இது என் நூற்றி ஒன்றாவது பதிவு!

எல்லாவற்றையும் முயற்சிப்பது போல் தான் வலைபதிய ஆரம்பித்தேன். எதுவாய் இருந்தாலும் சீக்கிரம் அலுத்து விடும் எனக்கு வலைபதிவது இன்னும் அலுக்கவில்லை! ஆச்சர்யம் தான். குறும்பு செய்யும் கிருஷ்ணனை கட்டிப் போட்ட யசோதையை போல் வலைப்பதிவு என்னை இன்றும் கட்டிப் போட்டு வைத்திருக்கிறது! [ஏதோ ஒரு உவமை இருந்தால் தான் பெரிய எழுத்தாளர் போல் இருக்கும் என்று எழுதிய உவமை; நீங்கள் கண்டு கொள்ளாதீர்கள்!]

சரி, நூறு பதிவுகளை வெற்றிகரமாய் எழுதியாகிவிட்டது. கதை, கவிதை, கட்டுரை, சினிமா விமர்சனம், ஓவியம், திரைக்கதை, சொந்த அனுபவம் என்று எல்லா வகையிலும் எழுதியாகிவிட்டது. ஒவ்வொரு முறை எழுதும் போதும் நம்மிடம் சரக்கு தீர்ந்து விடுமோ என்று எழுத்தாளனுக்கே உரிய பயம் வரத் தான் செய்கிறது! [ இங்கு எழுத்தாளன் = பிரதிப், அதாவது அடியேன்!] இப்போது இந்த பதிவில் ஒரு விபரீதமான முயற்சியில் இறங்கலாம் என்று இருக்கிறேன். காதலை வித விதமாய் சொல்லியாகிவிட்டது. காமத்தை பற்றி ஏன் சொல்லக் கூடாது? காமத்தை பற்றி பேச்சு எடுத்தாலே "கத்தி மேல் நடப்பது" என்ற சொற்றொடர் கண்டிப்பாக வர வேண்டும்! அப்போது தான் அதற்கு மதிப்பு! இதோ நானும் கத்தி மேல் நடக்கப் போகிறேன்.

இது வரை வலைபதிவில் இப்படிப் பட்ட முயற்சிகள் நடந்திருக்கிறதா என்று தெரியவில்லை. சரி இதை மட்டும் ஏன் விட்டு வைப்பானேன்! இதோ! படியுங்கள்!
------------------------------------------------------------------------------------------------------------------------------


வழக்கமான இரவு! வட்டமான நிலவு. அவர்கள் கதவை மூடாவிட்டால் இன்னும் சற்று நேரத்தில் முகம் சிவந்த நிலவைத் தான் நாம் பார்க்க முடியும். ஆம்..கனவில் ஊர் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் வேளையில் காதலில் சஞ்சரிக்கத் தொடங்கி இருக்கின்றன இரு இதயங்கள்! காதலின் விளைவால் உண்டான காமத்தின் தாளத்தில் துடிக்கிறது அவர்களுடைய இதயம். விளக்கு அணைந்திருக்கிறது; அவள் ஒளிர்ந்து கொண்டே இருக்கிறாள். அவளின் வெளிச்சத்தில் உயிர் வாழப் போகும் மின்மினிப் பூச்சியாய் அவன் இருக்கிறான். சத்தம் செய்யாத அந்தப் பெரிய தேக்குக் கட்டிலில் நிறைய இடம் விரயமாகி இருக்கிறது. இருவரில் யார் நதி, யார் கடல் என்று தெரியவில்லை..ஆனால் ஒரு சங்கமம் தொடங்க இருக்கிறது! எங்கிருந்தோ கேட்கும் வீணையின் இசை அந்தச் சங்கமத்திற்கு மேலும் அழகூட்டுகிறது!

அவனும், அவளும், காதலும், காமமும் ஒரே இடத்தில் குழுமி இருக்கிறார்கள்! நதி மூலம் தேடுவது போல் அவன் ரதி மூலம் தேடத் தொடங்குகிறான். அவளுடைய அவிழ்ந்த கூந்தலின் ஊடே அவளுடைய ஒளிர்ந்த முகத்தை பார்க்கிறான். தென்னங்கீற்றின் வழியே பெளர்ணமி நிலவை போல் பிரகாசிக்கிறாள் அவள்! சிரிக்கிறாள் அவள், சிதைகிறான் அவன்! அவனுடைய விரல்கள் கூந்தலிலிருந்து விடுபட்டு மேல் நோக்கி முன்னேறுகிறது. அவள் நெற்றி தடவினான் முதன் முறையாக..அவள் உயிர் தடவப்பட்டது புரியாமல்! அவளுடைய நெற்றியில் உள்ள சிவப்பு நிற பொட்டு அவளுடைய அத்தனை வெட்கத்தையும் திரட்டி வைத்தது போலிருந்தது. இரு கரிய வானவில்லை ஒத்த புருவத்தில் அவன் விரல்கள் இறங்கின..நிலவை மேகம் மறைத்தது போல், விழியை இமை மறைத்திருந்தன..மூடிய விழிகள் துடிக்கின்றன..முத்தம் கொடுத்து அமைதி படுத்துகிறான். இமைகளின் மேல் அவன் இதழ் பதித்தான். அவள் இதயத்தின் மேல் அவன் கரம் பதித்தான். கன்னங்களில் அவன் தடம் பதித்தான். அவளுடைய கரங்களைத் தடவி அவள் விரல்களில் தன் விரல் கோர்த்தான். விரல்களின் நடுவில் இருந்த இடைவெளிக்கு அர்த்தம் கண்டான்! அவன் ஸ்பரிசம் பட்டதும் அவள் கூசி, குறுகி ஆனந்தித்தாள்! அவளின் மொத்தமும் அவனுடைய கைக்குள் அடங்கி விடுவது போல் சுருங்கிப் போனாள்..உடல் உடலை உரசுகிறது; உயிர் உயிரை உரசுகிறது. பெண்மை என்னும் வெள்ளம் கரை புரண்டு, ப்ரவாகம் எடுத்து ஓடத் தொடங்குகிறது. அந்தக் காட்டாற்று வெள்ளத்தில் சிறு துரும்பாகத் தத்தளிக்கிறான். அவன் சொல்லித் தருகிறான். அவள் அள்ளித் தருகிறாள். பசித்திருக்கிறான், அவளை ரசித்திருக்கிறான்..அதோடு ருசித்திருக்கிறான்!!

அவளின் ஆடை கலைக்கிறான், அவளின் வெட்கம் கலைந்து விடாமல்! அவளின் உடலை ஆய்கிறான். எத்தனை வளைவு, எத்தனை நெளிவு, மேடுகள், பள்ளங்கள், இருள், வெளிச்சம், இன்பம், துன்பம்...வாழ்வின் அத்தனை சாராம்சங்களையும் கொண்டுள்ளது பெண்ணின் தேகம். தாகமெடுத்துப் போராடும் ஒருவனின் முன் சுவையான நீர் சுனை ஒன்று தென்பட்டால், அள்ளி எடுக்க எப்படி இரு கைகள் போதாதோ அதே போல் அவளின் அத்தனை அழகுகளையும் அள்ளிப் பருக இரு கண்கள் போதாமல் தவிக்கிறான். அவள் அதை விழி மூடிய கைகளினூடே ரசிக்கிறாள். அவள் இரு கைகளையும் எடுத்து விரித்து, அதில் தன் கைகளைக் கோர்த்து அவளின் மேல் அமர்ந்து கொள்கிறான். வெட்கத்தில் அவள் முகத்தை மூட வழியில்லாமல் வடப்புறமும் இடப்புறமும் திரும்பித் துடிக்கிறாள்! சற்று இடைவெளி விட்டு, அவளுக்கு நேரம் தந்து..அவளின் இதழ் பதிக்கிறான்.

அவளுடைய மார்புகள் அவனின் மார்பில் பட்டு நசுங்கி உருவம் பிசகுகின்றன. கீழ் நோக்கிப் பாயும் நீர் போல், அவள் இதழ் சுவைத்துக் களைத்து கழுத்தில் விழுகிறான். பல செல்லக் கடிகள் கடித்து, அவளை மோகித்து இம்சிக்கிறான். பல முறை கசங்கிப் போன தென்றல் அனுபவ பாடம் கற்று காதலர் வழி புகாமல் வேறு திசை நோக்கிச் சென்று விட்டது. கழுத்தைச் சுவைத்து மயங்கிக் கிடப்பவள் காதில் மெல்லச் சொல்கிறான், "உப்புக் கரிக்கிறாய்! ரோசக்காரி தான்" என்று! அவள் சினுங்கிச் சிரித்த அடுத்த நொடி பல்லில் முத்தம் வைத்தான். அதிர்ந்து அவள் வாய் மூட நினைத்தது பலித்தது என்று வாய் பிரிக்காமல் அவள் இதழ் பறித்தான்! மெல்ல எழும்பி அவளிடம் கோர்த்த கைகளை விடுத்து கைகளுக்கு வேலை கொடுக்கச் சித்தமானான். மோதிரம் போடுவதற்கென்றே விரல்கள் என்ற எண்ணத்தை சற்று தள்ளி வைத்து விட்டு இரு கைகளாலும் அந்த மோகனத்தின் மார்பு பிடித்தான். மேகங்களில் காற்று மோகித்துப் படும் போது மழை பெய்வதை போல், அங்கு அவளின் பெண்மை துளிர்த்து எழுந்தது, அவன் மேல் விழுந்தது. உலர்ந்த திராட்சையை ஒத்த அவளின் முலைக் காம்புகளை தன் முத்த மழையில் நனைத்தான்! அதில் அவனும் நனைந்தான்.

அங்கிருந்து சற்று இறக்கத்தில் இருக்கும் அவளின் தொப்புளில் தான் தன் உமிழ் நீர் சேகரித்தான்! முற்றத்தில் ஒரு மழை நாளில் இருக்கும் சிறு செப்புக் குடம் ஒன்று நிரம்பி வழிந்தது போல் வழிகிறது அவன் எச்சிலில் அவளது தொப்புள்! தொப்புள் கடிக்கும் அவனை மெய்மறந்து தலை கோதுகிறாள். அழுத்திக் கொள்கிறாள் இன்னும். அவனின் நாக்கு தொப்புள் வழியுனூடே அவள் முதுகு துளைக்கிறது. மூச்சு முட்ட, எச்சில் தீர மெதுவாய் எழுகிறான். காதலாய்ச் சிரிக்கிறான் அவள் கண்களைப் பார்த்து. மோகத்தில் அவள் உதடு துடிக்கிறது.

சற்றே மேலெழும்பி காதலின் கடைசி கட்டத்துக்கு ஆயுத்தமாகிறான். அவனை வார்த்தெடுப்பதற்காக அவளின் பெண்மை விரிந்திருக்கிறது. துடித்திருக்கும் ஆண்மையை அது அழைப்பதைப் போலிருக்கிறது. தன்னுடைய அந்தரங்கத்தை, அடையாளத்தை, அலுங்காமல் அதனுள் செலுத்துகிறான். அது உறைக்குள் புதிய வாள் ஒன்று செல்வது போல் வழுக்கிக் கொண்டு செல்கிறது. அத்தகைய நீர் சுரந்து ஆண்மைக்கு வழி விட்டு இன்பம் காண்கிறது பெண்மை. இயங்கத் தொடங்குகிறான். அவள் மயங்கத் தொடங்குகிறாள். கண்களை மூடி ரசிக்கிறாள், தன்னுடைய கற்பு கரைபடுவதை. முனகுகிறாள், அவன் மேலும் முறுக்குகிறான். ஆணில் சற்றே பெண்மையும், பெண்ணில் சற்றே ஆண்மையும் கலக்கிறது, தங்கத்தில் செப்பு கலப்பதைப் போல..இறுதியில், இரு உடல் கொண்ட இயக்கத்தின் பலனாய் அவன் அவளுள் தன் உயிர் துளிகள் தூவினான். பிறந்து, வளர்ந்து, காத்து வந்த ஆண்மையின் சில துளிகளை உழைத்துக் களைத்து அவளுள் சேமித்து வைக்கிறான், எப்படியும் பத்து மாதங்களில் இழந்த அந்த உயிர் துளிகள் வட்டியுடன் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில்! சோர்ந்து சரிகிறான் அவள் மேல்..காமம் வடிந்து விட்டது அவன் கண்ணில்; காதல் அல்ல!!

காலந்தோரும் அவர்களுடைய புணர்வு தொடரும்..அவர்களுள் காதலும் காமமும் ஓங்கி இருக்கும் வரை!


வெள்ளத் தோலும், வெளையாட்டுமா பேசுவாரே அவரா
சின்ன நெத்தியில பெரிய பொட்டு வச்சுருப்பாரே அவரா
எலும்புக்கு மேலே தோல் போத்தினாப்ல இருப்பாரே அவரா
எட மெஷினா எனை நெனச்சு மேல கெடப்பாரே அவரா
ஒரு மணி நேரம் அனுபவிச்சுட்டு ஓசி ஒன்னு கேப்பாரே அவரா
அவுத்துப் போட்டு அரசியல் பேசுவாரே அவரா
ராவுக்கு மட்டும் வீட்டுக்கு போவாரே அவரா

ஆரோட புள்ளடா நீ?
மழை பெய்து கொண்டிருக்கிறது, உள்ளும் புறமும்! புறத்தில் வான் மழை; உள்ளத்தில் அவள் மழை! குளிர் காற்று முகத்தில் அறைகிறது, அவளுடைய பார்வை அவன் முகத்தில் அறைவதைப் போல் உணர்கிறான். மழையின் மெல்லிய சாரல் கேட்கிறது. அவளுடைய புன்னகையாய் அதை வரித்துக் கொள்கிறான்! இயற்கையின் அத்தனை அசைவுகளையும் அவனுக்கு ஏற்றவாறு அவளை வைத்தே மொழி பெயர்த்துக் கொள்கிறான்! ஏதோ ஒரு காலத்தில் சென்று கொண்டிருந்த ஒருவனை திடீரென்று வாழ்க்கை வசந்த காலத்தில் எதிர்பாராத விதமாய் தள்ளி விட்டதாய் நினைத்துக் கொள்கிறான்! கவிதைகளும், காவியங்களும், அது சொல்லும் காதலும் மெல்லப் புரிவதாய் உணர்ந்து சிரிக்கிறான். வாழ்க்கை இத்தனை அழகா என்று பிரமிக்கிறான். உலகின் சுகங்கள் அத்தனையும் தனக்குப் பிடித்த பெண்ணின் சிரிப்பில் அடக்கமா என்று வியக்கிறான். அவனுடைய காதலால் உலகமே சுபிட்சம் பெற்று விட்டது போல் தோன்றுகிறது. எல்லோரும் சந்தோஷமாய், அழகானவர்களாய், நல்லவர்களாய் தெரிகிறார்கள். வறுமை, சோகம், தீவிரவாதம், கோபம், வஞ்சகம் இப்படி அத்தனையும் தனிக்கை செய்யப்பட்டே அவன் பார்வைகளில் விரிகின்றன! அவனுடைய இதயத்தில் வெள்ளமென பொங்கி வழிகிறாள் அவள்.

அவளுடைய நினைவுகளே அவனை அழுத்துகின்றன. அதில் மிக சுலபமாக, சுகமாக அமிழ்ந்து போகிறான். இரவு வந்தும் அவன் அவளோட கழித்த பகல்களை இன்னும் விட்டு வரவில்லை. வர முயலவில்லை என்பதே உண்மை! நிலவு வந்த பின்னும் அவன் கதிரின் வெம்மையையும், அவள் கை கோர்த்து வேர்த்துப் பிசுபிசுத்த பொழுதுகளையும் எண்ணிப் பார்த்துக் கொள்கிறான். காலம் அவனை மட்டும் அதே இடத்தில் விட்டு விட்டு சென்று விட்டது. யாருமற்ற ரயில் நிலையத்தில் தொலைந்த குழந்தையை போல் தனியே நிற்கிறான், தான் தொலைந்திருப்பது புரியாமல்!

எங்கு இருந்தாலும், எப்படி இருந்தாலும் அவளுடனே இருப்பதாக உணர்கிறான். அவளுடைய வார்த்தைகளே காதுகளைச் சுற்றி ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கின்றன. யார் எதைக் கேட்டாலும் ஏதோ ஒப்புக்காக பதில் சொல்கிறான். அடிக்கடி தனியாய் சிரித்துக் கொள்கிறான். அடிக்கடி கண்ணாடி பார்க்கிறான். தன்னை மிகவும் அழகாய் உணர்கிறான். அவள் அங்கு இல்லாவிட்டாலும் அவளுடன் பேசிக் கொண்டே இருக்கிறான். யோசனைகள் குறைந்து விட்டது. அறிவின் அளவு சிறுத்து விட்டது. உடலின் அத்தனை பாகங்களும் இதயமாகிவிட்டதைப் போல் உணர்கிறான். உலகில் அவனும், அவளும் மட்டும் இருக்கிறார்கள்! இப்படியே நினைத்துக் கொண்டிருக்கும் சில காதலர்களும் ஆங்காங்கே மயக்கத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். யாரைப் பற்றியும் யாரும் கவலைபடுவதில்லை. அது வேறு உலகம். எங்கும் ஏகாந்தமே சூழ்ந்திருக்கிறது. அந்த நொடியை முழுதாய் அனுபவித்து வாழவே விரும்புகிறான். அவளோடு சேர்ந்தே வானத்தை பார்க்கிறான். கண்களில் மழைத் துளி விழுகிறது!

காதல் என்பது
திறந்த கண்களால்
மழைத்துளி வாங்குவது போன்றது!
அதன் சுகம் கொடுமையானது!!

என்று என்றோ படித்த கவிதை அரைகுறையாய் ஞாபகம் வருகிறது. அப்படியே அதை அனுபவித்துக் கொள்கிறான். தூரத்தில் ஒரு இடி முழங்கி அவர்களை வாழ்த்துகிறது. அப்படி அவன் நினைத்துக் கொள்கிறான். இன்று மண்ணோடும், மனதோடும் ஒரு மழைக்காலம் தொடங்கி விட்டது!

விடுங்கள்.. அவன், அவர்கள் நனையட்டும்!
காதலி..
நான்
நடைமுறைக் காதலன்

உனக்காக
வானத்தை
வசப்படுத்த மாட்டேன்

உன் விழிப் பெண்
கண்ணீர் கற்பிழக்காமல்
பார்த்துக் கொள்வேன்

நட்சத்திரங்களால்
ஜரிகை நெய்ய மாட்டேன

என் சுவாசச் சுவரெங்கும்
சித்திரமாய் உன்னை
சித்தரிப்பேன்

வானவில்லின்
வண்ணங்கொண்டு
உனக்கு சேலை
செய்ய மாட்டேன்

உன் வாலிபம்
வானவில் காண
சாரல் மழையாயிருப்பேன்

மேகத்தால்
உனக்கொரு
மெத்தையிட மாட்டேன்

மழை மேகமாய்
உனை நனைத்து
பெண் வாசனை
நுகர்வேன்

உன் உடல் மட்டும் அணைக்காது
உயிரையும் சேர்த்தணைப்பேன்

அவிழ்க்கும்போது மட்டுமில்லாமல்
நீ அணியும் போதும்
அருகிலிருப்பேன்

ஆம்
நான் நடைமுறைக் காதலன்

i just can't stop recommeding this blog to all illayaraja fans!
Amazingly written!
http://isai-alias-raja.blogspot.com/
இதே பிரச்சனை யின் காரணமாக...இன்று இரு கவிதைகள் மட்டும்!

யாருமில்லாத கடற்கரையில்
வந்து வந்து போகும் அலைகள்..
யார் காலை நனைக்க!

[இன்று திருவான்மியூர் கடற்கரையில் உதித்தது!]

பெளர்ணமி மட்டுமல்ல
பிறை நிலவும் அழகு தான்..
ஜன்னலின் வழியே உன் முகம்!

[2வது கவிதையின் முதல் இரு வரிகளை நான் எங்கேயோ கேள்விப்பட்டது போல் உள்ளது! யாருக்காவது தெரியுமா?]
வலைப்பதிவர் பெயர்: பிரதீப்
[சுருக்கமாக - பிரதீப் குமார் ஈஸ்வரி சுப்ரமணியன்]

வலைப்பூ பெயர்: பெய்யெனப் பெய்யும் மழை!
[யாருப்பா அது பிழைன்னு படிக்கிறது?]

சுட்டி(url) : http://espradeep.blogspot.com
[வலை உரலே க்யுட்டாயில்லை! நானும் இல்லைன்னு தானே சொன்னேன்!]
(எத்தனை வலைப்பூக்கள் இருந்தாலும் அனைத்தையும் ஒரே பதிவில் அளிக்கலாம்)

ஊர்: சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை [அதனால் தான் வலைப்பதிவு வைத்து தமிழை மேலும் வளர்க்கிறேன்!]

நாடு: இந்தியா [ஜெய்ஹிந்த்!]

வலைப்பூ அறிமுகம் செய்தவர்: வலையில் மேய்ந்த போது தெரிந்து கொண்டது கொஞ்சம்; ஷாங்ரீலா பவித்ராவின் மூலம் தெரிந்து கொண்டது கொஞ்சம்!
[பவித்ரா, உங்களுக்கு ஆபத்து! பத்திரமாக இருந்து கொள்ளுங்கள்!]

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : மார்ச் 19, 2004
[சனி உச்சத்தில் இருந்த போது! உங்கள் எல்லோருக்கும்!!]

இது எத்தனையாவது பதிவு: 95

இப்பதிவின் சுட்டி(url):
http://espradeep.blogspot.com/2006/05/blog-post_28.html

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: ஆரம்பிக்கப்படாமல் இருந்தது!
[சமீபத்தில் சுஜாதாவின் கேள்வி - பதில் தொகுப்பை படித்ததன் விளைவு!]

