நான் முன்பு டெல்லியில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தேன்! பெங்களூர் வந்து 1 வருடம் ஆகிறது. டெல்லியில் இருந்தபோது வருடத்திற்கு ஒரு முறை மதுரைக்கு வந்து போவதுண்டு! 2 நாள் பயணம்! அதிலும் வெயில் காலத்தில் அந்த tamil nadu express ல் வருவது இருக்கே..அடடா! நினத்தாலே பற்றிக் கொண்டு வருகிறது!! ஆனால் அந்த வெயிலிலும் எனக்கு சில சமயங்கள் கவிதை வந்ததுண்டு!!!!! [அய்யய்யோ! இப்போ எங்களுக்கு பத்திட்டு வருதேன்னு யாருப்பா சொல்றது?]

என் உள்ளே இருக்கும் ப்ரதீப் [அதான்பா மனசாட்சி!], நம்ம blog மக்களுக்கு இதைக் காமிடான்னு ஒரே அடம்! சரி தொலையிரான்னு உங்களுக்கு காட்றேன்! கவிதை சுமாரா இருந்தா நீங்க என்கிட்ட கோச்சுக்காம அந்த பயகிட்ட தான் கோச்சுக்கனும்! பாராட்டனும்னா மட்டும் என்கிட்ட சொல்லுங்க ஹிஹி...

அத்துவானக் காட்டில்
எப்போதாவது வரும் ரயிலைப் பார்த்து
கை அசைக்கிறான் அந்தச் சிறுவன் - தன்
கைகளால் பிடித்திருந்த கால்சட்டை
நழுவுவது தெரியாமல்!


இன்னைக்கு தான் இதை எழுதினேன்! ரொம்ப நாளா ஓடிட்டு இருந்தது! இதை எழுதிட்டு ஒரு friend கிட்ட காட்டினேன்! அவங்க இந்தக் கவிதையை புரிஞ்சுகிட்ட விதமே வேற மாதிரி இருந்தது!

இதை எழுதும் போது நான் உணர்ந்தது!

1. வாழ்க்கை எத்தனை சின்ன விஷயங்கள் இப்படி ரசிக்கும்படியாய் இருக்கிறது!
2. அந்த சிறுவனுடைய உற்சாகம், குதூகலம் எல்லாம் நமக்கும் அல்லவா தொற்றிக் கொள்கிறது!

என் friend உணர்ந்தது அவர் எனக்கு சொன்னது

இப்படித் தான் இன்னைக்கு பலர் இருக்கிறதை விட்டுட்டு பறக்குறதுக்கு ஆசைப்பட்றாங்க!


இந்தக் கவிதைக்கு மேலும் உள்ளடங்கிய அர்த்தம் கண்டுபிடித்து எனக்கு அனுப்புபவர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து, இந்தக் கவிதையின் இன்னொரு உள்ளடங்கிய அர்த்தமே பரிசாக வழங்கப் படும்!!

என்னடா blog எழுதி இவ்வளவு நாள் ஆச்சே, ஏதாவது எழுதனுமே..என் blog யையே நம்பி இருக்கும் கோடானு கோடி ரசிகர்களை [சரி, சரி!!] ஏமாத்தக்கூடாதேன்னு..சரி 1 வரி கதை எழுதி ரொம்ப நாள் ஆச்சே, அதைப் பத்தி யோசிப்போம்னு நேத்து office ல இருந்து bike [மீரா ஜாஸ்மீன்] ல போகும்போது யோசிச்சேன்! [இப்போ எல்லாம் bike
ல போகும் போது ம் யோசிக்க ஆரம்பிச்சிட்டேன்!!!!]

So, asusual Airport road ல Leela Palace கிட்ட signal. Signal ல வேற என்ன பாக்க முடியும் சொல்லுங்க? அதான் இந்த bike கதை! நான் இன்னைக்கு blog எழுத உட்காரும்போது என்கிட்ட இருந்த ஒரே கதை இது தான்!! இதை மட்டும் எப்படி போட்றதுன்னு நினைச்சி சரி இன்னும் கொஞ்சம் கதைகளை யோசிப்போம்னு வந்தது தான் பாக்கி எல்லாம்!! [அதுவா வருதுப்பா!!]

