தேவனின் "பல்லிசாமியின் துப்பு" என்ற புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கிறேன். படித்துக் கொண்டிருக்கிறேன் என்பதை விட சிரித்துக் கொண்டிருக்கிறேன் என்று தான் சொல்ல வேண்டும். மனிதருக்கு என்னமாய் ஹாஸ்யம் வருகிறது. கீழ் வருவது நான் மிகவும் ரசித்த கதைகளுள் ஒன்று. படித்து விட்டு, சிரித்து சிரித்து உங்கள் வயிறு புண்ணாணால் நான் பொறுப்பாளியல்ல!
1
10-1-'43
'புராதன விலாஸ்' மானேஜர் அவர்களுக்கு மாணிக்கம் பிள்ளை எழுதிக் கொண்டது.அன்பார்ந்த ஐயா,
தங்களிடம் நான் வாங்கிய தமிழ் 'டைப் ரைட்டிங்' மிஷின் வெகு அற்புதமாக உழைக்கிறது. அதைப் பார்க்கிற பேர் யாரும் அது ஸகிண்ட் ஹாண்ட் மிஷின் என்று சொல்ல முடியாது. இவ்வளவு நல்ல பண்டத்தைப் பொறுக்கி எடுத்து எனக்கு நீங்கள் விற்றதற்காக மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். என் நண்பர்களுக்கெல்லாம் தங்கள் கடையையே எப்போதும் சிபாரிசு செய்து கொண்டிருக்கிறேன்.
தங்கள்,
மாணிக்கம் பிள்ளை
மாணிக்கம் பிள்ளை
2
14-1-'43
'புராதன விலாஸ்' மமம மானேஜர் அவர்களுக்கு:அன்பார்ந்த ஐயா,
உங்கள் டைப் ரைட்டிங் மிஷின் இன்னும் மமமம நன்றாகத்தான் வேலை செய்கிறது. ஆனால் மமம என்ற எழுத்து வரும்மமம போது மமமமட்டும்மமம ஏனோ மமமமறுபடி 'ம' எழுத்து விழுந்து விடுகிறது. உடனே ஒரு ஆளை அனுப்பி ரிப்பேர் செய்யச் சொல்லவும்மமம.
தங்கள்,
மமமமாணிக்கம்மமம பிள்ளை
மமமமாணிக்கம்மமம பிள்ளை
3
20-1-'43
புரா?ன விலாஸ்? மானே?ருக்கு?ஐயா?
நீங்கள் அனுப்?ய ஆள் வந்தான்? ரிப்பே?ர் செய்தான்? ஆனால் நான் என்னத்தைச் சொல்?லுவேன்? தலை?லி போய் திரு?வலி வந்தது போல், ஒன்று போய் ஒ?று அல்லவா வ?து விட்டது. நான் டை? அடி?கும்போ? ஏனோ கே?விக்குறிக? விழு?து கழு?தை அறு?கி?றனவே?? த?ர, அது போடு? சத்?ம் காத?ல் கேட்?? முடியவில்லையே? உடனே வேறொரு ந?ல? ஆளாக அனுப்? வை?கவும்? பழைய ஆசா?யை மென்று கேட்?க் கொ?கிறே?
தங்கள் உண்மையுள்ள?
மா?க்கம் ?ள்ளை?
23-1-'43
'புராதன விலாஸ் மானேஜரே!'மா?க்கம் ?ள்ளை?
4
23-1-'43
அன்பார்ந்த ஐயா!
உங் கள்கம் பெனியில்வியா பாரம்வைத்து கொண்ட தற்காகஎன் னை செருப்பால்அ டிக்கலாம். ஆ மாம்! ஒருரி ப்பேர் செய்தா ல்இன்னொரு ரிப்பேர்கா த்திருக்கிறது. வார் த்தைமுடி ந்தால் இட வெளிவி ட்டுக்கொள்ளாதோ? வயி ற்றெரிச்சலைக் கேளுங்கள். தா வித்தா விக்கு திக்கிறதே!
கொஞ்சமும்மன நிம்மதியில்லை. உடனே ஒதுக்கப் பண்ண ஆள் ஜல்திஅ னுப்பவும்.
தங்கள்
மா ணிக்க ம்பி ள்ளை
மா ணிக்க ம்பி ள்ளை
5
00-00-0000
'புராதன000 மானே 0000ஐ00
நீங்க00 அனு00ய ஆள் வந்000. அவன் சுத்0 சைபர் என்0தற்கு இது 00 அத்00ட்சி போ00தா? சும்மா0 சும்மா நா0 ரி00ர் ப0ணிக் கொ0டு இருக்க மு0யாது. இ0வே க00சி 00வை. இனியு0 மிஷி0 ஒழு0 காகா விட்டால் நான் உங்கள் கம்பெனி மீது 00000 0000 வேண்டியி0க்0ம் எ0று எ0சரிக்கை 00கிறே0.
மா0000 பி000
6
2-2-'43
'புராதன விலாஸ்' மானேஜர் அவர்களுக்கு:அன்பார்ந்த ஐயா,
நான் கடிதம் எழுதிய போதெல்லாம் ஆள் அனுப்பி என் மிஷினை ரிப்பேர் செய்தத்தற்கு மிக நன்றியுள்ளவனாகயிருக்கிறேன். இப்போது மிஷின் திருப்திகரமாக 'டைப்' அடிக்கிறது! அபாரம், அருமை, அற்புதம், போங்கள்!
என் நண்பர்களிடம் f f f f f f f f f f f f0 0 0 0 0 0 0 0 0 ** * * * * * 0 0 0 0 0 0 0 0 % % % % % % % f f f f f f f f f f ? / த ? f % உண்மை ???
மாணி f f ம் % ள் ?
பின் குறிப்பு
இந்த* தடி ? ம் அடிக்க ஆர பிரித்* * * * சில கோளாறுகள் ஏற்பட்டிருக்கி%றன ? உடனே fரு ஆளை அனுப்பி* * ? ? வைக்fவும்!
------------சுபம்--------------
என்னுடைய கீ போர்ட் இப்படித் தகராறு செய்த போது நான் பதிந்த இந்தப் பதிவு எனக்கு இன்னும் இந்தக் கதை பிடிப்பதற்கு காரணமாகிவிட்டது. அந்தக் காலத்துலயே இப்படி ஒரு புதுமையான சிந்தனை! இந்தக் கதையை படித்து விட்டு நான் நினைத்து நினைத்து சிரித்துக் கொண்டிருந்தேன். நீங்களும் அப்படித் தானா?