சந்தித்த அனுபவங்கள்:

1. எழுத்தாளர் சுஜாதாவையும் சக வலைபதிவாளர்களையும் சந்தித்தது!
[தேசிகனுக்கு ஒரு ஆ! எத்தனை நாள் தான் ஓ போடுவது?]
2. என் வலைப்பதிவை தவறாமல் படிக்கும் நண்பர் ஒருவர், எனக்கு ஃபோன் செய்து எழுத்தாளர் சுஜாதா பேசுவதாகவும், நான் நன்றாக எழுதுவதாகவும், விகடனில் நான் எழுத முயற்சிக்க வேண்டுமாயும் கேட்டு என்னை கொஞ்ச நேரம் கலாய்த்தார்!
[அடுத்த முறை ஜெயகாந்தன் மாதிரி பேச சொல்லியிருக்கிறேன்!]
3. பஸ் ஸ்டாண்டில் என்னுடைய ரசிகர் ஒருவர் என்னிடம் ஆட்டோகிராஃப் கேட்டது!
[இது சத்தியமான பொய்!]

பெற்ற நண்பர்கள்: பிரதீப்புக்கும் எனக்கும் இருந்த நெருக்கம் இன்னும் அதிகமானது!

கற்றவை: கற்றபின் நிற்க அதற்குத் தக.
[முன் பாதியை நிரப்பு - 2 மார்க்]

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: என்ன? இந்தியாவுக்கு சுதந்திரம் வந்துருச்சா?

இனி செய்ய நினைப்பவை: சொல்லிப் பெய்வதல்ல மழை!

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு:

மதுரை மாநகரில் சுப்ரமணியன் - கீதா தம்பதியினருக்கு 1978ம் ஆண்டு நவம்பர் 16ம் நாள் பிரதீப் வானத்தில் இருந்து குதித்தார்! நர்ஸ் காட்ச் பிடித்து தொட்டிலில் போட்டார். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கேற்ப பிரதீப் சினிமாவிலும், சினிமா பாடல்களிலும் தேர்ந்து விளங்கினார். சிறு வயதிலேயே ரஜினி போல் நடந்து காட்டியும், நடித்துக் காட்டியும் பலருடைய உள்ளத்தை கொள்ளை கொண்டார். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் கொஞ்சமாய் வளர்ந்த பிரதீப்பின் வாழ்வில் அந்த சமயத்தில் விதி நன்றாக விளையாடியதில் சாஃப்ட்வேர் இன்ஜினியர் ஆனார். அலுவலகத்தில் வலைபதிவதில் அயராது உழைத்தாலும் அதிலும் நேரம் மிச்சம் பிடித்து ப்ரொக்ராமிங்கும் செய்து கடமையை கண்ணும் கருத்துமாய் செய்தார்!! 2006 அல்லது 7 க்குள் யாராவது ஒரு குணவதியை மணப்பார்! இனிதே இல்லறம் நடத்துவார்? இப்படிப் பட்ட உயர்ந்த எண்ணங்களுடனும், குணங்களுடனும் வாழும் ஒரு மேதையை நாளை தமிழகம் இழந்தால் அது ஒரு பேரிழப்பாகவே இருக்கும். லட்சோப லட்சம் மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்துவார்கள்! செலுத்தனும்!!

இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்

பெய்யெனப் பெய்யும் மழை!

மதுமிதாவுக்கு ஒரு கேள்வி! இவ்வளவு லொள்ளா எழுதியிருக்கேனே, இதை புத்தகத்துல போடுவீங்க?
கூறை மேலிருந்த கண்ணாடித் தடுப்பின் வழியே வெயில் சுள்ளென்று அடிக்கிறது. கண்ணை மூடிக் கொண்டே வெப்பத்தை உணர்கிறேன். மிகவும் சோர்வாக இருக்கிறது. வாயில் கசப்பு நிரந்தரமாய் தங்கி விட்டது. நோயின் வெம்மையோடு வெயிலின் வெம்மையும் சேர்ந்து விட்டது. கண்களைத் திறக்க நினைக்கிறேன், முடியவில்லை. மிகவும் ப்ரயத்தனப்பட்டுத் திறக்கிறேன். கண்களின் நேரே சூரிய ஒளி பட்டு கண் கூசுகிறது. மறுபடியும் கண்ணை மூடிக் கொள்கிறேன். அப்படியே சிரமப்பட்டு கட்டிலின் அந்தப் பக்கம் புரண்டு கொள்கிறேன். இப்போது கொஞ்சம் பரவாயில்லை. இப்போது கண்களைத் திறக்கலாம். என் பூப்படைந்த கண்ணின் வழியே அந்தக் காட்சியைக் காண்கிறேன். நான் தினமும் பார்க்கும் காட்சி. கண்ணாடித் தடுப்பின் வழியே நேர் கோட்டில் சூரிய ஒளி கட்டிலில் பட்டு அந்தக் கண்ணாடித் தட்டின் வடிவம் கட்டிலில் கிடக்கிறது. அந்த ஒளியின் ஊடே மாசு படிந்த ஒரு உலகம் தெரிகிறது. பல கோடி வருடங்களாய் கொளுந்து விட்டு எரியும் சூரியனின் ஒளியில் வயோதிகம் இல்லை. அதே வேகம், அதே தினவு, அதே வீச்சு, அதே கர்வம்! சூரியனை எந்த நோயும் பீடிப்பதில்லை போலும்.

இன்று என்ன தேதி, என்ன கிழமை, என்ன மாதம்? மூக்குக் கண்ணாடி அணியாத மங்கிய பார்வை போலாகிவிட்டது நினைவுகளும்! நினைவுகளின் துல்லியத்திற்கும் ஒரு மூக்குக் கண்ணாடி அவசியம் என்று தோன்றுகிறது. நினைவுக்கு ஏது மூக்கு? என்ன இது? ஒரே பிதற்றலாய் இருக்கிறதே? பேசும் போது பிதற்றுவது தான் உளரலென்றால் மனதளவில் இப்படிப் பிதற்றுவதற்கு என்ன பேர்? சே! என்ன உளரல் இது? உடம்பு நோய் கண்டும் இந்த மனது ஓய்வு எடுக்க மறுக்கிறதே? உடம்பு பாடாய் படுகிறது என்று சிறு இரக்கம் கூட காட்டுவதில்லையே இந்த மனம்? என்னால் முடியவில்லை. ஆமாம்....?, இந்த என்னால் என்பது உடலா, மனதா? ஏன் இப்படி உளருகிறேன் இன்று? சூரிய ஒளி மங்குகிறது. ஏதோ மேகம் மறைத்திருக்க வேண்டும். தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும், மீண்டும் தர்மமே வெல்லும் என்ற வாசகம் ஞாபகம் வருகிறது. இந்த மூளை தான் மனதை செல்லம் கொடுத்து கெடுத்து வைத்திருக்கிறது?! இந்த மனக்கிறுக்கின் உளரலுக்கு செவி சாய்த்து மூளைப் பரணில் இருக்கும் கண்டதை தூசி தட்டி எடுத்துத் தருகிறதே? உடல் சொல்கிறது, இரண்டும் கூட்டுக் களவானிகள் என்று!

என் உடல் வெப்பத்தால் கட்டில் சுடுகிறது. இவ்வளவு நேரம் அதை உணரக்கூடாது என்று என் எண்ணங்களை திசை திருப்பிப் பார்த்தேன். பலிக்கவில்லை. கொஞ்சம் புரண்டு கொள்கிறேன். வேட்டியை இரு கால்களுக்கும் இடையில் நன்றாய் செலுத்திக் கொள்கிறேன். என்ன வெப்பம்?! உடலெல்லாம் ஒரே அசதி. நான் ஓடிய ஆடிய காலங்கள் நினைவுப் பரணில் எங்கோ தூசு கண்டு கிடக்கிறது. அதை எடுத்து தூசு தட்ட நினைத்தால் இருமல் வரும்! இதோ வந்து விட்டது..இவ்வளவு நேரம் எப்படி மறந்து போயிருந்தேன். அப்பா, உயிரை உள்ளிருந்து பிடுங்கி எறிவது போல் அவ்வளவு அழுத்தமான, ஆழமான இருமல்கள்! என் வயதான, இறந்த போன, இறந்த கால மனைவியின் தளர்ந்த கைகளை மிகவும் கஷ்டப்பட்டு நினைத்துக் கொண்டு என் மார்பை வருடிக் கொள்கிறேன்! இதமாய் இல்லை தான். அப்படி இருப்பது போல் கற்பனை செய்து கொள்கிறேன்! வற்றிய கிணறைப் போல வற்றி இருந்த பாத்திரத்தில் மிகவும் சிரமப்பட்டு தண்ணீர் எடுக்கிறேன்..இல்லை; எடுக்க முயல்கிறேன். ஆஹா...விரல்களில் ஈரம் படிகிறது! நல்ல வேளை அதிகமாய் தண்ணீர் இல்லை, டம்ளரில் நிரம்ப தண்ணீர் இருந்தால் அதை தூக்க சிரமம் ஏற்பட்டிருக்கும். ஏதோ டம்ளரில் ஒட்டி இருந்த ஒரு திவளை நீரை நாக்கில் நனைத்துக் கொள்கிறேன். எனக்கு யாருமே இல்லையா? என்று மனதில் ஒரு குரல் ஓலமிட்டு அழுகிறது! பாழடைந்து போன கண்களில் சிறிது கண்ணீர் சுரக்கிறது. நானிருக்கிறேன் என்று ஒரு சிறு தென்றல் என் கண்ணீர் துடைக்கிறது. கூரையின் கண்ணாடித் தடுப்பின் வழியே பார்க்கிறேன். நோயாளியைப் பார்க்க வருபவர்கள் பழங்கள் கொண்டு வருவது போல், சூரியன் வேஷம் போட்டுக் கொண்டு எனக்காக நட்சத்திரங்களை கொண்டு வந்து எட்டிப் பார்க்கிறது அரை குறை நிலா! அதற்குள் இரவு வந்துவிட்டதா?

வாழ்வில் மற்றொரு நாள் கழிந்தது!

அதே மாநகராட்சிப் பள்ளி; அதே போன்ற வெவ்வேறு நீண்ட வரிசைகள். ஜனநாயகக் கடனை நிறைவேற்றி விட்டு வந்தவுடன் எழுதுகிறேன். என் வாழ்நாளில் முதன் முதலாய் நான் போடும் ஓட்டு! ஒரு ஜீன்ஸ் ட்ரவுசர், ஒரு டீ-சர்ட்..கூட்டம் அதிகமாயிருந்தால் வரிசையில் ரொம்ப நேரம் நிற்க போர் அடிக்குமே என்று ஐ-பாட் ஐயும் எடுத்துக் கொண்டு புறப்பட்டுவிட்டேன். நான் நினைத்த அளவுக்கு கூட்டம் அதிகம் இருக்கவில்லை. இருந்தும் காதில் ஹெட் ஃபோனை மாட்டிக் கொண்டு நீ ஒரு காதல் சங்கீதம் கேட்டுக் கொண்டிருந்தேன். கைலி கட்டிக் கொண்டும், அழுக்கான வேட்டி கட்டிக் கொண்டும், 3 வருடத்திற்கு முன் எடுத்த தீபாவளி சட்டையுடனும், கரை படிந்த பற்களுடனும், வித விதமாய் நின்றிருந்தனர். நான் அவர்களிடம் இருந்து தனித்து தெரிந்தேன். எந்த மடையனும் சொல்லி விடுவான், நான் சாஃப்ட்வேர் இன்சினியர் என்று! சாதாரண மக்களிடம் இருந்து எவ்வளவு விலகி வந்து விட்டேன்? இப்படி விலகச் செய்வது படிப்பா அல்லது பணமா? என்னைப் பற்றி அவர்கள் என்ன நினைத்திருப்பார்கள்? இப்படி பல எண்ணங்கள்! இப்படி எல்லாம் நான் நினைப்பது நியாயமா? அல்லது பேத்தலா? என்னமோ ஒன்றும் புரியவில்லை.

நீ ஒரு காதல் சங்கீதத்தையும் மீறி வரிசையில் நின்றவர்களின் அரசியல் விவாதம் காதில் விழுந்து கொண்டிருந்தது. இங்கு அரசியல் பேசக்கூடாது போர்ட் இருக்கிறதா என்று சுற்றும் முற்றும் பார்த்தேன். என்ன அபத்தம், இந்த இடத்தில் பேசா விட்டால் வேறு எந்த இடத்தில் தான் அரசியல் பேசுவது. பேசட்டும்; தகராறு ஏதும் வராமல் இருந்தால் சரி. வெளியே ஆங்காங்கே வெவ்வேறு கட்சிக் கொடிகள் கட்டி அது காற்றில் பறந்து கொண்டிருந்தன. கொடியுடன் அவர்கள் கொள்கைகளும்! எனக்கு எங்கள் தொகுதி பெயர் என்ன? யார் இங்கு நிற்கிறார்கள், இவர்களின் அரசியல் பின்னனி என்ன? ஒன்றும் தெரியாது. நான் ஓ போடத் தான் சென்றேன்! அதாவது, 49 {ஓ}! இந்தப் பட்டியலில் இருக்கும் யாருக்கும் ஓட்டுப் போட பிடிக்கவில்லை என்றால் 49 {ஓ} போடலாம் என்று சில நாட்களாக சாஃப்ட்வேர் இன்சினியர்களுக்கு (மட்டும்!) மெயிலின் மூலம் அறிவூட்டப்பட்டது!

வரிசை நகர்ந்து நான் உள்ளே சென்றேன். என் சீட்டையும், புகைப்பட அட்டையையும் சரி பார்த்தார் ஒரு அதிகாரி. மற்றவர் அதை வாங்கி என்னுடைய பேர் இருந்த ஒரு நோட்டில் என் பெயருக்குக் கீழே அடிக்கோடிட்டு இன்னொருவருக்கு அந்த நம்பரை சொன்னதும் அவர் குறித்துக் கொண்டார். ஒரு சீட்டைக் கொடுத்தார். பக்கத்தில் ஒருவர் என் விரலை நீட்டச் சொல்லி மையிட்டார். இந்த முறை புள்ளிக்கு பதிலாய் கோடு போடப் போவதாக பேப்பரில் படித்தேன். அதே மாதிரி ஒரு கோடு இழுத்து விட்டார். கோடு மட்டும் போடுங்கள்! சரியாய் ரோடு மட்டும் போடாதீர்கள்! என்று நினைத்துக் கொண்டேன். பக்கத்தில் இருந்தவர் நோட்டு ஒன்றில் என் கையெழுத்தை வாங்கிக் கொண்டார். நல்ல வேளை அங்கே பேனா இருந்தது. இந்த முறை யாரும் என் பேனாவை கேட்கவில்லை! அந்தச் சீட்டை கொண்டு போய் அங்கு ஒரு வயதான் பெண்மனி உட்கார்ந்திருந்தார். அவரிடம் கொடுத்ததும், அதை வாங்கிக் கொண்டு பக்கத்தில் உள்ள அட்டைத் தடுப்புக்குள் என்னைப் போய் ஓட்டுப் போடச் சொன்னார்.

உள்ளே சென்று அந்த வோட்டிங் பேடைப் பார்த்தேன். நான் எதிர்பார்த்த 49 {ஓ} இல்லை; சரி அதற்கு ஃபாரம் தான் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று நினைத்து வெளியில் வந்து, அந்த அம்மாவிடம் எனக்கு யாருக்கும் ஓட்டு போட விருப்பமில்லை, எனக்கு 49 {ஒ} ஃபார்ம் கொடுங்கள் என்றேன். அவர் இதில் உள்ளதைத் தான் போட வேண்டும், அந்த நீல நிற பட்டனை அமுத்துங்கள் என்று ஆங்கிலத்தில் சொன்னார். எனக்கு அது தெரியும், எனக்கு இவர்களுக்கு ஓட்டுப் போட விருப்பமில்லை. 49 {ஓ} ஃபார்ம் கொடுங்கள் என்றேன் மெதுவாய். அதற்குள் அந்த அறையில் கொஞ்சம் சலசலப்பு ஏற்பட்டு விட்டது. நீங்க ஆபிஸர்கிட்ட கேளுங்க என்றார். அவர் பக்கத்தில் தான் வரிசை நின்று கொண்டிருக்கிறது. நான் மெதுவாய் சென்று 49 {ஓ} ஃபார்ம் கொடுங்க என்றேன். அவர் அப்படின்னா? என்றார். எனக்கு என்ன சொல்வதென்றே விளங்கவில்லை. எல்லோரும் என்னையே பார்க்கிறார்கள். i am really embrassed! சரி என்று சமாளித்துக் கொண்டு, எனக்கு இதில் யாருக்கும் ஓட்டுப் போட விருப்பமில்லை என்று ஒரு ஓட்டுப் போட வேண்டும், அதற்கான ஃபார்மை கொடுங்கள் என்றேன். வரிசையில் சலசலப்பு அதிகமானது. என்ன சொல்றீங்க? ஓட்டு போட விருப்பமில்லைன்னா ஏன் வந்தீங்க? என்றார் ஆபீஸர். வரிசையில் நின்ற ஒரே ஒரு ஜீவாத்மா மட்டும், இல்லை சார் அவர் கேக்குறது சரி தான் என்று அவரிடம் கூறி விட்டு ஆனா அந்த ஃபார்ம் இங்க இல்லை, நீங்க ஏன் ஓட்டை வேஸ்ட் பண்றீங்க? போய் யாருக்காவது போடுங்க என்றார் என்னிடம். எல்லோரும் புலம்பினார்கள். போங்க போய் ஓட்டு போடுங்க என்றார். அப்படியே வெளியே போய் விடலாம் என்று நினைத்தேன். ஆனால் என் நல்ல ஓட்டு கள்ள வோட்டு ஆகாமல் இருக்க உள்ளே சென்று என் மனதில் அடுத்த படியில் இருந்த ஒரு சின்னத்தில் க்ளிக்கி என் முதல் ஓட்டை போட்டேன். [யாருக்குப் போட்டேன் என்பது ரகசியம் என்பது உங்களுக்கே தெரியும்!] எல்லோரும் என்னை பார்த்து சிர்ப்பது போலிருந்தது. அரை ட்ரவுசர் போட்ட அரை லூசு என்று நினைத்திருக்கலாம். உண்மையில் யார் அரை லூசு? மக்கள் ஏன் இவ்வளவு அறியாமையில் இருக்கிறார்கள்? மக்களை விடுங்கள், அந்த அதிகாரிகளுக்கும் அப்படி ஒன்று இருப்பதே தெரியவில்லையா? அல்லது, தெரிந்தும் தெரியாதது போல் நடிக்கிறார்களா? 1960 ஆண்டுகளிலிருந்து இந்த 49 {ஒ} என்பது இருக்கிறது என்றார்களே! பத்திரிக்கைகளில் எத்தனை முறை இதைப் பற்றி வந்திருக்கிறது! யாரும் நமிதாவின் படத்தைத் தாண்டிப் பார்ப்பதே இல்லையா? எனக்கு ஒன்றும் புரியவில்லை.

சரி அரசியல் கட்சிகள் தான் 49 {ஒ} பற்றி பேசமாட்டார்கள். இந்தத் தேர்தல் ஆணையம் என்ன செய்கிறது? இந்த விழிப்புணர்வை மக்களுக்கு அது ஏன் சரியாக வழங்கவில்லை. வீடு விடாய் சென்று ஓட்டுக் கேட்கும் அரசியல் கட்சிகளோடு இவர்களும் ஒரு குழு அமைத்து வீடு வீடாய் சென்று இதைப் பற்றி மக்களுக்கு எடுத்துச் சொல்லலாமே? ஏன் செய்யவில்லை? இதை நான் யாரிடம் சொல்ல வேண்டும்? என்ன தான் தீர்வு இதற்கெல்லாம்? ஏன் என் நாடு இப்படி இருக்கிறது? எது தான் சரியாய் நடக்கும் இங்கே? வழக்கம் போல் நிஜம் கேள்விகளின் ரூபத்தில் முகத்தில் அறைகின்றன!

வீட்டிற்கு வந்தவுடன் www.ohpodu.org சென்று ஞாநியின் நம்பர் தேடி, அவருக்கு ஃபோன் போட்டென். ஒரு நம்பர் மாறிவிட்டதாகச் சொன்னது. இன்னொன்று எப்போதும் பிஸியாக இருந்தது. நான் என்ன தான் செய்வது? எல்லா கொடுமைகளையும் பார்த்து பார்த்து இத்தனை கேள்விகளையும் எனக்குள்ளே கேட்டுக் கேட்டு இதோ வலைபதித்துக் கொண்டிருக்கிறேன்! சமயத்தில் எல்லாவற்றையும் எடுத்தெறிந்து விட்டு சமூகத்தைத் திருத்தக் கிளம்பி விடலாம் என்று தோன்றுகிறது! ஆனால் அது அவ்வளவு எளிதானதாக இல்லை. எல்லோரையும் போல என்னால் இந்தியான்னா இப்படித் தான் என்றும் போக முடியவில்லை! கடைசியில் ஆதங்கமே மிஞ்சுகிறது.

என் விரலைப் பார்த்துக் கொள்கிறேன். மை காய்ந்திருந்தது! என் விரலிலும் இன்று முதன் முதலாய் ஜனநாயகக் களங்கம் ஏற்பட்டு விட்டது!

யாரும் சிரிக்கக் கூச்டாது சொல்லிச்ட்ச்டேன்! இந்த முறை என் கீ போர்ச்டில் ச் அட்சித்தால், ச் உச்டன் ச்ட
விழுவதால் என்னால் வலை பதிய முச்டியவில்லை. அது எப்பட்சி மீண்ட்சும் மீண்ச்டும் எனக்கு மச்ட்ச்டும் இப்பட்சி நச்டக்கிறது?

புரியாதவர்களுக்கு!

யாரும் சிரிக்கக் கூடாது சொல்லிட்டேன்! இந்த முறை என் கீ போர்டில் ட அடித்தால் ச் வுடன் சேர்ந்து விழுவதால்
என்னால் வலை பதிய முடியவில்லை. அது எப்படி மீண்டும் மீண்டும் எனக்கு மட்டும் இப்படி நடக்கிறது?

கதை - எழுதியாகிவிட்டது
கவிதை - எழுதியாகிவிட்டது
கட்டுரை - எழுதியாகிவிட்டது
ஓவியம் - வரைந்தாகிவிட்டது
விமர்சனம் - எழுதியாகிவிட்டது
அனுபவங்கள் - எழுதியாகிவிட்டது

திரைக்கதை - இதோ...