1. (a). Signalல் என் பக்கத்தில் bikeல் நிற்பவனைப் பார்த்து என்னுள் பேசிக் கொள்கிறேன், இவன் bike due கட்டி முடிச்சிருப்பானோ?!!!!!!!

1. (b). Signalல் என் பக்கத்தில் bikeல் நிற்பவன் cell phone ல் சிரித்து சிரித்துப் பேசுகிறான். இவனுக்கு petrol விலை ஏறியது தெரியாதோ? என்று நான் நினைத்துக் கொள்கிறேன்!! [சமிபீத்திய petrol விலை உயர்வை [41.87/ltr] நம் கதையில் புகுத்தினா என்னான்னு புகுத்துனது]!!

2. நான் channel ஐ மாற்றியவுடன் என் நண்பன் எரிச்சலுடன் கத்துகிறான்! இந்த உலகில் எல்லா வளமும் இருந்தும் ஏன் அமைதி இல்லை என்று எனக்கு லேசாய் புரிகிறது!

வீட்டில் சேர்ந்து வாழும் 2 நண்பர்களிடம் ஒரு சாதரண TV க்காக அமைதி குறையும் போது உலகில் அமைதி ஏன் இல்லை என்கிற கேள்விக்கு இடமில்லை!! [ஐய்யோ! கசக்குதே!! அதாம்பா உண்மை கசக்குமாமே?]

3. நான் அவளையே பார்த்துக் கொண்டிருக்கிறேன்! அவள் என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறாள்! waiter எங்களையே பார்த்துக் கொண்டிருக்கிறார்!

ஒவ்வொருவரும் உண்மையாய் [??] காதலிப்பதால், யாருக்குக் கஷ்டம் என்பதே கரு!

4. அவள் எல்லாவற்றையும் களைத்து நிற்கிறாள்! எனக்கென்னவோ இன்னும் அவளுடைய கண்களே கவர்ச்சியாய் தெரிகின்றன!

கொஞ்சம் adultary ஆ தான் இருக்கு. but இதுல காமத்தை விட காதலைத் தான் நான் சொல்ல வர்றேன். அவள் பிறந்த மேனியா நின்னாலும் நம்ம ஆளு அவளோட கண்களின் கவர்ச்சியை ரசிக்கிறான்!! [யாருப்பா? யாரெல்லாம் அப்படி இருக்கீங்கோ, கை தூக்குங்க!!]

ஓடி விளையாடு பாப்பா - பாரதி

நான் மதுரையில் மஹால் [திருமலை நாயக்கர் மஹால்] 7 வது தெருவில் வசித்து வந்தேன்..சொந்த வீடு என்பதால் எனக்கும் மஹால் 7 க்கும் ஒரு அழுத்தமான உறவு இருக்கிறது. இன்றும் நான் மதுரை செல்லும்போதும் என்னை முதலில் நலம் விசாரிப்பது மஹால் 7 தான்..

அன்று போல் இன்று குழந்தைகள் வீதியில் விளையாடுவதில்லை, நாம் விளையாடிய பல விளையாட்டுக்கள் இன்று வழக்கழிந்து போய் விட்டதில் எனக்கு ஒரு மிகப் பெரிய வருத்தம். அப்படியே ஒரு சிலர் விளையாடினாலும் cricket தவிர வேறு ஒன்றுமில்லை..இந்த இடத்தில் நான் என்னுடைய பால்ய பருவத்தினை நினைத்துப் பார்க்கிறேன் [frame மங்கலாகிறது..flashbackpa..]

எத்தனை விளையாட்டுக்கள், ஒவ்வொரு விளையாட்டிற்கும் ஒரு season, ஒவ்வொரு season க்கும் ஒரு விளையாட்டு [டேய், ரெண்டும் ஒண்ணு தாண்டா!!]

