கதை - எழுதியாகிவிட்டது
கவிதை - எழுதியாகிவிட்டது
கட்டுரை - எழுதியாகிவிட்டது
ஓவியம் - வரைந்தாகிவிட்டது
விமர்சனம் - எழுதியாகிவிட்டது
அனுபவங்கள் - எழுதியாகிவிட்டது
திரைக்கதை - இதோ...
இது என்னுடைய முதல் திரைக்கதை அனுபவம்! இதை, குத்து பாட்டு 2 போட்டா படம் பிச்சிக்கும் என்று சொல்லாத தயாரிப்பாளர் கிடைத்தால் 5 அல்லது 7 நிமிட குறும்படமாக எடுக்கலாம். ஏதோ நான் படித்த மற்றும் பார்த்த அனுபவங்களைக் கொண்டு இதை எழுதியிருக்கிறேன். நம் நாட்டின் கல்வி முறையையும், பரிட்சை பற்றிய பயமும் ஒரு சிறுவனின் பார்வையில் இருந்து சொல்ல முயன்றிருக்கிறேன்..இது நம்மில் பலரின் அனுபவமாகக் கூட இருக்கலாம்.
ஓபன் பண்ணா! [ஆரம்பிச்சுட்டான்யா!]
அதிகாலை ஒரு தெரு.
தூரத்தில் ஒரு வீட்டில் அலாரத்தின் சத்தம்.
அப்பா: டேய் மணி, எந்திரி..மணி 5 ஆச்சு பாரு..எந்திரி. இன்னைக்கு என்ன பரிட்சை?
மணி: [கண்களை கசக்கி கொண்டே] கணக்கு!
அப்பா: போ, போய் பல்லை விலக்கிட்டு, முகம் கழுவிட்டு படி..[அப்பா திரும்பி படுத்துக் கொள்கிறார். மணி வேண்டா வெறுப்புடன் நடந்து பாத்ரூம் செல்கிறான்.]
மணி முகம் கழுவிய பிறகும் இன்னும் தூக்கக் கலக்கத்துடன் இருக்கிறான். கணக்கு புத்தகத்தை பையில் இருந்து எடுக்கிறான். கணக்கு 7 close-upல் காட்டப் படுகிறது. அதை தூக்கக் கலக்கத்துடனும் வேண்டா வெறுப்புடனும் பார்க்கிறான். ஏதோ ஒரு பக்கத்தை புரட்டுகிறான். தூக்கத்தில் பக்கங்கள் மங்கலாகத் தெரிகிறது. [பின்னனியில் ஒரு தாலட்டு இசை பதிவாகிறது.] அப்படியே புத்தகத்தின் மேல் தலை கவிழ்ந்து படுத்துக் கொள்கிறான்.
அப்பா: [படுக்கையிலிருந்து] என்னடா தூங்குறியா?
மணி: [வாயில் ஏதோ முனுமுனுத்துக் கொண்டே] ஒன்னும் தூங்கலை..படிச்சிட்டு தான் இருக்கேன்.
காலை
மணி குளித்து சீருடை அணிந்து சாமி கும்பிடுகிறான்.
மணி: பிள்ளையாரப்பா..இன்னைக்கு கணக்கு பரிட்சை!..உன்னை தான் நம்பி இருக்கேன். பரிட்சை ஈஸியா இருக்கனும். அந்த சோடாபுட்டி வாத்தியார் வரக் கூடாது....இப்போ என் தலையில குட்டிக்கிறேன்...மகனே சொதப்புன..சாய்ந்தரம் உன் தலையில கொட்டுவேன்டீ! ஆமா..[பிள்ளையாரைப் பார்த்துக் கொண்டே திருநீறை எடுத்து பூசிக் கொள்கிறான்]
மணி பையை எடுத்துக் கொண்டு பள்ளிக்கு கிளம்புகிறான். அப்பா வாசலில் பேப்பர் படித்துக் கொண்டிருக்கிறார்.
அப்பா: என்னடா ஒழுங்கா படிச்சியா? பரிட்சையை ஒழுங்கா பாத்து எழுது!
மணி: எங்க பள்ளிகூடத்துல பாத்து எல்லாம் எழுத விட மாட்டங்கப்பா..
அப்பா: அடி படவா..[மணி ஓடுகிறான்] பாஸ் பண்ணாம வீட்டுக்கு வந்துராதே..இதெல்லாம் எங்க உருப்புடப்போகுது?! புள்ளைய பெத்துருக்கா பாரு..அவ அண்ணன்காரன் மாறியே..[உள்ளேயிருந்து ஒரு பெண் குரல்: எங்க வீட்டை குறை சொல்லலைன்னா உங்களுக்கு பொழுது விடியாதே!]
மணி குழப்பத்துடன் நடந்து செல்கிறான். எத்தனை முறை படித்திருந்தாலும் சூத்திரங்கள் ஞாபகத்திற்கு வர மறுக்கின்றன. [அவன் தோல்பை சிலுவையாய் மாறுகிறது. அவர் அப்பாவும், வாத்தியாரும் பிரம்பால் அடித்துக் கொண்டே பின்னால் வருகிறார்கள்! ]
டீ கடையில் வேலை பார்க்கும் ஒரு பையன் மணியை பார்த்து, "என்னடா பரிட்சையா இன்னைக்கு?" என்று சிரிக்கிறான். மணிக்கு அவனை பார்க்க பொறாமையாய் இருக்கிறது. தலை குனிந்து நடக்கிறான். ரோட்டில் எல்லோரையும் பார்த்து இவர்களுக்கு எல்லாம் இன்று கணக்கு பரிட்சை இல்லையே..என்ற ஏக்கத்துடன் நடக்கிறான்.