இது என்னுடைய முதல் திரைக்கதை அனுபவம்! இதை, குத்து பாட்டு 2 போட்டா படம் பிச்சிக்கும் என்று சொல்லாத தயாரிப்பாளர் கிடைத்தால் 5 அல்லது 7 நிமிட குறும்படமாக எடுக்கலாம். ஏதோ நான் படித்த மற்றும் பார்த்த அனுபவங்களைக் கொண்டு இதை எழுதியிருக்கிறேன். நம் நாட்டின் கல்வி முறையையும், பரிட்சை பற்றிய பயமும் ஒரு சிறுவனின் பார்வையில் இருந்து சொல்ல முயன்றிருக்கிறேன்..இது நம்மில் பலரின் அனுபவமாகக் கூட இருக்கலாம்.

ஓபன் பண்ணா! [ஆரம்பிச்சுட்டான்யா!]


அதிகாலை ஒரு தெரு.

தூரத்தில் ஒரு வீட்டில் அலாரத்தின் சத்தம்.

அப்பா: டேய் மணி, எந்திரி..மணி 5 ஆச்சு பாரு..எந்திரி. இன்னைக்கு என்ன பரிட்சை?

மணி: [கண்களை கசக்கி கொண்டே] கணக்கு!

அப்பா: போ, போய் பல்லை விலக்கிட்டு, முகம் கழுவிட்டு படி..[அப்பா திரும்பி படுத்துக் கொள்கிறார். மணி வேண்டா வெறுப்புடன் நடந்து பாத்ரூம் செல்கிறான்.]

மணி முகம் கழுவிய பிறகும் இன்னும் தூக்கக் கலக்கத்துடன் இருக்கிறான். கணக்கு புத்தகத்தை பையில் இருந்து எடுக்கிறான். கணக்கு 7 close-upல் காட்டப் படுகிறது. அதை தூக்கக் கலக்கத்துடனும் வேண்டா வெறுப்புடனும் பார்க்கிறான். ஏதோ ஒரு பக்கத்தை புரட்டுகிறான். தூக்கத்தில் பக்கங்கள் மங்கலாகத் தெரிகிறது. [பின்னனியில் ஒரு தாலட்டு இசை பதிவாகிறது.] அப்படியே புத்தகத்தின் மேல் தலை கவிழ்ந்து படுத்துக் கொள்கிறான்.

அப்பா: [படுக்கையிலிருந்து] என்னடா தூங்குறியா?

மணி: [வாயில் ஏதோ முனுமுனுத்துக் கொண்டே] ஒன்னும் தூங்கலை..படிச்சிட்டு தான் இருக்கேன்.



காலை

மணி குளித்து சீருடை அணிந்து சாமி கும்பிடுகிறான்.

மணி: பிள்ளையாரப்பா..இன்னைக்கு கணக்கு பரிட்சை!..உன்னை தான் நம்பி இருக்கேன். பரிட்சை ஈஸியா இருக்கனும். அந்த சோடாபுட்டி வாத்தியார் வரக் கூடாது....இப்போ என் தலையில குட்டிக்கிறேன்...மகனே சொதப்புன..சாய்ந்தரம் உன் தலையில கொட்டுவேன்டீ! ஆமா..[பிள்ளையாரைப் பார்த்துக் கொண்டே திருநீறை எடுத்து பூசிக் கொள்கிறான்]
மணி பையை எடுத்துக் கொண்டு பள்ளிக்கு கிளம்புகிறான். அப்பா வாசலில் பேப்பர் படித்துக் கொண்டிருக்கிறார்.

அப்பா: என்னடா ஒழுங்கா படிச்சியா? பரிட்சையை ஒழுங்கா பாத்து எழுது!

மணி: எங்க பள்ளிகூடத்துல பாத்து எல்லாம் எழுத விட மாட்டங்கப்பா..

அப்பா: அடி படவா..[மணி ஓடுகிறான்] பாஸ் பண்ணாம வீட்டுக்கு வந்துராதே..இதெல்லாம் எங்க உருப்புடப்போகுது?! புள்ளைய பெத்துருக்கா பாரு..அவ அண்ணன்காரன் மாறியே..[உள்ளேயிருந்து ஒரு பெண் குரல்: எங்க வீட்டை குறை சொல்லலைன்னா உங்களுக்கு பொழுது விடியாதே!]

மணி குழப்பத்துடன் நடந்து செல்கிறான். எத்தனை முறை படித்திருந்தாலும் சூத்திரங்கள் ஞாபகத்திற்கு வர மறுக்கின்றன. [அவன் தோல்பை சிலுவையாய் மாறுகிறது. அவர் அப்பாவும், வாத்தியாரும் பிரம்பால் அடித்துக் கொண்டே பின்னால் வருகிறார்கள்! ]

டீ கடையில் வேலை பார்க்கும் ஒரு பையன் மணியை பார்த்து, "என்னடா பரிட்சையா இன்னைக்கு?" என்று சிரிக்கிறான். மணிக்கு அவனை பார்க்க பொறாமையாய் இருக்கிறது. தலை குனிந்து நடக்கிறான். ரோட்டில் எல்லோரையும் பார்த்து இவர்களுக்கு எல்லாம் இன்று கணக்கு பரிட்சை இல்லையே..என்ற ஏக்கத்துடன் நடக்கிறான்.



பள்ளிக்கூடம்

கேள்வித் தாள் கொடுக்கப் படுகிறது. மணிக்கு ஒன்றும் புரியவில்லை. கண்களில் கண்ணீர் வந்து நிற்பதால் கேள்வித்தாள் மங்கலாய் தெரிகிறது..வேர்க்கிறது. அந்த வேர்வையில் அவன் பூசியிருந்த திருநீறு கரைகிறது..

பிள்ளையாரை குட்டுவது போல் மணி கற்பனை செய்து கொள்கிறான்!


சுபம்
dumb charat என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். தமிழில் எனக்குத் தெரிந்த வரை, மெளன மொழி அல்லது படம் பேர் சொல்லி விளையாடுவோம்டா என்பார்கள். படம் பேர் சொல்லி என்று அவன் சொல்லி முடிப்பதற்குள் நான் சரி என்று தலையாட்டி முடித்திருப்பேன். அந்த விளையாட்டு எனக்கு அவ்வளவு பிடிக்கும். எனக்குத் தெரிந்து, நான் கேப்டனாய் உலா வரும் ஒரே விளையாட்டு இது தான்! சமீபத்தில் உறவினர்களுடன் மறுபடியும் விளையாட சந்தர்ப்பம் கிடைத்தது. என் அக்காவிற்கு என் சினிமா அறிவைப் பற்றி நன்றாய் தெரியும். டேய், நம்ம ஒரு டீம்டா என்று முதலில் இடம் போட்டு வைத்து விட்டார். என் எதிர் அணியில் அண்ணன், அண்ணி மற்றும் சில சுண்டான்கள். எங்கள் அணியில் நான், அக்கா மற்றும் சில சுண்டான்கள். என் அண்ணனுக்கு அதிகம் சினிமா அறிவு கிடையாது. ஆனால் அண்ணி சினிமா அறிவு இந்த அளவுக்கு இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. நான் யாரு, என் பேக்ரவுண்ட் என்ன என்ற ரேஞ்சில் நான் பீத்திக் கொண்டிருந்தேன்.

ரூல்ஸ் இது தான்: (உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்றாலும்)

1. ஒரு அணியில் உள்ளவர் இன்னொரு அணியில் உள்ளவர் யாரிடமாவது ஒரு திரைப்படத்தின் பெயரை அவர் காதில் சொல்ல வேண்டும்.
2. காதில் வாங்கிய நபர் தன்னுடைய அணிக்கு வாயசைக்காமல் நடித்துக் காட்டி, அதை அந்த அணியில் மற்றவர்கள் சொல்ல வேண்டும்.
3. இத்தனை நிமிஷத்திற்குள் சொல்ல வேண்டும் என்று நாங்கள் டைம் செட் செய்து கொள்வதில்லை. (வேண்டும் என்றால் வைத்துக் கொள்ளலாம்)

நான் முதலில் என் அண்ணன் காதில் சென்று பல்லவன் என்ற தமிழ்த் திரைக்காவியத்தைக் கூறினேன். அவர் கடுப்பாகி, அப்படி எல்லாம் படமே வரலை என்றார். அதற்குள் என் அணியில் எல்லோரும் சிரித்துக் கொண்டிருந்தார்கள். நான் சொன்னா சரியா இருக்கும், போய் நடிங்க என்றேன். இதை எல்லாம் எப்பிட்றா நடிக்கிறது என்று என்னை அநியாயத்திற்கு முறைத்து விட்டு நடிக்க ஆரம்பித்தார். ஸ்டேரிங்கை ஓட்டினார். கியர் போட்டார். மனிதர் கிட்டத்தட்ட பஸ்ஸையே ஓட்டி விட்டார். ஒன்னும் நடக்கல. எங்களுக்கு சிரிப்பு தாங்க முடியலை. ஒரு வழியாய் எல்லோரும் வெறுத்துப் போய் கடைசியில் நாங்கள் தான் பதில் சொல்ல வேண்டியிருந்தது. அண்ணன் சோர்ந்து போய் உட்கார்ந்து கொண்டார்.

அடுத்து என் டர்ன். இதெல்லாம் எனக்கு சாதரணம்டா என்று கிளம்பினேன், அங்கு அண்ணி இருப்பது தெரியாமல்..அவர்கள் என் காதில் சொல்லிய படம் என்ன தெரியுமா? கும்மாளம். இதெல்லாம் எப்படி நடிக்கிறது என்றேன்? சோர்ந்து போயிருந்த அண்ணன் எழுந்து நீ பல்லவன் சொன்னியே அப்போ என்னைப் பத்தி கொஞ்சமாவது நெனைச்சி பாத்தியாடா என்று கதறினார். தீதும் நன்றும் பிறர் தர வாரா வுக்கு அர்த்தம் தெரிந்து கொண்டு நடிக்க ஆரம்பித்தேன். கும்மாளத்தை எப்படி நடித்துக் காட்டுவது சொல்லுங்கள்? நானும் மாக்கான் மாதிரி தைய தக்கா என்று குதிக்கிறேன்..ஓட்றேன், ஆட்றேன்..என் அக்காவுக்கு சிரிக்கவே சரியாய் இருக்கிறது, அவள் பதில் சொல்லக்கூட முயற்சிக்கவில்லை. பெரும் தோல்வி. எங்கள் அணியில் கிட்டத்தட்ட ஒரு 40 வயதானவர் இருந்தார். அவரிடம் ராஜபார்ட் ரங்கதுரை படத்தை சொல்லியிருந்தார்கள். பாவம் அவர் பதறி விட்டார். அவருக்கு நம்பிக்கையே இல்லை. சும்மா நடிங்க என்றேன். கஷ்டபட்டு ஏதேதோ செய்தார். நான் சரியான பதிலைத் தந்ததும் அவரால் அந்த அதிர்ச்சியை தாங்க முடியவில்லை. இந்தச் சின்ன வயதில் இத்தனை அறிவா என்ற ரேஞ்சுக்கு கையை கும்பிட்டுக் கொண்டே என் அருகே வந்து அமர்ந்தவரை ஆஸ்வாசப்படுத்தி அமர வைத்தோம்.இன்னொரு முறை நான் சென்றேன். இப்போது அவர்கள் சொன்னது அழகன். ஒரே வார்த்தை என்று சைகை காட்டினேன். நடிக்காமல் பேசாமல் நின்றேன். ஒரு புன் முறுவல் பூத்தேன். என் முகத்தை சுட்டு விரலால் காட்டினேன். ஒரு சுண்டான் ஆதிவாசி என்றான். நான் நடிப்பதை நிறுத்திக் கொண்டேன். தோல்வியை ஒப்புக் கொண்டேன். அதற்குள் எதிரணியில் இருந்தவர்கள் உனக்கு நடிக்கவே தெரியலை, மம்முட்டி படம் தானே, மம்பட்டி எடுத்து வேலை செய்ற மாதிரி நடிச்சா ஈஸீயா சொல்லிடலாம் என்றார்கள். இந்த அளவுக்கு எனக்கு யோசனை ஓடவில்லை. இனிமேல் நாம் நடிக்கக் கூடாது என்று முடிவு செய்து கொண்டேன்.

அடுத்த முறை நண்பர்களுடன் விளையாடினேன். இந்த முறை என் தம்பி என் அணியில் இருந்தான். நடிக்க ஆரம்பிக்கும் முன் சில கேள்விகளை கேட்போம். பழைய படமா? அவன் ஆமாம் என்று தலையாட்டுவான். சில பேருக்கு அப்படி ஒரு படம் வந்ததே தெரியாது என்றால் கஷ்டம் தான். எத்தனை வார்த்தைகளோ அதை கையால் எண்ணி சொல்லி விடுவான். அதனால் ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணியை யாரும் சொல்வதில்லை. அவன் எண்ணி முடிப்பதற்குள் சொல்லி விடுவோம். முதலில் என் அணிக்காரன் நடிக்க வந்தான். நான் தயார். பழைய படம் என்று கையை பின் பக்கம் இழுத்து தலையை சாய்த்து சொன்னான். அவன் நிமிர்வதற்குள் குலேபகாவலி என்றேன். ஆமாம் என்று வந்து அமர்ந்து விட்டான். எதிரணியில் வெறுத்தே போனார்கள். அடுத்து இன்னொருவன் நடிக்க வந்தான். இடது கையை ஏந்துவது போல் வைத்துக் கொண்டு வலது கை விரல்களால் நடப்பது போல் செய்து காட்டினான். என் தம்பி நண்டு என்றான். அதுவும் சரி. அடுத்து சீவலப்பேரி பாண்டி என்று பெருமையாயும் இதை எப்படி உன் அணியில் கண்டு பிடிக்கிறார்கள் பார்ப்போம் என்ற ரேஞ்சுக்கு எதிரணியினர் சொல்லி விட்டிருந்தார்கள். எங்கள் அணியில் நடிக்க வந்தவன் 2 வார்த்தை, இடைப்பட்ட காலப் படம் என்ற சைகை செய்து, இடுப்பில் வேட்டியை ஏத்தி கட்டுவது போல் செய்து, பின்னாலிருந்து அரிவாள் எடுப்பது மாதிரி சைகை செய்தான். முடிந்தது. வந்து உட்கார்ந்து விட்டான். நெக்ஸ்ட் என்றோம். எதிரணியில் இருந்த ஒரு நண்பி, இவன் இருந்தா நான் இந்த விளையாட்டுக்கு வர்ல என்று என்னை கை காட்டி சொன்னாள். அடுத்து என் தம்பி உள்ளே போனான். 13ம் நம்பர் வீடு. இதை தான் என் தம்பியின் காதில் சொன்னார்கள் என்று ஞாபகம். சொல்லிவிட்டு, இதையும் உங்க அண்ணன் சொல்லிடுவானா என்று கேட்டிருக்கிறான். என் தம்பி, வந்து பாரேன் என்று நடிக்க வந்தான். பேய் மாதிரி குரூரமாய் ஏதோ செய்தவுடன் சரியான பதிலை சொல்லி விட்டொம். நான் மிகவும் கஷ்டப்பட்டும் சொல்லாத படம், சந்தியா ராகம். அதற்காக என் நண்பன் இந்தியாவை எல்லாம் நடிப்பில் கொண்டு வந்தான். சா·ப்ட்வேர் இன்சினியர்கள் ஆங்கிலப் படங்களின் பெயர்களைக் கொண்டு ஆபிஸீல் விளையாடுகிறார்கள். நான் அதில் பூஜ்யம். இனிமே தமிழ் படங்களை சொல்லி நாம் விளையாடவே முடியாது, ஏதாவது சீன் நடிச்சு காட்டி எந்தப் படம்னு கண்டுபிடிக்கலாம் என்று என் நண்பன் ஒருவன் யோசனை சொல்லியிருக்கிறான். வெற்றியோ, தோல்வியோ இந்த விளையாட்டையும், அது எங்களுக்குத் தந்த இனிமையான அனுபவங்களையும் நான் நினைத்து நினைத்துப் பார்த்து சிரிக்கிறேன். ராட்டினத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு, அது சொய்ங்கென்று கீழிறங்கும் போது உண்டாகும் ஒரு குதூகலமும், உற்சாகமும் எனக்கு அதை நினைத்துப் பார்க்கும் போது ஏற்படுகிறது. நீங்களும் விளையாடிப் பாருங்கள்!

முன்னாலேயே எழுத வேண்டிய பின்குறிப்பு:

அதான் படிச்சாசுல்ல, அப்படியே ரைட்ல அந்தப் படத்தை க்ளிக்கி, நமக்கு ஒரு வோட்டை போட்றது?! இது தமிழக அரசு வோட்டு மாதிரி இல்லைங்க; ஓட்டு போட்றவங்களுக்கும் ஏதோ பரிசு தர்றாங்களாம். பாத்துக்குங்க. அவ்வளவு தான் சொல்வேன்!

வெள்ளிக்கிழமை க்யான் விபோத் நடத்திய டெம்டேஷன் என்ற ஒரு இசை நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன். அலுவலகத்தில் ஒரு நண்பர் அவருடைய மனைவி வராததால் என்னை அழைத்து சென்றார். மியுசிக் அகாடமியில் நடந்தது. ராஜேஷ் வைத்தியாவின் amplified வீணையுடன், சினிமா பின்னனிப் பாடகர் கார்த்திக்கின் குரல் சேர்ந்து எங்களை எங்கேயோ கொண்டு சென்றது. கர்நாடகம், இந்துஸ்தானி, கஜல் என்று எல்லாம் சேர்ந்த (அப்படித் தான் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்) ஜுகல்பந்தி (எல்லாம் சேர்ந்து கொடுப்பதற்கு ஜுகல் பந்தி என்று தானே பெயர்?) கார்த்திக்கின் குரல் மிகவும் சாதாரணமாயும், இனிமையாவும் இருந்தது. இது தான் அவருடைய முதல் மேடை நிகழ்ச்சியாம். அடிக்கடி மினரல் வாட்டர் குடித்தார்.சாருகேசி, மதுவந்தி, தர்மாவதி என்று பல பெயர்களைச் சொன்னார்கள், வழக்கம் போல் ஒன்றும் புரியவில்லை. கடைசியில் அந்நியன், ஆதி புகழ் சைந்தவியும் (12வது படிக்கிறார்!) சேர்ந்து கலக்கினார். கர்நாடக இசைக்கே உரிய அற்புதமான சாரீரம். டோரா டும்முன்னு என்ற ஒரு கருத்தாளமிக்க பாடலை பாடி இருக்கிறார். கார்த்திக்குடன் சேர்ந்து சில சினிமா பாடல்களையும் பாடினார்கள். நிகழ்ச்சிக்கு பாலசந்தர், மதன் மற்றும் இசையமைப்பாளர் வித்யாசாகர் வந்திருந்தார்கள். பாலசந்தருக்கு 70 வயதுக்கு மேல் ஆகி விட்டது என்று ஞாபகம், மனிதர் என்னமாய் ஓடுகிறார்.

சனிக்கிழமை ப ட் டி ய ல் பார்த்தேன். ஓகே ரகம். என்னடா ஒரே ரத்தம், அடி, தடி..ஏண்டா இந்த மாதிரி படத்துக்கு எல்லாம் கூட்டிட்டு வர்றே என்று அம்மா திட்டினார். பார்த்துப் பார்த்துப் புளித்துப் போன கதை. சீரான திரைக்கதை, திடீர் திருப்பம். தெரிந்த முடிவு! அவ்வளவு தான் பட்டியல். ஆர்யா இன்னும் கொஞ்சம் கம்மியாக தாடி வைத்திருக்கலாம், அசல் பரதேசி மாதிரியே இருக்கிறார். நல்ல படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தால் இவருக்கும் பரத்துக்கும் நல்ல எதிர்காலம் இருக்கிறது. (அதற்குள் நான் சினிமாவில் நடிக்க வராமல் இருந்தால்!) தமிழ் சினிமாவில் கமர்ஷியல் என்ற பெயரில் கதைக்குத் தேவையில்லாமல் பாடல்கள் புகுத்துவதை நிறுத்த வேண்டும்.

ஞாயிற்றுக் கிழமை. என் வாழ்நாளில் மிக முக்கியமான ஒரு கடமையை முடித்தேன். ஜனநாயகக் கடமை. தேர்தலுக்காக ஃபோட்டோ எடுத்துக் கொண்டேன். காலம் காலமாக சென்னையிலேயே இருப்பவர்களின் பலருடைய பெயர்களே விடுபட்டிருக்கும் நிலையில் என் பெயர் இருந்தது நான் முன் ஜென்மத்தில் செய்த புண்ணியம். என்ன முயன்றாலும், ஞாயிற்றுக் கிழமை காலை என்பது 12 மணிக்குத் தான் தொடங்குகிறது. ஒரு வழியாய் அதற்குள் ஷாம்பு எல்லாம் போட்டு குளித்து ரெடியாகி பக்கத்தில் இருந்த மாநகராட்சிப் பள்ளிக்குச் சென்றேன். 4 வரிசை நிற்கிறது. கிட்டத்தட்ட ஒரு 100 பேர் தங்களுக்குப் பிடித்த வரிசையில் நிற்கிறார்கள். நான் நின்ற வரிசையில் என் முன் இருந்தவர், முதலில் புகைப்பட அடையாள அட்டை ஒன்றை காட்டி பதிவு செய்து கொள்ள வேண்டும், அதற்குப் பிறகு அந்த வரிசையில் நின்று ஃபோட்டோ எடுத்துக் கொள்ளலாம் என்றார். 12 மணி வெயில், கருப்பு சட்டையில் ஜிகு ஜிகு என்று நிற்கிறேன். கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். நான் வரிசையில் நிற்கும் போது ஒன்றை கவனிப்பதுண்டு. வரிசையின் குறுக்கே புகுந்து போக விரும்புபவர்கள், நேராக என்னைத் தான் தள்ளச் சொல்லி அந்தப் பக்கம் செல்வார்கள். அது எப்படி நேராக என்னிடம் வருகிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. நேற்றும் வழக்கம் போல் அதே நடந்தது.