கண்ணாமூச்சி
ஓடி புடிச்சி
கல்லா மண்ணா
கோலி குண்டு
பம்பரம்
சிகரட் அட்டை, சோடா மூடி
காவியம்,
எரி பந்து
பாட்டி பாட்டி ஒன்னுக்கு!
ராஜா ராணி

கண்ணாமூச்சி:

எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு. அதுல தெருவுல ராத்திரி current போனவுடனே விளையாடுவாங்களே!! அது! ice, ice னு தெருவெல்லாம் காட்டுக் கத்தல் தான். பாவம் அந்த பையன் நொந்து போவான்! நான் யாரும் நம்மளை அவ்வளவு சாதரணமா கண்டுபிடிச்சிரக் கூடாதுன்னு என் மூளையை கசக்கி, பிழிஞ்சி ஒரு இடத்துல ஒழிவேன். என் கூட பசங்க வருவாங்க..out ஆனவன் கண்ணை மூடிட்டு 1,2 எண்ணிட்டு இருப்பான். அவன் ready ஆன்னு கேப்பான். என் கூட வர்ற பசங்க ரெட்ட ரெடிம்பான்..எனக்கு
கோவமா வரும்.. ஏண்டா நீ கத்துனா நம்ம இங்கே தான் இருக்கோம்னு easy கண்டுபிடிச்சிருவான்லனு அவனைத் திட்டுவேன்! பல தடவை தனியா போய் ஒழிஞ்சி எவன் கைலயும் சிக்க மாட்டேன்! என்னடான்னு நானே வெறுத்துப் போய் வெளியே வந்தா, out ஆனவனை விட்டு எவனோ ஒருத்தன்..ப்ரதீப் 1, ப்ரதீப் 1 ன்னு கத்துவான்..நான் ஒன்னும் புரியாம என்னடா அவன் தானே out நீ என்னடா பண்றே ன்னு கேப்பேன்!! அதுக்கு அவன் coooooooool ஆ அது போன ஆட்டை நீ இவ்வளவு நேரம் எங்கே இருந்தேம்பான்! அப்புறம் என்ன பலி கடா மாதிரி போய் கண்ணைப் பொத்திட்டு 1,2 எண்ண வேண்டியது தான்..

கல்லா மண்ணா:

பல தடவை போய் நின்னதுக்கப்புறம் confusion வரும். இது கல்லு இல்லைடா இது cement, நீ out தான் என்பான் ஒருவன். ஒவ்வொரு தடவை ஒவ்வொரு rule..ரொம்ப கஷ்டம்பா!

கோலி குண்டு:

கடையில் போய் கோலி வாங்குவதே ஒரு சுவாரஸ்யமான் விஷயம் தான்! கோலி குண்டை வாங்கி கண்ணுக்குப் பக்கத்தில் வைத்துப் பார்க்க வேண்டும். ரஜினி தெரிந்தால் வாங்குவோம். [இன்றும் பார்க்கிறேன்..ரஜினியாவது, கமலாவது ஒரு மண்ணும் தெரியவில்லை!] தவறிப் போய் ஒருவனுடைய கோலி இன்னொருத்தனோட கோலியில பட்டுருச்சுன்னா போதும்..ஒரு ப்ரளயமே கிளம்பிடும்! டேய் ஏண்டா என் கோலி மேலே கொத்து வச்ச..ஒழுங்கா நீ ஒரு கொத்து வாங்கிக்கோ!! அவன் ஓட, இவன் தொரத்த..
கோலியில் இருண்டு விளையாட்டு உண்டு. 10,20 & பூந்தா. எனக்கு 10,20 தான் புடிக்கும். கோலி season வந்து விட்டால் போதும், தெருவெங்கும் குழி தான்..ஒரு குறிப்பிட்ட தூரத்திலிருந்து கோலியை எறிய வேண்டும், straight ஆ குழியில் விழுந்தா 90 ல் இருந்து ஆடலாம், இல்லையென்றால் 10,20லிருந்து ஆட வேண்டும். கடைசியில் ஜெயித்தவனுக்கு தோற்றவன் பூரி போட வேண்டும்..நம்ம போட போட அவன் நம்ம கோலி குண்டை பதம் பார்ப்பான். ரத்தக் கண்ணீர் வரும்..நான் வழக்கம் போல்
பூரி தின்றதை விட போட்டது தான் அதிகம்!! :((

