போது தொண்டையில் ஏதோ உருள்கிறது! படம் பார்த்த எல்லோருக்குள்ளும் இப்படி ஒரு கேள்வி எழுந்திருந்தால் அது தான் வானத்தின் வெற்றி; சினிமாவின் வெற்றி!

இப்போது தான் செய்தி படித்தேன். தனுஷுக்கு ஆடுகளம் படத்திற்காக சிறந்த நடிகர் விருது கிடைத்திருக்கிறது! அதை மலையாள நடிகர் சலீம் குமாருடன் பகிர்ந்து கொள்கிறார்! சரண்யா, வைரமுத்து, வெற்றி மாறன் போன்றோருக்கும் விருது கிடைத்திருக்கிறது! தனுஷ் நன்றாகவே நடித்திருந்தார். ஆனால் தேசிய விருது கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை; விருது கிடைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்! "ஏதோ அண்ணன் சொல்றான்னு ஒரு படத்துல நடிச்சேன்" என்று காதல் கொண்டேன் படம் ஹிட்டான புதிதில் தன்னுடைய சினிமா பிரவேசம் பற்றி அவர் அளித்த பேட்டிகள் ஞாபகம் வருகின்றன. தேசிய விருது வாங்கும் அளவுக்கு வளர்ந்து விட்டார். நல்ல வளர்ச்சி! வாழ்க! [அப்படியே உங்க மாமாவையும் ஒண்ணு வாங்க சொல்லுங்க சார்!]

இத்தனை சொல்லிவிட்டு இந்த விஷயத்தை எப்படி விடுவது? நம் சூப்பர் ஸ்டாருக்கு உடல் நலமில்லையாமே...அவருக்குமா நம்மளை மாதிரி உடம்பு சரியில்லாம போகும்? நம்பவே முடியலை...அது தான் ஸ்டீல் பாடி ஆச்சே! எத்தனை தம்மு; எவ்வளவு தண்ணி! அதுவே அவரை ஒண்ணும் செய்யலை; ஏதோ ஃ புட் பாய்சன் என்று சொல்லி ஐ.சி.யு. வரை கூட்டிக் கொண்டு போய் விட்டார்களே! என்ன கொடுமை இது. தலைவா, வேர்ல்ட் கப் உங்களை பாத்த நாள்ல இருந்து நீங்க சரி இல்லை; உங்க மேல எல்லாரும் கண்ணு வச்சுட்டாங்க! குதிரை மாதிரி சட்டுன்னு எந்திரிக்கனும்! கமான்....

9 Responses
 1. Anonymous Says:

  Dhanush has always been a better actor if not best. It took time for you to realize that, I guess. I believe, Puthupettai is his best movie - he did much much better in that movie than what he did in Aadukalam.

  Hope for speedy recovery for all illness for thalaivar superstar.

  Venkatesh


 2. venky,

  even i liked puthupettai more. he has done decent job in aadukalam too...


 3. BalajiKRS Says:

  Viralil Karai, Mugathi Kari..Class

  Nothing about 2G Spectrum?


 4. thanks balaji, ennada blog ellam padikka arambichitta?

  athaan oore athai pathi thaane ezhuthuthu...


 5. KK Says:

  தங்களுக்கு வோட்டுரிமை இல்லை என்ற போதிலும், தேர்தல் பற்றி அழகா விமர்சனம் செய்து மகிழ்ச்சி. வாழ்த்துகிறேன் !!!! 6. Thamizhachi Says:

  "கடவுள் ஒருவர் இருப்பதாய் கற்பனை செய்து கொண்டால் அவர் சூரியனை ஒரு கயிற்றில் கட்டி வைத்திருப்பதாக கற்பனை செய்து கொண்டால் ஒவ்வொரு கோடை காலத்திற்கும் அவர் கொஞ்சம் கொஞ்சமாய் கயிற்றை சென்னையை நோக்கி இறக்கி விட்டு விடுகிறாரோ என்று தோன்றுகிறது!"....

  பிரதீப்,

  என்ன கற்பனை வளம் யா உங்களுக்கு? வாய்ப்பே இல்ல போங்க! எப்படி உங்களால இப்படிலாம் யோசிக்க முடியுது?
  உங்க blog படிச்சா ஏதோ ரஷ்ய இலக்கியத்த படிச்சுட்டு வந்த மாதிரி ஒரு feeling எனக்கு. மேல உள்ள வரிகள அப்டியே கற்பனை செஞ்சு பாருங்களேன்!..... Really Its Amazing!.... எந்த அளவுக்கு நீங்க அத உணர்ந்துருந்தா, உங்களோட அந்த உணர்வு மாறாம இந்த வரிகள்-ல வெளிப்படுத்தி இருப்பீங்க!.......
  தொடருங்கள் நண்பரே!

  Chocolate வாழ்த்துகள்!


 7. thamizh!

  ungalukku teriyuthu! ellarukkum teriyanume..hahahaha!

  just kidding. romba overa thaan pugazhreenga. naan russia ilakkiyam ellam padichathillai! thangal anbukkum vaazthukkum nandri nanbare...


 8. சூரியன் - கயிறு கற்பனை பிரம்மாதம்.

  --

  ஆடுகளத்தை விட, புதுப்பேட்டையில் தனுஷ் நடிப்பு அருமை என்பது என் கருத்து.

  --

  ரஜினிக்கு உடம்பு சரியில்லை என்ற செய்தி கேட்டபோது, ஒரு ரசிகனுக்கு ஏற்பட்ட அதே சந்தேகங்கள் உங்களுக்கும்.