எனக்கு எரிச்சலைத் தரும் ஒரு விஷயம், ரயில்வே ஸ்டேஷன், பாங்க் இந்த இடத்திற்கு பேனா இல்லாமல் வருவது. வரிசையில் இருந்த பலர், அதிகாரியிடமே பேனாவைக் கேட்டு கையெழுத்து இட்டார்கள். அவரும் வழக்கம் போல் எல்லாரிடமும் எரிந்து விழுந்து கொண்டிருந்தார். என் முன்னால் இருந்தவர் வரை அடையாள அட்டை காட்டி அதிகாரி வைத்திருந்த நோட்டில் கையெழுத்து இட்டுச் சென்றார். என் ராசியைப் பற்றி உங்களுக்கு ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். நான் போய் நின்று, பாத்தியா இது என் பேனா என்று வீராப்பாய் கையெழுத்து போட்டேன். சொல்லி வைத்தார் போல், அவர் பேனா எழுதாமல் போனது. பேனா கொடுத்துட்டு போங்க. என் பேனா எழுத மாட்டேங்குதுன்னார். என் நெத்தியில இளிச்சவாயன்னு ஏதாவது ஒட்டி இருக்கா சார்? என்று அவரிடம் கேட்கவா முடியும். தர்மசீலன் போல் கொடுத்து விட்டு நகர்ந்தேன். ஆனால் உண்மையில் சொல்கிறேன் 50 கிலோ பொன்னை வேண்டுமென்றாலும் பாதுகாப்பாய் வைத்திருக்கலாம் போலிருக்கிறது, இந்தப் பேனாக்களை வைத்துக் கொள்வது இருக்கிறதே...அப்படி பல பேரிடம் காப்பாற்றி கடைசியில் இவரிடமா என் பேனாவை பறி கொடுக்க வேண்டும் என்று அடுத்த வரிசையில் நின்று வெயிலின் குளுமையை உணர்ந்த படி சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

LKG C Section ல் ஃபோட்டோ எடுக்கிறார்கள். வரிசை LKG C Sectionஐ நோக்கி போய்க் கொண்டிருக்கிறது. மணி 1; வரிசை அப்படியே நிற்கிறது, மணி 2; வரிசை அப்படியே நிற்கிறது. கேட்டால் சாப்பிடப் போய் விட்டார்களாம். கிட்டத்தட்ட 100 பேர் ஒதுங்க இடம் இல்லாமல் பசியுடன் வெயிலில் நிற்கிறோம். யாரோ ஒரு புண்ணியவதி ஒரு பெரிய பையில் பாட்டிலில் தண்ணீர் நிரப்பி வேண்டுபவர்க்கு கொடுத்தார். வாழ்த்த வயதில்லாமல் வணங்கினேன். வழக்கம் போல் எல்லோரும் புலம்ப ஆரம்பித்து விட்டார்கள். சாப்பிட்டு விட்டு வரிசை கொஞ்சம் நகர்ந்த மாதிரி ஆசை காட்டியது. பிறகு அவ்வளவு தான். தாய்குலங்கள் மட்டும் ஃபோட்டோ எடுத்து வந்து கொண்டிருந்தார்கள். தந்தைக்குலங்கள் அப்படியே நிற்கிறோம். பக்கத்தில் நின்ற ஒரு தாய்குலம் ஏதோ எழுதுவதற்காக பெண்கள் பக்கம் பேனா கேட்டுவிட்டு கிடைக்காமல், ஆண்கள் பக்கம் திரும்பி ஒரு முறை எல்லோரையும் பார்த்து விட்டு, பேனா இருந்தா கொடுங்க என்றார் என்னிடம். நற நற;

அப்போது தான் என் பேனாவை கையாடியவர் அந்த வழியே வந்தார். சார் பேனா என்றேன். அவர் திரும்பி என்னைப் பார்த்து, ஏன்யா? ஒரு 5 ரூபா இருக்குமா? எழுதலைன்னு தானே வாங்கியிருக்கேன்..சொல்லிட்டு போயிட்டே இருக்கார். வரிசையில் நின்றவர்கள் என்னை பார்த்த பார்வை இருக்கே. அவர் போய்விட்டாரா என்று ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு நான், 5 ரூபா தானே, வாங்கியிருக்க வேண்டியது தானே என்றேன். நானும் ஹீரோ மாதிரி ஏதாவது பண்ணிடம்னு பாக்குறேன்; ஆனா காமெடியா பூடுதுப்பா! ஒரு வழியாய் அந்த வகுப்புக்குள் நுழைந்து அங்கு தொங்க விடப்பட்டிருகும் கரடியும், இரு நண்பர்களும் கதையை பல தடவை படித்தேன். ஒரு அம்மா தன் குழந்தைக்கு அந்தக் கதையை சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு காட்ல 2 அண்ணங்க நடந்து வந்தாங்களாம்; அப்போ பியர் வந்துடுத்தாம்; ஒரு அண்ணா மரத்துல ஏறிட்டாராம், இன்னொரு அண்ணாக்கு ஏறத் தெரியலையாம். கீழே செத்த மாதிரி படுத்துண்டானாம். கரடி கிட்ட வந்து மோந்து பாத்துட்டு போயிடுச்சாம். அந்த அண்ணா கீழே வந்து கரடி உன்கிட்ட என்னடா சொல்லிச்சுன்னு கேட்டானாம். இனிமே உன்னை மாதிரி selfish கூட சேராதேன்னு சொல்லிச்சுன்னானாம். என்று கதையை முடித்தார். நல்லவேளை, அந்த அண்ணாவை கரடி ஏன்மா சாப்பிடலை என்று குழந்தை கேட்கவில்லை.

நம் கதைக்கு வருவோம்; 100, 150 பேருக்கு ஃபோட்டோ புடிக்க அங்கு இருந்தது மூன்றே பேர். அவர்களும் அதிகாரிகள் கிடையாது. ஏதோ ஒரு க்ரவுண்டில் கிரிக்கெட் விளையாடும் செம்பட்டைத்தலையுடன் இருந்த 3 வாலிபர்களை கொண்டு வந்து இங்கு உட்கார வைத்து விட்டார்கள் போலிருக்கிறது. ஒருத்தர் ஃபோட்டொ புடிக்கிறார். ஒருத்தர் கம்ப்யுட்டரில் அதைப் பதிவு செய்கிறார். ஒருத்தர் வெட்டி ஒட்டி லாமினேட் செய்கிறார். கிட்டத்தட்ட 3 மணி நேரம் சாப்பிடாமல் கொள்ளாமல் நின்று நின்று எனக்கு, இல்லை அங்கு எல்லோருக்கும் பெண்டு கழன்டுட்டது. ஐய்யய்யோ மணி 3 ஆயிடுச்சே, இப்போ டீ குடிக்க போயிடுவாங்களே என்று சொன்னேன். வரிசையில் முன்னால் இருந்தவர் என்னை திரும்பிப் பார்த்து முறைத்த மாதிரி இருந்தது. பேசாமல் இருந்து விட்டேன். ஒரு வழியாய் என் முறை வந்தது. நான் சரியாய் உட்கார்வதற்குள் டிஜிட்டல் காமெராவினால் என்னை க்ளிக்கியிருந்தான். ஒரு சிட்டை கொடுத்தான், அதைக் காண்பித்து ஃபோட்டோ பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அர்த்தம். அதற்க தனியாய் ஒரு கும்பல். நான் சாப்பிட்டு மறுபடியும் சென்றேன். 4 மணி. பேனா கொடுத்தவரின் பின்னால் நின்றேன். அவர் என்னைப் பார்க்கவில்லை. ஃபோட்டோ வந்தது. வாங்கிப் பார்த்தேன். தேமேயென்று இருந்தது. (இருக்கிறது தானே வரும்னு எங்களுக்குத் தெரியும் நீங்க ஒன்னும் சொல்லாதீங்க!) பார்த்துக் கொண்டே நடந்தேன். என்னிடம் பேனா வாங்கியவர் கூட்டத்தினரிடம் சத்தம் போட்டுக் கொண்டிருந்தார். ஆமாய்யா? ஒருத்தரும் பேனா கொண்டு வந்துராதீங்க, எல்லாம் இங்கே வந்து என் கிட்ட கேளுங்க! நான் என் புது பேனாவை தடவிக் கொண்டே நடந்தேன்.

3 பதிவு போட்டும் ஒரு கமெண்டும் இல்லை; நான் என்ன கமலஹாசனா, வைரமுத்துவா? பாராட்டுகளைக் கேட்டுக் கேட்டு சலித்துப் போயிருக்க? தூக்கமே இல்லை. என்னடா இது, மகளீர் தினத்திற்காக ஸ்பெஷலாய் ஒரு ஓவியப் பதிவு, தம்பி படத்தைப் பற்றி என்னுடைய நடையில் ஒரு விமர்சனம், CTSல் கொடுத்த i-Pod பற்றி நகைச்சுவையாய் ஒரு பதிவு..பயன் என்ன? ஒரு கமெண்டும் இல்லை! வெறுத்தே போனேன். ஒருத்தரும் சீண்டாத அளவுக்கா நாம் எழுதுகிறோம் என்று எனக்குள் ஒரு சந்தேகம். பார்த்தால் நான் என்றோ என் ப்ளாகர் செட்டிங்கில் கை வைத்த பலன்.

ஒன்னு English தெரியனும், இல்லை கை காலை வச்சுட்டு சும்மா இருக்கனும். Moderate Commentsஆமே, சரிப்பா என்னுடைய பதிவுகளுக்கும் இதை செய்யுங்க என்று தெரியாத்தனமாய் சொல்லி விட்டேன். நீங்கள் இட்ட பின்னூட்டங்களை எல்லாம் ப்ளாகர் பிள்ளை அடக்கமாய் எடுத்து வைத்துக் கொண்டு நான் எப்போது வந்து அதை ஆமோதித்து பதியப் போகிறேன் என்று காத்துக் கொண்டிருக்கிறது. யாராவது பின்னூட்டம் போட்டால் உனக்கு ஒரு மெயில் பண்றோம்பா என்று ப்ளாகரில் அப்போதே சொன்னார்கள். கேட்டால் தானே, எல்லாம் எனக்குத் தெரியும் என்று அந்த பயன்பாட்டை பயன்படுத்தவில்லை. அவஸ்தைப் படு! நான் என்ன செய்யட்டும்னுது ப்ளாகர். இதோ, இன்னைக்கு புலம்பிட்டு இருக்கேன்.

முக்கியமான பதிவாய் இருந்தால் தான் நான் என் நண்பர்களுக்கு மெயில் அனுப்பி, பாத்திரம் தேய்ச்சது தேய்ச்ச வரைக்கும் இருக்கட்டும், உடனே இங்கே வா என்று புருஷன்காரன் அதட்ற மாதிரி, எந்த கோட் அடிச்சிட்டு இருந்தாலும் மொதல்ல என் ப்ளாகை படிங்கப்பா என்று அனுப்புவேன். இல்லையென்றால் அவர்களாகவே திறந்து படித்து பின்னூட்டம் அளித்து விட்டுப் போவார்கள். உங்களுக்குத் தான் தெரியுமே, கடந்த 3 பதிவா பின்னூட்டமே இல்லாம, போஷாக்கு குறைந்து இருந்த கொஞ்ச நஞ்ச தெம்பை வைத்துக் கொண்டு என் நண்பர்களுக்கு மெயில் பண்ணி பாத்திரத்தை போட்டதை போட்டபடி..ஐய்யோ, அடிச்சது அடிச்சபடி இருக்கட்டும் வந்து படிச்சுட்டு போங்கப்பா என்று மெயில் அனுப்பினேன்.

அப்போது தான் என் நண்பன் நான் ஏற்கனவே போட்ட பின்னூட்டம் எல்லாம் ஏன் வர்ல என்று கேட்டான். ஆஹா! அப்போ நம்ம ப்ளாகுக்கு கமெண்ட் வருதுரா, ஏதோ ஒரு தில்லு முல்லு நடக்குதோன்னு இன்னைக்கு வந்து Moderate Comments sectionல் பாக்குறேன். 33 கமெண்ட்ஸ் தேமேன்னு தூங்கிட்ருக்கு! இங்கே பார்றா!! பிறகு என்ன ஒரே குஷி தான். எல்லாத்தையும் சகட்டு மேனிக்கு செலக்ட் செய்து பதிந்ததில் எல்லாம் ஒழுங்காய் தெரிந்தது! அப்பாடா..வீட்டில் சாப்பிடக் கூப்பிடுகிறார்கள். வயிறு என்ன? மனசு வரைக்கும் நெறைஞ்சு கெடக்கே...

இதன் மூலம் நான் சகல லோகத்திற்கும் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால் இன்னைக்கு தான் உங்க கமெண்ட் எல்லாம் படிச்சேனுங்கோ!! கோ!! கோ!!! (எதிரொலிக்குதா?) என்னுடைய ஓவியத்தைப் பார்த்து இத்தனை பேர் கருத்து கூறியிருப்பீர்கள் என்று நான் நினைக்கவில்லை. நீங்கள் தெரிந்தோ, தெரியாமலோ ஒரு மிகப் பெரிய தவறுக்கு அடித்தளம் இட்டு வீட்டீர்கள். இனிமே அடிக்கடி இப்படி ஓவியம் எல்லாம் போட்டு உங்களுக்கு ஏதாவது புரிந்தால் சொல்லுங்கள் என்பேன், எல்லாம் சமத்தா சொல்லனும் தெரியுரதா? இதுல சிவமுருகன் அவர்களுக்கு நான் பதில் சொல்லலைன்னு கோவம் வேற! நிஜமாவே நீங்கள் தான் என் ஓவியத்தை புரிய வைத்தீர்கள்! மிக்க நன்றி! காயத்ரி சந்திரசேகரும் தங்லீஷில் என் ஓவியத்தை அலசியிருக்கிறார். உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக! அனுசுயா வேறு ஒரு இன்ப அதிர்ச்சியை எனக்கு அளித்து விட்டுப் போயிருக்கிறார். சென்ற வாரம் என் பதிவு தினமலரில் வந்ததாம். இது எனக்கே தெரியாத விஷயம். இது உண்மை தானா? அப்படி என்றால் தயவு செய்து யாராவது எனக்கு அந்த சுட்டியைத் தந்தால் தன்னியனாவேன்!

போன ஒரு மாதமாய் சுலேகா டாட் காமில் இருந்து எனக்கு மெயில் வந்து கொண்டே இருக்கிறது. என்னுடைய பதிவுகளை அவர்களுடைய வலையில் போட்டுக் கொள்வதாக. எனக்கு வலிக்குமா சொல்லுங்க. இருந்தாலும் ஒரு பிகு இல்லைன்னா எப்படி? சரி உங்க வலையில போட்றதால எனக்கு என்ன பயன்? என்று இப்போது தான் ஞான பீட விருது வாங்கின கையோடு வந்தது போல் மெயில் செய்தேன்..சர் தான் போடா, நீயும் ஆச்சு உன் ப்ளாகும் ஆச்சு என்று என்னை உதைக்காமல், பொறுப்பாய் காரணங்களைச் சொல்லி எனக்கும் ஒரு இடம் கொடுத்திருக்கிறார்கள். என்ன கொஞ்சம் பெயரை திருப்பி போட்டு விட்டார்கள். இங்கு espradeep.blogspot.com அங்கே pradeepes.sulekha.com!

என்னடா இவன் இன்னும் தலைப்புக்கு வரவே மாட்றானேன்னு நினைக்கிறீங்களா? இதோ வந்துட்டேன்...இன்னைக்கு காலையில ஒரு மெயில் வந்தது. நமக்கு கமெண்ட் வரனும்னா இது தான் சரியான வழி என்று நினைத்துக் கொண்டேன். இவரைப் போட்டா உலகம் பூரா வசூல் மழை, நம்ம வலைப்பதிவுக்கு பின்னூட்ட மழை வராதா என்ன? இன்னைக்கு இவரோட பவரை நம்ம டெஸ்ட் பண்ணிட வேண்டியது தான் என்ற முடிவுக்கு வந்தேன். உங்களுக்குத் தெரிந்திருக்கும் நான் யாரைப் பற்றி பேசுகிறேன் என்று! சாட்ஷாத் நம்ம தலைவர் சூப்பர் ஸ்டார் தான். வந்த மெயிலின் தலைப்பு SIVAJI - THE BOSS Stills..ஆஹா, போன தடவை இப்படி தான் ஒரு மெயில் வந்தது ஒரு ஜிப் ஃபைலில்..ஆர்வமாய் டவுன்லோட் செய்து பார்த்தால் நடிகர் திலகம் சிவாஜி அழுவது மாதிரி, சிரிப்பது மாதிரி, அழுது கொண்டே சிரிப்பது மாதிரி..எனக்கு எப்படி இருந்திருக்கும்? அதைப் பார்த்து நானும் அழுது கொண்டே சிரித்தேன்!!

பசங்களின் திருவிளையாடலுக்கு ஒரு அளவே இல்லையா? நான் மட்டும் என்ன சலைத்தவனா..உடனே அதை எல்லோருக்கும் அனுப்பினேன். உடனே ஒருவனிடம் இருந்து ரிப்ளை..மகனே சிவாஜி ஸ்டில்லா அனுப்புற? கைல கெடச்சே தீந்தே!! கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், சிவாஜியை பிடித்த எனக்கே அவ்வளவு எரிச்சல் வந்ததே..அவன் இந்தக் காலத்து யுவன்! எப்படி இருந்திருக்கும். அந்த "மகனே சிவாஜி ஸ்டில்லா அனுப்புற? கைல கெடச்சே தீந்தே!!" அப்படியே அவன் இதயத்தில் இருந்து வந்திருக்க வேண்டும். சரி அதை விடுங்கள். இன்றைய மெயிலை திறந்தேன். எடுத்தவுடன் எழுதி இருந்தது. Scroll down..சரி நானும் Scrollனேன். கொஞ்ச தூரம் போனதும் Scroll down slowly..ஏண்டா நான் இப்போ வேகமா scroll பண்ணா உங்களால என்னடா பண்ண முடியும்? சூப்பர் ஸ்டாரை விட இவர்களுடைய பில்டப் இருக்கிறதே..தாங்க முடியவில்லை! சரி நீ ஓவரா பில்டப் கொடுக்காதே படத்தைக் காட்டு என்று நீங்கள் சொல்வது எனக்குப் புரிகிறது. இனி படம்!

கார்ல இருந்து இறங்கி கண்ணாடியை ஸ்டைலா மாட்றாரு!
Image hosting by Photobucket

ஸ்லோ மோஷன்ல ஸ்டைலா நடந்து வர்றாரு!

அப்படியே மிட் ஷாட்ல முடி ஆட்றதை காட்றோம்!

வச்சுக்க நீ ன்னு பூ கொடுத்து ப்ரபோஸ் பண்றார்!
[இங்கே ஒன்னு கவனிச்சேளா, ஷ்ரேயா கொழந்தைக்கு சத்த வயசானாப்ல இல்ல?
தலைவருக்கு அக்கா மாறின்னா இருக்கா?]

தோ பார் கண்ணு..நம்ம பெர்சனாலிட்டி, ஸ்டைல் பாத்து நம்ம பின்னாடி நெறைய..நெறைய பப்ளீஸ் வந்தாங்க..ஆனா நம்மள யாரும் டச் பண்ண முடியலை! நமக்கு இந்த ரோஜா கொடுத்து தாஜா பண்றது எல்லாம் வராது கண்ணா..ஆனாலும் கொடுக்கிறேன். டக்குன்னு ஒன்னு சொல்றேன், நெஞ்சுல வச்சுக்க..இதுல பூவும் இருக்கு;முள்ளும் இருக்கு. ஒரு ஆம்பளைக்கு வேண்டியது வாழ்க்கை பூரா நிம்மதி. ஒரு பொம்பளைக்கு வேண்டியது ஒரு நல்ல புருஷனோட அன்பும் பாதுகாப்பும்! நீ இந்த பூ மாதிரி என் வாழ்க்கையில சந்தோஷத்தையும் நிம்மதியையும் தரனும். நான் இந்த முள்ளு மாதிரி உன் வாழ்நாள் பூரா பாதுகாப்பா இருப்பேன்! இது எப்படி இருக்கு?

நான் கடந்த ஒரு வருடமாய் என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பக் (BUG) போட்டும், இன்று Cognizant Technology Solutions (இனி சிடிஎஸ்) பில்லியன் டாலர் கம்பெனி ஆகியிருக்கிறது. இத்தைகய சந்தோஷ தருணத்தைக் கொண்டாட கிட்டத்தட்ட 18,000 ஊழியர்களுக்கு (மொத்தம் 24 ஆயிரத்து சொச்சம்) ஐபாட் ஒன்றை பரிசாக அளித்திருக்கிறது. சாஃப்ட்வேர் உலகில் இன்றைக்கு சூடான செய்தி இது தான் என்று நினைக்கிறேன். நான் பெங்களூரில் டெல்லில் டெபுடேஷனில் இருந்த போது, சிடிஎஸ்ஸில் இருந்து ஒருவர் டெல்லில் சேர்ந்தார். அவர் சிடிஎஸ்ஸில் ஒவ்வொரு வருடமும் பரிசு வழங்குவார்கள் என்பதை என்னிடம் சொன்ன அடுத்த நிமிடம் என்னுடைய ரெஸ்யுமை அவருக்கு அனுப்பி வைத்தேன். அப்போது சத்தியத்தில் ஒழுங்காய் சம்பள உயர்வே கிடைக்காத நிலை! (அடங்குடா..உனக்கு எல்லாம் வேலை கிடைத்ததே அதிகம் என்று உள்மனது சொல்கிறது!) அதன் விளைவு இன்று நான் சிடிஎஸ்ஸில்...

உங்களுக்குத் தெரியுமோ, இல்லையோ, சிடிஎஸ் ஒவ்வொரு வருடமும் தன்னுடைய ஊழியர்களுக்கு ஒரு பரிசு கொடுப்பதை வழக்கமாய் கொண்டிருக்கிறது. மூன்று பரிசுப் பொருட்களில் தங்களுக்குப் பிடித்ததை தேர்வு செய்து கொள்ளலாம். போனவருடம் செல்ஃபோன், மைக்ரோவேவ் ஓவன், விஐபி சூட்கேஸ், இந்த மூன்றில் ஒன்றை தேர்ந்தெடுக்கச் சொன்னதாக கேள்விப்பட்டேன். இந்த முறை ஜூன் 31ம் தேதிக்கு முன் சேர்ந்தவர்களுக்கு ஐபாடும், அதற்கு பிறகு சேர்ந்தவர்களுக்கு
சாம்சொனைட் ஸ்ட்ரோலியும் போன மார்ச்சில் இருந்தே நான் சிடிஎஸ்ஸின் வளர்ச்சியில் பங்கு கொண்டதால் (அப்படி அவர்கள் நினைப்பதால்) அடியேனுக்கும் ஐபாட்!

