என் வீட்டிலிருந்து வெளியேறி சிறிது தூரம் நடந்து ஒரு இடது பக்கம் திரும்பி, இன்னும் சிறிது தூரம் நடந்து ஒரு வலது பக்கம் திரும்பி...அதே போல் மற்றொரு முறை செய்தால் நாயக்கர் வீடு! மதுரையில் பிறந்து வளர்ந்த நான், போன முறை மதுரை சென்ற போது என் நினைவு தெரிந்து 3வது முறையோ, 4வது முறையோ நாயக்கர் வீட்டுக்குச் சென்று வந்தேன்! வேலு நாயக்கர் பம்பாயை அல்லவா உலுக்கிக் கொண்டிருந்தார்! அவர் எங்கே இப்படி என்று முழிப்பவருக்கு, நான் சொல்வது வேலு நாயக்கரைப் பற்றி அல்ல, திருமலை நாயக்கரைப் பற்றி! [ஆஹா! என்ன ஹாஸ்யமா எழுதுறான் இந்தப் பையன்!] நான் சென்று வந்தது திருமலை நாயக்கரின் அரண்மனை! அரண்மனை என்ற வார்த்தை பெரிதாய் இருப்பதால் நாம் இந்தப் பதிவிற்காக அதை வீடு என்று வைத்துக் கொள்வோம்! [நாயக்கருக்கு என்ன கஷ்ட காலம் பாருங்கள்!]

அந்த வீட்டில் பல சரித்திரப் புகழ் மிக்க நிகழ்ச்சிகள் நடந்தேறியுள்ளன..அதாவது 1994 ஆம் ஆண்டு பம்பாய் படத்தின் "கண்ணாலனே" பாட்டின் படப்பிடிப்பு நடந்த போது மணிரத்னம் ஒரு முறை என்னை பார்த்தால் போதும், அடுத்த அர்விந்த் சாமி நான் தான் என்று நினைத்தேன்! என் கஷ்ட காலமோ என்னமோ அன்று டியுஷனில் கணக்கு பரிட்சை இருந்ததால் தமிழ்நாடு பிழைத்தது...பிறகு கல்லூரிக் காலத்தில் நேருக்கு நேராய் சிம்ரனை தரிசிக்க முயன்று அந்த வீட்டு மதில் மேல் வந்தியத் தேவனை போல் ஏறிக் குதித்து [நல்ல வேளை அகழியை மூடி விட்டார்கள்!] அருகில் செல்லும்போது சே! ஒரு பெண்ணைப் பார்ப்பதற்கு இத்தனை பாடா என்று கேனத்தனமான ஞானோதயம் பெற்று அந்த சந்தர்ப்பத்தையும் கோட்டை விட்டவன்! இது தான் எனக்கும் நாயக்கரின் வீட்டுக்கும் உள்ள சரித்திரப் பின்னனி!

இதற்கு மேலும் என் சரித்திரத்தைக் கூறி உங்களை சித்தரவதை செய்ய விரும்பவில்லை..எங்கே, என் போட்டோகிராபி திறமையை பார்த்து வாயடைத்துப் போங்கள் பார்ப்போம்!!


இருவர் சேர்ந்தது பிடித்தாலும் முழுதாய் இந்தத் தூண்களை பிடிக்க முடியாது!

மற்றொரு சரித்திர நிகழ்வு...

விண்டோ ஏசீ?


ஒட்டடை அடித்தவன் நிலை என்ன ஆயிருக்கும்?



இது நடன நாட்டிய கலா மண்டபம்!

ஒளியை நிறம் பிரித்திருக்கிறார் நாயக்கர்!

பார்வதி தேவி என்று ஞாபகம்!

தங்கப்ப தக்கம்!
11 Responses
  1. புகைப்படங்களும் சூப்பர்... உங்கள் நகைச்சுவை தெறிக்கும் எழுத்தும் சூப்பர்...


  2. படங்கள் அருமை.கட்டடக் கலை பிரமிக்க வைத்தது.


  3. அன்புள்ள பிரதீப்,

    ஏற்கெனவே சொல்லித் தொலைத்திருக்கிறோனோ என்னவோ, நினைவில் இல்லை. நீங்கள் எழுதும் குறிப்புகளின் இடையில் ஆங்காங்கே தெறிக்கும் யதார்த்தமான நகைச்சுவை மின்னல்களை மிகவும் ரசிக்கிறேன்.

    தொடர்ந்து எழுததவும்.


  4. saravanan yogan,

    thangal varugaikkum pinnoottathirkum mikka nandri!

    suresh kannan,

    neengal erkanave solli tholaithathai naanum tholaithu vitten! adikkadi ippadi tholaithu konde irungal..appothu thaan enakku adikkadi ungalidamirunthu paaraattukkal kidaikkum. ungalai pondra oru therntha pathivaalar en valai pathivin followeraage iruppathe enakku perum peru!!


  5. சுவரை மூன்று பேர் சேர்ந்தால் கட்டிப் பிடிக்க முடியும். அது அரண்மனை தான். வெள்ளையர்கள் அதன் கட்டடச் சிறப்பைப் பார்த்து, பொறமைப் பட்டு இடித்து விட்டார்கள். மீதிதான் தற்பொழுது உள்ளது.


  6. aatkaatti,

    buildingum strong! basementum strong :)


  7. புகைப்படங்கள் அருமை! வாய்ப்பு கிடைத்தால் செல்லவேண்டும் என்ற ஆவலினை கொடுக்கிறது!

    பம்பாயில் கண்ணாளனே பாடிக்கொண்டே பார்க்கும் மனீஷாவினை கண்ட மகிழ்ச்சியில் செல்லமாய் தூண் ஏற முயற்சிக்கும் அரவிந்தாசாமி! அந்த காட்சிகள் படமாகப்பட்டது இங்குதானா?

    அடி ஆத்தி..! இம்புட்டு நாளா எனக்கு இது தெரியாமபோயிடுச்சே...!:(


  8. ஆயில்யன்,

    ஐய்யய்ய...என்னங்க இது வரலாறுல ரொம்ப வீக்கா இருக்கீங்களே? அர்விந்த சாமி மனீஷாவை பாத்து தூணில் எம்பிக் குதிக்கும் அதே இடம் தான் இது...அந்த பாட்டை எடுத்ததிலிருந்து மணிரத்னத்திற்கு இந்த அரண்மனை ரொம்ப பிடித்துப் போய் கீழ் இருக்கும் படங்களையும் சுட்டுத் தள்ளினார்!

    1. இருவர் - மோகன்லால்/பிரகாஷ்ராஜ் பேசும் ஆரம்ப காட்சிகள்
    2. நேருக்கு நேர் - மனம் விரும்புதே பாடல் (மணிரத்னம் தயாரிப்பு)
    3. குரு - ஆருயிரே மன்னிப்பாயா பாடல்

    ஹைய்யோ...ஹைய்யோ!


  9. Unknown Says:

    nice post and i am also stated one blogs pls check :http://sourashtraonline.blogspot.com/


  10. TM Balaji,

    nice posts on our community! keep going...


  11. gogiyaya Says:

    நாயக்கர் வரலாற்றில் இந்த சின்ன தனமான புத்தி தான் இவன்களுக்கு கிடைத்தது போல, தமிழனக்கே உரிமையான முட்டாள் புத்தி.