இந்த blog படிக்கிறதுக்கு முன்னாடி,

TV ல மெட்டி ஒலி, கோலங்கள் ஓடுதுன்னா better off பண்ணிட்டு வந்திருங்க..
grinderla மாவு போட்டு இருந்தீங்கன்ன better off பண்ணிட்டு வந்திருங்க..

இது கொஞ்சம் பெரிய POSTUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUU..ஆமா!

நான் [இங்கு நான் என்பது நானும் என் நண்பர்களும்!!] ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் 1 மணி நேரம், என் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள ஒரு சின்ன பள்ளிக்கூடத்துக்கு போறது வழக்கம். [என் rediff blog படித்தவர்களுக்கு இது தெரிந்திருக்கும்]

ஏன் போறேன்? [இப்போவாவது படிக்கலாம்னு தான்..]

நான்
AID என்ற ஒரு சமூக நலக் குழுவில் உள்ளேன். அதைப் பற்றி ஓரளவுக்கு விரிவாய் என் rediff blog எழுதியுள்ளேன்.

.................................................................................
.................................................................................
.................................................................................
[இதை புள்ளி புள்ளி என்று வாசித்திருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்..அப்படிப் போட்டா என்ன எழுதலாம்னு யோசிக்கிறேன்னு அர்த்தம்பா!! அடா அடா..]

சரி, இப்போ இருக்குற Education System நல்லா இருக்குன்னு சொல்றவங்க எல்லாம் கை தூக்குங்க! ................................................

sorry! நான் உங்க கூட பேசுற மாதிரி இல்லை. உங்க பேச்சு கா!

school நிஜம்மாவே குழந்தைகளுக்கு சந்தோஷம் தருதா என்ன? என்னைப் பொறுத்தவரை வரை இல்லைன்னு தான் சொல்வேன். என்னைப் பொறுத்தவரை school என்பது குழந்தைகளை FAIL ஆக்குவதற்காகவே உருவாக்கப்பட்டதாகத் தோன்றுகிறது!! நீங்களே சொல்லுங்கள். இன்றைய குழந்தைகள் எவ்வளவு வேகமாக செயல் படுகிறார்கள். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நம்மால் கூட பதில் சொல்ல முடிவதில்லை. அப்படித் தான் எல்லா குழந்தைகளும் பிறக்கும்போது இருக்கிறார்கள். பின்பு ஏன் அவர்கள் school சென்று FAIL ஆகிறார்கள்? ஏன் 1 ஒருவன் மட்டும் first rank வாங்குகிறான்?

நிறைய சிந்திக்கும் குழந்தைகளை நாம் பள்ளி என்னும் JAIL ல் அடைத்து அப்பாடா இனி அவன் படிச்சா அவன் நல்லா இருப்பான், நம்ம கடமை முடிஞ்சது என்று தான் இருக்கிறோம். நம்மை விட குழந்தைகளுக்கு புதுசாய் கற்பதில் ஆர்வம் இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. அப்படி நிறைய சிந்திக்கும் குழந்தையை ஒரு school ல் சேர்த்து சில புத்தகங்களை கையில் கொடுத்து, இதில் என்ன இருக்கிறதோ அதை தான் நீ இனி படிக்க வேண்டும், இதைப் பற்றி தான் நீ சிந்திக்க வேண்டும் என்று ஒரு முட்டுக்கட்டை போடுகிறோம். குழந்தைக்கு ஒழுக்கம் கற்றுக் கொடுப்பதாய் நினைத்து, பள்ளயில் அவன் என்ன செய்தாலும் ஆசிரியர்:

1. ஹேய் [குழந்தைகள் என்ன ஆடு மாடா?] கத்தாதே..சத்தம் போடாதே!
2. அடுத்தவன்கிட்டே பேசாதே! எனக்கு pin drops silence இருக்கணும், ஆமா!! [அப்போ தானே அவருக்கு தூக்கம் வரும்]
3. வாயில விரலை வை! [அந்த குழந்தை அப்போ தான் கை சூப்புர பழக்கத்தை விட்ருக்கும், என்னடா வாத்தியாரே சொல்றாரேன்னு மறுபடியும் சூப்ப ஆரம்பிச்சிடும்!!]
4. bench மேல ஏறி நில்லு.
5. neel down போடு.
6. ஜன்னல் வழியா எட்டிப் பாக்கதே! தொலைச்சுடுவேன்!!
7. நீ எல்லாம் மாடு மேய்க்கத் தான் லாயக்கு!!