பில்லியன் டாலர் கொண்டாட்டங்கள் ஏகபோகமாய் நடந்தன. Thanks a Billion என்று screen server சில நாட்கள் எல்லோருடைய கனினியிலும் ஓடியது. அதே மாதிரி இன்னொரு முறை நன்றி தெரிவித்து இரு சிறு அட்டைகளில் ஒரு photo standம், calendarம் ஒவ்வொரு டெஸ்க்கிலும் வைத்தார்கள். இதைக் கொடுக்க வந்தவரிடம் இது தான் இந்த வருட கிஃப்டா என்று கலாய்த்தோம், நான் என் பங்குக்கு இந்த photo standல் நமிதா படம் ஒட்டி வச்சுக்கலாமா என்று கேட்டேன்.

பில்லியன் டாலர் கொண்டாட்டங்களில் ஒன்றாக ஐபாட் தரப்போகிறார்கள் என்று அலுவலகத்தில் ஒரு செய்தி பரவுவதற்கு முன் எனக்கு ஐபாட் என்றால் என்னவென்று சத்தியமாய் தெரியாது. சிலர் ஆப்பிள் வெப்சைட்டில் பார்த்து விட்டு எத்தனையோ டாலர் சொன்னார்கள். எனக்கு டாலரில் விலையை சொன்னால் எரிச்சலாய் வரும். யார் அதை 45 ஆல் பெறுக்கிக் கொண்டிருப்பது? கிட்டத்தட்ட 10,000 ல இருந்து 20,000 வரை வரும்..மெமரி பொறுத்து மாறும் என்றார்கள். சரி அது என்ன பண்ணும் என்று சிலரிடம் கேட்டதில், ஒருவன் ஐபாடில் MP3 songs கேட்கலாம், படம் பார்க்கலாம் அவ்வளவு தான் என்று முடித்துக் கொண்டான். இன்று செல்ஃபோனில் எல்லா கருமமும் வந்து விட்டது. அதுவும் காசு அதிகமா? சரி 75 ரூபாய்க்கு மூர் மார்க்கெட்டில் ஒரு ட்ரான்சிஸ்டர் வாங்கினால் போதும். 24 மணி நேரமும் வித விதமான பாட்டு கேக்கலாம். நாம் சேமித்து வைத்த பாட்டு 2 நாட்களில் போர் அடித்து விடும். ரேடியோ அப்படி இல்லை. அடுத்து என்ன பாடல் வருகிறது என்று தெரியாமல் இருப்பது தான் சுவாரஸ்யமே.. சரி படம் பார்க்கலாம்ல என்றான் ஒருவன். அந்த தம்மாத்துண்டு இடத்தில் நயந்தாரா இடுப்பு கூட சிம்ரன் இடுப்பு மாதிரி தான் தெரியும். நாம் ஒரு நாளைக்கு படம் பார்க்காமல் இருப்பதே ஆபிஸில் இருக்கும்போது தான்..மற்ற எல்லா நேரங்களிலும் வீட்டில் டி.வி. அழுகிறது. இதை தவிர்த்து டிவிடி ப்ளேயர்....எங்கேயாவது ஊருக்கு போகனும்னு கெளம்பினா அந்த பஸ்லயும் படம் போட்றான். எதுக்கு நான் ஐபாட்ல படம் பாக்கனும்? உங்களுக்கு அவ்வளவு நோகுதுன்னா உங்க ஐபாடையும் எனக்கே கொடுத்துடுங்கன்னான் அவன். அவனுக்காவது ஒன்று ஏற்கனவே கிடைத்தது. என் டீமில் சிலரைத் தவிர எல்லோரும் புதிதாய் சேர்ந்தவர்கள். ஐபாட் எனக்கு கிடைத்தும் நான் ஏதோ அதை வெறுப்பது போல் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து கிடைக்காதவர்கள் பொருமிக் கொண்டிருந்தார்கள். அதுவும் நியாயம் தானே? இதில், ஒருவாரத்தில் ஐபாடை கோட்டை விட்டேன் என்று ஒருவன் என்னிடம் அங்கலாய்த்தான். நான் சொல்ற மாதிரி செய் என்று அவனுக்கு நான் ஒரு யோசனை சொன்னேன். Internal discussion forum போ, அங்கே உன்னை மாதிரி ஒரு வாரத்துல ஐபாட் கோட்டை விட்டவங்க எல்லாரும் சேர்ந்து ஒரு discussion ஆரம்பிச்சிருக்காங்க. அவங்ககிட்ட போய் பேசினா, உனக்கு ஆறுதலா இருக்கும்னேன். அவன் என்னை என்ன செஞ்சுருப்பான்னு நினைக்கிறீங்க? 10 நாள் பட்டினியா இருக்குறவன்கிட்ட போய், டேய் வான்கோழி பிரியாணி சாப்ட்ருக்கியா? சூப்பரா இருக்கும்னு சொல்லிப் பாருங்க...அப்புறம் தெரியும் உங்களுக்கு! இப்படி அளவில்லாமல் பேசி, பலரின் சாபத்திற்கு ஆளானேன். ஒருவன் மகாமுனி போல் கண்களை மூடி தன் நெஞ்சில் முஷ்டியை மடக்கி, கண்களைத் திறந்து என்னைப் பார்த்து, கைகளை உதறி உன் ஐபாட் வேலை செய்யாமல் போகக் கடவது என்று சபித்தே விட்டான்.


[image courtesy: TechTree]

ஒரு வழியாய் ஐபாட் கைக்கு வந்தது. கருப்பு நிறத்தில், 30 GB மெமரியுடன், கைக்கு அடக்கமாய், பின்னால் COGNIZANT என்ற எழுத்துக்கள் பொறித்து,
ஆஹா..என்ன அழகு, என்ன அழகு. ஐபாடில் உள்ள தொழில் நுட்பம், அதன் வேலைத்திறனை விட அதை அவர்கள் பேக் செய்திருந்த நேர்த்தி..மிக அற்புதம்.அந்த சிறிய பெட்டிக்குள், அழகிய சின்ன வெள்ளை நிற head phone, அதை USB portல் கனக்டி சார்ஜ் செய்ய ஒரு கனக்டெர், iTUNES என்ற சாப்ஃட்வேர் சிடி, ஒரு சிறு user manual. எல்லாமே சிறிது, பில்லியன் டாலர் சந்தோஷத்தைக் கொண்டாட இதை பலருக்கு அருளிய காக்னிஸண்ட்டின் மனம் பெரிது! (என்னா டயலாக்! சான்ஸே இல்லை!)

ஐபாட் கொடுக்கவில்லை என்றால் நாங்கள் யாரும் நாளை ஸ்ட்ரைக் செய்யப்போவதில்லை. எல்லோரும் அவரவர் வேலையை பொறுப்பாய் பார்க்கத் தான் போகிறோம், இருந்தும் ஊழியர்களின் மகிழ்ச்சியை மனதில் கொண்டு இதைச் செய்த சிடிஎஸ்ஸிற்கு ஒரு ராயல் சல்யுட்! என்ன தான் ஐபாட் ஒன்றை கையில் வைத்துக் கொண்டிருந்தாலும், இது என்ன பெரிய கிஃப்ட் இன்ஃபோசிஸ் பில்லியன் டாலர் ஆனப்போ, எல்லாருக்கும் 1000 டாலர் கொடுத்தான் தெரியுமா? இது என்ன பிஸ்கோது, சாக்லேட்டு என்று சிலர் புலம்பத் தான் செய்கிறார்கள்! ஹும்...(உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு..)

சரி அந்த மாமுனியின் சாபம் என்னவாயிற்று என்று நீங்கள் கேட்பீர்கள்? சொல்கிறேன். அவர் சாபம் விட வேண்டியதே இல்லை. அதுவாகவே வேலை செய்யாமல் போய் விடும். நம் ராசி அப்படி. இதோ வீட்டில் ஒரு கனினி வாங்கினேன். அசெம்பிள் போனால், ப்ராப்ளம் வரலாம் சார்..ப்ராண்டட் போங்க, பிரட்சனையே இல்லை என்றான் கடைக்காரன். நானும் போனேன். 10 நாட்கள் ஒழுங்காய் வேலை செய்தது. ஒரு நாள் கீ போர்டில் a அடித்தால் w விழுந்தது. z அடித்தால் L விழுந்தது. ஐ, இது நல்ல விளையாட்டா இருக்கேன்னு நானும் என்னை மறந்து கொஞ்ச நேரம் விளையாடிட்டு இருந்தேன்னா பாத்துக்குங்க. ஒரு வழியாய் ஒருத்தன் சர்வீஸுக்கு வந்து புது கீபோர்ட் வைத்து விட்டுப் போனான். இன்று வரை a அடித்தால் a தான் விழுகிறது. நாளை என்ன நடக்குமோ!

பிறகு ஃப்ளாப்பி ட்ரைவ், வந்தவன் அதுவும் போச்சு சார், புதுசு மாத்தித் தந்துர்றோம் என்றான். இவ்வளவு பிரச்சனை இருக்கு, அப்புறம் என்ன பெரிய ப்ராண்டு என்றேன். அதற்கு அவன் 1000 பீஸ்ல ஒரு பீஸ் இப்படி ஆயிருது சார்..உங்களுக்குப் பரவாயில்லை, பக்கத்துத் தெருவில் ஒருத்தருக்கு hard disk போயிடுச்சுன்னான். இப்போ நான் வருத்தப்படனுமா, சந்தோஷப்படனுமன்னு எனக்குப் புரியலை..கஷ்டம்! பிறகு திடீரென்று ஒரு நாள் புதிதாய் வீட்டுக்கு வந்திருக்கும் நண்பர்களிடம் புதிதாய் வாங்கியிருக்கும் கம்ப்யுட்டரைக் காட்டினோம். UPS லிருந்து ஒரு மெல்லிய புகை..அதைத் தொடர்ந்து ஒரு தீய்ந்த வாசனை. அதை சரி செய்து விட்டு, internet connection வாங்கினேன். ஒரு சுபயோக சுபதினத்தில் அந்த மினுக் மினுக் லைட் எரியவே இல்லை. பவர் வரவேயில்லை. பார்த்தால் அடாப்டர் காலி. என் நெலமைய கொஞ்சம் யோசிச்சு பாருங்க? ஒரு மனுஷனுக்கு வாழ்க்கையில சோதனை வரலாம், சோதனையே வாழ்க்கையாயிட்டா? எப்படியோ ப்ராண்ட் என்னை பிராண்டி விட்டது தான் மிச்சம். அது எப்படியோ தெரியல, என்ன மாயமோ தெரியல..அந்த 1000த்தில் ஒரு பீஸ் எப்போதும் என்னையே வந்தடைகிறது.

எனக்கு ஐபாட் தரப்போகிறார்கள் என்று நண்பர்களிடம் ஃபோன் போட்டு பீத்தலாம் என்று நினைத்து விஷயத்தை சொன்னவுடன், ஒரு சுவாரஸ்யமும் இன்றி, சரி வாங்குன அடுத்த நாள் புகை தான் வரப்போகுது, நீ ஏன் அவ்வளவு பீத்துறேன்றான் ஒருத்தன்! சரி இன்னும் விஷயத்துக்கு வரலையேன்னு நீங்க சொல்றது எனக்குத் தெரியுது. என்னுடைய ஐபாடில் ஒரு 65 இளையராஜாவின் பாடல்களும், ரகுமானின் ஜனகன மண வீடியோவும், ஒரே ஒரு ஃபோட்டோவும் லோட் செய்திருக்கிறேன். இன்றைய நிலவரத்தின் படி இன்ன நிமிஷம் வரைக்கும் புகை எதுவும் வரவில்லை..(யாரு அங்கே.... இப்படி சப்புன்னு ஆயுடுத்தேன்றது? இதோ வர்றேன்!)

என்ன தான் ஹை ஃபையாக இருந்தாலும், அந்த சின்ன head phoneல் காதில் மாட்டிக் கொண்டு பாட்டு கேட்க வேண்டும் என்று நினைத்தாலே எனக்கு காதை வலிக்க ஆரம்பித்து விடுகிறது. இதோ என்னுடைய ஐபாட் full chargeல் ஓரமாய் உரங்கிக் கொண்டிருக்கிறது. ரேடியோ மிர்ச்சி பனியில்லாத மார்கழியா... பாடிக் கொண்டிருக்கிறது..ஐபாடாவது மண்ணாங்கட்டியாவது..ஒரு டிஜிட்டல் காமெரா கொடுத்துருந்தா...(உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு..)

சனிக்கிழமை மதியம் டிவி பார்த்துக் கொண்டிருந்தேன். தம்பி பட விமர்சனம். மாதவன் விழிகளை உருட்டி மிரட்டிக் கொண்டிருந்தார். மணி பார்த்தேன். 2 அடித்து 5 நிமிடம். சரி என்று கிளம்பி திருவான்மியூர் ஜெயந்தி தியேட்டருக்குக் கிளம்பினேன். ஆஹா! என்னே ஒரு தியேட்டர்..நவீனமும், பழமையும் ஒருங்கே அமைந்த தியேட்டர். கொட்டகையை இருட்டாக்குவதற்கு பழங்காலத்தில் கதவை சாத்தி விட்டு ஒரு நீல நிற திரையை மூடுவார்கள். அது இன்றும் அங்கு இருக்கிறது. டிடிஎஸ் சவுண்டுடன்...தம்பி படம்!

நல்ல விஷயங்களாய் எனக்குப் பட்டது, படத்தின் கருவும், மாதவனின் நடிப்பும், இளவரசுவும், ஆங்காங்கே சில நச் வசனங்களும்!

1. உபதேசம் பண்ணா எவன் கேக்குறான்; ஒதச்சா தான் கேக்குறான்
2. நம்ம நாட்ல சைலன்ஸ் கூட சத்தம் போட்டு தானே சொல்ல வேண்டி இருக்கு
3. வீரன்றவன் அடுத்தவன் உசுர எடுக்குறவன் இல்லை; அடுத்தவனுக்காக உசுரையும் கொடுக்க தயாரா இருக்குறவன்!
4. பஸ்ல பத்து பைசா டிக்கட் விலை ஏத்திட்டா வயிரு பத்திகிட்டு எறியுது; இவன் பஸ்ஸை எறிக்கிறான், வேடிக்கை..வேடிக்கை!

ஒரு நல்ல தரமான படத்தை விறுவிறுப்பாய் கொண்டு செல்லத் தெரியாமல் தொதப்பி இருக்கிறார்கள் என்றே எனக்குப் பட்டது. முன் சீட்டில் கால் வைக்கக் கூடாது என்று தெரிந்தும் என் கால்களால் முதல் பாதி படத்தை அப்படித் தள்ளினேன். அரைகுறையாய் அந்தரங்கத்தில் நிற்கும் பல காட்சிகள்! இடைவேளைக்குப் பிறகு அம்மா, அப்பா, தங்கை பாசம். தாங்கமுடியவில்லை. எந்த வீட்டில் அண்ணன்காரன் தங்கச்சியை தங்கச்சி என்று கூப்பிடுகிறான் என்று எனக்குத் தெரியவில்லை. ஹீரோ தம்பியிடமோ, தங்கையிடமோ ஏதாவது வம்பிழுத்து விட்டு ஓடுவது, குடும்பத்தில் எல்லாரும் ஸ்லோ மோஷனில் துரத்துவது மாதிரி இனிமே யாராவது படம் எடுங்க, துரத்தி துரத்தி அடிப்பேன்! மாதவன் பாஷையில் சொல்லனும்னா ஒதப்பேன்! ஒதப்பேன்! நிறுத்துற வரை ஒதப்பேன்....ஆமா! என்னை பொறுத்தவரை சமீபத்திய படங்களில் கில்லியில் தான் அம்மா, அப்பா, தங்கை பாசம் இயல்பாக இருந்தது!

நான் இந்தப் படத்தை பார்க்கப் போன காரணம், என்னம்மா, தேவி ஜக்கம்மா உலகம் தலைகீழா தொங்குதே ஏனம்மா? என்று மாதவன் கேட்கும் கேள்வியை நான் தினமும் பல முறை எனக்கு நானே கேட்டுக் கொள்கிறேன். சரி, அதற்கு இந்தப் படம் பார்த்தால் தீர்வு கிடைத்து விடுமா என்று அர்த்தமல்ல, சரி நமக்குள் இருக்கும் கேள்வியே இந்த இயக்குனருக்கும் இருக்கிறதே என்ற ஒரு நட்புணர்வு தான் அன்றி வேறொன்றுமில்லை.

அது படம் என்பதாலும், அவர் படத்தின் நாயகன் என்பதாலும் எங்கு பிரச்சனை நடந்தாலும், அங்கு சென்று ஒரு அடி..ஒரே அடி அடித்து எதிரிகளை விரட்டி விடுகிறார். ஆனால் இது வாழ்க்கை என்பதாலும், இதில் நான் என்பதாலும் என்னால் அப்படி எல்லாம் செய்து உலகைத் திருத்த முடியவில்லை! நானும் கண்ணாடி முன் நின்று என் கண்களை எல்லாம் உருட்டி இப்போ நான் என்ன செய்ய என்று மாதவன் மாதிரி கத்திக் கொண்டிருந்தேன்..வா, வந்து இத பொறுக்கு! என்று பக்கத்து வீட்டில் இருந்து ஒரு குரல்! இதெல்லாம் எனக்குத் தேவையா?

படம் ஓடுதோ இல்லையோ, அந்தப் படம் பாக்குற நேரத்துலயாவது மாதவன் சொல்றது நியாயம் தானே என்று நமக்கு ஒரு கணம் தோன்றினால் அதுவே இயக்குனருக்கு ஒரு பெறும் வெற்றி தான்..

என்னம்மா தேவி ஜக்கம்மா உலகம் தலைகீழா தொங்குதே ஏனம்மா?

மகளீர் தினத்தை முன்னிட்டு ஒரு ஓவியப் பதிவு! வெகு நாட்களாக ஒன்றும் புரியாத மாதிரி ஒரு ஓவியம் வரைய வேண்டும் என்று ஆசை. அதை ஃபோட்டோஷாப்பின் மூலமும், ஃப்ளாஷின் மூலமும் தீர்த்துக் கொண்டேன்.

இரண்டு முகங்களைத் தவிர சுற்றி கிறுக்கி வைத்து, அதில் ஃபோட்டோஷாப்பில் என் கை வண்ணத்தைக் காட்டிய போது, தாரளமாய் சாஃப்ட்வேர் கம்பெனிகளில் இதை எல்லாம் விற்கலாம் என்ற நம்பிக்கை வந்து விட்டது. இந்த ஓவியங்களில் எனக்குத் தெரியாத, புரியாத விஷயம் ஏதாவது உங்களுக்குத் தெரிந்தாலோ புரிந்தாலோ எனக்கும் சொல்லும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். ஓவியங்களைப் பார்த்தவுடன் தயவு செய்து கண்டிப்பாக வாவ் சொல்லுங்கள்! [யாருப்பா அது கொட்டாவி விட்றது?]

முன்குறிப்பு: பெரிதாக பார்க்க ஓவியங்களின் மேல் கிளிக்கவும்



இது ட்ரை பிரஷ் எஃபெக்ட்!

இது ஜெராக்ஸ் எஃபெக்ட்

இது டாட்டட் எஃபெக்ட்


இது என்ன எஃபெக்ட் என்று மறந்து விட்டேன் [இது பிரதீப் எஃபெக்ட்!]

பெண்ணினமே உங்களுக்கும், உங்களின் தியாகத்திற்கும் என் ஓவியங்களை சமர்ப்பிக்கிறேன்!

கிட்டத்தட்ட ஒரு வாரமாய் பேப்பரில் அந்த விளம்பரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அது கண்ணையும் கருத்தையும் உறுத்திக் கொண்டே இருந்தது. அந்த விளம்பரமாவது யாதெனில், இன்று மாலை 7:15 க்கு சத்யம் சினிமாவில் லைட்ஸ் ஆன் என்ற நிகழ்ச்சியில் பிரபல தெலுங்கு இயக்குநர் கே. விஸ்வநாத்தின் அவர்களின் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்னைக்கு குடி பெயர்ந்ததே இதற்காகத் தானே..போகாமல் இருந்தால் எப்படி? வழக்கத்திற்கு மாறாய் 6:30 மணிக்கே ஆபிஸில் இருந்து ஜூட் [6:30 மணிக்கு ஆபிஸில் இருந்து கிளம்புவது மனதுக்கு எவ்வளவு உறுத்தலாக இருக்கிறது தெரியுமா?] இந்த மாதிரி நேரத்தில் டைடல் பார்க்கில் இருந்து சத்யம் போவதற்குள் தாவு தீர்ந்து விடுகிறது. வழக்கத்திற்கு மாறாக வெளியே பைக்கிற்கு பதிலாக போலிஸ் ஜீப்பும், பல போலீஸ்காரர்களும் இருந்தார்கள். என் கையிலோ அந்த நிகழ்ச்சிக்கு பாஸ் இல்லை. வெளியே வண்டியை நிறுத்தி விட்டு பாஸ் இருந்தால் வாங்கிக் கொண்டு வண்டியை உள்ளே கொண்டு செல்லலாம் என்று நினைத்தேன். பாஸ் இல்லை என்று சொல்லிவிட்டால் 10 ரூபாய் தண்டம் அழவேண்டும். நிலமை தாறுமாறாக இருந்ததால் எதற்கு வம்பு என்று நேராக வண்டியை உள்ளே கொண்டு போய் விட்டேன், எதற்கு இத்தனை போலீஸ் என்ற கேள்வியுடன்..

கவுண்டரில், ஸ்டூடியோ 5 பாஸ் என்றேன் வழக்கம் போல்...·புல் சார் என்றார் வழக்கம் போல்...இந்த மாதிரி ஏற்கனவே பாஸ் எதுவும் இல்லாமல் நான் பல படங்களை பார்த்திருக்கிறேன், அதனால் தைரியமாக உள்ளே போய் விட்டேன். நல்ல வேளையாக யாரும் பாஸ¤க்காக என்னை வழி மறிக்கவில்லை. கவுண்டரில் ·புல் என்றார், ஆனால் உள்ளே தாரளமாய் இடம் இருந்தது. வராதவர்கள் ஏன் பாஸை மட்டும் அவ்வளவு பொறுப்புடன் வாங்கிச் செல்கிறார்களோ, தெரியவில்லை. பக்கத்தில் இருந்தவரிடம் கேட்டேன், ஒரு வாரத்திற்கு முன் பாஸ் வாங்கிக் கொண்டாராம். முதலில் சத்யம் தியேட்டருக்குப் பக்கத்தில் ஒரு வீடு பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்..