பள்ளிக்கூடம்
கேள்வித் தாள் கொடுக்கப் படுகிறது. மணிக்கு ஒன்றும் புரியவில்லை. கண்களில் கண்ணீர் வந்து நிற்பதால் கேள்வித்தாள் மங்கலாய் தெரிகிறது..வேர்க்கிறது. அந்த வேர்வையில் அவன் பூசியிருந்த திருநீறு கரைகிறது..
பிள்ளையாரை குட்டுவது போல் மணி கற்பனை செய்து கொள்கிறான்!

சுபம்
Mani Enbathai Pradeeep enru anaivarum maatri padikkavum
yathi,
ithe anubavangaludan neriyya pradeepgal irunthargal, irukkirargal enbathu thaan kasappaana unmai :)
பிரதீப்,
இதை குறும்படமாக எடுத்தால் இரண்டு அல்லது மூன்று நிமிடம் தான் ஓடும் என்று நினைக்கிறேன். நீ சொல்ல வந்த கருத்தை இன்னும் ஆணித்தரமாக சொல்லவில்லையோ என்று தோன்றுகிறது. வெளிப்படையாக சொன்னால், படித்து (படம் பார்த்து) முடித்தவுடன் தன்னையறியாமல் ஒரு தாக்கம் வரும் இல்லையா அது மிஸ்ஸிங். நான் இன்னும் நிறைய எதிர்ப்பார்த்தேன்.
தோல்பை - சிலுவை, உவமை பாராட்டுக்குரியது.
உன் முதல் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்.
pradeep
thangaludaiya muyarchikku ennudaiya vazhthukkal. The theme you have taken is good. However, I believe you haven't fully scripted what you want.
Pradeep,
For sure, the message didn't reach me. You're just viewing it from Mani's angle, but not much thoughts haven't come from him except that writing exam is a difficult thing, which everybody understands. Can you elaborate it much more?
I appreciate your attempt, but expecting much more.
நல்ல கரு.
இன்னும் கொஞ்சம் நல்ல வந்திருக்கனும்.
முதல் முயற்ச்சி பாரட்டத்தக்கது.
மக்களே,
நீங்கள் சொல்வதெல்லாம் சரி தான். க்ரிஸ்ப்பாக இருக்கட்டும் என்று சின்னதாக எழுதிவிட்டேன். அது ஓவர் க்ரிஸ்ப் ஆகி விட்டது.
இன்னொரு நல்ல முயற்சியுடன் உங்களை சந்திக்கிறேன்!
sujathavin tiraikkadai ezhuduvadu eppadi padichirukkeengala? padinga.
eswari,
antha book ellam padichathaala thaan intha alavukkaavathu ezhutha mudinjathu.
பிரதீப் ஓட்டு போட்டாச்சு, என்னைக்கு ரிசல்ட் ரீலீஸ்னு சொல்லுங்க?
சிவமுருகன்,
ஏங்க நீங்க வேற, என் ப்ளாகுக்கு எத்தனை பேரு தான் வோட்டு போட்ருக்காங்கன்னு பாக்கலாம்னா, அதை கண்லயே காட்ட மாட்றாங்க! இதுல நீங்க ரிஸல்டுக்கு போயிட்டீங்க. யாராவது அதை கண்டுபிடிச்சி சொல்லுங்க! மண்டை காயுது!
அப்பப்ப நம்ம வீட்டுக்கும் வந்து ஒரு கமென்ட் அடிச்சிட்டு போறது? என்ன நான் சொல்றது. அங்க வந்தா நான் யாருனு உங்களுக்கு தெரிஞ்சிபோயிரும். நாம மதுரைல சந்திச்சிருக்கோம். ரொம்ப பக்கம் வரவா? நான் 7வது படிக்கும் பொது உங்ககிட்ட ஒரு தடவை ஒரு கணக்கு படிச்சிருக்கேன். உங்க பக்கத்து வீட்டு ஸ்ரீநிவாசனோட நன்பன் நான். மறந்துட்டீங்கன்னு நினைக்கிறேன்.
(ஏற்கனவே மண்ட காயுது இதுல இதுவேறயா? ன்னு நினைக்கிறீங்க்ளோ?)
good story..paritchai yevvalavu allergyaana vishayamaa ellaarum feel panrathai nalla kadhayaa konduvandhurkeenga..
சிவமுருகன்
என்னை மாதிரி ஒரு பதிவு வச்சுருந்தா, வந்தோமா, ஒரு கமெண்டை போட்டோமான்னு போகலாம். நீங்க தான் 7, 8 வச்சுருக்கீங்களே! எதுல கமெண்ட் போட்றதுன்னு குழப்பமாயிடுதுங்க!
என்னவோ, என்கிட்ட வந்து கணக்கு கத்துட்டு போயும் நீங்க இன்னைக்கு டெல்லியிலே எல்லாம் வேலை பாக்குறதை நெனைச்சா ஒடம்பு பூரிச்சிப் போய் கெடக்குப்பூ!
உங்கள் புகைப்படத்தைப் பார்த்தால், உங்களை பார்த்த மாதிரி தான் இருக்கிறது. மதுரை போகும் போது, சென்னை பக்கம் வந்துட்டு போங்க! உங்களுக்கு நான் சொல்லிக் கொடுத்த கணக்கு எனக்குத் தெரியுதான்னு பாத்துருவோம்! என்ன நாஞ் சொல்றது?