பம்பரம்:

அபீட்டா!!! கடைக்குப் போய் நல்லா திருப்பி திருப்பி பார்த்து, ஒரு பம்பரம் வாங்கி, ஈ ஆணி மாட்டி அந்த சிவப்பு கயிரால் அப்படி சுண்டி விட்டா..ஆஹா!! ஹெலிகாப்டர் தான் [மட்டைக்கு இன்னொரு பெயர்!] அபீட்டாவில் இரண்டு வகை உண்டு. சுத்தி விட்டு அபீட்டா எடுப்பது, மட்டை அபீட்டா எடுப்பது. ஒவ்வொருத்தனும் அபீட்டா எடுத்துட்டு குதிப்பான் பாருங்க..awesome game!

சிகரட் அட்டை, சோடா மூடி:

இந்த season வந்துட்டா போதும், தெருவுல ஒருத்தனும் வீடு கட்ட முடியாது. எல்லா தட்டைக் கல்லும் பசங்க வீட்டில் தான் இருக்கும். [bero வுக்கு அடியில்] ஒவ்வொரு அட்டைக்கும் ஓவ்வொரு மார்க். berkely தான் அதிகம் என்று நினைக்கிறேன். அதே போல் தான் சோடா மூடியும்..torino மூடி என்றால் 2 அவ்வளவு தான் ஞாபகம் இருக்கிறது..

காவியம்:

இது பல பேருக்குத் தெரியுமோ, தெரியாதோ..நான் படித்த school ல் இது ரொம்ப பிரபலம், இதை எங்கள் தெருவுக்கு கொண்டு வந்ததில் எனக்கும் என் தம்பிக்கும் நிறைய பங்கு உண்டு! இதில் out ஆனவன் குனிந்து கொள்ள வேண்டும், மற்ற எல்லோரும் அவனைத் தாண்டுவோம். தாண்டும்போது சும்மா தாண்டக்கூடாது..கிழ் கண்டவற்றை சொல்லிக் கொண்டே தாண்ட வேண்டும்: [இதற்கெல்லாம் அர்த்தம் என்ன என்று மட்டும் என்னிடம் கேட்காதீர்கள்!]

1. காவியம்
2. மணிக்காவியம்
3. லாகு
4. லாகத்தின் கொக்கு [இதைச் சொல்லும்போது தலையில் கைகளால் கொம்பு போல் வைத்துக் கொள்ளவேண்டும்]
5. லட்சத்தின் மண்வாரி [தாண்டி விட்டு கால்களால் மண் வாரி இறைக்கணும்! இல்லைன்னா outபா!!]
6. சூடா, ஸ்ட்ராங்கா? [இதைச் சொல்வதற்கு முன் குனிந்து நிற்பவனிடம் இதைக் கேட்க வேண்டும், அவன் சூடு என்றால் தாவிக் கொண்டே அவன் பின்னால் எத்த வேண்டும், ஸ்ட்ராங்கென்றால் அவன் மீது உட்கார்ந்து தாவ வேண்டும்..அப்பா! என்ன rule பா]
மற்றபடி வேறு எந்த இடத்திலும் தாவுபவனுடைய கால்கள் குனிந்து இருப்பவன் மேல் படக்கூடாது. பட்டால் out! இது தான் basic rule! என்ன விளையாடுவோமா? ;)


எரிபந்து, cricket :

இந்த மாதிரி விளையாட்டுக்களில் சோலைக் கருது பெரும் பங்கு வகிக்கும்..யார்கிட்ட பந்து வாங்க பணம் இருக்கு சொல்லுங்க..பசங்க நல்லா சுள்ளு சுள்ளுன்னு அடிப்பாங்க..இப்போ நெனைச்சாலும் வலிக்குதுப்பா!!

