விளம்பரப் படத்திற்கு ஸ்க்ரிப்ட் எழுதி வெகு நாட்கள் ஆகி விட்டது. யோசித்துப் பார்க்கலாமே என்று தோன்றியது. எனக்கு வள வளவென்று பேச்சும் பாட்டும் கூச்சலும் (ஓரம்போ விலகு விலகு ஓரம் போ வகையறாக்கள்) உள்ள விளம்பரங்கள் பிடிப்பதில்லை. (சினேகா, ஸ்ரேயா வரும் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்கள் இதில் சேர்த்தியில்லை :) சாமர்த்தியமாய், அழகாய் ஒரு கவிதையாய் கொண்டு வந்து விஷயத்தை பொட்டில் அடித்த மாதிரி சொல்ல வேண்டும் (வோடோஃபோன் வகையறாக்கள்). அப்படி ஒரு யோசனையை ஓட விட்டதில் சிக்கியது: ஒரே சிந்தனை தான்; ஆனால் இரு வேறு வகைகளில் அளிக்கிறேன். இது எதைப் பற்றிய விளம்பரம் என்று நான் வெளிப்படையாய் சொல்லப்போவதில்லை. நீங்களே யூகியுங்களேன். என் பின்னூட்டப் பெட்டி இருக்கவே இருக்கு!
Presentation 1:
திரையில் கீழ் காணும் வாசகம் தோன்றி மறைகிறது.
Scene 1: These people are lucky...
Scene 2: சிறுவர் முதல் குமரர் வரை வெவ்வேறு மனித முகங்கள், அவர்களின் மகிழ்ச்சியான தருணங்கள், மெல்லிய புன்னகைகள், அட்டகாசமான சிரிப்புக்கள், ஆச்சர்யம் கலந்த பார்வைகள் என்று திரையில் தோன்றி மறைகிறது. [should be classic captures...]
Scene 3: And they are not! என்ற வாசகம் தோன்றி மறைகிறது.
Scene 4: பச்சிளம் குழந்தைகள், மிகவும் வயதான முதியவர்களின் சிந்தனை கலந்த அல்லது சோகம் பொதிந்த முகங்கள் தோன்றி மறைகிறது.
Scene 5: விளம்பரப் பொருளின் படம். விளம்பர வாசகத்தோடு திரையில் தோன்றுகிறது.
Presentation 2:
Scene 1: ஒரு பெரிய பல் பொருள் அங்காடி! ஒரு குறிப்பிட்ட பொருள் கிடைக்கும் இடம். ஒரு தள்ளாத வயதானவர் அந்த இடத்தை நோக்கி அங்கும் இங்கும் பார்த்துக் கொண்டே வருகிறார். திடீரென அவரின் பார்வை அந்தப் பொருளில் நிலை குத்தி நிற்கிறது.
Scene 2: அவரின் முகத்தில் கவலையின் ரேகை! டைட் க்ளோசப்பில். அவரின் கண்களில் கண்ணீர். அடக்கிக் கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்கிறார்.
Scene 3: ஒரு தாய் கைக்குழந்தையை தூக்கிக் கொண்டு அதே இடத்திற்கு வருகிறாள். அந்தக் குழந்தை அந்தப் பொருளைப் பார்த்ததும் அதை கை காட்டி கதறி அழுகிறது.
Scene 4: அந்த முதியவரும், குழந்தையும் பார்த்த இடம் திரையில் காட்டப்படுகிறது. விளம்பர வாசகம்!
என்ன புரிந்ததா? இப்போது சொல்லுங்கள், இந்த விளம்பரம் எதைப் பற்றியது என்று! விடையை கமண்டுங்கள்! தெரியவில்லை என்றால் அடுத்த பத்தியில் பதில் உள்ளது, வெள்ளை எழுத்துக்களில்...மௌசினால் செலக்ட் செய்து பாருங்கள்!
இது ஒரு பற்பசை விளம்பரம். கண்டுபிடித்தீர்களா? இதைப் பற்றி யோசிக்க ஆரம்பித்ததும் பற்களே காட்டாமல் பற்பசை விளம்பரம் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். முடியவில்லை! இருந்தாலும் முடிந்தவரை முயற்ச்சித்திருக்கிறேன். கமண்டுங்கள்!