பல நாட்கள் கழித்து தமிழ்நாட்டு மக்கள், குறிப்பாக இளைஞர்கள் சாமியாடத் தொடங்கி இருக்கிறார்கள். அவர்களுக்குள் இறங்கியிருப்பது ஏ. ஆர். ரகுமான் சாமி. எனக்கென்னமோ இளையராஜா சாமி என்னை பிடித்து ஆட்டும் அளவுக்கு ரகுமான் சாமி ஆட்டுவதில்லை. ஆனால் இசை என்னும் சாமி எப்போதும் என்னை பிடித்து ஆட்டுவதால் எல்லாவற்றையும் ரசிப்பதுண்டு. [எத்தனை சாமிப்பா நாட்ல!] அப்படித் தான் இரண்டு நாட்களாய் சில்லென்ற காதலை [படத்தின் பாடல்களை சார்!] ரசிக்க ஆரம்பித்திருக்கிறேன். இந்தப் பதிவு இந்தப் படத்தின் இசையின் விமர்சனம் அல்ல. இந்தப் படத்தில் வரும் ஒரு பாடலைப் பற்றித் தான்.



"நியுயார்க் நகரம் உறங்கும் நேரம் தனிமை அடர்ந்தது" என்ற பாடல். இந்தப் பாடலின் சிச்சுவேஷன் [இதற்கு தமிழில் என்ன சொல்வது?] காதலியைப் பிரிந்த காதலன் தனிமை உணர்ந்து பாடுவதாக அமைந்துள்ளது. இந்தப் பாடலின் விசேஷம் என்னவென்றால் [நான் கேள்விப்பட்டது வரை] மெட்டுக்கு பாட்டெழுதாமல், பாட்டுக்கு மெட்டு போடப்பட்டிருக்கிறது. வாலி பாட்டெழுத ரகுமான் இசை அமைத்திருக்கிறார்.

இந்தப் பாட்டை எல்லோரும் ஆஹா ஓஹோ என்று புகழ்கிறார்கள். ஏன் என்று புரியவில்லை. இந்தப் பாட்டைப் பற்றி ஒரே வரியில் சொல்வதானால் [வைரமுத்துவின் கம்பீரமான குரலையும், கவிதை நயமான தமிழையும் கடன் வாங்கிக் கொள்கிறேன்!]
"வார்த்தைகள் ரகுமான் தம்பியின் இசையில் சம்மணமிட்டு அமரவில்லை! நொண்டியடிக்கிறது" என்று தான் சொல்ல வேண்டும்!

ஓரிரு வரிகளைத் தவிர அனைத்தும் புளித்துப் போன பழைய வரிகள். நிமிஷங்கள் வருஷமாவதையும், குளிர்காலம் கோடை ஆவதையும், செந்தணல் பனிக்கட்டி ஆவதையும் எத்தனை முறை தான் எழுதுவார்களோ நம் கவிஞர்கள்..கேட்டதையே கேட்பதை விட தனிமையே தேவலை என்று தோன்றுகிறது. பாட்டுக்கு மெட்டு என்றால் கவிஞர்களுக்கு அல்வாவுடன் கொஞ்சம் காராசேவ் சாப்பிடுவது போல்[ஸ்வீட் காரம்பா!]. வாலி போன்ற பெருங்கவிஞர் இப்படி சொதப்பியிருக்கக் கூடாது.

"காற்று வாங்கப் போனேன், ஒரு கவிதை வாங்கி வந்தேன்!" என்ற பாட்டையும் வாலி எழுதி விஸ்வநாதன் மெட்டு போட்டார் என்று படித்திருக்கிறேன். அந்தப் பாட்டின் பல்லவி ஒன்றே போதும், கவிதை! வாலி சார், பேசாமல் நீங்கள் அவதார புருஷனே தொடருங்கள்!!

குற்றம் கண்டு பிடித்தே பெயர் வாங்கும் புலவர் என்றும் என்னை தாங்கள் யாரும் சொல்லி விடக்கூடாதெ, அதனால் சரி பாட்டுக்குத் தானே மெட்டு..நானும் ஒரு கை பார்த்து விடுகிறேன்.. என்றதன் விளைவு கீழே [ஐய்யோ, சேருக்கு அடியில இல்லைங்க!!]

[முன் குறிப்பு: இதிலும் ஏற்கனவே சொன்ன விஷயங்கள் வந்திருக்கலாம், ஆனால் எழுதும் போதும், படிக்கும் போதும் எனக்கு அலுக்கவில்லை!]

[பல்லவி 1]
சுவாசம் முழுதும் உன் காதல்
தேசம் முழுதும் உனை தேடும்
வாசம் மாறா உன் தேகம்
பேசாப் பொழுதும் என் உயிர் பாடும்

[பல்லவி 2]
கண்கள் ரெண்டும் உனை தேடும்
கவிதை என்றும் பொய் பேசும்
இதயம் இன்று இளைப்பாறும்
இயக்கம் கொஞ்சம் தடுமாறும்

[சரணம் 1]
காதலி என்ன கடவுளா?
தூணிலும் துரும்பிலும் தெரிகிறாள்

காதலைச் சொல்லி பிரிகிறாள்
கனவினில் எங்கும் விரிகிறாள்

காதல் வளர்வது பிரிவிலா
கண்கள் கலங்கியதென்ன பரிவிலா

காதலில் இரக்கம் பஞ்சமா
தோற்றவன் உலகில் கொஞ்சமா

[பல்லவி]

