உன் பேர் என்ன?
சொல்லியது குழந்தை.
உன் பேர் என்ன என்றது என்னை பார்த்து!
சொன்னேன்.
வண்டியில வந்தீங்களா கார்ல வந்தீங்களா என்றது!
கார்ல தான் என்றேன்.
பேச்சை வளர்ப்பதற்காக, உனக்கு கார் ஓட்டத் தெரியுமா?
என்று கேட்டேன்.
என்று கேட்டேன்.
ஓ! நல்லா தெரியும் என்றது.
உனக்கு காலே எட்டாதே, அப்புறம் எப்படி ஓட்டுவே என்றேன்.
செருப்பு போட்டுட்டு தான் என்றது!
ரைம்ஸ் ஒன்று சொல் என்றேன்...
தெரியாது என்றது குழந்தை!
டீவியில் ரஜினியைக் காட்டி யார் என்று கேட்டேன்,
அதற்கும் தெரியாது என்றது குழந்தை!!
இந்தக் குழந்தை எதைக் கேட்டாலும் தெரியாது
என்று தான் சொல்லும் என்று நான் என்னை
சமாதானம் செய்து கொண்டேன்
முக்கியமான பொருட்களை எங்கே வைக்கிறேன்
என்று மறக்காமல் இருக்க அட்டவணை தயாரிக்கிறேன்
அதை எங்கே வைப்பது?
ஆன் டியூட்டி போட்டு ஒரு அரசு வாகனம் என்னை கடந்து சென்றது...
வண்டியில்(லும்) எல்லோரும்
தூங்கி கொண்டிருந்தார்கள் :-)
தூங்கி கொண்டிருந்தார்கள் :-)
காலில் மாவுக் கட்டு போட்டுக் கொண்டு
வண்டியின் பின்னால் அமர்ந்து செல்லும்
அந்தக் குழந்தை - தன் அப்பாவை
சற்று கூடுதலாய் இறுக்கிப் பிடித்துச் செல்கிறது!
குழந்தையின் கேள்வி பதில் அழகு.
எதையாவது மறக்கக்கூடாது என்று ரிமைண்டர் போட்டால், ரிமைண்டர் வருவதற்கு முன் அந்த விஷயம் நன்றாக நியாபகம் இருக்கும். ரிமைண்டர் போடாதது மறந்துபோகும். என்னக் கொடுமை இது.
athu eppadi pinnokki,
naan pathivu potta udane pinnoottamidreenga...thangal varukaikkum, ookuvippukkum mikka nandri! :)
நல்லா இருக்கு!
பக்கத்து வீட்டு குழந்தையிடம் கேட்டேன்:
"நீ என்ன படிக்கிறே?"
"அஞ்சாவது படிக்கிறேன்"
"ஓ!"
"அஞ்சாவது வரைக்கி தான் படிக்க போறேன்!"
"ஏன்?"
"அப்பா கஷ்டப்பட்டு வேலைக்கி போறார்!"
"அப்போ, அஞ்சாவதுக்கு அப்புறம் என்ன பண்ண போறே?"
"ஆறாவது படிக்க போறேன்!"
!!!@#$!!!
-
வெங்கடேஷ்
venkatesh,
super!