அப்படி இப்படி என்று ஒரு மாதம் ஓடி விட்டது மழை நின்று! என் வலைப்பதிவு மழை இல்லா பயிர் போல் தரிசாய் கிடக்கிறது..

இதோ மறுபடியும்...

பெய்யெனப் பெய்யும் மழை!

ஒரு சிறுகதை பெய்வதாய் உத்தேசம் இன்று!

திருக்கடையூரிலிருந்து கடலூர் சென்று கொண்டிருந்தேன். ஞாயிற்றுக் கிழமை அதுவும் பண்டிகைக் காலம் ஆதலால் பேருந்தின் ஏகத்திற்குக்கூட்டம். அந்தக் கூட்டத்தில் நான் நம்ப முடியாத அளவுக்கு ஒரு நிகழ்ச்சி நடந்தது. ஆமாம். எனக்கு அடுத்த நிறுத்தத்தில் உட்கார இடம் கிடைத்தது. பேருந்தின் படியின் பக்கத்தில் இருக்கும் இடம். அப்பாடா..கூட்ட நெரிசலான ஒரு பேருந்தில் இடம் கிடைத்து விட்டால் தான் மனதுக்கு என்ன ஒரு நிம்மதி..ஏதொ 5 பெண்களை கல்யாணம் பண்ணிக் கொடுத்த திருப்தி..

என் பின்னால் படியில் சிலர் நின்று கொண்டு வந்தார்கள். நான் பேருந்தில் ஏறியதிலிருந்து ஒருவன் நடத்துனருடன் ஏதோ பேசிக் கொண்டிருந்தான். அவன் தர்க்கம் பண்ணிக் கொண்டிருந்தான் என்று சொல்லலாம். உட்கார இடம் கிடைக்காமல் நான் அசதியாய் இருந்ததால் அவன் பேச்சில் அதிக கவனம் செல்லவில்லை..இப்பொழுது இடம் கிடைத்தவுடன் தான் கவனித்தேன். இன்னும் அவன் நடத்துனரிடம் பேசிக் கொண்டிருந்தான். மன்னிக்கவும், தர்க்கம் பண்ணிக் கொண்டிருந்தான். லேசாய் திரும்பிப் பார்த்தேன். அவன் கண்களும், பற்களும் நல்ல கலர். இன்று தான் சவரக் கடைக்கு போய் வந்திருப்பான் போலும். தாடியை மலுங்க எடுத்து ஒரு அழகான கிராப் தலையுடன் இருந்தான். பச்சைக் கலர் கட்டம் போட்ட சட்டையும், வெள்ளை வேட்டியும் அணிந்திருந்தானா என்று சரியாக சொல்ல முடியவில்லை..அப்படித் தான் என்று வைத்துக் கொள்ளுங்கள்! குடியா முழுகி விடும்..
நடத்துனர் அவனின் பக்கத்தில் நின்றவரிடம் சீட்டு? என்றான்! அதற்கு அவர் முன்னால் எடுப்பார்கள் என்றான். அவர் போய் விட்டார். அதுவரை நடத்துனரிடம் புலம்பிக் கொண்டிருந்தவன், இப்போது இவன் பக்கம் திரும்பி, என்ன அக்கா கூட வந்துருக்கா? முன்னாடி நிக்குதாக்கும்? ஏன்டா நீ ஆமபளை தானே நீ சீட்டு எடுக்காம பொட்டச்சிய சீட்டு எடுக்கச் சொல்றே என்றான்! என் கண்கள் ஜன்னலின் வழி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க என் காதுகள் அவனைப் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தன. அந்தக் கேள்வியில் நான் தடுமாறித் தான் போனேன்..

அடப் பாவிகளா பெண்கள் சீட்டு எடுப்பது கூட இவர்களுக்கு எப்படி கெளரவக் குறைச்சல் ஆகிறது என்று வியந்தேன். அதற்கு அந்த நண்பன் பதில் சொல்லவில்லை..
என்னடா நீ சீட்டு எடு, ஆம்பளை தானே நீ, வேட்டி எல்லாம் கட்டிட்டு வந்துருக்கே..சீட்டு எடு, இல்லை பொட்டச்சியா நீ? பொடவை கட்டிக்க..என்று அவனை சீண்டிக் கொண்டே இருந்தான். என்னடா இந்த ஒரு சின்ன விஷயத்திற்காக இவன் ஏன் இந்த அளவுக்குப் பேசுகிறான்..இவன் குடித்து விட்டு வந்திருக்கிறானோ என்று எனக்கு அப்போது தான் லேசாய் உரைத்தது..
அவன் அந்த நண்பனை விடவில்லை..உன்னை பத்தி அந்த சிங்கப்பூர்காரன் போன் போட்டு சொல்றான். நீ தான் சாமி சாமின்னு அலயிறே, ஆயிரம் ஆயிரமா செலவலிக்கிறே..என்னைப் பாரு நான் சாமியே இல்லைன்றேன், ஆனா நானும் சாமி கும்பிடுவேன்..மன சாந்திக்காக! நீ எப்படி இருக்க? நான் எப்படி இருக்கேன்?

எனக்கு புரியவேயில்லை..சாமி இல்லைன்றான்..ஆனா கும்பிட்றான் என்ன தான் சொல்றான்!
அந்த நண்பர் அய்யோ நீ சும்ம இரப்பா என்னை குழப்பாதே என்றான் அப்பாவியாய்..அவனுக்கு அவன் எங்கே தன்னுடைய எல்லா விஷயத்தையும் போட்டு உடைத்து விடுவானோ என்று பயம். அவனா சும்ம இருப்பான்? மது அருந்தியவுடன் மனிதன் சிறு குழந்தையாகி விடுகிறான் போலும். அவனுக்கு கலாச்சாரம், நாகரீகம் எதுவுமே தெரிவதில்லை..ஒரு தியான மண்டபத்தில் எவ்வளவு தான் ஒரு தாய் தன் குழந்தையை அடக்க நினைத்தாலும் ம்மா..ம்மா..தா..யா..என்று குழந்தைகள் உளறுவதைப் போல் அந்த நண்பன் என்ன தான் கெஞ்சினாலும் அவன் அவனை திட்டிக் கொண்டே தான் இருந்தான்.
அடடா, ஸ்டாப் வரட்டும் நான் வேணா முன்னாடி போய் ஏறிக்கிறேன்..ஆளை விடு என்றான் அவன் நிம்மதி இழந்து..அவன் அதற்கும் வம்பிழுத்தான்..அய்யோ இப்பொ குதிக்கத் தான் போறேன் என்றான் அவன் பொறுமை இழந்து..குதி..குதிப்பா..நீ தான் வீரனாச்சே! சாமி உன்னைக் காப்பத்துவாரு, குதி என்றான் பதிலுக்கு..

இதற்கு நடுவில் இன்னொரு குடிகார நண்பன் அட, அவனை விடப்பா சத்த நேரம் என்றான்..நாகரீகம் தெரிந்த குடிகாரன் போலும். ஒரு வழியாய் ஒரு நிறுத்தம் வந்தது தான் தாமதம் அந்த ஆள் ஓடியே விட்டான். அவன் போய் விட்டான் என்று கூட தெரியாமல் இவர்கள் இருவரும் வேறு விஷயங்களைப் பற்றி கலந்தாலோசிக்கத் தொடங்கினர்! ஒரு இடம் யாரும் உட்காராமல் காலியாய் இருந்தது போலும், அதில் யாரோ வாந்தி எடுத்து வைத்திருந்ததனர் போலும். இவர்களுக்குத் தான் அதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லையே? அந்த நிரு நண்பர்களில் ஒருவன் அதில் உட்கார்ந்து கொண்டிருந்தான் போலும். நான் அவர்களைப் பின்னால் திரும்பி பார்க்கததால் தான் இந்தப் போலும்..