இந்தியன் காண்டம்பரரி சினிமா, ஆர்டிஸ்டிக், லிட்ரேச்சர் அப்படி இப்படி என்று ஒன்றும் புரியாத பாஷையில் பேசுகிற கூட்டம். சரி நெல்லுக்கு பாயும் நீர் என்னைப் போன்ற சில புல்லுக்கும் பாய்ந்து விடாதா என்ற ஒரு நப்பாசை. கே. விஸ்வநாத் அவர்களின் சாகர சங்கமம் (சலங்கை ஒலி), ஸ்வாதி முச்யம் (சிப்பிக்குள் முத்து) படங்களைத் தவிர வேறு எந்த படங்களையும் நான் பார்த்ததில்லை. சங்கராபரணம் சிறு வயதில் பார்த்ததாய் ஞாபகம். கே.வி அவர்களுடன் கலந்துரையாட சுஹாசினி மணிரத்னம் வந்திருந்தார்கள். பத்மா சுப்ரமண்யம், கமல்ஹாசன், கே. பாலசந்தர் போன்ற பெருந்தலைகள் கேட்ட கேள்விகளை முதலில் கே. வி அவர்களிடம் சுஹாசினி கேட்டார். பிறகு பார்வையாளர்களை கேட்கச் சொன்னார். ஒருவர் கே.வியை சத்யஜித்ரேயுடன் ஒப்பிட்டு கை தட்டல் பெற்றார். ஒருவர் தான் கேட்ட கேள்வியை விட தன் பெயரை சொல்வதில் மிகுந்த அக்கரை காட்டினார். ஒருவர் தெலுங்கில் நீங்கள் எங்க பாட்டி வீட்ல தான் சங்கராபரணம் ஷ¤ட்டிங் நடத்தினீங்க என்று பெருமிதப்பட்டார். [எனக்கு தெலுங்கு தெரியாது. அதைத் தான் அவர் சொன்னார் என்று நினைக்கிறேன்!] உங்கள் அடுத்த படத்தில் எனக்கு ஒரு சான்ஸ் கொடுங்க சார் என்று நான் கேட்க நினைத்தேன். அதிகப்பிரசங்கித்தனமாய் ஆகிவிடும் என்ற காரணத்தால் ஸ்டூடியோ 5 குளிரில் நடுங்கிக் கொண்டே கப்சிப் என்று இருந்து விட்டேன்.

எல்லோரும் செய்வதை நான் செய்வதில்லை. நான் அதிகம் படங்களைப் பார்ப்பதில்லை. அதிகம் டி.வி. பார்ப்பதில்லை. புத்தகம் அறவே படிப்பதில்லை. [பெரிய ஆச்சர்யக்குறி] என் படங்கள் எல்லாம் நான் கவனித்த வாழ்வியல் அனுபவங்கள். ஒரு படத்திற்கான கரு எனக்கு எப்படி கிடைக்கிறது என்று நிறைய பேர் கேட்கிறார்கள். ரயிலில் மூன்றாம் வகுப்பு மேல் பெர்த்தில் தூக்கம் வராமல் புரளும் போது ஒரு படத்திற்கான கரு கிடைத்தது, குளிக்கும் போது சில கிடைத்திருக்கிறது, தனியாய் உட்கார்ந்து சற்று அதிகமாக சாப்பிட்டு விட்ட இட்லியை பற்றி யோசிக்கும்போது கிடைத்து விடுகிறது..எனக்கு எப்படிக் கிடைக்கிறது என்று தெரியவில்லை; ஆனால் கிடைத்து விடுகிறது என்றார். இதே போல் தான் மகேந்திரன் தன்னுடைய நெஞ்சத்தைக் கிள்ளாதே என்ற படத்தின் கரு ஒரு காலை வேளையில் மும்பை கடற்கரையில் ஒரு பெண் ஓடுவதை பார்த்து கிடைத்ததாகச் சொன்னார். கே.வி அவர்கள் அவருடைய பல விதமான பழைய நினைவுகளை தூசி தட்டி எங்களுக்கு ஒரு அருசுவை விருந்து படைத்தார். நிறைவான மாலை எனக்கு..

வெளியே வந்தால் வராந்தாவில் ஏகப்பட்ட கார்கள், இரு பக்கமும் ஒரே கூட்டம். மெஷின் கன்களுடன் பாதுகாப்புப் படையினர். யார் என்று கூட்டத்தில் கேட்டதற்கு தமிழ்நாடு கவர்னர் படம் பார்க்க வந்திருப்பதாகத் தெரிந்தது. மவுண்ட் ரோடில் தொடங்கி கிண்டி ராஜ் பவன் வரை ஆங்காங்கே போலிஸார் நிற்கிறார்கள், இவரின் பாதுகாப்பிற்கு! இவர் படம் பார்ப்பதற்கு கிட்டத்தட்ட ஒரு 100 போலிஸார் தேவைப்படுகிறது. அப்படி என்ன படம் வேண்டிக் கிடக்கு இவருக்கு? சரி, அவரும் மனிதர் தானே பார்க்கட்டுமே என்றாலும், கமுக்கமா சத்யம் தியேட்டருக்கு போனோமா, படம் பாத்தோமா, வந்தோமான்னு இல்லாம இதெல்லாம் ஊரெல்லாம் கூட்டி வச்சுகிட்டு? இல்லை தெரியாம தான் கேட்கிறேன்..யாரு அப்பன் வீட்டு சொத்து? என் வரிப் பணம் எல்லாம் இவர் சத்யம் தியேட்டருக்கு படம் பார்க்க போறதுக்கும் வர்றதுக்கும் சரியா போயிடும் போல இருக்கே..

கொசுறு: பெங்களூரில் ஏர்போர்ட் ரோடில் அந்த அரைகுறை மேம்பாலம் காரணமாக அந்த சிக்னலை தாண்ட குறைந்த பட்சம் ஒரு அரை மணி நேரம் ஆகும். ஒரு நாள் அப்துல் கலாம் வருகிறார் என்று எல்லோரையும் ஓரமாக நிறுத்தி வைத்து விட்டார்கள். உங்களுக்கே புரிந்திருக்கும் அதற்குப் பிறகு நான் வீடு போய் சேர எவ்வளவு நேரம் ஆகி இருக்கும் என்று..இப்படி எல்லோரையும் நிறுத்தி வைத்து விட்டு அவர் ஜம்மென்று போய் விட்டால், அவருக்கு இந்த இடத்தில் பல வருடங்களாக கட்டப்பட்டு வரும் மேம்பாலம் இன்னும் முடியவில்லை என்ற உண்மை அவருக்கு எப்படித் தெரியும்? நீங்களே சொல்லுங்கள்?

அம்மாவின் குரல் லேசாய் என் காதில் விழுந்தது. இப்போது தான் விளையாட வந்தேன்..அதற்குள் என்ன அவசரமோ, போம்மா..விளையாடிட்டு வர்றேன் என்று ஓடுகிறேன். அம்மாவின் கைகள் என் கன்னத்தில் பட்டது..நான் ஓடிவிட்டேனே, அதற்குள் என்னை பிடித்து விட்டாளா? இப்போது கொஞ்சம் பக்கத்தில் அவள் குரல் கேட்டது..கன்னத்தில் தட்டுகிறாள், ராஜா டேய், அவள் குரல் உடைகிறது..என்னால் கண்களை திறக்க முடியவில்லை..எந்திரிப்பா..டேய், இங்கே பாருடா..ஐயோ, தாத்தாடா..

கஷ்டப்பட்டு கண்கள் திறந்தேன். ஒன்றும் புரியவில்லை. நான் விளையாடிக் கொண்டிருந்தேனே..எல்லாம் கனவா? மங்கலாக ஒருவர் அங்கே அப்பாவுடன் பேசிக் கொண்டே நிற்கிறார். யாரிவர்? கண்கள் தோய்த்து பார்த்தேன். மாமா..அவர் என்னை பார்த்து வழக்கமாய் சிரிக்கும் சிரிப்பு மட்டும் இல்லை. அம்மாவின் உடைந்த குரல். ராஜா, தாத்தா இறந்து போயிட்டாங்கப்பா..அழுகிறாள். அதே உடைந்த குரலில் பேசுகிறாள், எந்திரி..பாட்டி வீட்டுக்கு போகனும்..சீக்கிரம்..அழுகை..அம்மாவை தட்டி கேட்டேன், அப்போ ஸ்கூல்?

பாட்டி வீடு. ஆமா..தாத்தா செத்து போயிட்ட பாட்டி வீடு! செத்துப் போயிட்டா சாமி ஆயிடுவாங்கன்னு அம்மா சொல்லி இருக்கா? சாமி ஆனா ஏன் அழறாங்க? புரியலை..எனக்கு அழ வரலை. பாட்டி வீட்ல எல்லாரும் அழறாங்க..தாத்தாவை ஒரு சேர்ல உட்கார வச்சு மாலை எல்லாம் போட்ருந்தாங்க. அம்மா கூட போய் தாத்தாவை பக்கத்துல பாத்தேன். மூக்குல பஞ்சு. வாய் ஆன்னு இருந்தது..சாப்புடும் போது செத்துப் போயிட்டாரோ? கொஞ்சம் பயம்மா இருக்கு..

அப்புறம் நான் மாமா பசங்களோட விளையாட போயிட்டேன். வீடு பெரிய விடாச்சா..பின்னாடி நிறைய மண்ணு கொட்டி இருக்கும்..அங்கே போயி வீடு கட்டி விளையாடுவோம். எல்லா பேர பசங்களும் வாங்கன்னு கூப்பிட்டு கையில எண்ணய ஊத்தி தாத்தா வழுக்க மண்டையில தடவ சொன்னாங்க..எங்களுக்கு ஒரே சிரிப்பு..நான் தான் பெரிய பையனாம், சிரிக்க கூடாதாம். இந்த சின்ன மடையன் தான் சிரிப்பு காட்டிர்றான்..நான் என்ன செய்யட்டும்? கை எல்லாம் பிசு பிசுன்னு ஒரே எண்ண..

அப்புறம் தாத்தாவ வெளியே படுக்க வச்சு என்னமோ பூஜை பண்ணாங்க..எங்களை எல்லாம் சுத்தி வர சொன்னாங்க..பக்கத்து வீட்ல எல்லாரும் பாக்குறாங்க..கொஞ்சம் அமைதியா இருந்த அம்மாவும் பாட்டியும் மறுபடியும் கத்தி கத்தி அழறாங்க..எனக்கு இப்போ சிரிப்பு வர்ல..சின்ன மடையனும் சிரிக்கல..அவனுக்கு ஒன்னும் புரியாம முழிக்கிறான்..அப்புறம் தாத்தாவ தூக்கிட்டு போயிட்டாங்க ஒரு வொயிட் கலர் வேன்ல வச்சு..அப்பா, அம்மா, மாமா வேன்ல போயிட்டாங்க.

அத்த, சித்தி எங்க எல்லாரையும் குளிப்பாட்டி விட்டுட்டு வீடு பூரா தண்ணியாலே தொடச்சு விட்றாங்க..சின்ன மடையனை வம்புக்கிழுத்து நான் ஓட்றேன், அவனால முடியலை..வழுக்கி வழுக்கி விழுறான். பாவம்! அத்த திட்றாங்க, கத்துறாங்க..யாரு கேக்குறது?

சாய்ந்திரம் ஆச்சு..ஸ்கூலு முடிஞ்சுருக்கும்.அம்மா வந்துட்டா..தாத்தவ காணோம். நாளைக்கு ஸ்கூலுக்கு போனுமாம்மான்றேன்? அவ பதிலே சொல்லல..எனக்கு ஒரு தாத்தா தானாம்மா இருக்காங்கன்னேன்? பாட்டி என் கைய புடிச்சி ஓன்னு அழறா..சின்ன மடையன் அங்கேயிருந்து பாத்து சிரிக்கிறான்!


Rental Reciept, Medical Bill, Savings proof என்று எல்லா officeகளிலும் அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருக்கிறது. நான் பணிபுரியும் இடத்திலும் மார்ச் 15க்குள் எல்லாவற்றையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். நான் இதற்கு முன் வேலை பார்த்த நிறுவனங்களை ஒப்பிட்டால் இது கொஞ்சம் சர்வ ஜாக்கிரதையான நிறுவனம் ஆகத் தான் இருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது. அவர்கள் அத்தாட்சிகளைப் பெறும் முறையையும் ஒழுங்கையும் வைத்துத் தான் சொல்கிறேன். மக்கள் தங்களுக்கு வழங்கப்படும் HRA, Medical Allowanceக்காக ஒரு நயா பைசா வரி கட்டாமல் அனைத்தையும் அடைய நடத்தும் நாடகங்கள் இருக்கிறதே..7 பேர் சேர்ந்து ஒரு வீட்டில் 6,000 வாடகைக்கு தங்கிக் கொண்டு, rent reciept என்றவுடன் ஆளாளுக்கு 6,000 போட்டுக் கொள்வதும், இவனுக்கு அவன் கையெழுத்து இடுவதும், அவனுக்கு இவன் கையெழுத்து இடுவதும் சர்வ சாதாரணம். அப்படி ஒரு 12 மாதத்திற்கான குப்பையையும் அள்ளி ஆபிஸில் சமர்ப்பித்து விட்டால் போதும், கொஞ்சம் வரியை விலக்கி விடலாம். இந்த மாதிரி நாடகங்களில் நடித்த அனுபவம் எனக்கும் உண்டு. ஆனால் அது கமலஹாசனையோ, ஓம்பூரியையோ சிவகாசி, ஆதி போன்ற படங்களில் நடிக்க வைத்தால் அவர்களுக்கு எப்படிக் கசக்குமோ அதே கசப்புணர்ச்சியுடன் தான் நடித்தேன்..அதற்காக இன்றும் வருந்துகிறேன். இன்னும் வருந்துவேன். இதில் வருத்தப்பட என்ன இருக்கிறது என்று என்னை நீங்கள் வியப்பாய் பார்ப்பது எனக்குப் புரிகிறது...

என் அலுவலகத்தில் அவர்கள் இந்த அத்தாட்சிகளை சமர்ப்பிக்க சொன்ன விதம் இந்த மாதிரி சால்ஜாப்புகளை கொஞ்சம் குறைக்கும் போலிருக்கிறது. HRA விலும், Medical Bill லும் வரி விலக்கு வேண்டுபவர்கள் செய்ய வேண்டியவை:

20 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பரில் வாடகை ஒப்பந்தப் பத்திரம்.

2,500 க்கு வாடகை செலுத்தினால் செக்கில் செலுத்தி இருக்க வேண்டும். அந்த செக் நம்பரை வாடகை ரசீதில் குறிப்பிட வேண்டும்.

மருந்து ரசீது 500 ரூபாய்க்கு மேல் தாண்டினால் டாக்டரின் ப்ரிஸ்கிரிப்ஷன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

கண்ணாடி, லென்ஸ் போன்ற செலவுகள் 1,500 ரூபாயை தாண்டக்கூடாது.

ஹார்லிக்ஸ், பூஸ்ட் போன்ற வஸ்துக்கள் மருத்துவச் செலவில் காட்டக் கூடாது.

இந்த கெடுபிடிகளை அனுசரித்து, இந்த முறையாவது நேர்மையாய் நடந்து கொள்வோம் என்று அதற்கேற்ப நான் நடந்து கொண்டேன். உரிய வாடகைக்கு வீட்டுக்காரரிடம் சொல்லி பத்திரம் தயாரித்தேன்.எல்லோரும் இப்படித் தானே மாறி இருப்பார்கள் என்று நீங்கள் நினைத்தால் கொஞ்சம் மெதுவாக உங்கள் தலையில் கொட்டிக் கொள்ளுங்கள். கள்ளன் பெருசா, காப்பான் பெருசா என்று ஒரு பழமொழி இருக்கிறது..நீ இவ்வளவு கெடுபிடி பண்றியா, இதோ எனக்கு வேற ரூட் இருக்கு என்று சாதாரண மக்களே அரசாங்கத்தை ஏமாற்றும் போது, சாப்·ட்வேர் இன்சினியர்கள் எந்த விதத்தில் குறைச்சல்னேன்? உள்ள போன அத்தன பேரும் குத்தவாளி இல்லீங்க; வெளியே உள்ள அத்தன பேரும் புத்தன் காந்தி இல்லீங்க என்று தலைவர் பாட்டு சரியாகத் தான் இருக்கிறது..யாரும் எதற்கும் சலைத்தவர்கள் இல்லை. பெங்களூரிலாவது வாடகை விஷ ஜுரம் வந்தது மாதிரி ஏறி கிடக்கிறது. சென்னையில் அவ்வளவு இல்லை தான்..கொடுப்பது 4000 இருந்தும் ஆளாளுக்கு 6,000, 7000 என்று வாடகை போட்டாயிற்று [அதில் 7 பேர் வாழ்வது வேறு விஷயம்!]சரி! இனி போலி பத்திரம் தயாரிக்க வேண்டும். பத்திரத்தில் எழுதிக் கொண்டால் வீட்டுக்காரர் அதை வருமானமாய் காட்டி அதற்கு வேறு வரி கட்ட வேண்டும். அதற்கு அவர் சம்மதிப்பாரா? இதில் கொடுக்கும் பணத்தை செக்கில் வேறு தர வேண்டும், இதெல்லாம் ஆவுறதில்லை. சரி 7 பேர் இருக்கோம், பாங்கில் அக்கவுண்ட் வைத்திருக்கும் ஒருத்தனை புடி..மாப்ளே நீ தாண்டா ஹவுஸ் ஓனர். பத்திரத்துல கையெழுத்து போட்றா. நான் உனக்கு 7000 ரூபாய்க்கு ஒரு செக் தர்றேன். அவ்வளவு தான். மேட்டர் ஓவர்.

ஏமாற்றுவது என்பது எவ்வளவு சுலபமாகி விட்டது. தப்பு என்பது எந்த அளவுக்கு நம் உடம்பில் ஊறி விட்டது. நேர்மை என்பதை நாம் மறந்து போய் பல நூற்றாண்டுகள் ஆகி விட்டதோ? அரசியல்வாதிகளை குறை சொல்வதற்கு நமக்கு என்ன தகுதி இருக்கிறது? அவர்களுக்கும் நமக்கும் என்ன பெரிய வித்தியாசம்? ஒரு சில ஆயிரங்களை காப்பாற்றுவதற்காக சட்டப்படி குற்றம் என்று தெரிந்தும் எந்த தைரியத்தில் இப்படி செய்கிறோம்? சுய ஒழுக்கம், நேர்மை, ஒழுக்கம் என்பது நம்மிடம் எப்போது வரும்? அது இல்லாமல் நாட்டின் முன்னேற்றத்தை பற்றிய கனவு வெறும் பகல் கனவு தானே? இவ்வளவு தப்புகளை செய்து கொண்டு நம்மால் எப்படி நிம்மதியாய் தூங்க முடிகிறது? இயக்கம், கொள்கை என்று ஆயிரம் பேசுபவர்கள் கூட தங்களுக்கு என்று வரும்போது சந்தர்ப்பவாதிகளாய் மாறி விடும் கொடுமை இந்த நாட்டில் தான் நடக்கிறது. அவன் சரியாக இல்லை, நான் ஏன் இருக்க வேண்டும் என்பது எந்த விதத்தில் நியாயம்?

ஒரு ·பார்வேர்ட் மெயில் வந்தது. அப்துல் கலாமின் உருக்கமான பேச்சு, இந்தியாவின் முன்னேற்றத்தைப் பற்றிய அவர் கனவு என்று..அனுப்பியவனிடம் கேட்டேன்..நீ இந்த முறை சரியான rent reciept submit செய்தியா என்று? பதிலே இல்லை; வேலை அதிகம் போலும்.


வெரும் வெள்ளைத் தாளாகவே
கொடுத்திருப்பேன்

அதில் நிரம்பி இருக்கும் என் காதல்
உனக்கு புரிந்திருக்குமோ என்னமோ?

அந்த வெற்றிடங்களும்,
சொல்லப்படாத சொற்களும்
உணர்த்தாத காதலையா
இந்தக் கவிதைகள்
உணர்த்தி விடப் போகிறது!

உன்னை சொல்லிக் குற்றமில்லை;
சமூகத்தில், காதலுடன் ஒட்டிப் பிறந்த
குழந்தையாய் இருக்கிறது கவிதை

காதலை விட்டு கவிதையையும்
கவிதையை விட்டு காதலையும்
பிரித்தால், உயிருக்கு உத்தரவாதமில்லை!

காதலிப்பவனெல்லாம் கவிஞனா?
அல்லது கவிஞர்கள் தான் காதலர்களா?
எனக்குப் புரியவில்லை

எப்படியோ சமூகச் சம்பிரதாயத்தின் படி
தாளின் இந்தப் பக்கத்தில் என்
தூங்கா இரவின் பிதற்றலும்,

இன்னொரு பக்கத்தில் நானும்
என் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கிறோம்
உனக்காக..வெறுமையாய்!
*****பொங்கலை முன்னிட்டு அதிரடித் தள்ளுபடி..ஒரு பதிவுக்கு ஒரு பதிவு இலவசம்******

2 வாரத்திற்கு முன் என் நண்பன் ஒருவன் பெங்களூரிலிருந்து வந்திருந்தான். அவனுக்கு ஒரு விபரீத ஆசை. மார்கழி மாதக் கர்நாடக கச்சேரி ஒன்றை பார்க்க வேண்டுமாம். ஆஹா, எனக்கு ஈடு கொடுக்க ஒருவன் சிக்கிக் கொண்டான் என்று பூரித்துப் போய், அன்று காலையில் இருந்தே பேப்பரில் அலசியதில், சுதா ரகுநாதன் எங்கள் கைகளில் வசமாக சிக்கிக் கொண்டார்.

