வழக்கம் போல் அல்லாமல் இன்று காலை ஒன்பது மணிக்கு அலுவலகத்துக்கு கிளம்பினேன். இதில் வழக்கம் போல் என்பது பத்தரை மணி. [இதற்கு பெயர் தான் நான் லீனியர் நரேஷன்!] இன்று என்ன அவ்வளவு சீக்கிரம் என்று உங்கள் மனதில் தோன்றி மறைந்தால் இன்று அலுவலகத்தில் ஒரு ட்ரைனிங்! கண்டிப்பாய் கலந்து கொள்ள வேண்டும் என்று மேலிடத்து உத்தரவு! வாய் கூட காது வரை இல்லாத அடிமை நான், கேள்வியே கிடையாது! அதோடு மட்டுமல்லாமல் எனக்கும், வழக்கமான சலிப்பான வார நாட்களிலிருந்து ஒரு தற்காலிக விடுதலை கிடைத்தால் பிடிக்கும் என்பதால் இப்படிப் பட்ட ட்ரைனிங்கில் கலந்து கொள்வதில் சந்தோஷமே! ட்ரைனிங் ஒன்பதரை மணிக்கு என்று மெயிலில் இருந்தது. நான் ஒன்பதுக்கு கிளம்பினேன்.
நம் நாட்டில் எங்கு போவதென்றாலும் கொஞ்சம் சீக்கிரம் கிளம்பினால் நல்ல பலன் கிடைக்கும். ஒன்பது மணிக்கு ஜி எஸ் டி சாலையில் அதிக கூட்டமில்லை. யார் இப்போதெல்லாம் அலுவலகத்துக்கு ஒன்பது மணிக்கு கிளம்புகிறார்கள்? மெதுவாய் நிதானமாய் ஹாயாய் வண்டி ஒட்டிக் கொண்டு போனேன். பைக் பார்க்கிங்கில் ஆங்காங்கே ஒரு சில பைக்குகள் மட்டுமே இருந்தது. பக்கத்திலேயே எனக்கு பிடித்த இடத்தில் வண்டியை நிறுத்தேன். மணி ஒன்பது இருபது. இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தது. நேரத்தோடு ஒரு வேலையை செய்தால் எத்தனை திருப்தி! நிதானமாய் அலுவலகம் நோக்கி நடந்தேன். இப்போதே ட்ரைனிங் ரூமில் சென்று நல்ல இடம் பார்த்து [நல்ல இடம் என்றால் மாப்பிள்ளை பெஞ்சு தான் !] உட்கார்ந்து கொள்ளலாம்!
லிப்டுக்கு அருகில் வந்து நின்றேன். வழக்கமான நேரத்தில் அலுவலகம் வந்தால் குறைந்தபட்சம் ஐந்து நிமிடமாவது லிப்டுக்கு காத்திருப்பது வழக்கம். இன்று பட்டனை அழுத்தியதும் இரண்டு லிப்ட்கள் காலியாய் திறந்து கொண்டன. ஒரு மணி நேரம் முன்னால் வந்ததால் இப்படி ஒரு ராஜ உபச்சாரமா? முடிவு செய்து விட்டேன். இனிமேல் ஒன்பது மணிக்குள் அலுவலகத்தில் இருப்பேன்! மனதுக்குள் ஒரு சத்திய பிரமாணமே எடுத்து விட்டேன். நேராய் ஏழாவது மாடி. மணி ஒன்பது இருபத்தைந்து. ட்ரைனிங் நடக்கவிருக்கும் அறையின் கதவு மூடி இருந்தது. மெதுவாய் திறக்க முயற்சித்தேன் .
அது இன்னும் பூட்டி இருந்தது!