அந்த நிறுத்தத்தில் ஒரு 3 பெண்கள் ஏறினர். பெண்களைக் கண்டவுடன் அந்தக் குடிகார நண்பர் எழுந்து அவர்களுக்கு இடம் தந்தான். [நாகரீகம் தெரிந்த நண்பர்]. அதில் ஒரு பெண் உட்கார்ந்து கொண்டாள். வாந்தியின் நாற்றம் தாங்காமல் கைக்குட்டையால் தன் மூக்கை மூடி உட்கார்ந்திருந்தாள். எழுந்து இடம் கொடுத்தவன் அவள் பக்கத்தில் நின்றான். கொஞ்ச தூரம் சென்றதும் அந்தப் பெண்..இந்தாங்க, கொஞ்சம் தள்ளி நில்லுங்க..என்றாள்.
நாகரீகம் தெரிந்திருந்தாலும் அது சுர்ரென்றது அவனுக்கு..ஏம்மா பொம்பளையாச்சேன்னு நான் உட்கார்ந்திருந்தா சீட்டையும் கொடுத்தா இப்போ தள்ளி நில்லு தள்ளி நில்லுன்றியே..இதுக்கு மேல எங்கம்மா தள்ளி நிக்கிறது? என்றான். நம் முதல் குடிகார நண்பனும் அந்தச் சண்டையில் கலந்து கொண்டான். உங்களுக்காக தானே சீட்டு விட்டு கொடுத்து எழுந்து நின்னான்..திஸ் இஸ் ராங் என்றான்..மது அறுந்தி இருக்காவிட்டால் இவன் ஆங்கிலத்தில் பேசக் கூடியவனா? மது அருந்தியதும் இவர்களுக்கு எப்படி ஆங்கிலம் வருகிறது என்று நான் வியந்தேன். ஒரு வேளை ஆங்கில சரக்கு அடித்திருப்பானோ என்றும் நினைத்தேன்!

அதற்குள் அந்த இடம் சந்தக்கடை ஆகி இருந்தது..நடத்துனர் வந்து அவர்களின் தாயை திட்டியதும் அவர்கள் அமைதி ஆனார்கள். அந்தப் பெண்ணுக்கும் விளங்கிவிட்டது அவர்கள் எந்த நிலமையில் இருக்கிறார்கள் என்று. அவளும் அந்த இடத்தை தியாகம் செய்து விட்டு எழுந்து போய் விட்டாள்!

அடுத்த நிறுத்தத்தில் அந்த இரு அறிஞர்களும் இறங்கிக் கொண்டனர். பேருந்திலிருந்து அனைவரும் இறங்கிக் கொண்டது போல் ஒரு அமைதி..பேருந்து அந்த நிறுத்தத்திலிருந்து கிளம்பியதும் அவர்கள் இறங்கிக் கொண்டார்களா என்று ஒரு முறைக்கு இரு முறை ஊர்ஜிதம் செய்து கொண்டு என் பக்கத்தில் இருப்பவர் ஆரம்பித்தார்!
இவங்களை எல்லாம் ஏன் சார் பஸ்ல ஏத்துறாங்க..பப்ளிக் என்ன கஷ்டப் படுது..நம்ம நாடு இப்படி இருக்குறதுக்கு காரணமே இது தான் சார்..நானும் ஒரு புன்னகை பூத்து வைத்தேன்..அவர்க்கு நான் பிடி கொடுக்காம இருக்கவே மற்றவரிடம் திரும்பினார்.
இப்படி தான் சார் எங்க ஊர்ல என்று ஒரு கதையை ஆரம்பித்தார்..பேருந்தில் ஆஙாங்கே ஏகப்பட்ட சலசலப்பு..இத்தனை நேரம் எங்கே நாம் வாய் திறந்தால் அவனிடம் மாட்டிக் கொள்வோமோ என்ற பயத்தில் அடக்கி வைத்துக் கொண்டு வந்திருக்கிறார்கள் போலும்..இப்பொழுது எல்லோரும் தங்களால் முடிந்த வரை அவரவர் பக்கத்தில் இருப்பவரிடம் தெளிவாய் உளறிக் கொண்டிருந்தனர்!!

அந்தக் குடிகாரர்களுக்கும் இந்தக் குடிமக்களுக்கும் நிறைய வித்தியாசம் இல்லை என்று என் மனதிற்குப் பட்டது...

நேயர் விருப்பத்தை நிறைவேற்றுவது என் தலையாய பணியாய்க் கருதி..இதோ சிம்ரனுக்காக ஒரு Clerihew!

சின்ன இடையும்
சிக்கென்ற உடையும்
கடந்தகாலம்
சிம்ரனுக்கு..

எனக்குத் தெரியாதா? நான் சிம்ரனுக்கு எழுதினால் ஜோதிகாவுக்கு எழுது என்று அடுத்த comment போடுவீர்கள்..முந்தித் தருவது எந்தன் சிறப்பு!!

ஆதி முதல்
அந்தம் வரை
பாதி பயல் ஜொள்ளுவது
ஜோதிகா

யாருப்பா அது சினேகாவுக்கு எழுதச் சொல்றது? இனிமே நான் Clerihew பக்கம் தலை வச்சி படுத்தா என்னன்னு கேளுங்க!!



ஐய்யாயாயாயாயா!!

ஐம்பதாவது பதிவு!
[profile ல 45 காட்டினா நான் பொறுப்பில்லை..வேணும்னா எண்ணிப் பாத்துக்குங்கோ!! ஆமா!]

க்ளரிஹ¤ [Clerihew]

சென்ற வாரத்துக்கு முந்தின வார விகடனில் கற்றதும் பெற்றதும் தொடரில் க்ளரிஹ¤ [Clerihew!] என்ற ஒன்றை சுஜாதா அறிமுகப் படுத்தி இருந்தார்.

ஒரு க்ளரிஹ¤ என்பது எப்படி இருக்கு வேண்டுமென்றால்:

1. 4 வரி கவிதை
2. ஒரு பிரபலமானவரை கேலி செய்து
3. Rhyming ஆக இருக்க வேண்டியது ரொம்ப முக்கியம்!

அவ்வளவு தான்..எங்கே எழுதுங்கன்னுட்டார்! அவருக்கென்ன...

அவர் வாக்கு தான் நமக்கு வேத வாக்காச்சே..ஏற்கனவே 1 வரிக் கதைகள், Sudden Fiction கதைகள், ஹைக்கூ கவிதைகள் என்று பல அரிதாரங்களை பூசிக் கொண்டு சுற்றிய எனக்கு இது என்ன பெரிய விஷயமா...[ஆடாதடா..ஆடாதடா..மனிதா! ரொம்ப ஆடினென்னா அடங்கிடுவே மனிதா..!! ஆமா ஏன் இந்த பாட்டு இப்போ நினைவுக்கு வருதுன்னு புரியலையே!]

சரி ஒரு பிரபலமானவரை கேலி செய்ய வேண்டும், அவ்வளவு தானே..உடனே பத்மாசுரன் ஆகிவிட்டேன்..வரம் கொடுத்தவர் தலையிலேயே கையை வைத்தேன்!

விடிவு காலம் பிறக்காத
அரசியலுக்காக
ஓட்டு இயந்திரம் கண்டுபிடித்தார்
சுஜாதா!

