மக்களே செளக்கியமா? மாசத்துல ஒரு தடவை வந்து போறதுக்கு உனக்கு எதுக்கு ப்ளாக் கருமாந்திரம் எல்லாம்னு கேக்குறது புரியுது! என்ன பண்றது, வேலை அப்படி! அமேரிக்கா வந்து ஒருத்தன் வீடு பாத்து, காரோட்ட கத்துக்கிட்டு, சுத்தி முத்தி நண்பர்களை தேடிப் புடிச்சி சேத்துகிட்டு, நாலு இடம் சுத்தி பாத்துட்டு.. அப்பாடா! இப்போ தான் கொஞ்சம் நல்லா இருக்குன்னு சொல்றதுக்கு குறைஞ்சது ஆறு மாசம் ஆவும்! எனக்கும் அதே கதி தான்! அப்பாடா ல அப்பா நான் சொல்ல என் மேலிடம் மிச்ச டாவை சொல்லி நீ ரிச்மண்ட்ல குப்பை கொட்டினது போதும், கெளம்பு பாய்ஸி, ஐடாஹோக்குன்னு (ஐய்யய்யோ!) சொல்லிடுச்சு! ரிச்மண்ட்ல இருந்தே நான் ஆணி புடுங்குறேனேன்னு சொன்னதுக்கு, ஐடாஹோல இருக்குற ஆணியை ரிச்மண்ட்ல இருந்து எப்படி புடுங்குவே, ஏதோ ரிச்மண்ட்ல பொறந்து வளந்த மாதிரி பேசுறேன்னு கெட்ட வார்த்தையிலேயே திட்டினாங்க! போறாளே பொன்னுத்தாயி பொலபொல வென்று கண்ணீர் விட்டு பாட்டை பேக்ரவுண்ட்ல போட்டு விட்டு தூக்க முடியாத பல பெட்டி படுக்கைகளைத் தூக்கிப் போட்டு வந்துட்டோம்! இதுல உங்களுக்கு டெய்லி ஒரு ப்ளாக் எழுதனுமாக்கும்? அட போங்கப்பா! ஆமா, நானே பேசிட்டு இருக்கேனே, என்னடா இவன் மாசத்துக்கு ஒன்னு எழுதுறான்னு குறைபட்டுக்குற ரெண்டு பேராவது இருக்கீங்களா? இல்ல நானா தான் பெனாத்திட்டு இருக்கேனா? எங்கே, என் ப்ளாக் புடிக்கும்ன்றவங்க கையைத் தூக்குங்க, சரி நீ எழுதுனா என்ன எக்கேடு கெட்டுப் போனா என்னன்றவங்க கையத் தூக்குங்க? சரி, ரெண்டுக்கும் தூக்காதவங்க இப்போ கையைத் தூக்குங்க! தெரியுமே, அங்கேயும் ஒருத்தன் இருப்பானே!

பாய்ஸில இருக்குற சனம் யாராவது மாசத்துக்கு ஒரு தடவை ஒரு இலக்கியப் படைப்பை அளிக்கும் (அதாங்க மொக்கை!!) என் ப்ளாக்கை படிச்சீங்கன்னா இந்த ஊர்ல எப்படி நடந்துக்கனும், என்ன எது வாங்கனும், வால் மார்ட் எங்கே, இந்தியன் ஸ்டோர் எங்கேன்னெல்லாம் கத்துக் கொடுக்க வந்துருங்க!! இது இங்கே தானே இருக்கப் போவுது, மெல்ல பாத்துக்கலாம்னு மட்டும் நெனைக்காதீங்க! அமேரிக்காவுல நெறைய எடத்துல இருக்கு நான் புடுங்க வேண்டிய ஆணி!

8 Responses
 1. எங்கிருந்தாலும் வாழ்க.........

  (டொக் டொக் டொக்....... பேக்ரவுண்ட் மூஜிக்)


 2. 'கும்மிடிப்பூண்டி தாண்டாமயே நம்ம வாழக்கை முடிஞ்சுடுமா'ன்னு நானெல்லாம் புலம்பிட்டு இருக்கேன். நீங்க என்னடான்னா.. வெள்ளக்கார குட்டிங்கள சைட் அடிச்சிக்கிட்டே இப்படி ஒரு புலம்பல்.

  சரி.. இக்கரைக்கு அக்கரை..


 3. நான் கையை தூக்கிட்டேன் தல.. ஆணியைபுடுங்கிட்டே அப்பப்ப எழுதுங்க... படிக்கிறேன்


 4. teacher,

  ellam unga aasi! athenna kuthiraila pora mathiri oru background music!! aaha, naan irukkurathu cow boy oorunnu ungalukkum terinjirucha?

  suresh,

  enakku ipo naan sonnathu konjam overa thaan irukku!

  nanjil prathap,

  kaiyya kudunga sir! neenga orutharaavathu kaiyyai thookineengale...romba santhosham!!


 5. vishnu Says:

  erukirathelaye entha blog than super.....(:


 6. எத்தனை வருஷமா உங்க ப்ளாக் படிச்சுக்கிட்டு வர்றேன். வேலைய காரணம் காட்டி இப்பெல்லாம் எழுதறதில்லை நீங்க. அதுனால வருந்துறோம் நாங்க. அமெரிக்காவுல நிறைய டைம் கிடைக்குமே ப்ளாக் எழுத. வேற எதுலயாவது பிஸியா ??


 7. neenga nov 5 potta commentaye ipo thaan naan moderate pandrenna naan ethanai aani pudungittu irukkennu paathukkunga! pinnokki!! thangal pala varuda idai vidaatha varugaikku mikka nandri! adikkadi ezutha try pandren.


 8. nicely written yar. i liked the style u used in this post..

  keep blogging..