ராஜா ராணி:

இது indore game பா! எல்லோரும் round ஆ உட்கார்ந்து சீட்டில் ராஜா 10,000, ராணி 5000, போலிஸ் 100, திருடன் 0, மந்திரி, சேனாதிபதி, சேவகன்..எத்தனை பேர் இருக்கிறார்களோ அதற்குத் தகுந்தார் போல் சீட்டு! சீட்டைக் குலுக்கிப் போட்டு ஆளுக்கு ஒன்றை எடுத்து தான் மட்டும் பார்த்துக் கொள்ள வேண்டும். யார் போலீசோ அவன் திருடனைக் கண்டுபிடிக்கனும். அப்பா, இதுக்கு .net programming எவ்வளவோ easy!! எவனைப் பாத்தாலும் திருட்டுப் பயலாத் தான் தெரிவாங்க!!

இப்படி எத்தனையோ விளையாட்டுக்கள்..எனக்குத் தெரிந்த சிலவற்றை இங்கே எழுதியிருக்கிறேன்! வீதி முழுதும் ice, ice, காவியம், சோடா மூடிகளின் சிதறல்கள், அபீட்டா போன்ற சத்தங்கள் இனி நமக்குக் கிடைக்குமா? அப்படி ஒரு season வரவே வராதா? நம் குழந்தைகள் 5 வயதிலேயே தன் கண்ணாடியை சரி செய்து கொண்டே cartoon network தான் பார்க்குமா? வீடியோ கேம்ஸ் என்ற பெயரில் A K 47ல் பல பேரை சுட்டு வீழ்த்தித் தான் வளருமா?

காலம் மாறுகிறதாம்..இப்படியா மாற வேண்டும்..வாழ்க்கை ஒரு வட்டம் ஆயிற்றே..அது சுழன்று மறுபடியும் இதே இடத்திற்கு வராமல் போய் விடுமா?

எனக்கு இன்று ஒரு உண்மை புரிகிறது..உண்மை பல சமயம் கசக்கத் தான் செய்கிறது!

நான் school க்கு போவதைப் பற்றி இந்தப் பதிவில் சொல்லி இருந்தேன். May 15ம் நாள் அரசாங்கத்திலிருந்து விடப்பட்ட விஞ்ஞான் ரயில் பெங்களூர் cantt station க்கு வந்தது. அது ஒரு வாரம் பெங்களூரில் நின்றதாய் ஞாபகம்! சரி இதை சாக்காய் வைத்துக் கொண்டு நம்முடைய வேலையைச் செய்வோமே, நம்முடைய கொள்கையைப் பரப்புவோமே என்று நாங்கள் ஒரு 10 பேர் கிளம்பிவிட்டோம். பத்திரிக்கைகளுக்கும் சொல்லி இருந்தோம். யாரும் அங்கே வரவில்லை. மறுநாள் எங்களுக்கு DECCAN HERALD ல் இருந்து phone வந்தது. அவர்கள் வந்து எங்களை பேட்டி எடுத்து சென்றார்கள். ஒரு வழியாய் நேற்றைய இதழில் போட்டிருந்தார்கள்.
நான் யார், நீ யார் என்று பாட்டு மட்டும் தான் பாடலை! என்ன புரியலையா? என்னோட ஞாபக மறதியை சொல்றேங்க!! நாளொரு மேனியாய் பொழுதொரு வண்ணமாய் வளந்துட்டே இருக்கு :( அப்படி என்ன ஆச்சுன்னு கேக்குறீங்களா? சொல்றேன், ஞாபக படுத்திக்க வேண்டாமா [அட ராமச்சந்திரா!!]

நேத்து காலையில ஆபிஸ் கிளம்புறேன்! நேத்து என்னோட collegue க்கு last day in the office. So, எங்க team ல இருந்து ஒரு shirt வாங்கி கொடுத்தோம். நான் தான் வாங்கினேன்! சரி அதை மறக்காம கொண்டு போயிரனும்னு மனசுல நெனைச்சுகிட்டேன்! [அப்போ ஞாபக மறதி என்னைப் பார்த்து சிரிச்சுட்டு இருந்துருக்கும்]..என்னோட மீரா ஜாஸ்மீனை [என்னோட bike க்கு நான் வச்ச பேரு..ஹிஹி]start செய்தேன்! கொஞ்ச தூரம் போனவுடன் தெய்வாதீனமாய் ஞாபகம் வந்து விட்டது..அய்யய்யோ bag!!