சிந்து பைரவியில் எல்லா பாடல்களும் பிசகாமல் பாடுவேன் என்ற ஒன்றைத் தவிர எனக்கும் கர்நாடக சங்கீதத்துக்கும் சம்மந்தமில்லை. என்னுடன் வந்த நண்பர்களும் அப்படியே..மாலை 4:30 மணிக்கு நாரத கான சபாவில் கச்சேரி. ஒருவழியாய் தேடிப் பிடித்து போய் சேர்ந்தோம். டிக்கட் வாங்க கையை நீட்டினால், சார் எல்லாம் ஃபுல், ஸ்டேஜ் டிக்கட் தான் இருக்கு என்றார் அவர். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. நாங்கள் எல்லாம் ஸ்டேஜில் உட்கார்ந்து கொண்டால் சுதா ரகுநாதன் எங்கு உட்காருவார்? அதுவும் அந்த டிக்கட் வெறும் ஐம்பது ரூபாய் தான்..முன்ன பின்னே இந்த மாதிரி விழாக்களுக்குப் போய் அனுபவமாவது இருக்க வேண்டும். சரி இருக்குறதை கொடுங்கோ என்று வாங்கிக் கொண்டோம். எனக்கு என்னமோ, எல்லோரும் எங்களையே பார்ப்பது போல் இருந்தது. நான் வேறு சும்மா இருக்காமல் என் சங்கீத அறிவை எல்லாம் கசக்கி பிழிந்து சாரீரம், ஆலாபனை , நாதக் கமலம், ஆரோகனம், அவரோகனம் என்று எடுத்து விட்டுக் கொண்டிருந்தேன்..அப்போது தானே அங்கு இருப்பவர்களுக்கு நாங்கள் சங்கீத கலா பூஷன்கள் என்று நினைத்துக் கொள்வார்கள் என்று நினைத்து.பயல்களுக்கு சிரிப்பு அடக்க முடியவில்லை, இதில் ஒருவன், நீ என்கிட்ட இன்னைக்கு காலையிலேயே சொல்லி இருந்தா, குளிச்சுட்டாவது வந்திருப்பேன் என்றான். கருமாந்திரம்.

50 ரூபாய் டிக்கட்டுக்கு நாரத கான சபா மேடையில் ஏறி உட்கார்ந்து விடுவேன் என்று கனவிலும் நான் நினைக்கவில்லை. அந்தப் பெரிய மேடையில் ஒரு சிறிய மேடை, அதில் சுதா ரகுநாதனும் அவருடைய பக்க வாத்தியங்களும்..அவரைச் சுற்றி நாங்கள் உட்கார்ந்து கொண்டோம். திரை விலகியவுடன் கை தட்டினார்கள். நான் ரசிகர்களை நோக்கி கை ஆட்டலாம் என்று சொன்னேன், நண்பர்கள் என்னை தடுத்து விட்டார்கள். ஒரே தாத்தா பாட்டி கூட்டம் தான்.

ஒரு வழியாய் கச்சேரி ஆரம்பித்தது..சத்தியமாய் சொல்கிறேன், எனக்கு யானை முகனே, அருள் புரிவாய் என்ற ஒரு நான்கு வார்த்தைகளைத் தவிர ஒன்றும் புரியவில்லை. நண்பர்கள், நீ பரவாயில்லை உனக்கு அவ்வளவு புரிந்ததே என்றார்கள். 50 ரூபாய்க்கு அவர் அத்தனை எச்சரிக்கை ஏன் செய்தார் என்று போக போகத் தான் தெரிந்தது. புரியாத சங்கீதம், நட்டநடுவில் சம்மனமிட்டு எவ்வளவு நேரம் உட்கார முடியும் சொல்லுங்கள்? 6 மணிக்கு வெளியே ஓடி வந்து விட்டோம். கச்சேரி 7:30 மணி வரை.

அங்கு வந்து கச்சேரியை ரசிப்பவர்கள் நான் நோட்டம் விட்டுக் கொண்டிருந்தேன். எத்தனை விதமான தலை ஆட்டல்கள்? ஒருவர், தலையை ரசித்து தலை ஆட்டுகிறாரா? அல்லது தூங்கி வழிகிறாரா என்று என்னால் கண்டு புடிக்க முடியவில்லை. ஒருவருடைய, தலையாட்டல்..ஓஹோ, அப்படியா, சரி மேட்டருக்கு வா என்பது போல் வெடுக் வெடுக்கென்று ஆடியது? சிலர் கண் மூடி தூங்கி விட்டார்கள். ஆனால் தான் தூங்கவில்லை என்பதை கையை ஆட்டி ஆட்டி காட்டிக் கொள்கிறார்கள். ஒன்று புரிந்தது, "சரிகமபதநி" (வார்த்தைகளே வராமல் இது மட்டும் பாடுவதற்கு என்ன சொல்வார்கள்? ஸ்வர சஞ்சாரமா?) என்பது உச்சத்தில் போய், மறுபடியும் கீழே வந்தவுடன் கண்டிப்பாக கை தட்ட வேண்டும்!

கர்நாடக சங்கீதம் முழுதும் தெய்வங்களை துதிப்பது தானா? வேறு விஷயங்களே இதில் இல்லையா? சமூகக் கருத்துக்களை ஏன் இதில் கொண்டு வரவில்லை? என்று என் நண்பனிடம் கேட்டேன். (வேறு கருத்துக்கள் இல்லாமல் இருக்காது என்றே நினைக்கிறேன்!) இசையின் மூலம் இறைவனை அடைவதற்கான ஒரு வழி தான் சங்கீதமும் என்றான் அவன். எத்தனை நதிகள் இருந்தாலும், அனைத்தும் கடலில் சென்று கலப்பதைப் போல எத்தனை விஷயம் இருந்தாலும், மனிதன் கடைசியில் இறைவனிடம் கலந்து விடுகிறான்.

சங்கீத ஞானமு..பக்தி விநா...சன்மார்க்கமு தரனே

போன வாரம் சென்னை காயிதே மில்லத் கல்லூரியில் நடக்கும் 29வது புத்தக (கண்காட்சியா அல்லது சந்தையா?) சந்தைக்குச் சென்றிருந்தேன். அதற்காக பெங்களூரில் இருந்து இரு நண்பர்களும் வந்திருந்தார்கள். இதற்காக சென்னை வந்திருக்கிறார்கள் என்று சொன்னால் பலருக்கு வியப்பாக இருக்கிறது. இதுக்காகவா பெங்களூர்ல இருந்து வர்றாங்க? என்று கேட்கிறார்கள். இதில் வியக்க என்ன இருக்கிறது? நல்ல புத்தகங்களை தேடிப் பிடித்து வாங்கிப் படிக்க வேண்டும் என்பது நல்ல விஷயம் தானே..ஒருவர் சும்மா வேண்டுமென்றாலும் வேறு ஊருக்கு போகலாம், ஆனால் புத்தகம் வாங்குவதை மட்டும் காரணம் கொண்டு அந்த ஊருக்குப் போகக்கூடாதாம்..

இத்தனை பதிப்பகங்கள் இருக்கின்றன என்று எனக்கு அன்று தான் தெரிந்தது. கடற்கரையில் நின்று கடலின் விஸ்தரீனத்தையும், பிரம்மாண்டத்தையும் பார்த்து, பிரமித்து சே! நான் எத்தனை சின்னவன் என்ற அதே எண்ணம் இங்கும் வந்தது! எத்தனை விதமான புத்தகங்கள்? எத்தனை விதமான சிந்தனைகள்? உலகில் நமக்குத் தெரியாமல் இன்னும் எத்தனை விஷயங்கள் இருக்கின்றன? பல நாட்கள் வீணடித்து விட்டோமோ என்ற கவலை ஒருபுறம் இருந்தாலும், இப்போதாவது தெளிந்தோமே என்ற சந்தோஷத்துடன் அந்த இடத்தில் சுற்றி வந்தேன்.

நாங்கள் பிற்பகலில் அங்கு சென்றதால் கூட்டம் அவ்வளவாக இல்லை. ஒவ்வொரு கடையும் ஏறி இறங்கி, புத்தம்புது புத்தகங்களின் வாசம் நுகர்ந்து, புத்தகத்தை அலசித் தான் வாங்குவேன் என்ற சாக்கில் பாதி புத்தகத்தை புரட்டி அங்கேயே படிப்பது சுவாரஸ்யம் தான்..யாரும் எதுவும் சொல்ல முடியாது. இளம் பெண்கள் தான் அதிகமாகப் படிக்கிறார்கள் என்று நினைக்கிறேன். லேண்ட் மார்க்கில் பார்த்திருக்கிறேன். ஒரு கருப்பு ·ப்ரேம் போட்ட சின்ன கண்ணாடி, தோளில் அலைபாயும் கூந்தல், உட்கார்ந்தால் முதுகு தெரியும் டி-சர்ட், உடம்போடு ஒட்டிய ஜீன்ஸ், ஒரு ஜோடி ஸ்டூல் (உபயம் : சின்ன கலைவாணர்) கையில் ஒரு கூடை, அலமாரியை பார்த்துக் கொண்டே, படக்கென்று ஒரு பெரிய ஆங்கில புத்தகத்தை (புரட்டிக் கூட பார்க்காமல்) அநாயாசமாய் அந்தக் கூடையில் போட்டுக் கொண்டு அடுத்த அலமாரியில் தேடிக் கொண்டிருப்பார்கள். கத்திரிக்கா கா கிலோ, தக்காளி அரை கிலோ ரேஞ்சுக்கு புத்தகம் வாங்கிக் கொண்டிருப்பார்கள். இவன் புத்தகம் வாங்குவதை தவிர மற்ற எல்லா விஷயத்தையும் செய்கிறான் என்று வாசகர்கள் என்னைப் பற்றி ஒரு தப்பான முடிவுக்கு வரக்கூடாது. இவர்களைப் போல நான் எப்போது இப்படி கூடையுடன் அலையப் போகிறேனோ என்ற ஏக்கம் தான். வேறு ஒன்றும் இல்லை (இல்லையா என்ன? சந்தேகம் தான்..)

ஆனால் அந்த லேண்ட் மார்க் பெண்களை இங்கு பார்க்க முடியவில்லை. ஒரு வேளை இந்த முறை நான் நிஜமாகவே புத்தகங்களைத் தான் பார்த்துக் கொண்டிருந்தேனோ என்னமோ? சரி நான் வாங்க நினைத்ததும் வாங்கியதும்!

1. ஜெயகாந்தன் சிறுகதை தொகுப்பு - 2வது பகுதி
(2வது பகுதி மட்டும் தர மாட்டோம் சார் என்று கடைக்காரர் மறுத்து விட்டார்! நான் என்ன நாவலின் 2வது பகுதி மட்டுமா கேட்டேன், சிறுகதை தானே?)
2. நாலு மூலை (கட்டுரை தொகுப்பு) - ரா.கி. ரங்கராஜன்
3. காகங்கள் (சிறுகதை தொகுப்பு) - சு. ராமசாமி
4. ஒரு புளியமரத்தின் கதை (நாவல்) - சு. ராமசாமி
5. ஜே. ஜே. சில குறிப்புகள் (நாவல்) - சு. ராமசாமி
6. சிறகுகள் முறியும் (சிறுகதை தொகுப்பு) - அம்பை

சு. ராமசாமிக்கு என் சார்பில் அஞ்சலி செலுத்தியாகிவிட்டது. என்னடா இவ்வளவு பேசினான், வெறும் ஐந்து புத்தகங்கள் தான் வாங்கி இருக்கிறான் என்று நினைக்க வேண்டாம். இன்று வரை, நாலு மூலை ஒரு 30 பக்கமும் (நூலகத்திலிருந்து வாங்கி இதை நான் ஏற்கனவே படித்து விட்டேன்) , ஒரு புளிய மரத்தின் கதை ஒரு 50 பக்கமும், காகங்களிலும், சிமு யிலும் தலா இரண்டு சிறுகதைகளையும் படித்திருக்கிறேன். இதை படித்து முடிப்பதற்குள் 30 வது புத்தக சந்தை வந்து விடும் என்ற ஒரு நம்பிக்கை தான். (என் நண்பன் வாங்கியது பெரிய லிஸ்ட்! வழக்கம் போல மறந்துட்டேன்.ஹிஹி..)

புத்தகக கண்காட்சியின் நிறை என்னவென்றால், இப்படி ஒன்று நடப்பதே மிகப் பெரிய நிறை தான். இப்படி எல்லாம் சந்தைகளை வைத்து மக்களின் படிக்கும் திறனை ஊக்குவித்து தொல்லைக் காட்சியில் இருந்து விடுதலை கிடைத்தால் அபாரம் தான். குறைகள் : எதிர்பார்த்தது போல் இல்லை என்று நண்பர்கள் நொந்து கொண்டார்கள். இதனால் தான் நான் எதிர்பார்ப்பதே இல்லை.கார்ட் வசதிகள் அன்று மிகவும் குறைவாக இருந்தது. பணம் பத்தாமல் மறுபடியும் சென்று பணம் எடுத்ததில் பாதி வேளை கழிந்தது. அந்த டிக்கட்டிலேயே பதிப்பகங்களை.யும் ஸ்டால் நம்பர்களையும் ஒரு அட்டவனையாய் போட்டுக் கொடுத்திருந்தால், எல்லோருக்கும் அது மிக உபயோகமாய் இருந்திருக்கும் என்பது என் அபிப்பிராயம். அப்புறம் வாங்கிக் கொள்ளலாம் என்று மறுபடியும் அதே பதிப்பகத்தை தேடுவதற்குள், வேறு பதிப்பகம் கண்ணில் பட்டு, அங்கு நுழைந்து 4 புத்தகம் வாங்க வேண்டி இருக்கிறது. ஒரு வேளை இதை நடத்துபவர் இதை எல்லாம் எதிர்பார்த்து தான் அப்படி செய்யாமல் விட்டாரோ என்னவோ?

அன்று நா. முத்துக்குமாரையும், சின்னக் கலைவாணரையும் தூரத்திலிருந்து பார்த்து, டேய் விவேக் என்னா கலர்டா? அட, பாருடா..அவரும் நடந்து தாண்டா போறாரு என்று இல்லாத அதிசயத்தைப் பார்த்து அசந்து போய் வீடு திரும்பினோம். ஹ¤ம்...புத்தகங்களைப் பார்க்கும் போது கற்றது கை அளவு கூட இல்லை என்று படுகிறது!!

எல்லோருக்கும் என் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்! இப்போ நீங்க எல்லாரும் எனக்கு இனிய மாட்டுப் பொங்கல் வாழ்த்து சொல்லுவீங்களே? எனக்கு தெரியுமே..

என்னப்பா, இன்னைக்கு ஹாஃப் டேயா என்று கேட்பவர்களை பொருட்படுத்தாது அன்று இரவு 10:30 மணிக்கெல்லாம் ஆபிஸிலிருந்து கிளம்பினேன். வழக்கம் போல் டைடல் பார்க் கார் பார்க்கிங்கில் வேளச்சேரி கேபிர்க்காக ஒரு அரை மணி நேரம் காத்திருந்தேன். என்னை போல் சிக்கிரம் வீட்டுக்குச் செல்லும் சில பெண்களும் இருந்தனர். எல்லோர் கையிலும் செல்ஃபோன். கிட்டத்தட்ட எல்லோரும் யாரையோ திட்டிக் கொண்டும், அர்த்தமில்லாமல் சிரித்துக் கொண்டும் செல்லில் பேசிக் கொண்டிருந்தனர். 12, 1 மணிக்கு காருக்காக காத்திருக்கும் போதும் பார்த்திருக்கிறேன், பெண்கள் செல்லில் பேசிக் கொண்டே தான் இருக்கிறார்கள். அன்றும் கார் வரும் வரை பேசிக் கொண்டிருந்தனர். நான் ஏறி உட்கார்ந்து கொண்டேன்.


காரில் இரவில் எஃபெம் ரேடியோ கேட்டுக் கொண்டே பயணிப்பது எத்தனை சுகமான அனுபவம் என்று உங்களில் பல பேருக்குத் தெரிந்திருக்கும், நானோ பாட்டு பைத்தியம், அன்றும் வழக்கம் போல் காரில் ரேடியோ இருக்கிறதா என்று பார்த்து திருப்தி பட்டுக் கொண்டேன். பின்னால் மூன்று பெண்கள், நான் டிரைவர் பக்கத்தில்..மூன்றில் ஒரு பெண் மட்டும் செல்லில் பேசிக் கொண்டிருந்தாள். டிரைவர் கொஞ்சம் புதுசு என்று நினைக்கிறேன், அவராய் ரேடியோவை போடுவார் என்று நினைத்தேன், என்னால் அதற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியவில்லை...பாட்டு போடுங்க என்றேன், போடலாம் சார், ஆனா மேடம் ஃபோன் பேசுறாங்களே பரவாயில்லையா என்றார்? ஓ,சரி சரி, அவங்க ஃபோன் பேசி முடியட்டும் என்றேன்..


வண்டி திருவான்மியூர், அடையார் என்று சுற்றி குறைந்த பட்சம் ஒரு பத்து கிலோமீட்டர் போயிருக்கும், அந்த பாதகத்தி என் வீடு வரும் வரை பேசிக் கொண்டே இருந்தாள். வெறுத்துப் போய் இறங்கிக் கொண்டேன். யாரோ ஒரு பையனிடம் பேசினாள். அவனும் அவளுடைய டீம் தானோ என்னமோ, அவர்களுடைய ப்ராஜக்ட் பற்றி டீப் டிஸ்கஷன்..அதற்கு நாங்கள் தான் கிடைத்தோமா?


எனக்கு இப்படி பல அனுபவங்கள்! பஸ்ஸில் பயணம் செய்யும்போதும் அந்த இரைச்சலிலும் முதல் ஸ்டாப்பில் ஏறி கடைசி ஸ்டாப் வரும்வரை பேசிக் கொண்டே வருகிறார்கள். அப்படி என்னதான் பேசுவார்களோ, தெரியவில்லை. எனக்கு யாராவது ஃபோன் செய்தால் "நல்ல இருக்கியா?" க்கப்புறம் என்ன பேசுவது என்றே தெரியவில்லை. அன்று மழை பெய்து ரோடெல்லாம் ஒரே தண்ணி; ஒரு பக்கம் மெயின் ரோடு, ஒரு பக்கம் பெரிய குட்டை..ஓரமாய் கொஞ்சம் மணல் இருந்தது. நான் இந்தப் பக்கம், ஒரு பெண் அந்தப் பக்கம், கையில் செல்லுடன். ரோட்டைப் பார்க்காமல் அதில் விளையாடிக் கொண்டே வருகிறாள்,அவள் இந்தப் பக்கம் போவாளா, அந்தப் பக்கம் போவாளா புரியவில்லை. அவளைக் கடக்க நான் பட்ட பாடு எனக்கு தான் தெரியும். ஒரு பெண் செல்லில் பேசிக் கொண்டே ரயில்வே பாலத்தை கடந்ததில் ரயிலில் அடிபட்டு இறந்தாள் என்று பேப்பரில் படித்தேன். பெண்களுக்கு செல்ஃபோன் என்பது கைக்கு அடக்கமான டெட்டி பியர் மாதிரி ஆகி விட்டது.


4 பெண்கள் நின்றால், அதில் மூன்று பேர் செல்லில் பேசிக் கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களால் எப்படி இப்படி நேரில் நின்று பேசுவது போல் ஃபோனில் பேச முடிகிறது என்று எனக்குப் புரியவில்லை; எனக்கு புரியாத இன்னொரு விஷயம் அவர்களால் எப்படி இவ்வளவு மெல்ல பேச முடிகிறது என்பது! நான் பேசும்போது என் தம்பி, நீ பேசுறதுக்கு ஃபோனே தேவையில்லை, அவனுக்கு அப்படியே கேட்ருக்கும், மெதுவா பேசுடா என்று திட்டுவான்.


பெண் நண்பிகளே, எத்தனையோ பேர் எத்தனையோ விதமான அவசர தகவலகளைச் சொல்ல முயற்சி செய்து கொண்டு இருப்பார்கள். ஒரு மிஸ்ட் கால் கொடுத்து அப்புறம், அப்புறம் என்று அந்தப் பையன் வழிவதை ரசிக்காதீர்கள். தொலைபேசி என்பது..வெயிட் வெயிட், வெயிட் எ நிமிட் ஃபார் ஃபைவ் மினிட்!


யாரு இது மிஸ்ட் கால் விட்றது..புதுசா இருக்கு...நம்பரை பாத்தா பொண்ணு நம்பர் மாதிரி ஃபேன்ஸியா இருக்குதே, எக்ஸ்க்கியுஸ் மீ..நான் ஒரு ஃபோன் பேசிட்டு வந்துர்றேன்.. ஹிஹி..

வணக்கம்பா...இன்னா? எல்லாரும் ஷோக்கா கீறீங்களா? ரொம்ப நாள் ஆச்சா ஒங்கள பாத்து, ஒரே ஃபீலிங்கா கீது..அல்லாரும் நல்லா இருந்தா சர்தான்!

என்ன ஒரு மூன்று மாதம் இருக்குமா நான் வலைபதித்து? இந்த இடைபட்ட காலத்தில் என் பதிவுகளைக் காணாமல் கிட்டத்தட்ட 2000, 3000 பேராவது [இங்கு பூஜ்ஜியத்திற்கு மதிப்பில்லை!] யாஹு அணைந்த கோட்டின் வழியே என்னையும் என் பதிவுகளைப் பற்றியும் நலன் விசாரித்திருந்தார்கள். அனைவருக்கும் என் நன்றி! றி! றி!!

சரி சென்னையே மழையால் நனைந்து வாடிக் கொண்டிருக்கும்போது, நாமும் சேர்ந்து ஏன் சொத சொதப்ப வேண்டும் என்று சும்மா இருந்தால், சென்னையில் மழைக் காலம் என்பது நிரந்தரம் ஆகிவிட்டதோ என்ற அளவுக்கு பெய்து கொண்டே இருக்கிறது..அது சரி, எஙலை [இங்கு எங்கள் என்பது என் தம்பியை குறிக்கும்] போல் நல்லவர்கள் இருந்தால் மழை வரத் தானே செய்யும்! சரி ஒரேடியாய் கொட்டுதே என்று நேற்று தான் அவனை அமெரிக்காவுக்கு அனுப்பி விட்டேன்..