பின் குறிப்பு: நான் போகும் school ல் எந்தக் குழந்தையை எதைக் கேட்டாலும் கையைக் கட்டிக் கொள்ளும். நான் அதை எடுத்து விடுவேன். அது மறுபடியும் கட்டிக் கொள்ளும். [அப்படி அவர்களை பழக்கி விடுகிறார்கள்!]

இன்று இருக்கும் கல்வி முறை:

"ஒரு ஆசிரியர் இருப்பார், அவருக்குத் தான் எல்லாம் தெரியும். அவர் சொல்வதைக் மட்டும் கேட்க வேண்டும். அவர் அறிவை அப்படியே தூவி விடுவார். குழந்தைகள் catch பிடித்துக் கொள்ள வேண்டும்."

புத்தகத்தில் என்ன இருக்கிறதோ அதை மனப்பாடம் செய்ய வேண்டும். அப்படியே அதை பரிட்சையில் வாந்தி எடுக்க வேண்டும்!! நன்றாக வாந்தி எடுப்பவன் சிறந்த மாணவன். சரியாய் வாந்தி எடுக்காதவன் மாடு மேய்க்கத் தான் லாயக்கு, tea ஆத்தத்தான் லாயக்கு!!

joy of learning

so, இந்த முறையை மாற்றுவது தான் எங்கள் குறிக்கோள். படிப்பு என்பதும் விளையாட்டாக இருக்க வேண்டும், LEARNING SHOULD BE FUN. INSTEAD OF TEACHING, WE SHOULD DISCUSS WITH THEM TO ARRIVE A CONCLUSION. அவர்களிடமிருந்து நாம் நிறைய கற்கலாம். இதனால் தான் நான் school க்குப் போகிறேன். நான் போகும் school மிகச் சிறியது. 2 அறை தான். 3,4 & 5 எல்லாம் ஒரே அறையில், அதற்க்குக் கீழ் உள்ள குழந்தைகள் மற்ற அறையில். We have set of general syllabouse on all subjects. Science [Simple experiments], Maths, Social Science etc.,] We discuss Social Science with 5th Std students.

நான் முதலில் ஏதாவது விளையாடுவேன். [குழந்தைகளுக்கு நம் மீது நம்பிக்கை வர அவர்களுடன் விளையாட வேண்டும்] 4 joke சொல்வேன். நல்லா சிரிக்க வைப்பேன். கோணங்கித்தனம் பண்ணுவேன். கோமாளித்தனம் பண்ணுவேன்..பாட்டு பாடுவேன், விடுகதை கேட்பேன். [believe me, infosys puzzle க்கு answer பண்ணாங்க..i stemped!!] அப்போ தான் சரி இவன் நம்ம வாத்தியார் மாதிரி இல்லை, நல்ல ஆளா இருக்கான், இவன்கிட்டே பேசலாம் என்று நினைப்பார்கள். நாம் எத்தனை குழந்தைகளைப் பார்த்திருக்கிறோம், பள்ளியில் பேசவே மாட்டார்கள். அவர்கள் அங்கே ஒதுக்கப்பட்டவர்கள். [நானும் அப்படித்தான் இருந்தேன்!!]

That syllabous has some worksheets:

1. உன்னைப் பற்றி
2. உன் நண்பர்கள் பற்றி
3. உன்னிடம் உள்ள தனித்தன்மை
4. உன் குடும்பம்
5. உன் ஊர்

அவர்களைப் பற்றி அவர்களுக்குள்ளே யோசிக்கச் செய்வது. சமூகத்தை அவர்களுக்கு அடையாளம் காட்டுவது. தன்னம்பிக்கை வளர்ப்பது. அவர்களின் பலத்தை அவர்களுக்கு உணர்த்துவது..இப்படிப் பல...

நான் school க்குள் நுழைந்தவுடன் அங்கே ஒரு குதூகலம்..ஒரு களிப்பு..ஒரு சந்தோஷம் எல்லாம் அவர்களுக்குள் வருவதை பார்க்கிறேன்.

