வேண்டாம். என்னை ஒன்றும் கேட்காதீர்கள். நானே மண்டை காய்ந்து போயிருக்கிறேன். நவீன கவிதைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்னு நினைக்கிறது குத்தமா....அது என்னவோ தெரியவில்லை, சிறு வயதிலிருந்தே கவிதையை ரசிக்கும் பக்குவம் இருந்தது எனக்கு. அப்போதெல்லாம் புதுக் கவிதைகள் அதிகமாய் இருந்தன. எளிதான வார்த்தைகள், வர்ணனைகள் என்று புரியவும், ரசிக்கவும் ஏதுவாய் இருந்தது. ஆனால் இப்போது வரும் நவீன கவிதைகளின் தலை கால் புரியவில்லை. சரி நல்ல கவிதைகளை எப்படி அடையாளம் காணலாம் என்பதை விளக்கும் கவிஞர்களின் கட்டுரைகளை படித்தால் அது மற்றொரு நவீன கவிதைகளாகவே இருக்கிறது..ஒரு வேளை அதை நவீன கட்டுரை என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம்...தமிழ் கூறும் நல்லுலகிற்கு ஒரு வேண்டுகோள்! கீழிருக்கும் கவிதைகளைப் படித்து எனக்கு அர்த்தம் சொல்லுங்கள்! தமிழில் இருக்கும் அதிகம் உபயோகப்படாத வார்த்தைகளை சீட்டில் எழுதி குலுக்கி போட்டு எல்லாவற்றையும் கலந்து அடித்து இப்படி சம்மந்தா சம்மந்தமில்லாமல் எழுதுவது தான் நவீன கவிதையா?

இனி கவிதைகள் [என்ற பெயரில் என்னவோ...]

ஏதோ ஒரு வகை மீறலின் நீட்சி
மனமெங்கும் வியாபித்திருக்க
இரு கண்களின் வழியே வழியும்
கானல் நீராய் அது அலைக்கழிக்கும்
ஒரு நீர்த் துளியின் விளிம்பில்
விருட்சம் ஒன்றின் வேர் வளரும்
அந்த ஒரு நொடிக்காக நான்
காத்திருக்க மாட்டேன்!

குறையொன்றுமில்லை
உன் குறுதியின் அழகியல் சார்ந்த
வழிபாடு எனக்கு வாய்த்தபின்
குறையொன்றுமில்லை

அந்திச் சூரியனின் நிறம் கண்டு
கதறி நிற்கும் ஒரு பைத்தியக்காரனின்
பிதற்றல்களில் தெரிக்கும் ஒரு
பிரபஞ்சத்தின் ஓலம்

வைகரையின் வசந்த வீச்சில் வாலிப நுரைகள்
வந்து வந்து உன் காலை நனைத்த
அந்த நாளில் தான் உன் தெற்றுப் பல்
தெரிய நீ சிரித்தாய்!

நீ உளரியதையும்
நான் உளரியதையும்
புசித்துச் செரித்து
நம் உடல்கள் பூரித்து
நின்றபின் நமக்கான காதலை
நாமிருவரும் தேடத் துவங்குவோம்!

ஏதோ ஒரு வகை மீறலின் நீட்சி என்றால் என்ன? கண்களில் கானல் நீரா? நீர்த் துளியின் விளிம்பில் எப்படி விருட்சம் ஒன்றின் வேர் வளரும்? ஆமா நீ யாரு? இதுக்கும் நீ காத்திருக்குறதுக்கும் என்ன சம்மந்தம்? அட போங்கப்பா....இதை விட அடுத்து, குறுதியில் என்னய்யா அழகியல் சார்ந்த...அதோடு வழிபாடு ஏன் சேர்ந்தது? இல்லை என்னை பாத்தா உங்களுக்கு எப்படி இருக்கு? நானும் சரி கவிதையை புரிஞ்சுப்போம், நாமும் நாலு வரி எழுதி இலக்கியத்துக்கு தொண்டு செய்வோம்னா...ஸ்வபா....