முடிஞ்சது க்ளரிஹ¤! சரி இதை நம்ம எங்கே விகடனுக்கெல்லாம் அனுப்புறது என்று நினைத்து தேசிகனாரை கனக்டினேன்.. [phone sir!] அவர்கிட்ட இதைப் பத்தி சொல்லி,
சார், நீங்க எப்படியும் சென்னை போய் சாரைப் பாப்பீங்கள்ல..இது சரியான க்ளரிஹ¤ ஆ என்று கேட்டு வாருங்கள் என்றேன்! அவரும் Big மனது பண்ணி சாரிடம் கேட்டு வந்தார். [சுஜாதாகிட்ட என் writing போயிருச்சாக்கும்! நான் லேசுபட்டவன் இல்லங்கானும்!!] சுஜாதா சார், "பரவாயில்லையே இந்த பிரதீப் பையன் வரம் கொடுத்தவன் தலையிலேயே கைய வச்சுட்டானேன்னு" சொல்லி, "என் நண்பர் தேசிகனின் நண்பர் பிரதீப் எழுதிய க்ளரிஹ¤ இது" என்று அடுத்த கற்றதும் பெற்றதுமில் வரும் என்று காலை, பகல், சாயந்திரம், இரவு என்று பல கனவு கண்டு கொண்டிருந்தேன்!

தேசிகன் சென்னையிலிருந்து திரும்பியதும், என்ன சார், என்னோட விஷயத்தை சார்கிட்ட சொன்னீங்களான்னு கேட்டேன்! அதுக்கு அவர், "சொன்னேன்..இது தப்புன்னு
சொல்லிட்டாரு..rhymingஆ இல்லையே..4 வரியும் rhyming [rhyming தமிழ் வார்த்தை என்னப்பா!??!] இருக்கனுமாம்" என்று சொல்லி இருக்கிறார். நான் துளி கவலை படனுமே..Never! எப்படியோ நம்ம எழுத்து சார் வரைக்கும் போயிருக்கேன்னு சந்தோஷப்பட்டேன்! [எனக்கென்னமோ, இந்த celebrities எல்லாம் வானத்துல இருந்து குதிச்சவாளோன்னு ஒரு சந்தேகம்!]

ரொம்ப ரொம்ப நன்றி தேசிகன்!!

சரி இப்போ அதை எப்படி சரி செய்வது?

கேட்டையே விளைவிக்கும்
அரசியலுக்காக
ஓட்டு இயந்திரம் கண்டுபிடித்தார்
சுஜாதா!

[கேட்டு, ஓட்டு..எப்படி?..என்ன இது Software ல Programming Version மாதிரி upgrade பண்ணிட்டே இருக்கியேன்றேளா?]

சரி என்ன இப்போ rhyming ஆ இருக்கனும் அவ்வளவு தானே..current hot topic எது? அதை எடு..இதோ க்ளரிஹ¤!!

தொடாத இடம் தொட்டு
படாத பாடு படுகிறார்
மடாதிபதி
ஜெயந்திரர்!!

[அதுவா வருதுப்பா!]

அடுத்து ஒரு பெரிய பிரபலத்தைப் பற்றி..

நல்ல பெயர் எடுப்பான்
எல்லா புகழும் அடைவான்
இன்று யாருக்குமே தெரியாத
பிரதீப்

இதில் க்ளரிஹ¤ வின் இலக்கணம் பொருந்தியிருக்கிறதா என்று பார்ப்போம்.

1. 4 வரியில் இருக்கிறது
2. ஒரு பிரபலமானவரை கேலி செய்வது - இங்கு நான் என்னை பிரபலமானவனாய் காட்டியிருப்பதே கேலி செய்வதாகிறது!
3. ஓரளவுக்கு Rhymingஆகவும் இருக்கிறது..

என்ன இப்போ ஒத்துண்ட்டேளா?


உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு நேற்றே ஆணுரை விளம்பரத்தை வெளியிடலாம் என்று நினைத்தேன்..

"நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை" பாட்டு ஞாபகத்திற்கு வருகிறது..ஆம்! நேற்று என் ப்ளாகில் மட்டும் ஏதோ Errorஆம். நாங்கள் எங்கள் Engineer களை கேட்டு விட்டு சொல்கிறோம் என்று Blogger.com காரர்கள் என்னை கழுத்தைப் பிடித்து தள்ளாத குறையாய் வெளியே அனுப்பி விட்டார்கள்!! அதனால் அதை இன்று பதிகிறேன்..இன்று என்னை உள்ளே விட்டு விடுவார்கள் என்று நம்புகிறேன்!! நீங்கள் இந்த விளம்பரத்தைப் பார்த்தால் என்னை உள்ளே விட்டு விட்டார்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள்..

So, Start Camera! Action!!

இந்த விளம்பரத்திலும் வசனம் இல்லை..பின்னனி இசை மட்டும் தான்..

ஒரு வயதானவர் கவலையாய் உட்கார்ந்திருக்கிறார். அவருடைய மகன் அவரை கன்னாபின்னா என்று திட்டுகிறான்..[என்ன புரிஞ்சிருச்சா..முதல்ல கேளுங்கப்பா!!]அவர் கவலையாய் வீட்டை விட்டு வெளியே வருகிறார். தெருவில் மெல்ல நடந்து செல்கிறார்.

அவருடைய மகன் திட்டியது ஞாபகம் வருகிறது..[அவருடைய மகனின் முகம் close-up] வெறுத்து சிறிது தூரம் செல்கிறார்..தெருவின் அந்தப் பக்கத்துச் சுவரில் அந்த ஆணுரை விளம்பரம். அதையே ஏக்கமாய் பார்க்கிறார்!! அவருடைய மகன் திட்டியது ஞாபகம் வருகிறது..[அவருடைய மகனின் முகம் close-up]

இதை அன்னைக்கே உபயோகிச்சிருந்தா இன்னைக்கு எனக்கு இந்த நிலமை வந்துருக்குமா என்பது போல் பார்க்கிறார்!

அந்த சுவரின் விளம்பரத்தின் close-up!

இது கொஞ்சம் Naughty Advertisement வகையைச் சார்ந்தது..இந்த ஆணுரை உபயோகிச்சிருந்தா அந்த பையன் இருந்திருக்கவே மாட்டான்..ஆனா அவருக்கு வாரிசே இல்லாம போயிருக்குமே என்றெல்லாம் நீங்கள் கேட்கக் கூடாது..

இந்த விளம்பரத்துக்கு சொக்கலிங்க பாகவதர் தான் சரியானவர் என்று எனக்குப் படுகிறது..என்ன ப்ரயோஜனம்? இப்போ அவர் இல்லையே? பூர்ணம் விஸ்வநாதனைப் போட்டா? No No..இந்த மாதிரி விளம்பரத்துகெல்லாம் நம்ம காதல் மன்னன் தான் சரியா வருவாரு!! Yes!! My Choice is ஜெமினி கணேசன்!! எப்படி?

இப்போதைக்கு இது தான்..ஜுட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்!!



SO, இந்த தடவை காரைப் பற்றிய விளம்பரங்கள்...

ஒரு புது கார் market க்கு வருது..அந்த கார் நிறுவனத்தினர் என் கையை காலா நினைச்சி [no..no..நீ ஏன் கைய காலா நினைக்கிறேன்னெல்லாம் கேட்க கூடாது!]ஒரு நல்ல விளம்பரம் பண்ணி குடுங்க சார்ன்றாங்க..நான் அப்படியே மேலே பாத்துட்டே சரி நாளைக்கு வாங்க பாக்கலாம்ன்றேன்!![இதெல்லாம் எனக்கே overa தெரியரதாலே..நேரா matterக்கு போவோமா?]