1. எங்க வீட்டுக்கு வாங்க என்று ரோட்டில் என்னைப் பார்த்து என் கையைப் பிடித்து அந்த சின்ன பையன் இழுக்கும்போது..
2. office செல்லும் என்னை வழியில் பார்த்து chocolate எடுத்துக்குங்க, இன்னைக்கு எனக்கு birthday என்ற அந்த சின்ன பெண்ணைப் பார்க்கும்போது..
3. நான் உள்ளே நுழைந்தவுடன் எனக்கு கை கொடுக்கத் துடிக்கும் அந்த பிஞ்சுக் கரங்களை நினைக்கும்போது...
4. உங்களுக்காக கோயில்ல இருந்து திருநீரு கொண்டு வந்துருக்கேன், வச்சுக்குங்க என்று சொல்லும் போதும்..

என் வாழ்க்கைக்கும் அர்த்தம் இருக்கத் தான் செய்கிறது!!

நான் ரஜினியோட FAN னு சொல்றதை விட அவரோட WINDMILL னு சொல்லலாம். அவ்வளவு பெரிய FAN நான்!!! [வழக்கமான ஹிஹி..ஹிஹி]

என் இள வயதில் நான் "நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாய்" வளர்ந்ததை விட "நாளொரு ரஜினி படம், பொழுதொரு ரஜினி ஸ்டைலாகத்தான் வளர்ந்தேன். [ரொம்ப வளரல, கொஞ்சம் குள்ளம் தான்..]

1. என் compoundல் என் பெயர் ரஜினி, எனக்கு தம்பி இருப்பதால் நான் "பெரிய ரஜினி" அவன் "சின்ன ரஜினி"!
2. பூ விற்றுக்கொண்டு வரும் ஒரு அக்கா என்னிடம் "டேய், ஒரு தடவை ரஜினி ஸ்டைல் செய்துகாமிடா" என்று கெஞ்சுவாளாம். [அம்மா சொன்னாள், எனக்கு
ஞாபகம் இல்லை!]
3. எனக்கு தெரிந்து வந்த அத்தனை ரஜினி பாட்டும் தலைகீழ் பாடம். [அப்புறம் படிப்பு எப்படி வரும்னேன்?]
4. புதிதாக ஒருவனை என் நண்பனாக ஏற்றுக் கொள்ள நான் அவனைக் கேட்கும் கேள்வி:
1. உன் பேர் என்ன?
2. நீ ரஜினி கட்சியா, கமல் கட்சியா? [அவ்வளவே..]
எனக்கு தெரிந்து என் வயதை ஒத்த பசங்களுக்கு, ரஜினியை தான் பிடிக்கும். யாராவது கமல் கட்சி என்றால் கமல் எப்போ பாத்தாலும் herione ஐ
கொஞ்சிட்டே [உவ்வே..அப்போ!! ;)]இருப்பாரே, சண்டையே போட மாட்டாரே..அவரைப் போய் இவனுக்கு எப்படி பிடிக்குது? என்று என் whole set [பெரிய shaving settu..] அவனை தீண்டத்தகாதவனைப் போல் பார்ப்போம். அவன் பிறப்பிலேயே ஏதோ கோளாறு என்றே நான் நினைத்தேன்.
5. பலரை ரஜினியின் மகத்துவங்களைக் கூறியே ரஜினி கட்சிக்கு இழுத்த பெருமை எனக்கு உண்டு!
6. T-Shirt போட்டுக் கொண்டால் மேல் button போட்டுக் கொள்ள மாட்டேன் ;)
7. வீட்டில் எனக்கு hair-cut பண்ண ஒரு யுத்தமே நடக்கும். அப்படியே போனாலும், ரஜினி மாதிரி step-cutting போடுங்க என்பேன். சலூன் கடையில் இருப்பவன் சிரித்து விட்டு, அதுக்கெல்லாம் நெறைய முடி வேணும் என்பான். மூக்கு வரை எனக்கு முடி இருக்கிறது, இதற்கு மேல் என்ன? என்று எனக்கு எரிச்சலாய் வரும்.
இதற்குள் என் தம்பி "நல்லா பொடி வெட்டா போட்ருங்க" என்று சொல்லி சைகை காட்டிப் பழி தீர்த்துக் கொண்டிருப்பான்!! [so, 16 வயதினிலே பரட்டை மாதிரி உள்ளே போன நான், குறுதிப் புனல் கமல் rangeukku வெளியே வருவேன்!! குளிக்கிறேனோ இல்லையோ தம்பியைத் தான் முதலில் தேடுவேன்..மகனே காலிடா நீ இன்னைக்கு..]
8. ரஜினி படத்தில் முழங்கால் வரை shoe போட்டு வருவார். [fight scenes..+ அந்த leather jacket..ஐய்யோ தலைவா¡¡¡¡!!], என்னிடம் ஒரு சின்ன 100/= shoe இருக்கும். so, socks க்குள்ளே pant ஐ விட்டுக் கொள்வேன்! என் மாமா இதை ஒரு முறை பார்த்து கடுப்பாகி விட்டார். [பாவம் அவர்!!]
9. அம்மா ஏதாவது கடைக்குப் போய் வாங்கி வரச் சொன்னால் குஷி ஆகி விடுவேன். ரஜினி பாட்டு பாடிக்கொண்டே போகலாம். கடை வந்தவுடன், பச்சரசி
எவ்வளவுக்கு, பாசிப்பயிரு எவ்வளவுக்கு என்று மறந்து போயிருப்பேன்!! [அப்புறம் என்ன திட்டு தான்..பூஜை தான்!!]
11. இன்றும் "நல்லவனுக்கு நல்லவன்" ticket கிடைக்காமல் அழுது கொண்டே நடந்து வந்தது ஞாபகம் இருக்கிறது.
12. "அண்ணாமலை" முதல் நாள் பாட்டியுடன் சென்று கூட்ட நெரிசலில், counter ல் நுழைந்தும் ticket எடுக்காமல் பாட்டியை வீட்டுக்கு அனுப்பி விட்டு, அந்த
ticket யும் தொலைத்து, அழுததால் police காரர் பாவம் சின்னப் பையன் என்று உள்ளே விட்டார். [sorry பாட்டி!!]
10. இன்று கூட எனக்கு "தளபதி" 10 வது நாள் poster ல் இருந்து 100 வது நாள் poster வரை அப்படியே ஞாபகம் இருக்கிறது!! first poster was "In a white background " ரஜினி கருப்பு shirt போட்டுட்டு யாரையோ வெட்ற மாதிரி ஒரு still..awesome still it was"! அதை first ஒரே ஒரு இடத்துல ஒட்டி இருந்தாங்க, schoola இருந்து வரும்போது bus ல எவ்வளவு கூட்டம் இருந்தாலும் நான் அதை பாத்தே ஆகனும்.[maniratnam the Great!!]

