வெள்ளத் தோலும், வெளையாட்டுமா பேசுவாரே அவரா
சின்ன நெத்தியில பெரிய பொட்டு வச்சுருப்பாரே அவரா
எலும்புக்கு மேலே தோல் போத்தினாப்ல இருப்பாரே அவரா
எட மெஷினா எனை நெனச்சு மேல கெடப்பாரே அவரா
ஒரு மணி நேரம் அனுபவிச்சுட்டு ஓசி ஒன்னு கேப்பாரே அவரா
அவுத்துப் போட்டு அரசியல் பேசுவாரே அவரா
ராவுக்கு மட்டும் வீட்டுக்கு போவாரே அவரா

ஆரோட புள்ளடா நீ?
5 Responses
  1. நூறில் ஒரு கண்ணீர் ஆறா?

    கவிதை நல்லா இருக்கு.

    "அவளும் சொல்ல வில்லையென்றால் தப்பாக தான் போகுமடா?"

    இதே கதி தான் நாகாலாந்து பகுதியில் என்று கேள்விபட்டுள்ளேன்.


  2. Anonymous Says:

    vilai maadu kitte modo orthen poyirukkan... ava kitte ippo avonoda magan poyirukkan..

    ida thaan sollavarriya...


  3. பாலாஜி,

    ஒரு விலை மாது ஒரு குழந்தை பெத்துகுட்டா எப்படி இருக்கும் என்ற கற்பனையில் உதித்தது கவிதை!

    நானே விளக்கிக் கூறும் போது கவிதை எதிர்பார்த்த இடத்திற்கு செல்லவில்லை என்று விளங்குகிறது!


  4. கவிதை அருமை.

    //நானே விளக்கிக் கூறும் போது கவிதை எதிர்பார்த்த இடத்திற்கு செல்லவில்லை என்று விளங்குகிறது!//

    புரிய கூடாது. அதான் வெற்றி

    வாழ்த்துக்கள் ப்ரதீப்

    அன்புடன்
    தம்பி


  5. ப்ரதீப் நன்று
    மிக அருமையான கதிகலங்க வைக்கும் உணர்வின் வெளிப்பாடு இந்தக் கவிதை

    தொடர்ந்து எழுதுங்க