விளம்பரம் - I

ஷாட் 1:

இடம் : படுக்கை அறை
ஒரு கணவன் மனைவி. மனைவி தூங்கிக் கொண்டிருக்கிறாள். கணவன் டை மாட்டிக் கொண்டிருக்கிறான்.

ஷாட் 2:

இடம் : ஹால்
கணவன் shoe lase போட்டுக் கொண்டிருக்கிறான்.

ஷாட் 3:

கிளம்புகிறான். மனைவி தூக்கக் கலக்கத்துடன் வெளியே வருகிறாள். குழப்பத்துடன் அவனைப் பார்க்கிறாள்.

ஷாட் 4:

மனைவி : Where are you going?
கணவன் : To office.
[மனைவி புரியாமல் மணி பார்க்கிறாள். மணி 4:30 A M காட்டுகிறது]
கணவன் : [சிரித்துக் கொண்டே, கார் சாவியை தூக்கி போட்டுக் கொண்டே] ofcourse! after a longgggggggggggggggggg drive!!
மனைவி : அதிர்ச்சியுடன் அவனையே பார்க்கிறாள்.

ஷாட் 5:

தூரத்தில் கார் போகிறது..இன்னும் விடியவில்லை!


விளம்பரம் - II

ஷாட் 1:

ஒரு கணவன், மனைவி காரில் சென்று கொண்டிருக்கிறார்கள். மனைவி சுவாரஸ்யமாய் ஏதோ சொல்லிக் கொண்டே வருகிறாள்!! இங்கு எந்த வசனமும் இல்லை..பின்னனி இசை ஒலிக்கிறது..கணவன் காதலுடன் தன் காரை ஓட்டிக் கொண்டிருக்கிறான். அவன் starring ஐ மென்மையாய் தடவிக் கொடுத்துக் கொண்டே இருக்கிறான். அவன் முகத்தில் ஒரு சிறு புன்னகை! ஒரு பெருமிதம் தெரிகிறது. அதை ஒரு சிறு கர்வம் என்றும் சொல்லலாம்!!

ஷாட் 2:

காரை விட்டு இருவரும் இறங்கி வீட்டுக்குள் செல்கிறார்கள். கணவன் அந்த மயக்கம் கலையாமல் முன்னால் செல்கிறான்..மனைவி அவன் பின்னால் செல்கிறாள். கணவன் மனைவியிடம் திரும்பி..

கணவன் : நீ கார்ல இருந்த மாதிரி வீட்லேயும் இந்த மாதிரி அமைதியா இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்?

என்று கேட்டுக் கொண்டே அவளுடைய பதிலை கேட்காமல் தன் காரை நினைத்துக் கொண்டே அதே புன்னகையுடன் வீட்டுக்குள் செல்கிறான்!! மனைவி அதிர்ச்சியுடன் அவனைப் பார்க்கிறாள்!!


அவ்வளவு தான்பா..நிறைய மனசுல இருக்கு..ஆனா இந்த வார்த்தை..வார்த்தை!! just kidding! இந்த 2 ரெண்டு தான் நான் யோசிச்ச பல concepts ல எனக்கு பிடிச்சது..பொறுக்கி எடுத்து போட்டேன்!!

ஆணுரை விளம்பரத்துக்கு ஒரு idea கிடைச்சுருக்கு..அடுத்த பதிவுல போட்றேன்!! அதுல இன்னும் நிறைய யோசிக்க வேண்டி இருக்கு!! வர்டா?!


எனக்கு எப்போதுமே நல்ல விளம்பரங்களில் ஈடுபாடு உண்டு! என்னைப் பொறுத்தவரை நல்ல விளம்பரங்கள் என்பது, அதைப் பார்த்தவுடன் நம்மையும் அறியாமல் ஒரு சிறு புன்னகை, ஒரு புத்துணர்ச்சி, ஒரு சிறு சந்தோஷம், ஒரு புல்லரிப்பு ..[நான்: வானத்தை பாத்துகுட்டே.. நீங்க:சரி சரி]!!..சரியா சொல்லனும்னா ஒரு cuteness இருக்கனும்!

உதாரணத்துக்கு HUTCH விளம்பரம் போதும்..எதை அவங்க விக்கனுமோ, எதுக்காக விளம்பரம் பண்றாங்களோ அதை அவங்க அந்த விளம்பரத்தில் காட்டவே இல்லை..மிக அற்புதமான படைப்பு! இந்த மாதிரி விளம்பரங்களை உருவாக்குறவங்களைப் பத்தி நினைச்சி பாக்குறேன்..யோசிச்சுட்டே இருக்கனும்..எத்தனை புது விதமான சிந்தனைகளை விதைக்கனும்! இந்த software engineering ஐ விட நல்ல வேலையா இருக்கேன்னு தோனுது..[இக்கரைக்கு அக்கரை பச்சை!]

என்ன பையன் திடீர்னு advertisement ல தாவிட்டான்னு நீங்க நினைக்கிறீங்களா? சொல்றேன் சொல்றேன்!

அன்னைக்கு தெரியாத்தனமா என் கூட வேலை பார்ப்பவனிடம் இங்கே ad agencies எங்கே இருக்கு? உனக்கு ஏதாவது தெரியுமான்னு கேட்டேன்! அவன், அதுக்கு என்
friend ஒருத்தன் இருக்கான்..நான் அவன் address தர்றேன், ஆனா அதுக்கு முன்னாடி "பேனா" வுக்காக நீ ஒரு script எழுதுன்னுட்டான்..கடன்காரன்!! ஐய்யா அதுல என்னோட
திறமையை பாத்துட்டு அப்புறம் தான் address தருவாராம்!! [என்ன இப்படி கிளம்பிட்டாய்ங்க?] புதுசா பள்ளிக்கூடத்துல சேர்றவன்கிட்ட ALGEBRA ல ஒரு கணக்கு போட
சொல்ற மாதிரி இருக்குப்பா...[தெரிஞ்சா நான் ஏண்டா schoolல சேர்றேன்!!] தவளை தன் வாயால் கெடும்ன மாதிரி வாயைக் கொடுத்து மாட்டிகிட்டாச்சு..நமக்கு இந்த மானம்
மாரியாத்தா..சூடு சூலாத்தா எல்லாம் இருக்கோல்லியோ? சரி கழுதை நம்ம யோசிச்சி பாப்போமேன்னு சவாலை ஏத்துகிட்டேன்!! [கட்டவிரல் காட்டி intervel எல்லாம் போடாம!!]

எதையும் மிகைப்படுத்திக் காட்டுவது தானே விளம்பரம்! இங்கே நான் யோசித்த சில..[சத்தியமாப்பா..]

IVth Std. A Section

Miss: சரி இன்னைக்கு பாடம் முடிஞ்சது!..இப்போ என்ன பண்ணலாம்?
[பசங்க ஆளாளுக்கு ஒரு விளையாட்டு பேரை சொல்றாங்க!]
ஒரு பையன்: [எழுந்து நின்று] Miss! Imposition எழுதலாம்!!
Miss: [Close up] அதிர்ச்சியுடன் அவளைப் பார்க்கிறாள்..
பையன்: [Close up] பெஞ்சில் தலை சாய்த்துக் கொண்டு தன்னுடைய impositionஐ தொடர்கிறான்!
[I will do my home work regularly என்று முடித்து அடுத்த lineக்குப் போகிறான்..தன்னுடைய பேனாவை பார்த்துக் கொண்டே...]
Background: வசீகரமாக பேனாவின் பெயரைச் சொல்கிறது.. முடிந்தால் ஏதாவது ஒரு Quotes.."Make your mark!" இப்படி ஏதாவது..