இன்று யோசித்துப் பார்க்கிறேன்!! 150 படங்கள் ரஜினி பண்ணி இருந்தாலும் அவருடைய நல்ல படங்களை எண்ணும் பொழுது விரல் விட்டு எண்ணக்கூடியதாய்
இருப்பது எனக்கு வருத்தமளிக்கிறது. ஒரு மிகச் சிறந்த நடிகரை commerical என்ற பெயரால் கட்டுப்படுத்தி விட்டோமோ என்று தோன்றுகிறது!

எனக்கு மிகப் பிடித்த ரஜினி படங்கள்:

1. ஜானி
2. முள்ளும் மலரும்
3. மூன்று முடிச்சு
4. அவர்கள்
5. தப்புத் தாளங்கள்
6. 16 வயதினிலே
7. தில்லு முள்ளு
8. நினைத்தாலே இனிக்கும்
9. பில்லா
10. ரங்கா
11. அன்புள்ள ரஜினிகாந்த்
12. தளபதி
13. மன்னன்
14. அண்ணாமலை
15. பாட்ஷா

தலைவா எப்போ ஜானி மாதிரி ஒரு படத்தைக் கொடுக்கப் போறீங்க?

எனக்கு cinema வில் கொஞ்சம் ஈடுபாடு அதிகம். ஏன் என்று தெரியவில்லை. இத்தனைக்கும், என்

வீட்டிலோ, சுற்றத்தாரோ யாருமே cinema வில் இல்லை. என் அப்பா, படம் பார்க்கும் பொழுது, படம்

இறுதியில் ஒரு கல்யாணத்தில் முடியவில்லை என்றால் படம் முடிந்ததாகவே ஒப்புக்கொள்ள மாட்டார்.