So, ஞாபக மறதியை பார்த்து நான் அசட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டே என் bag ஐ எடுத்துக் கொண்டேன். [அது அப்போதும் சிரித்துக் கொண்டிருந்தது!] வண்டி எடுத்து பாதி தூரம் வந்து விட்டேன். அய்யய்யோ!! BATCH ஐ காணோமே?!! BACK TO PAVILION!! தலையைக் குனிந்து கொண்டே போனேன்..ஞாபக மறதியுடன் சேர்ந்து நண்பர்களும் சிரித்தனர். [எல்லாம் தலை எழுத்து!] அப்பாடா இப்போ எல்லாம் இருக்கு..atlast ஆபிஸ் வந்து சேர்ந்தேன்!!

மாலை 6 அடி அடித்து ஒரு அறை விட்டிருந்தது! [மணி 6:30 ன்னு சொல்ல மாட்டீங்களோ?] programming கடையை மூட்டை கட்டி வீட்டுக்கு புறப்பட்டேன்! [அதே ஞாபக மறதி! அதே சிரிப்பு..என் காதில் விழனுமே?] 7 மணிக்குள் வீட்டுக்குள் இருந்தேன். வழக்கம் போல TV தான். என் நண்பன் வந்தான். "உனக்கு KPN நம்பர் தெரியுமா? நாளைக்கு மதுரைக்கு டிக்கட் கிடைக்குமான்னு கேக்கணும்." அதுக்கு sir, அட நான் தாங்க..உனக்கு indra nagar kpn number வேணுமா, madiwala kpn number வேணுமா என்றேன்? [ஞாபக மறதி தண்ணி குடிச்சுட்டு இருந்தது போல..சிரிச்சு புரையே ஏறிடுச்சு!!] இரு என் cell phone ல இருக்கு என்று எடுக்க போனேன்!

சட்டையில தேட்றேன்? இல்லை!..பேண்ட்ல தேட்றேன்? இல்லை! வீடு பூரா தேட்றேன்? இல்லை! இல்லை!! இல்லை!!! cell ஐ மறந்து office ல வச்சுட்டேன்னு நெனக்கிறேன் என்றேன்.. ஏன் டா? cell number மறந்துட்டேன்னு சொன்னா OK, செல்லயே ஒருத்தன் மறப்பானா? [அதான் மறந்துட்டேனே?] ஆபிஸ் ல தான் வச்சியா என்று ஒருத்தன் குண்டைத் தூக்கிப் போட்றான்..வேற எங்கே போனே? கடைசியில யார் கூட பேசின? கடைசியா எப்போ பாத்த? [இவ்வளவு ஞாபகம் இருந்தா ஏன்பா விட்டுட்டு
வர்றேன்!?]