Bank

1: ஒரு DD ஐ fill பண்ணிட்டு அதை சரி பார்த்துக் கொண்டிருக்கிறான்..
2: Sir! Pen please?
1: ஏன் சார், பாங்க் வந்தா பேனா கொண்டு வரனும்னு தெரியாதா?[முறைத்துக் கொண்டே கொடுக்கிறான்!]
2: எழுதி விட்டு ஒரு முறை அந்தப் பேனாவைப் பார்க்கிறான்..[Cut]
[அடுத்த முறை இருவரும் பாங்க்கில் சந்திக்கிறார்கள்..இருவரிடமும் பேனா!]
3: [2மவனிடம்] Sir! Pen please?
2: ஏன் சார், பாங்க் வந்தா பேனா கொண்டு வரனும்னு தெரியாதா?
[1மவனைப் பார்த்து சிரித்துக் கொண்டே கொடுக்கிறான்]
3: எழுதி விட்டு ஒரு முறை அந்தப் பேனாவைப் பார்க்கிறான்..[Cut]

1 & 2 இருவரும் வெளியே வந்து பார்க்கிறார்கள்..3மவன் கடையில் அதே பேனாவை வாங்கி இவர்களைப் பார்த்து அசடு வழிகிறான்! இருவரும் தங்கள் பேனாவுடன் சிரித்துக்
கொள்கிறார்கள்...Background: வசீகரமாக பேனாவின் பெயரைச் சொல்கிறது.. முடிந்தால் ஏதாவது ஒரு Quotes.."Your 6th Finger" இப்படி ஏதாவது..

Magic

[இதில் வசனமே இல்லை...நல்ல ஒரு ஜிங்கிள்ஸ் போடலாம்..]

அலுவலகம்

விளம்பரநாயகன் பேனாவை ஆட்டி ஆட்டி ஏதோ சொல்கிறான்..அவனுடைய boss தலையை ஆட்டி ஆட்டி அவன் முதுகைத் தட்டிக் கொடுத்துப் போகிறார். அவனுக்கு
ஒன்றும் புரியாமல், இதற்கு முன் அவர் எப்படி வள் வள் என்று விழுவார் என்று நினைத்துப் பார்க்கிறான்..இன்று எப்படி இப்படி ஆனார் என்று யோசிக்கிறான்..[கையில்
பேனாவுடன்!][Cut]

வீடு

பேனாவை ஆட்டி ஆட்டி மனைவியிடம் ஏதோ சொல்கிறான்..அவள் தலையை தலையை ஆட்டுகிறாள்..மறுபடியும் அவளின் ருத்ரதாண்டவத்தை நினைத்துப் பார்க்கிறான்!
[கையில் பேனாவுடன்]

பேனாவை ஆட்டி ஆட்டி குழந்தையிடம் விளையாடுகிறான்..அது தலையை தலையை ஆட்டுகிறது..அது சதா எப்படி இவனிடம் அழுதது என்று நினைத்துப் பார்க்கிறான்!
[கையில் பேனாவுடன்]

ஒன்றும் புரியாமல் பேனாவை உற்றுப் பார்க்கிறான்!Background: வசீகரமாக பேனாவின் பெயரைச் சொல்கிறது.. முடிந்தால் ஏதாவது ஒரு Quotes.."Start your magic"...இப்படி ஏதாவது..

இதை எல்லாம் அவன்கிட்ட சொன்னேன்..நல்லா இருக்குன்னான்..சரி இப்போ "காருக்காக" ஒரு விளம்பரம் செய்ன்னான்...

அது அடுத்த பதிவில்...



மடையா, மடையா..இன்னைக்காவது கொஞ்சம் சீக்கிரம் எந்திருச்சுருக்கலாம்ல? இப்போ பாரு reserve பண்ண இவ்வளவு கூட்டம்..ஏதோ MNC Company ல இருக்கிறதாலே எப்போ போனாலும் ஒன்னும் சொல்ல மாட்றான்...என்னது? இதுவரைக்கும் இவ்வளவு கூட்டத்தை நம்ம பாத்ததே இல்லையே...வெளியே வரைக்கும் நிக்குது line...அப்பாடா இந்த தடவையாவது ஒரு பொண்ணு பக்கத்துல நிக்கலாமே, அது வரை சந்தோஷம்...[FREEZE!]

என் பேரு திலக்! எப்படியோ தட்டுத் தடுமாறி படிச்சி, கிழிச்சி இன்னைக்கு bangaloreல software engineer ஆயிட்டேன்! என் friend சென்னையிலிருந்து return வர என்னை train ticket reserve பண்ண சொன்னான்..அதான் இன்னைக்கு இங்கே..எனக்கு உலகத்துல என்னை அடுத்து பிடிச்சது...ஹிஹி..பொண்ணுங்க தான்! எத்தனை விதமான பெண்கள்! அவங்க என்ன செஞ்சாலும் அழகு தான்..என்ன சொல்றீங்க? இதோ ஒரு வழியா ஒரு பொண்ணு பின்னாடி நின்னாச்சு..[FREEZE OUT!!]

அடடா! form உள்ளே இருக்கே..இப்போ உள்ளே போனா இந்த இடம் போயிடும்..அப்புறம் இந்த பெரியவர் என் இடத்தை புடிச்சிருவாரு..NO WAY!! உள்ளே போனதும் form fill up பண்ணா போச்சு...என்ன பண்றா இவ, இந்த பொண்ணுங்களுக்கு cell ல நோன்ட்றதே வேலைப்பா...light blue chudi! இந்த காலத்து பொண்ணுங்களுக்கு கார் கூந்தலை விடுங்க..கூந்தலே இருக்கிறதில்லை..இதுக்கு பேரு தான் poney tail ஓ? ஓ! Specs ஆ? ஆனா எப்படி இருந்தாலும் பொண்ணுங்க..பொண்ணுங்க தான்..திரும்பி கூட பாக்கமாட்றாளே. ஆஹா..அந்த பொண்ணு சூப்பரா இருக்கே?! ஐய்யோ பின்னாடி போயி நின்னுட்டாளே, கொஞ்சம் lateஆ வந்திருக்கலாம்!! சே!! சரி கெடச்சதை வச்சி சந்தோஷப்படுவோம்!!

பாவம், நான் வச்சுருந்த bag அந்த பெரியவரை தொந்தரவு பண்ணியிருக்கு..முன்னாடி போட்டுகிட்டேன்! அவர் சிரிச்சார். வீணா அடுத்தவங்களுக்கு தொந்தரவு தரக்கூடாது ..! அதான் என் policy!