அப்படிப் பட்ட அவருக்கு நான் மகான். [sorry..மகனுக்கு பதிலா மகான்னு type அடிச்சுட்டேன்.

keyboardu கு கூட உண்மை தெரிஞ்சிருக்கு!] எனக்கு ஏதாவது கொஞ்சம் தெரியும் என்றால் அது

cinema தான்.

point க்கு வர்றேன்.
AKIRA KUROSAWA - சினிமாவின் தந்தை [தமிழ்], அவரோட சுய சரிதம் மதுரையில வாங்கினேன்.

அப்படி என்ன தான் படம் புடிச்சுருக்காரு பாப்போம்னு.

அந்த புத்தகத்தில் நான் கண்டது:

1. அகிரா japan ஐ சேர்ந்தவர். [உங்க எல்லாருக்கும் தெரிஞ்சுருக்கும்!]
2. சின்ன வயசுல மன நோயாளியா இருந்தாராம். [நான் தெளிவா இருந்தேன்..என்ன ப்ரயோஜனம்?]
3. அவர் ஒரு ஓவியரும் கூட. [நானும் தான்..இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா..]
4. ஒரு நடிகையை மணம் முடித்தார்.
5. அவருடைய seven samurai உலக ப்ரசித்தி பெற்றது. [நான் அவருடைய எந்த படத்தையும் பார்த்ததில்லை]
6. "நீ எவ்வளவு சிரமப்பட்டு ஒரு காட்சியை எடுத்திருந்தாலும், அது பார்ப்பவருக்கு மகிழ்ச்சியை தராதென்றால், அதை கண்டிப்பாக வெட்டி விடு. படத்தொகுப்பு அறையில் நீ ஒரு கொலைகாரனாய் இரு." இது அவர் அவருடைய குரு யசாமோன் இடம் கற்ற பாடம். [ஒரு பெயராவது வாயிலே
நுழையுதா? இது correcta ன பெயரான்னு என்கிட்ட கேக்காதீங்க..i am not sure!]
7. சத்தியமா எனக்கு 'அகிரா' தவிற வேற எந்த பெயரும் ஞாபகம் இல்லை.

பின் குறிப்பு: இந்த புத்தகத்தை படிக்க ஆரம்பித்ததிலிருந்து என் வீட்டில் நண்பர்கள் என்னைத் தேடும் பொழுது 'அகிரா' எங்கே என்று தான் தேடுகிறார்கள்.

"ஒரு நல்ல காரியத்தை தொடர்ந்து செய்வது மிகக் கடினமான ஒன்றாக எனக்குப் படுகிறது!"

மேலே சொன்னது என் வரையில் நான் கண்டுபிடித்த மிகப் பெரிய உண்மை! உங்களுக்கு எப்படியோ

எனக்கு தெரியாது!

ஏதோ ஒரு ஆர்வத்தில் ஒரு பழக்கத்தை ஆரம்பிக்கிறோம்! ஆனால் அதே ஆர்வத்துடன் நாம் எத்தனை

நாள் அதை தொடர்ந்து செய்கிறோம்? நான் இப்படி பல நல்ல காரியங்களை கை விட்டிருக்கிறேன்.

அதை இங்கே பட்டியலிடுகிறேன். இதை அடிக்கடி படிக்கும்போதாவது நான் அதை தொடர முற்பட

வேண்டும்.

1. GYM போவது. நான் 5 வருஷத்துல பல தடவை gym join பண்ணேன். ஆனா continous போகவே

இல்லை! அப்படி போயிருந்தா இன்னைக்கு நான் ஒரு ranga இருந்துருப்பேன்!! ஹ¤ம்..
2. Jogging! ஒரு 2 வாரம் போயிருப்பேன்னு நெனைக்கிறேன். winterல காலங்காத்தாலே யாரு

எந்திரிக்கிறதுன்னு அதுவும் out!
3. காலயில எந்திரிச்ச உடனே வயிறு முட்ட தண்ணி குடிச்சா நல்லதாம். அது ஒரு 4, 5 நாள் ஒடிச்சி!