ஆமாம், உண்மையில் இது நல்ல கவிதைகளா? இல்லை வெறும் பேத்தலா? எனக்குத் தான் புரியவில்லையா? நானும் படித்திருக்கிறேன். எல்லா கவிதைகளும் எல்லோருக்கும் புரிய வேண்டும் என்பதில்லை, அவரவர்க்கான கவிதைகளை ரசிக்கலாம், மற்றதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்று! அப்படி என்றால் மேல் சொன்னவை யாருக்கான கவிதைகள்?
8 Responses
  1. Anonymous Says:

    :(
    there are lots of such trash in the name of kavithai.


  2. Unknown Says:

    பிரதீப்,

    அடியே மண்ட காயுதே! கவிதேயே கொல்லுதே!உள் மன வெளிப் பாடுதானே!


  3. suryagoc Says:

    இப்பவே கண்ணக் கட்டுதே..... மிகச் சரியான கேள்வி.. பிரதீப்.

    நிறைய முறை, நானும் இப்படி படிச்சு தலைய சுத்தி குருவி பறக்க உட்காந்திருக்கேன்.

    தன் மேதாவி தனத்தைக் காட்ட.. யாருக்குமே புரியாம எழுதி...
    "என்னவோ சொல்ல வராய்ங்கப்பா.. நமக்குத்தான் புரியமாட்டேங்குது"ன்னு
    படிக்கிறவங்கள காய விட்றதே சிலருக்கு வேலையாயிடுச்சு.

    கேட்டா 'போஸ்ட் மாடர்னிஸம்','பின் நவீனத்துவம்', 'செமி-அப்ஸ்ட்ராக்சன்னு'
    ஏதோ ஒன்ன சொல்றாங்க.. இன்னொரு பதிலும் அவங்க கிட்ட இருக்கு..
    மாடர்ன் ஆர்ட் எல்லாம் புரியுதா உங்களுக்குன்னு கேட்பாங்க.

    ஒரு படைப்போட ஆதார நோக்கமே,
    படிக்கிற/பார்க்கிறவங்களுக்கு புரியணும்கிறதுதான்னு
    எப்போ தான் தெரிஞ்சிக்குவாங்களோ?


  4. anony,

    i know! u r 100% right!!

    ravi,

    mannodu pogum maanudam varayum
    mokkaigal thaan ivaye...

    adiye kolluthe! kavithai kolluthe...hehehe

    ganesh,

    ennai mathiri romba anubava patrupeenga pola...nee en inamadaa...


  5. Anonymous Says:

    :)

    பல பேருடைய மனச்சாட்சியாய் நீங்க பேசியிருக்கீங்க நண்பா....

    இந்த வகை கவிதைகள் நிச்சயமாய் எனக்கும் அதிகம் புரிவதில்லை... ஓரளவிற்கு புரியும் வகையில் நவீனத்துவ கவிதைகள் எழுதுபவர்களும் இருக்கின்றார்கள்.

    ஆனால் நீங்கள் மேலே காட்டியிருக்கும் கவிதைகள்... நிஜமாவே புரியலைதான்...

    நானும் கவிதைகள் எழுதுகிறேன்.. ஆனாலும் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லைதான்...

    எழுதியவரே வந்து விளக்கவேண்டும்!


  6. vidunga vidunga nisi! ippadi ethanaiyo tharisu irukku...athula ithuvum onnu!! intha mathiri kavithaigalai verlaye killi eriya muyarchippom!


  7. நவீன கவிதைகளில் இரு வகை.

    1.உணர்வுநிலையில் எழுதப்படுவது
    2.புரியக்கூடாது என்கிற ஒரே நோக்கில் எழுதப்படுவது.

    இந்தக் கவிதை எந்த வகை என்பது அவரவரின் புரிதலில் இருக்கிறது,

    மற்றொன்று,

    கவிஞனின் கேட்ககூடாத கேள்விகளில் மிக முக்கியமானது உங்களது
    படைப்பு புரியவில்லை விளக்குங்களேன் என்பதுதான்.
    ஏனெனில் இதுபோன்ற நவீன கவிதைகளின் உணர்வுநிலையை கடந்தவுடன் கவிஞனும்
    வாசகனாக மாறிவிடுகிறான்.


  8. sari ungalukku intha kavithaigal entha vagayai saarnthathunu sollalaliye?

    ithu ennanga niyaayam oru vishayam puriyalainna puriyalainnu kekurathu tappa? apo kavingarukku mattum purinju ezhuthittu iruntha yaaru vaangi padikkirathu? nalla kathai...