"ஒரு நல்ல காரியத்தை தொடர்ந்து செய்வது மிகக் கடினமான ஒன்றாக எனக்குப் படுகிறது!"

மேலே சொன்னது என் வரையில் நான் கண்டுபிடித்த மிகப் பெரிய உண்மை! உங்களுக்கு எப்படியோ

எனக்கு தெரியாது!

ஏதோ ஒரு ஆர்வத்தில் ஒரு பழக்கத்தை ஆரம்பிக்கிறோம்! ஆனால் அதே ஆர்வத்துடன் நாம் எத்தனை

நாள் அதை தொடர்ந்து செய்கிறோம்? நான் இப்படி பல நல்ல காரியங்களை கை விட்டிருக்கிறேன்.

அதை இங்கே பட்டியலிடுகிறேன். இதை அடிக்கடி படிக்கும்போதாவது நான் அதை தொடர முற்பட

வேண்டும்.

1. GYM போவது. நான் 5 வருஷத்துல பல தடவை gym join பண்ணேன். ஆனா continous போகவே

இல்லை! அப்படி போயிருந்தா இன்னைக்கு நான் ஒரு ranga இருந்துருப்பேன்!! ஹ¤ம்..
2. Jogging! ஒரு 2 வாரம் போயிருப்பேன்னு நெனைக்கிறேன். winterல காலங்காத்தாலே யாரு

எந்திரிக்கிறதுன்னு அதுவும் out!
3. காலயில எந்திரிச்ச உடனே வயிறு முட்ட தண்ணி குடிச்சா நல்லதாம். அது ஒரு 4, 5 நாள் ஒடிச்சி!

அப்புறம் உங்களுக்கு தான் தெரியுமே..
4. காலயில எந்திரிச்சி என் friend கோவிலுக்குப் போவான். அது ஒரு நாள் try பண்ணேன். நல்லா தான்

இருந்தது, but என்ன ப்ரயஜோனம்?
5. பெரிய இவன் மாதிரி Bangalore Tamizh Changam ல சேர்ந்தேன். library பக்கம் தலை வச்சு

படுத்தே 1 மாசம் ஆகுது. [ஆனா இதை கண்டிப்பா செய்வேன்!]
6. படமா வரைஞ்சு தள்ளணும்னு posture color எல்லாம் வாங்கினேன். அது இன்னைக்கு என் வீட்ல

ஒரு ஒரமா இருந்துட்டு என்னை பார்த்து முறைக்குது!!


இப்படிப் பல, இங்கு பட்டியலில் உள்ளவை சில! [எப்படி எதுகை மோனை எல்லாம் கலக்குறேனா?]

இதெற்கெல்லாம் காரணம் என்ன? ஏன் என்னால் ஒரு காரியத்தைக் கூட தொடர்ந்து செயல்படுத்த

முடியவில்லை? எனக்குத் தெரியும். அதற்குப் பெயர் "சுய இரக்கம்"!! நானே என்னை

சமாதனப்படுத்திக் கொள்வது. ப்ரதீப் நீ ரொம்ப tireda இருக்கே. இன்னைக்கு வேணாம்! ஒன்னும் குடி

முழுகிப் போயிடாது! இப்படி நெனச்சு நெனச்சே நான் என்னயே ஏமாத்திக்கிறேன்!!

Hope soon i will kill that damn "சுய இரக்கம்!!"

என்னை வாழ்த்துங்கள்!!
2 Responses
  1. மிக்க்க்க்க்க்கவும் தாமதமானாலும்...


    வாழ்த்துகிறேன்..!!


    தொடருங்கள்.. இப்போது முயன்றிருக்கும் நல்ல காரியத்தை!!


  2. ஹஹஅஹா... தேடித் பிடித்து இந்த பதிவுக்கு பின்னூட்டமிட்டு
    என் அறிவுக் கண்ணை திறந்தே இருக்க செய்கிறீர்கள்! மிக்க நன்றி!