ஒரு வழியா கூட்டம் உள்ளே போச்சு! form கொண்டு வர போக, அந்த பெரியவர்கிட்ட எப்படி என்னோட இடத்தை பாத்துக்குங்கன்னு சொல்றதுக்கு english ல எப்படி சொல்றதுன்னு ஒரு தடவை சொல்லி பாத்துட்டு அவர்கிட்ட.. sir, can you please hold this place? let me get my form என்றேன். அவர் பதிலுக்கு தலையாட்டினார்னு நினைக்கிறேன்..மறந்துருச்சு!

form எடுத்துக் கொண்டு train timings பார்த்தால், எல்லாம் இங்கிருந்து கிளம்பும் train ஆக இருக்கிறது...எனக்கு chennailல இருந்து இங்கே வர்ற train தெரியனும். சரி முதல்ல போயி இடத்துல உட்கார்ந்து பக்கத்துல கேட்டுப்போம் என்று முடிவெடுத்தேன். [நான் form எடுத்தவுடன் எங்கள் மூவருக்கும் seat கிடைச்சுருச்சு]அந்த சாக்குல அவகிட்ட பேசுறதா plan..[புத்தி!] form fillup பண்ணிக் கொண்டே அவளுடைய formஐயும், அவள் formஐயும் [புரிஞ்சுச்சா?] கவனித்துக் கொண்டிருந்தேன். மாலதி ரகுராமன் என்று எழுதியிருந்தாள்! chennai க்கு போக fill பண்ணிக் கொண்டிருந்தாள் என்று ஞாபகம். நல்ல கலர்! கண்ணாடி போட்டிருந்தாலும் சிம்ரன் கடாட்சமாய் இல்லை என்றாலும் ஒரு homely look! எனக்கு OK ப்பா..[பசங்க எந்த ஒரு பொண்ணைப் பாத்தாலும் முதல்ல அவளை தன்னோட மனைவியாத் தான் நினைப்பாங்களா? இல்லை நான் தான் இப்படி இருக்கேனா?] சரி நான் என்னோட form fill பண்ணனுமே..வேண்டுமென்றே அந்த பெரியவரிடம் பேச்சைத் தொடங்கினேன்! [நமக்கு கொஞ்சம் பொண்ணுங்ககிட்ட starting trouble உண்டு!!]

நான் [அந்த பெரியவரிடம்] - sir, can you please tell me which train starts from chennai on this sunday night?
[அவர் ஏதோ சொல்ல வருவதற்குள் எனக்குப் பின்னாலிருந்து ஒரு பெண் குரல்..நம்ம மாலதி தான்..தோடா!]
மாலு [ஒரு செல்லம் தான்..] - u can come by this train! [என்று ஏதோ ஒரு train பேரை சொன்னாள்]
நான் - it starts from chennai @ night? right? [confirm பண்ணிக்கிறேனாம்? கள்ளன்டா நீ!]
மாலு - u want a train which starts from chennai @ night?
நான் - yes!
மாலு - ya. this starts @ 9:30 pm
நான் - thanks

அப்புறம் கொஞ்ச நேரம் நான் எதுவும் பேசவில்லை..கொஞ்சம் அடக்கி வாசிக்கனும்லயா? அங்கே இங்கே பாத்துட்டு இருக்கும் போது, அங்கே reservation form தீந்து போயிருந்தது! எனக்கு தெரியும் அது counter ல போயி கேட்கனும்னு, சரி நம்ம போயி எடுத்து வைக்கலாமான்னு நினைச்சேன்..வேணாம், ரொம்ப build up பண்ண மாதிரி இருக்கும்னு விட்டுட்டேன்! அப்புறம் நானும் அந்தப் பெரியவர் ஏதோ பேசிக்கொண்டிருந்தோம். கொஞ்சம் அமைதி ஆனவுடன் மாலுவிடமிருந்து ஒரு கேள்வி!!

மாலு - Do you have any openings for freshers in your company? [என்னுடைய tagஐ காட்டி..]
[ரொம்ப நேரம் கேட்கலாமா, இல்லையா என்று அவள் தவித்தது போல் எனக்குத் தோன்றியது!!]
நான் - [over buildup யுடன்] Usually they take freshers in campus interviews. I dont have any idea about that.
மாலு - [பாவமாய்...]oh! ok..
நான் - R u searching? [அவ என்ன படிக்கிறான்னு தெரிஞ்சுக்கனும்ல?]
மாலு - No! Its for my friend. She is doing her BE in computers. She is in her last year.
நான் - What about you? [கேட்டுட்டாண்டா..]
மாலு - i am doing my medical
நான் - oh good! somebody is out of software engineer! i got bored of software engineers now. Every three person is software engineer in bangalore. hahaha[டேய்! இதெல்லாம் உனக்கே ஓவரா தெரியலை? அடங்குடா!!]


ஒரு டாக்டரை கட்டிகிட்டா நம்ம வாழ்க்கை எப்படி இருக்கும் என்ற கற்பனையில் நான் வாழ்ந்து கொண்டிருக்கும்பொழுது..

[இதற்குள் அந்தப் பெரியவருக்குப் பொருக்காமல்..]
அவர் - where r u from?
நான் - trichy
அவர் - oh! then do u know tamil then?
நான் - எனக்கு நல்லா தமிழ் தெரியும்! நான் தமிழ் தான்..[மூன்று தமிழர்கள் இவ்வளவு நேரம் english ல பேசியிருக்கோம்! கொடுமை..]
அவர் - திருச்சியில் எங்கே?
நான் - தில்லை நகர்.
அவர் - இங்கே என்ன பண்றே?
நான் - software engineer
அவர் - எங்கே?
நான் - IBM
அவர் - இப்போல்லாம் எல்லோரும் software ல தான் வேலை பாக்குறீங்க..இல்லையா?
நான் - [அவளையும் பார்த்து சிரித்துக் கொண்டே..]MCA, BE படிச்சவொன்னே நேரா bangalore தான்..bangalore is major target.
அவர் - nowadays call centers are in high boom..
[தமிழர்கள் என்று தெரிந்தும் அடிக்கடி english ல் தான் பேசுகிறோம்!]
நான் - ம்ம்..daily recruitement இருக்கு. நீங்க வந்தா கூட உங்களையும் எடுப்பான். [அவள் சிரிக்கிறாள்!! மழை!!]
அவர் - என்ன Qualification அதுக்கெல்லாம்?
நான் - +2 pass. that's it! [அவள் மறுபடியும் சிரிக்கிறாள்! மறுபடியும் மழை!!]
அவர் - இங்கே எங்க இருக்கீங்க?
நான் - ஜீவன் பீமா நகர்
அவர் - அட! நானும் அதுக்கு பக்கத்துல தான் இருக்கேன்..இந்த HAL இல்லை..

[நான் இல்லை என்பது போல் தலையாட்டினேன்! அவர் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார்! வயதாகிவிட்டால் பேச்சு ஒன்று தான் துணை போலும்!]

சிறிது நேரம் மழையே இல்லை..

அவர் - ஆமா, திருச்சியில மழை பெய்யுதா?
நான் - [ஆஹா..என்னடா இந்த கேள்வி வர்லையேன்னு நினைச்சேன்! ஒரு கூட்டமா தான்யா அலையுராங்க!]எங்கே சார், நல்லவங்க எல்லாம் இங்கே வந்துட்டோமா, அங்கே..மழையே இல்லை..[good timing! எனக்கே ரொம்ப புடிச்சது! ofcourse அங்கே மழை தான்!!]

அதுக்குள்ள முதல் row ல வந்துட்டோம்..


அந்தப் பெரியவர் கொஞ்சம் ஒதுங்கிக்கொண்டது போலத் தோன்றியது..நான் ஆரம்பித்தேன்..மாலு கூட தான்..இப்போ தான் பழகிட்டோமே..