சரி phone பண்ணி பார்த்தேன்..ring போயிட்டே இருக்கு! யாரும் எடுக்கலை! எனக்கோ வயித்தைக் கலக்குது. என் நண்பன் customer care க்கு போன் பண்ணி எந்த route ல இருக்குன்னு கேட்டுட்டு இருக்கான்! அந்த பொண்ணோ நீங்க first police ல complaint கொடுத்துட்டு FIR எடுத்துட்டு வாங்க நம்ம block பண்ணிடலாம்ன்றா! [ஞாபக மறதிக்கு வயித்து வலியே வந்துருக்கும் சிரிச்சி சிரிச்சி!] ஆபிஸ்ல தான் இருக்கனும்னு நெனச்சு என்னோட collegue க்கு phone போட்டேன்! [2 nd paraல வந்தாரே..அவர் தான்!] அவன் என் desk ல தான் இருந்தான்..இங்கே ஒன்னும் இல்லையேடா உன் desk லன்னான்! சரி நான் பாத்துக்கிறேன், bye என்றேன்..அதுக்கு sir, cool மச்சி என்றான்! [என்னடா cool? உன் cell ஐ நீ தொலச்சிருந்தா தெரியும்..அடிங்...] சரி அங்கே எங்கேயாவது கிடந்தா ring அடிச்சி அப்புறம் இவனுக்கு phone பண்ணி கேக்கலாம்னு என்னோட number க்கு ring அடிச்சேன்..அப்புறம் இவனுக்கு phone பண்றேன்..இல்லைடா மச்சி இங்கே ஒன்னும் கேக்கலை..ok டா..cool மச்சி [டேய் என்னை கொலைகாரன் ஆக்காதேடா!] அதுக்குள்ள என் brother entry! பசங்களக்கு ஒரே ஜாலி தான்..உன் தம்பி வந்துட்டாண்டி..போச்சுடி!! [அப்பா ராசா, எப்பிட்றா..எப்பிட்றா?] எல்லாம் சொன்னேன். office போய் பாக்க வேண்டியது தானேடா? போடா என்று விரட்டினான்!

சரி நம்ம மீரா ஜாஸ்மீன் மேல என் பாரத்தை போட்டு office கிளம்பினேன்...ஊர்ல எல்லாருமே airport road ல தான் இருக்குற மாதிரி அப்படி ஒரு traffic. என்னடா ring பண்ணியும் எடுக்கலை, ring அடிச்சிருந்தாலும் அவனுக்கு கேட்ருந்துருக்குமே? அப்படின்னா அங்கே இல்லையா? யார் எடுத்துருப்பா? நாளைக்கு whole office ஒரு mail அடிக்கனும்..என்னோட cell [2100] tube light தன்னோட தாடைக்கு கீழே வச்சுக்கிட்டு நான் ring அடிச்சாலும் எடுக்காம் பழைய காலத்து நம்பியார் மாதிரி சிரிப்பதாக கற்பனை செய்து கொண்டேன். சரி இனி அது கிடைக்கப் போறதுல்ல..6000/= போச்சே, சரி விடு ஒரு வருஷம் use பண்ணிட்டேல்லே..இப்போ அது வெறும் 4000/= கிடைக்குதுன்னு பேசிக்கிறாங்க..அதுக்கு போய்! அய்யோ அம்மா அப்பா திட்டுவாங்களே..சரி விடு இனிமே நீ சுதந்திரமா திரியலாம்..பேசாம landline வாங்கிட வேண்டியது தான்..ப்ரச்சனையே இல்லை! [green signal!]

office:

என் desk ல சுத்தி முத்தி பார்க்கிறேன்..போச்சு, போச்சு எனக்கு கிடைக்காது..அது இல்லை..தேடாதே! [தருமி range க்கு எனக்குள்ள புலம்பிட்டே..] என்னோட ட்ராவைத்தொறந்தேன்! 8 missed calls உடன் என் cell phone என்னைப் பார்த்து சிரித்தது! என் வயிற்றில் பால், தயிர், மோர், நெய், வெண்ணெய், தேன் எல்லாம் கலந்து வார்த்தது போல் இருந்தது!!! என் collegue தன் cell phone ல் பேசிக் கொண்டிருந்தான்..இங்கே தான் டா இருக்கு ன்னேன்..எனக்கு கேக்கலையேன்னான்! desk ல் ஒரு JUMBO HEADPHONE கிடந்தது! நான் ok டா cool மச்சி என்றேன்!! [ஹிஹி..அதான் cell கிடைச்சிருச்சுல்ல]

இதை எழுதிக் கொண்டிருக்கும் போது அய்யய்யோ இன்னைக்கு bag கொண்டு வரனும்னு நெனெச்சேனே, மறந்துட்டேனே என்று திரும்பினால்...

ஞாபக மறதி கால் மேல் கால் போட்டுக் கொண்டு தன்னுடைய trade mark சிரிப்பை உதிர்க்கிறது!!