சரி விஷயத்துக்கு வருகிறேன்..ஆபிஸில் ஒரே உழைப்பு, உழைப்பு என்று இருந்ததால், எங்கள் மீதும் கொஞ்சம் இரக்கப்பட்டு நேற்று வெளியே [அவுட்டிங்காமா, அட்டகாசம் தாங்கல] கூட்டிச் சென்றார்கள். ம்ம்..அதே தான். ஈசிஆர் ரோடு என்று போட்டாலும் போட்டார்கள், ரோடின் ஒரு பக்கம் எல்லாம் பீச் ரிசார்ட் தான்! களை கட்டுது..நாங்கள் சென்றது ஃபிஷர்மென் கோவ்!

மனநலம் சரி இல்லாதவர்களை எல்லாம் வருடத்திற்கு ஒரு முறை குற்றாலத்திற்கு கூட்டிச் செல்வது போல் எங்களையும் டிசர்ட் யுனிஃபார்ம் மாட்டி கூட்டிச் சென்றார்கள். ஒரே வித்தியாசம் அவர்கள் போவது வேனில், நாங்கள் போவது பர்வீன் ட்ராவல்ஸ் பஸ்ஸில், வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு அதிகம் வித்தியாசம் தெரியாது..நல்ல வேளை யாரும் சலபுலசலபுல கும்தலக்கா போடவில்லை! [இதை எல்லாம் எப்படி கண்டுபிடிக்கிறார்கள்!?]

வழக்கம் போல் அடுத்தவர்களை ஓட்டி சிரிப்பு வராமல் சிரித்துக் கொண்டிருந்தோம். டிஜிட்டல் காமெராவிற்கு சிரித்தோம்..இந்த மாதிரி இடத்திற்கு ஒரு டிஜே வந்திருக்க வேண்டுமே என்று நீங்கள் நினைப்பது சரி தான்..அந்த ட்ரூப்பில் ஒரு பெண் இருக்க வேண்டும் என்று நினைப்பீர்கள்? அட, என்ன இது? எல்லாம் நீங்க நினைச்சுட்டா நான் என்னத்தை தான் சொல்றது..சரி சரி, கொஞ்சம் ஒன்னும் நினைக்காம ஊ கொட்டி கேளுங்க..

இருந்தா..உடம்போடு ஒட்டிய ஜீன்ஸ், விவேக் ஒரு படத்தில் சொல்வது போல் நாம் உள்ளே போட்டுக் கொள்ளும் ஒரு முன்டா பனியன், அது வேறு ஒரு அங்குலத்துக்கு இடுப்பை காட்டியது..சின்ன முடியில் போனிடெய்ல், என்ன இங்கிலீஷ் பாட்டு போட்டலும் இடுப்பை வெட்டி வெட்டி பாடிக் கொண்டிருந்தாள். அவள் தான் நேற்று நிகழ்ச்சி நடத்த வந்த தொகுப்பாளினி! ஆபிஸில் இருந்தவர்களையே பார்த்து பார்த்து வாடிப் போயிருந்த எங்களுக்கு ஜொள்ளிக் கொள்ள ஒருத்தி கிடைத்தாள்!

முதல் பாதி பல விதமான விளையாட்டுகளை விளையாடி அவுட்டிங் வந்த கடமையில் பாதியை நிறைவேற்றினோம். பிறகு மதிய சாப்பாடில் ஓடுவன, பறப்பன, நீந்துவன என்று ஒரு கட்டு கட்டி விட்டு அப்பாடா என்று உட்கார்ந்தால், மேனேஜர்கள் கையில் மைக்! பிறகென்ன, நாங்கள் இந்த ஆண்டு, இதை செய்தோம், அதை செய்தோம் என்று எங்களை கை தட்டச் சொன்னார்கள்! ஹிஸ்ட்ரி ஜாக்ரஃபி பீரியட் மாதிரி தூங்கி வழிந்து கொண்டே கை தட்டினோம். பிறகு ராப்பகலாய் வேலை பார்த்தவர்களுக்கு அவார்ட் கொடுத்தார்கள். அதில் அடியேனும் ஒருவன். [இப்போ புரியுதா ஏன் வலை பதியலைன்னு?] நீ ரொம்ப நல்ல வேளை பாத்தப்பா, தெனம் ராத்திரி 2 மணிக்கு போற, இப்போ அவார்ட் எல்லாம் கொடுக்குறோம்ல? தெனம் 3 மணிக்கு தான் வீட்டுக்கு போவனும் என்ன? சரியா? என்று ஒரு பேப்பரில் கையெழுத்து போட்டு கொடுத்தார்கள். ஒரு வழியாய் எல்லாம் ஒய்ந்து முடிந்து மைக் எங்கள் நாயகியின் கையில் போனது, ஆட்டம் பாட்டம் ஆரம்பம்!

சரி அவார்ட் வாங்கின சந்தோஷத்தில் நானும் ஒரு குத்தாட்டம் போட்டேன். திடீரென்று மியுசிக்கை நிறுத்தி இந்தக் கூட்டத்தில் மிக அருமையாக ஒருவர் ஆடுகிறார், உங்க பேர் என்ன என்று என்னிடம் கேட்டது அந்த பட்சி! பிரதீப், என்று காத்து தான் வந்தது..மைக் இருந்ததால் கொஞ்சம் கேட்டது..உங்களுக்கு மட்டும் இந்தப் பரிசு என்று கையில் ஒரு டப்பாவை தினித்தாள். ஜோரா ஒரு தடவ கைய தட்டுங்க என்றாள்! இப்போ போட்ற மியுஸிக் உங்களுக்கு மட்டும் என்று ஏக், தோ, தீன் பாட்டை போட்டு என்னை ஆடச் சொன்னாள்! நான் தான் தரையிலையே இல்லையே, சுத்தி ஒன்னும் தெரியலை..இஷ்டத்துக்கு இன்னொரு ஆட்டம்!

வழக்கமாய் இந்த மாதிரி ஆட்டம் பாட்டம் என்றால் யாராவது என்னை இழுத்து விடாமல் நானாய் போய் ஆட மாட்டேன். நேற்று தான் யார் என்ன நினைத்தாலும் நான் ஆட வேண்டும் என்ற ஒரு முடிவுடன் இருந்தேன். அந்த ஆட்டத்திற்கு முன் என்னை அங்கு வந்திருந்தவர்களில் பாதி பேருக்கு கூட தெரியாது. அந்த ஒரு நிமிடத்தில் என்னை அவள் பிரபலமாக்கி விட்டாள். அடுத்த நிமிடம் யாரென்றே தெரியாத பலர் எனக்கு கை கொடுத்தனர். முதுகில் தட்டிக் கொடுத்தனர். எல்லோருக்கும் எப்படியோ, பிரபலமாய் இருப்பதில் எனக்கு எப்போதும் ஒரு மயக்கம் உண்டு! என்னால் அப்படி ஆக முடியும் என்று நம்புகிறேன்.

எனக்கு மிகவும் பிடித்த வரிகள்:

மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்!
ஒரு மாற்றுக் குறையாத மன்னவன் இவன் என்று போற்றிப் புகழ வேண்டும்!!

கலாம் அவர்கள் சொல்வது போல், கனவுகளை நம்புபவன் நான்! நீங்கள்?

நான் உடலால் முதுமையும், உள்ளத்தால் என்றும் இளமையும் பெற்ற ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் பலதரப்பட்ட பத்திரிக்கைகளில் நிருபராய் வேலை பார்த்தவர். அவர் ஒரு சுவாரஸ்யமான விஷயத்தை எனக்குச் சொன்னார். அதை நான் மிகவும் ரசித்தேன். அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

சாவி என்ற பத்திரிக்கையில் ஒருவர் பலமுறை தன் கதைகளை அனுப்பிக் கொண்டிருந்தார். எந்தக் கதையுமே பிரசூரிக்கப் படவில்லை! கோபமடைந்த அவர், சாவியின் பத்திரிக்கை ஆசிரியருக்கு "என்னைப் போன்றவர்கள் எவ்வளவு தான் நன்றாய் கதை எழுதினாலும், எதையும் நீங்கள் பிரசூரிப்பதில்லை; இதே, சுஜாதா அனுப்பியிருந்தால் அவருடைய லான்ட்ரி பில்லாய் இருந்தாலும் பிரசூரிப்பீர்கள் என்று கார சாரமாக ஒரு கடிதத்தை எழுதினார்.

இதை அந்த ஆசிரியர் எப்படி எதிர் கொண்டிருப்பார் என்று நினைக்கிறீர்கள்? இந்த மாதிரி தினமும் 100 கடிதம் வரும், இதையெல்லாம் அவர் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா என்று நினைத்தால், அது தவறு! அந்த ஆசிரியர் இந்தக் கடிதத்தை படித்து விட்டு, சுஜாதாவிடம் விஷயத்தை சொல்லி அவர் லான்ட்ரி பில்லை வாங்கி பிரசூரித்தார். சுஜாதாவின் லான்ட்ரி பில் கீழ் வருமாறு:

2 டெரிகாட் சட்டை
3 பாண்ட்
2 புடவை
4 கை வைத்த பனியன்
2 கைக்குட்டை, அதில் ஒன்று ரத்தம் படிந்தது!..

இது உண்மையிலேயே நடந்ததா என்றால் அது சுஜாதாவுக்கு கொஞ்சம் வெளிச்சம்; தேசிகனுக்கு தான் எல்லா வெளிச்சமும்! [சுஜாதாவே இவரிடம் தானே தன் கதை எங்கு, எப்போது வந்தது என்று கேட்கிறார்!]

எப்படியோ எழுத்தாளர்களின் திறமையை நான் ரசித்தேன்! நீங்கள்?


நான் முடி வெட்டி 9 மாதங்கள் ஆகிவிட்டது என்று நினைக்கிறேன். எனக்கு நேருமல்லாத சுருட்டையுமல்லாத முடி. அதாவது, சிறிதாக வெட்டி இருந்தால், நேராக இருக்கும். வளர்ந்து விட்டால் சுருண்டு கொள்ளும். எனக்கு நிறைய முடி வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆசை! உனக்கு ஏன் இந்த விபரீத ஆசை என்று நீங்கள் கேட்டால், கீழ் வரும் அனுபவங்கள் அதற்கு பதில் சொல்லும்!

சென்னையில் இருப்பவர்கள் வெயில் தாழாமல் இருக்கும் கொஞ்ச நஞ்ச முடியையும் வெட்டிக் கொண்டிருக்கும் சமயத்தில் [சில சினிமா நடிகர்களைத் தவிர - இவர்களுக்கு எப்படித் தான் அத்தனை சீக்கிரம் அவ்வளவு முடி வளர்கிறதோ, எனக்குப் புரியவில்லை!] என்னைப் போல சிலரும் சுற்றிக் கொண்டு தான் இருக்கிறார்கள். முன்னிருக்கும் முடியை சரியாக இழுத்து விட்டால், என் உதட்டை தொடுகிறது. அதனால் அம்பி மாதிரி மேல் வாரியாக இழுத்து வாரிக் கொண்டு தான் எங்கும் செல்கிறேன். ஏற்கனவே எனக்கு நெத்தி என் உள்ளத்தை போன்றது..அதான்..பரந்து விரிந்தது!

என் முன் வழுக்கை தெரிந்தாலும் பரவாயில்லை என்று நான் எப்போது தூக்கி சீவ ஆரம்பித்தேனோ, அன்று முதல் எனக்கு பல விதமான அனுபவங்கள்.

1. சுஜாதாவை சந்திக்கச் சென்ற அன்று சுரேஷ் என்னிடம், நீங்கள் நாடக நடிகரா? உங்கள் ஹேர்ஸ்டைலைப் பார்த்தால் அப்படித் தெரிகிறது என்றார்.

2. ஆஃபிஸில் லிப்ஃடில் சென்று கொண்டிருந்த என்னிடம், யாரென்றே தெரியாத ஒருவர், "ஸோ யு ஆர் ட்ரையிங் டு பி ரெமோ?" என்றார். தலையை கலைத்துக் கொண்டு சிரித்தேன். நல்ல வேளை அவர் இறங்கும் இடம் வந்து விட்டது.

3. தலையை கலைத்து ஒரு மாதிரி சிரித்தால், சிறு குழந்தைகள் பயந்து தன் அம்மாவைக் கட்டிக் கொள்கிறார்கள். இன்னும் சில நாட்களில் எங்கள் தெருவில் "நீ மட்டும் சாப்பிடலை, பிரதீப் கிட்ட புடிச்சு கொடுத்துடுவேன்" என்று தாய்மார்கள் சொன்னாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை!

4. ரோட்டில் அனைவரும் ஒரு தடவைக்கு இரு தடவை என்னைப் பார்க்கிறார்கள். நான் அடிக்கடி தலையை சிலிர்த்து அலட்டிக் கொள்ள வேண்டி இருக்கிறது. குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகள் என்னைக் கடக்கும் போது, ஐ! அந்நியன் போறாருடா என்கிறார்கள். தெருவில் சற்று நேரம் நின்றால், அங்கு விளையாடும் குழந்தைகள் "ஹேய் ரெமோ" என்கிறார்கள்!விக்ரமுக்கு என்னை விட வயது அதிகம். அவரின் பெயரைச் சொல்லி என்னை அழைப்பதால் எனக்கு ஒன்றும் சந்தோஷம் இல்லையென்றாலும் [இது ரொம்ப ஓவர் தான்!], அந்தக் குழந்தைகள் சந்தோஷப்படுகின்றன.

5. அன்று ஒரு கையில் டைரியுடன் ஒரு ப்ரவுசிங் சென்டரில் தேசிகன் வலைப்பதிவை மேய்ந்து கொண்டிருந்தேன். அந்த கஃபேக்கு சொந்தக்காரர் என்னை நெருங்கி, நீங்க எழுத்தாளரா என்று கேட்டார்? எனக்குப் பெருமை தாங்க முடியவில்லை! ஏன் கேட்கிறீர்கள் என்றேன்? இல்லை இந்த மாதிரி சைட் எல்லாம் பாக்குறீங்களே? என்றார். உங்க பேர் என்ன என்றார்? பிரதீப் என்றேன், புனைப்பேர் இல்லையா என்று கேட்டார். சிரிப்பை அடக்கிக் கொண்டேன். தொடர்ந்து, என் கவிதைகள் கனையாழியில் வந்திருக்கிறது என்று ஒரு போடு போட்டார்! உண்மையான எழுத்தாளர்!!

6. ஹோட்டலில் என் தம்பியுடன் சாப்பிடச் சென்றேன். ஆர்டர் வாங்க வந்தவர், நான் சொல்வதைக் கேட்காமல் என்னை இடைமறித்து, உங்களைப் பாத்தா ரயில் பயணங்கள்ல வர்ற சுதாகர் மாதிரி இருக்கு சார் என்றார். உடனே நான் "எப்படி" என்று என் தம்பியை எகத்தாளமாய் பார்த்தேன். அவன் என்னை புழு பூச்சியை விடவும் கேவலமாக பார்த்துக் கொண்டிருந்தான். நானும் சளைக்காமல் ரயில் பயணங்கள்ல சுதாகர் இல்லையே என்று என் சினிமா அறிவை வெளியிட்டுக் கொண்டேன். அவர் அசடு வழிந்து அந்தப் படத்தின் கதையை சொல்ல ஆரம்பித்து விட்டார். நான் நிறுத்தி அது கிழக்கே போகும் ரயில் என்றேன். அவர் அதோடு நிற்காமல், எரியும் நெருப்பிடம், அதாவது என் தம்பியிடம் நீங்க இவர் கூடையே இருக்கிறதால, உங்களுக்கு அப்படித் தெரிய வாய்ப்பில்லை என்று விளக்கம் வேறு. என் தம்பி இனிமே இவன் கூட வரக்கூடது என்று முடிவு கட்டி விட்டான் என்று எனக்குப் புரிந்து விட்டது!

7. என்னுடைய ப்ராஜக்ட் லீடர், என் தலையை பார்த்தே பேசுவார். ஹலோ என் கண்ணைப் பாத்து சொல்லுங்க என்று ரஜினி/விக்ரம் ரேஞ்சில் டயலாக் விடுவேன். அவருக்கும் சிரிப்பு வந்துவிடும்.

8. என் பழைய ஐடி கார்ட்டை பார்த்து நண்பர்கள், இவ்வளவு நல்லா இருந்துருக்கியேடா? என்றால், கொஞ்ச நாள் அசிங்கமா இருக்கலாம்னு பாக்குறேன் என்று பீத்திக் கொள்வேன் [இனிமேல் கேட்பார்கள்?]. இதன் மூலம் நான் கற்ற பாடம், நீங்கள் அழகு என்று யாராவது சொல்ல வேண்டுமா? இருப்பதை விட கேவலமாய் மாறி விடுங்கள்..தோற்றத்தில் மட்டும்!!

இப்போது சொல்லுங்கள்? என் வாழ்க்கையில் கொஞ்சம் சுவாரஸ்யம் கூடியிருக்கிறதா? இல்லையா? ஆண்களால் தான் இப்படி அடிக்கடி முகத்தை மாற்றி கொள்ள முடியும், [அதாவது, விதவிதமாய் அசிங்கப்படுத்திக் கொள்ள முடியும்!] இந்த தாடி தான் வளர மாட்டென் என்கிறது! இந்த வார குமுதத்தில் மதன், நான் ரசிகன் கட்டுரையில், தாடியைப் பற்றி எழுதியிருந்தார். பெரியாரும், தாகூரும் தாடி இல்லாமல் வந்தால் நம்மால் கண்டு பிடிக்க முடியுமா? என்ற கேள்வி என்னை மிகவும் கவர்ந்தது. அந்த மாதிரிக் கட்டுப்பாடுகள் எல்லாம் பெரிய தலைவர்களுக்குத் தான்..எனக்கு என்ன? அடுத்ததாக மொட்டை போட்டுக் கொள்ளலாமா என்று பார்க்கிறேன்? என்ன சொல்கிறீர்கள்?

வெகு நாட்களுக்குப் பிறகு வலைப்பதிகிறேன். சமீபத்தில் ஒரு துர் மரணம் என்னை மிகவும் பாதித்தது. பெங்களூரில் நான் இருந்த போது எனக்குப் பழக்கமான ஒரு நண்பன்; அவனுக்கு வயது ஒரு 22, 23 இருக்கலாம். 'டெல்' லில் நானும் அவனும் ஒன்றாக வேலை பார்த்து வந்தோம்.

சமீபத்தில் அவன் ஒரு விபத்தில் சிக்கிக் கொண்டதில் அவனும் அவனுக்கு மட்டுமே தெரிந்த பாஸ்வேர்ட்களும் இறந்தது. ஒரு மரணத்தை வேடிக்கையாகச் சொல்வதாக யாரும் எண்ண வேண்டாம், வேதனையாகத் தான் சொல்கிறேன். இப்படி அவனுக்கு மட்டுமே தெரிந்த எத்தனை ரகசியங்கள், சாதனைகள், சாகசங்கள், சோகங்கள், சந்தோஷத் தருணங்கள் அவனோடு அழிந்து போனதோ.. வாழ்க்கை தான் எத்தனை விசித்திரமானது? இப்படி 22, 23 வயதில் ஒரு சாலையின் பிரிவானத்தில் அடிபட்டு இறக்கவா அவன் அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்தான்? அவனுக்கும் எனக்கும் நிறைய வாக்குவாதங்கள் வருவதுண்டு. நல்ல நிலையில் இருக்கும் நீ நலிந்தவர்களுக்கு உதவ வேண்டும் என்று நான் சொல்வேன்..நான் என்னை பாத்துக்குறேன், சமுதாயம் அது தன்னை பாத்துக்கும் என்பான். சமுதாயம் எனக்கு என்ன செய்தது, நான் அதற்கு செய்வதற்கு என்று சண்டை போடுவான்...அவன் பேசுவதைக் கேட்டால், என்னையும் அவனுடைய கட்சியில் சேர்த்து விடுவானோ எனறு எனக்கு பயமாக இருக்கும். இதை பற்றி நாம் பிறகு விவாதிப்போம் என்று ஒதுங்கி விடுவேன்.

நான் எழுதிய பொதுவுடைமை பற்றிய பதிவுக்கு எதிராக அவனும் வலை பதித்தான். ஆம். அவன் உங்கள் எல்லோருக்கும் அறிமுகம் ஆனவன் தான். விஜயநகர் என்ற பதிவில் பொன்னியின் செல்வன் என்ற பெயரில் வலைப்பதித்து வந்தான். சமீபத்தில் அவனுடைய வலைப்பதிவின் டெம்ப்ளேட்டை மாற்றினான். நீங்களும் பாருங்கள்!ரத்தச் சிவப்பில், காலனை போன்ற ஒரு கரிய உருவம் கையில் ஏதோ ஒரு ஆயுதம் ஏந்தி நிற்கிறது. மரணம் தன்னை நோக்கி வருகிறது என்று அவன் மூளையின் ஓரத்தில் ஒரு நரம்பு சொல்லியதோ என்னமோ?

மரணம் மனிதனை விட வக்கிரம் படைத்தது என்று நினைக்கிறேன். காதலுக்கு கண்ணில்லாதது போல், மரணத்துக்கும் இல்லை போலும். கண்களை விடுங்கள்! இதயமே இல்லை அதற்கு. என்று நட்பின் பிரிவில் நான் புலம்பினாலும், எந்த லஞ்சமும் வாங்காமல், எந்த ஊழலும் செய்யாமல் கடமையை மட்டும் கண்ணும் கருத்துமாய் செய்யும் மரணம் என்னை வியக்கச் செய்கிறது. மரணத்தில் தான் சமத்துவம் இருக்கிறது. அது எல்லோரையும் ஒரு சேர கண்கானித்துக் கொண்டே இருக்கிறது. அதற்க்கு நிறைய கண்கள் இருக்க வேண்டும். என்று நினைக்கிறேன். காற்றுடன் சேர்ந்து அசையும் மரம் போல, மரணத்துடன் சேர்ந்து வாழ்வு அசைந்து கொண்டே இருக்கிறது.

எத்தனையோ பேர் மரணத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். எதிர்பார்க்காத ஒரு தருணத்தில் நம் முதுகுக்கு பின்னால் வந்து நம் கழுத்தைப் பிடித்து நம்மை கொண்டு செல்கிறது மரணம்!

மரணமே இல்லாத மரணத்தை யாரால் என்ன செய்ய முடியும்?

பின்குறிப்பு: தயவு செய்து வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் அணிந்து செல்லுங்கள். அவனுக்கு தலையில் அடிபட்டதைத் தவிர உடம்பில் ஒரு சிராய்ப்பும் ஏற்படவில்லை!