[சரணம் 2]
மழை தனியாய் எனை நனைக்க
மனம் உனையே நினைத்திருக்க

என் இளமைப் பறவை பறந்தது
உன் நினைவு சிறகுகளால்

என் இதயம் ஒன்றே சிறந்தது
உன் இதயம் வென்றதால்

இமை மேல் கொஞ்சம் ஈரம்
இளமையில் தனிமை சாபம

[பல்லவி]

யாரங்கே..யாரடா அங்கே!! லகுட பாண்டிகளே! மெட்டு போட கூட்டி வாருங்கள் ரகுமானை...
12 Responses
  1. Anonymous Says:

    you've got *some* attitude dude. i'm all okay with you criticizing the newyork song, but if you thought you'll get a standing ovation for your shitty lyrics, sorry.


  2. Anonymous Says:

    //[முன் குறிப்பு: இதிலும் ஏற்கனவே சொன்ன விஷயங்கள் வந்திருக்கலாம், ஆனால் எழுதும் போதும், படிக்கும் போதும் எனக்கு அலுக்கவில்லை!]//

    உங்க பாட்டுக்கு மட்டும் முன்குறிப்பு தேவையா? நீங்க பண்ணினா தப்பிலை மத்தவங்க பண்ணினா தப்பு, அப்படித்தானே???

    நானும் உலகத்துல ஏதாவது ஒரு மூலையில உக்கார்ந்துட்டு வக்கணையா விமர்சனம் பண்ணிருவேன்... புணர்வு கதை எழுதிய பிரதீப்புக்கு இது தேவையில்லாத வேலைன்னு...


  3. Anonymous 1,

    i never thought that people will agree all my points and applaude me for my lyrics. my problem is, if this song has been composed first and vaali write a lyric into that music, can compromize that song should fit within that music. But rahman gave the whole freedom to vaali and composed his lines. having that freedom also, vaali has failed miserably. and last but not least..
    when i criticize something, i boldly use my IDENTITY :)

    Anonymous 2,

    நான் எங்கே, பல வருடமாய் கொடி கட்டிப் பறந்து கொண்டிருக்கும் வாலி எங்கே..
    என்னை மாதிரி கத்துக்குட்டி முன்குறிப்பு போடலாம், அவரை மாதிரி ஜாம்பவான்களுக்கு அது தேவையில்லை என்பது தான் என் வாதம்.

    பாட்டுக்கு மெட்டு போட்டும், அதை வாலி சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லையோ என்ற ஆதங்கம் தான் எனக்கு. அப்புறம், என்கிட்ட நீங்க புணர்வு கதைகளை மட்டும் எதிர்பார்த்து வந்தால், இப்படி தான் ஏமாற்றமடைவீர்கள்!!


  4. Anonymous Says:

    "Intha Pattukku Isaiammaikka Rahman thevayillai. Atharku Naanae Podumae".
    But let me learn some music to do so...
    "Appozhuthu theriyum Un Vaarthaigal Chammanamittu amarkirathaa allathu thari kettu odukiratha enru. Eppai nadanthaalumperumai Unakkuthaan "...


  5. Anonymous Says:

    "Intha Pattukku Isaiammaikka Rahman thevayillai. Atharku Naanae Podumae".
    But let me learn some music to do so...
    "Appozhuthu theriyum Un Vaarthaigal Chammanamittu amarkirathaa allathu thari kettu odukiratha enru. Eppai nadanthaalumperumai Unakkuthaan "...akkuthaan "...


  6. Peter,

    if u want to compose music for this song, learn music and compose. but u can't say like rahman is god and he will not music for my song and all..

    roja padathula rahmanai pathuttu vairamuthu, "intha chinna payyanukellam pattu ezhutha mudiyathunna sonnaaru?" antha mathiri thaan..

    and i am pretty sure that "en vaarthaigal mettukkul sammanamittu amarum enbathil enakku thulyium santhegam illai :) en endraal ellame eliya varigal.."


  7. Anonymous Says:

    Probably this is the first blog/comment i come across giving a negative criticism for this song...
    anyways...
    Aanaal Vaarthaigal sammanamitu amara varigal konda paadalai aayira kanakaana manidhargal paarata vaitha rahmanin thiramaiai neegal paarati iruka vendum... :P


  8. Vimal,

    kurai niraigalai soldrathu thaane vimarsanam. medayila vanthaale maalaigalum, kalladigalum sagajam thaan :)

    i could see lot of A R Rahman die hard fans here..i am not talking abt his music, i am talking abt the lyrics only :)

    i am happy with Rahman, not with Vaali! That is the post all about


  9. Anonymous Says:

    thamiz theriyumanu kaetathukku mannikkavum ! pirichedukareenga ponga . . . kurippaga kavidhaigal.



  10. Anonymous Says:

    Pradeep,
    This post is good.I didn't like this tune as well. Rahman could have tried better. sorry for this late comment. The reason, few days before only i heard this song properly.


  11. Anonymous Says:

    The song or lyrics... nothing impressed me that much...I have found lots of people praising this song like anything...
    I am also in ur side with the comments...
    As usual no comments on your lyrics.