நான் - இன்னைக்கு college இல்லையா?
மாலு - இல்லை..போகனும்! காலையில வந்தா free ஆ இருக்கும்னு வந்தேன்.
நான் - ஓஹோ..ஆமா இன்னைக்கு கூட்டம் ஜாஸ்தி. அப்புறம் அரை வைத்தியர் ஆயாச்சா? [அவள் முழிக்கிறாள்!]
நான் - 1000 பேரை கொன்னா அரை வைத்தியன்னு சொல்வாங்களே..அதான் கேட்டேன்!
மாலு - [சற்று யோசித்து] முக்கா வைத்தியன் ஆயாச்சு!
[ஒருவேளை எண்ணிப் பாத்துருப்பாளோ?]
நான் - நீங்க சென்னையா? [நதி மூலமும், ரிஷி மூலமும் தான் அறியக் கூடாதே தவிர..]
மாலு - சொந்த ஊரு சென்னை தான்..நான் இங்கே படிச்சிட்டு இருக்கேன்.
நான் - நான் ஜீவன் பீமா நகர்ல தான் இருக்கேன்! அந்த church பக்கத்துல..
மாலு - தெரியும்..நானும் அதுக்கு பக்கத்துல தான்..
[கவனிக்க, நான் பெரியவர்கிட்ட பேசும்போது கவனிச்சிருக்கா!]
நான் - அங்கே ஒரு hostel இருக்கே..[எங்கேன்னு தெரிஞ்சுக்கனும்லயா?]
மாலு - இல்லை..என் வீடு இங்கே தான்..அம்மா, அப்பா இங்கே settle ஆயிட்டாங்க..i was born here!
நான் - ஓஹோ..
மாலு - அப்பா, இங்கே HAL ல வேலை பாக்குறார்!
[நான் கேட்கவே இல்லையே!]
நான் - OK....

ticket reserve செய்ய எழுந்தோம்..மூவரும்!

என்னுடையது சீக்கிரம் முடிந்தது..ticket ஐ திருப்பி திருப்பி என்ன பார்க்கிறேன் என்று தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்..அவளுடன் சேர்ந்து போகலாம்னு தான்..அங்கே முடியிற மாதிரி இல்லை...

நான் - [மனமில்லாமல்!] Hey! see you pa!
மாலு - Bye!

ஐயோ! அவளுடைய friend க்கு வேலை வாங்கித் தருவதாய் அவள் mobile no. வாங்கியிருக்கலாமோ? சே!! waste டா நீ..நான் நின்று நின்று மெல்ல மெல்ல படியில்
இறங்கிக் கொண்டிருந்தேன்..அவள் கூப்பிடுவாள் என்ற நம்பிக்கையில்...இது சினிமா இல்லையே?!


climax

ஜார்ஜ்
வழக்கம்போல் எல்லா இளவட்டப் பசங்களையும், கூட்டம் நிறைந்த ஜனசந்தடிகளில் தன்னுடைய வெறுப்பை உமிழ்ந்தும், ஆங்கிலத்தில் [USELESS FELLOWS!!] எல்லோரையும் திட்டிக் கொண்டும், அந்த எல்லாக் கூட்டத்திலும் அங்கே இருந்த ஒருவரிடம் "அந்த ஊரில் மழை எப்படி?" என்றும் விசாரித்துக் கொண்டும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்!

மாலு
பொறுப்பாய் முழு வைத்தியர் ஆவதற்கு ஒவ்வொருவரையாய் எண்ணி எண்ணி கொன்று கொண்டிருக்கிறாள்! எப்போதாவது அந்தப் பையனின் ஞாபகம் அவளுக்கு வந்து தானாக
சிரித்துக் கொள்வதாய் நம்புவோமாக..

திலக்
அவளுக்குத் தான் நான் எங்கே வேலை பார்க்கிறேன் என்று தெரியுமே! எப்படியாவது நம்மைத் தேடி வருவாள் என்றும், தன் நண்பர்கள் HAL, HAL என்று அவனை ஓட்ட..அவன் bangalore medical colleges என்று google த்துக் கொண்டிருக்கிறான்..


Railway Reservation Center...அய்யோ! அதுக்குள்ள இவ்வளவு பெரிய lineஆ என்று நொந்தபடி வேறு வழியில்லாமல் அந்த lineல் நின்றேன். என்ன இவளைப் பத்தி ஒன்னும் சொல்ல மாட்றாளேன்னு நினைக்கிறீங்களா? sorry! ஒரு பொண்ணு தன்னைப் பத்தின விஷயத்தை அநாவசியமா யாருக்கும் சொல்லக் கூடாது! புரியுதா? ஒழுங்கா நான் சொல்றதைக் கேளுங்க!

கொஞ்ச நேரத்துல என் பின்னாடி ஒரு பையன் நின்னுட்டு இருந்தான்! சின்ன பையனா இருந்தான்! ஆனா சரியா பாக்கலை..நான் ரொம்ப நல்ல பொண்ணாக்கும்! ஒருவழியாய் கூட்டம் நகர்ந்து நகர்ந்து உட்கார இடம் கிடைத்தது..எனக்கு, என் பின்னால் நின்ற அந்தப் பையனுக்கு அப்புறம் அவர் பின்னால் இருந்த ஒரு old manக்கு!! அவன் உட்கார்ந்து அப்போது தான் கொண்டு வந்திருந்த reservation formஐ fill பண்ணிக் கொண்டிருந்தான்! திரும்பி திரும்பி அந்த train timings board ஐ பார்த்துக் கொண்டிருந்தான். இப்போது அவன் முகத்தை தெளிவாக பார்க்க முடிந்தது. சின்ன பையனாய் தெரிந்தான். பார்க்க கொஞ்சம் லட்சணமாய் இருந்தான்! ஒரு பெண் பக்கத்தில் இருக்கிறாள் என்ற உணர்வே இல்லாமல் அவன் இருப்பது போல் எனக்குத் தோன்றியது. பொண்ணுங்க கிட்ட பேசவே மாட்டானோ?

அவன் [அந்த old man யிடம்] - sir, can you please tell me which train starts from chennai on this sunday night?
[அவர் முழிப்பதை பார்த்த நான்..]
நான் - u can come by this train என்று எனக்குத் தெரிந்த ஒரு train பேரை சொல்லி வைத்தேன்.
அவன் - it starts from chennai @ night? right?
நான் - u want a train which starts from chennai @ night?
அவன் - yes!
நான் - ya, this starts @ 9:30 pm.
அவன் - thanks!
அவ்வளவு தான்..அதற்குப் பிறகு அவன் பேசவே இல்லை.. இந்தக் காலத்துல இப்படி ஒரு பையனா? அவன் கழுத்தில் ஒரு பெரிய software company யின் tag தொங்கிக் கொண்டிருந்தது என் கண்ணை ரொம்ப நேரமாய் உறுத்திக் கொண்டிருந்தது! அவளுக்காக, இவனோட officeல ஏதாவது opening இருக்கான்னு கேக்கலாமா என்று நினைத்தேன். எதுக்கு இதெல்லாம் நமக்கு, வழியிறான்னு நினைச்சுப்பான் என்று சும்மா இருந்தேன்! அவன் அவரிடம் [அதான் அந்த old man!] ஏதோ பேசிக் கொண்டிருந்தான்! எனக்கும் bore அடித்தது. அதான் பையன் ரொம்ப படுத்த மாட்றானே, கேட்டுப் பாக்கலாம் என்று முடிவுக்கு வந்தேன்!

நான் - Do you have any openings for freshers in your company?
அவன் - Usually they take freshers in campus interviews. I dont have any idea about that.
நான் - oh! ok..
அவன் - R u searching?
நான் - No! Its for my friend. she is doing her BE in computers. She is in her last year.
அவன் - oh! i c.
அவன் - What about you?
[அட பரவாயில்லையே பையன் கேள்வி எல்லாம் கேக்குறான்! என்று நினைத்துக் கொண்டு..]
நான் - i am doing my medical!
அவன் - oh good! somebody is out of software engineering! i got bored of software engineers now. Every three person is software engineer in bangalore.
[சிரிக்கிறான்..நல்லாவே இருக்கான்!! நானும் சிரிக்கிறேன்..]

