சகோதரர்கள் மற்றும் "நண்பிகள்" அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
இன்றைய தினத்தில் காலையிலிருந்து தொலைக்காட்சிப் பெட்டியோடு ஒட்டிக் கொண்டு பல சிறப்பு நிகழ்சிகளை பார்த்து நீங்க டயர்ட் ஆகி இருந்தாலும் பரவாயில்லை. பத்தோடு பதினொன்றாய் என் குறும்படத்தையும் பார்த்து விடுங்கள்! என் முதல் குறும்படத்தை பார்த்து விட்டு, "நல்ல முயற்சி, மென்மேலும் தொடருங்கள்!" என்று உங்களில் பலர் ஊக்குவித்திருந்தீர்கள். நீங்கள் எதை நினைத்து அப்படி சொன்னீர்களோ, நான் அதை ரொம்ப சீரியசாய் எடுத்துக் கொண்டேன். உங்களுக்குப் பரிசாக [தண்டனையாக?] இதோ என் இரண்டாவது குறும்படம்!
என்னது ரெண்டாவது படமா என்று ஷாக்க் ஆகாதீர்கள். உங்களை மாதிரியே நானும் ஷாக்க் ஆகித் தான் போயிருக்கிறேன். "முன்னேறுவதற்கான முதல் படி, அதற்கான முதல் அடியை எடுத்து வைப்பதில் தான் இருக்கிறது!" என்று சொல்வார்கள் [சொல்லுவாங்கல்ல?] அது எத்தனை உண்மை என்பதை இப்போது நான் புரிந்து கொண்டேன். இங்கே, முக்கியமாக சொல்ல வேண்டிய ஒன்று, எனக்கு குறும்படம் எடுப்பதில் ஆர்வம் இருந்தாலும், என்னுடைய இரண்டாவது படத்தை நான் இத்தனை சீக்கிரம் வெளியிடுவதற்கு உங்களின் உந்துதல் தான் முதன்மையான காரணம்! [அப்பாடா, பழியை போட்டாச்சு!]
இந்தப் படத்தை பொருத்தவரை, நான் நடிகன் மட்டுமே! ஐ டி யின் அந்தஸ்தினால் கொஞ்சம் பணம் போட்டேன்! [நன்றி ஐ டி] எழுதி, இயக்கியது எல்லாம் என் முதல் குறும்படத்தின் காமெராமேன் பிரசன்னா. என்னுடைய அடுத்த படம் வரக்கூடாது என்று சமூக பொறுப்புடன் நீங்கள் சிந்திப்பவர் என்றால் இவரை பிடியுங்கள். இவரிடம் நிறைய கதை இருக்கிறது. என்னிடம் நிறைய திறமை இருக்கிறது! அவ்வளவு தான் சொல்லுவேன்.
இந்த படத்தில் நான் நன்றாய் நடித்திருந்தால் என்னை பாராட்டுங்கள்; சொதப்பி இருக்கிறேன் என்று உங்களுக்குத் தோன்றினால் இயக்குனரை திட்டுங்கள்! [உள்ளதை சொல்வேன் சொன்னதை செய்வேன் வேறொன்றும் தெரியாது; உள்ளத்தில் இருக்கும் வார்த்தையை மறைக்கும் கபடம் தெரியாது....]
இந்தப் படம் "விடியல்" போல் இல்லாமல், எல்லோருக்கும் புரியும்படியும், சுவாரஸ்யமாயும் இருக்கும் என நம்புகிறேன். தங்களின் "பூச்செண்டுகளையும்", "செமகாண்டுகளையும்" எதிர்நோக்கி காத்திருக்கும் "காதல் வந்தா கம்முன்னு கெட" குழு!
இனி படம்...