அப்புறம் உங்களுக்கு தான் தெரியுமே..
4. காலயில எந்திரிச்சி என் friend கோவிலுக்குப் போவான். அது ஒரு நாள் try பண்ணேன். நல்லா தான்

இருந்தது, but என்ன ப்ரயஜோனம்?
5. பெரிய இவன் மாதிரி Bangalore Tamizh Changam ல சேர்ந்தேன். library பக்கம் தலை வச்சு

படுத்தே 1 மாசம் ஆகுது. [ஆனா இதை கண்டிப்பா செய்வேன்!]
6. படமா வரைஞ்சு தள்ளணும்னு posture color எல்லாம் வாங்கினேன். அது இன்னைக்கு என் வீட்ல

ஒரு ஒரமா இருந்துட்டு என்னை பார்த்து முறைக்குது!!


இப்படிப் பல, இங்கு பட்டியலில் உள்ளவை சில! [எப்படி எதுகை மோனை எல்லாம் கலக்குறேனா?]

இதெற்கெல்லாம் காரணம் என்ன? ஏன் என்னால் ஒரு காரியத்தைக் கூட தொடர்ந்து செயல்படுத்த

முடியவில்லை? எனக்குத் தெரியும். அதற்குப் பெயர் "சுய இரக்கம்"!! நானே என்னை

சமாதனப்படுத்திக் கொள்வது. ப்ரதீப் நீ ரொம்ப tireda இருக்கே. இன்னைக்கு வேணாம்! ஒன்னும் குடி

முழுகிப் போயிடாது! இப்படி நெனச்சு நெனச்சே நான் என்னயே ஏமாத்திக்கிறேன்!!

Hope soon i will kill that damn "சுய இரக்கம்!!"

என்னை வாழ்த்துங்கள்!!
என் இனிய தமிழ் மக்களே!!

computer யுடன் program பேசி வந்த இந்த ப்ரதீப், இன்று உங்களுடன் BLOG ல் பேச வருகிறான். [ஐய்யயயோ..ஏன் எல்லாரும் இப்படி ஒட்றீங்க?]

நான் யார்? [dei pradeep, பெரிய பெரிய அறிஞர்கள் கேள்வி எல்லாம் assaulta கேக்குறே! எப்பிட்றா?]

1. என் பெயர் ப்ரதீப் குமார்.
2. நான் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த "மதுரை" யில் பிறந்தேன்.
3. எனக்கு முன் பிறந்தவர்களுக்கு தெரிந்திருக்கும். 1978, நவம்பர் மாதம் 16ம் நாள், குரு வாரத்தில் ஒரு ஒளிக் கீற்று பூமியில் பாய்ந்தது. அது ஏன் என்று
யாருக்கும் புரியவில்லை! அன்று தான் நான் பிறந்தேன்! அந்த ஒளி சாட்ஷாத் நான் பிறந்ததால் தான்! ஹிஹி..[இதெல்லாம் ரொம்ப 'over' என்று நீங்கள் கதறுவது எனக்குத் தெரிகிறது. I JUST DONT CARE! ஹிஹி..ஹிஹி]
4. படிப்பின் முதல் எதிரியான 'சினிமா' தான் எனக்கு ஆருயிர் நண்பன்!! அதனாலோ என்னவோ படிப்புக்கு என்னை பிடிக்கவில்லை! படிப்பில் நான் மகா மட்டம்!
[பெறுமையா சொல்லிக்கோ!!]
5. கணக்கில் பல பேர் புலி! ஆனால் கணக்கு தான் எனக்கு புலி, சிங்கம், கரடி எல்லாம்...
6. B.Sc., (Physics 1995-1998) - Sourashtra College, Madurai & M.Sc., (Computer Science 1998-2000) - M K U College, Madurai. படித்து முடித்தேன். [யாரு? நீ...படிச்சே?... மெய்யாலுமா?]
7. இன்று 'Satyam Computers, Bangalore', Software Engineer! [பாவம் Satyam!!]
8. நான் அதிகம் கனவு காண்பவன்!

இது தான் என் கதை! [புதிய பறவை யில் சிவாஜி சொல்வது போல் சொல்லவும்! இப்படி தான் அடிக்கடி நான் எதாவது எடுத்து விடுவேன்..ஹிஹி..]

எனக்கு இந்த BLOG யுவது மிகவும் பிடித்திருக்கிறது. நான் தமிழ் மட்டுமன்றி English லும் சில கொலைகள் செய்துள்ளேன்! ஹிஹி.. insterested can go
here

எனக்கு மின்னஞல் மூலம் தமிழ் BLOG அறிவூட்டிய Princess அவர்களுக்கு இந்த BLOG ஐ சமர்ப்பிக்கிறேன்!