கொஞ்ச நேரம் கழித்து அவர்..

அவர் - where are you from?
அவன் - trichy.
[அடப்பாவி..தமிழ்நாடா இவன்?]
அவர் - do you know tamil then?
அவன் - எனக்கு நல்லா தமிழ் தெரியும்!! நான் தமிழ் தான்..
[ofcourse, he will be knowing..this old man..oouff!]
அவர் - திருச்சியில் எங்கே?
அவன் - தில்லை நகர்.
அவர் - இங்கே என்ன பண்றே?
அவன் - software engineer
அவர் - எங்கே?
அவன் - IBM
அவர் - இப்போல்லாம் எல்லாரும் software ல தான் வேலை பாக்குறீங்க..இல்லையா?
அவன் - MCA, BE படிச்சவொன்னே நேரா bangalore தான்..bangalore is major target.
[அவன் என்னைப் பார்த்து சிரிக்கிறான்..நானும் சிரித்தேன்!! நம்ம பையன்! ;)]
அவர் - nowadays callcenters are in high boom.
அவன் - ம்ம்..daily recruitment இருக்கு, நீங்க வந்தா கூட உங்களையும் எடுப்பான்.
[நான் சிரித்தேன்!]
அவர் - என்ன Qualification அதுக்கெல்லாம்?
அவன் - +2 pass. that's it!!
[இதற்கும் சிரித்தேன்..அவன் பேசுவது பல காலமாய் பழகும் ஒருவரிடம் சரளமாய் பேசுவது போலிருந்தது..யாரோ ஒரு புது மனிதர் என்ற நினைப்பே அவனுக்கு இல்லை..]

அவர் - இங்கே எங்க இருக்கீங்க?
அவன் - ஜீவன் பீமா நகர்
அவர் - அட! நானும் அதுக்கு பக்கத்துல தான் இருக்கேன்..இந்த HAL இல்லை..
[இதற்குள் மேல் நான் அவர் பேச்சைக் கேட்கவில்லை!]

அவர் - ஆமா, திருச்சியில மழை பெய்யுதா?
[Is this a ready-made question of all old men??!!]
அவன் - எங்கே சார், நல்லவங்க எல்லாம் இங்கே வந்துட்டோமா, அங்கே, மழையே இல்லை..
[wow! what a timing!! கலக்குறான்..அவருக்குப் புரியலை..நான் கொஞ்சம் கூடவே சிரிச்சுட்டேன்னு நினைக்கிறேன்!]

ஒரு வழியாய் முதல் row ல் வந்து விட்டோம்.

அவன் - so, இன்னைக்கு college இல்லையா?
நான் - இல்லை, போகனும்! காலையில வந்தா free ஆ இருக்கும்னு வந்தேன்.
அவன் - அப்போ அரை வைத்தியர் ஆயாச்சா?
[ஐய்யோ, அவன் தமிழ் கொள்ளை அழகு!]
[நான் - முழிக்கிறேன்..]
அவன் - 1000 பேரை கொன்னா அரை வைத்தியன்னு சொல்வாங்களே! அதான் கேட்டேன்!
[சிரிக்கிறான்!]
நான் - [சிரித்துக் கொண்டே...] முக்கா வைத்தியர் ஆயாச்சு!
[பாவம் பயந்து விட்டான்..இந்த பதிலை அவன் எதிர்பார்க்கவில்லை]
அவன் - நீங்க சென்னையா?
நான் - சொந்த ஊரு சென்னை தான்..ஆனா அம்மா, அப்பா இங்கே settle ஆயிட்டாங்க..i was born here!
அவன் - oh..
நான் - அப்பா, இங்கே HAL ல வேலை பார்க்கிறார்!!
[ஐய்யய்யோ, இதெல்லாம் ஏன் இவன்கிட்ட சொல்றேன்..உனக்கு பைத்தியம் பிடிச்சிருச்சா?]
அவன் - ok..

மூன்று counter கள் காலி ஆனதும் மூன்று பேரும் எழுந்தோம். அவனுக்கு சீக்கிரம் முடிந்து விட்டது..
அவன் - Hey! see you pa!
நான் - Bye!

[அவன் போறான்...]


ஆய்த எழுத்தின் தாக்கத்தில் ஒரு கதை சொல்ல முயல்கிறேன்...

இன்னும் கொஞ்சம் சீக்கிரம் வந்திருக்கலாமோ என்று தோன்றியது..oh i am sorry..நீங்க கதை கேக்குறீங்களோ, என்னை introduce பண்ணிக்கிறேன்..என் பெயர் ஜார்ஜ். பெங்களூரில் அரசாங்க வேலையிலிருந்து ஓய்வு பெற்றவன். என்னோட பிள்ளங்களுக்காக train ticket reserve பண்ண இங்கே வந்திருக்கேன்..சரி கதைக்கு போலாம்...நான் என்ன சொல்லிட்டு இருந்தேன், ஆமா, இன்னும் கொஞ்சம் சீக்கிரம் வந்திருக்கலாமோ என்று தோன்றியது! காலையில் வந்தால் காலியாக இருக்கும், easyயா reserve பண்ணிட்டு போயிடலாம்னு நினச்சேன், ஆனா எப்படியோ கிளம்ப 9:00 மணி ஆயிடுச்சு..வெளியே வரைக்கும் Q நிக்குதே..சரி வேற வழி, இந்தப் பையன் பின்னாடி நிக்க வேண்டியது தான்..

ஒரு பெரிய bag தொங்குது அவன் பின்னாலே, அவன் அங்கே இங்கே ஆடும் போது எனக்கு பட்டது..நான் கையாலே கொஞ்சம் தடுத்தேன், பின்னால் திரும்பி என்னைப் பார்த்து sorry சொல்லிக் கொண்டே bagஐ முன்னாடி போட்டுக் கொள்கிறான்..சின்ன பையனா இருக்கான்..இங்கே MCA படிச்சுட்ருப்பான், வேற என்ன படிக்கிறாங்க இந்த காலத்து பசங்க..எல்லாரும் computer ஐ கட்டிட்டு அழறான்! ஆமா, என்னது? இந்த பையன் கையில form யே இல்லயே..ஒருவேளை இவன் friend உள்ளே இருப்பானோ? கொஞ்சம் உள்ளே சென்றவுடன் அவன் என்னிடம் திரும்பி, Sir, can you please hold this place? let me get my form என்றான். ஒஹோ முதல்ல இடத்தை புடிச்சி வச்சுட்டானா, புத்திசாலி பசங்க தான் என்று நினைத்துக் கொண்டே தலை ஆட்டி வைத்தேன். அவன் வருவதற்கும் எங்கள் இருவருக்கும் உட்கார இடம் கிடைக்க சரியாக இருந்தது.

form fillup பண்ணிக் கொண்டிருந்தவன் திடீரென்று என்னிடம் sir, can you please tell me which train starts from chennai on this sunday night? நான் அவனிடம் தெளிவாய் கேட்டுத் தெரிந்து கொள்வதற்குள் அந்தப் பையனுக்கு முன்னால் உட்கார்ந்து கொண்டிருந்த ஒரு பெண் (குத்துமதிப்பாய் 20 வயதுக்குள் இருக்கும்), u can come in this train என்று ஒரு train பேரை சொன்னாள்! அவன் ஒரு வழியாய் fill செய்து முடித்தான். இந்தப் பையன் பரவாயில்லை, அந்த பொண்ணு சொன்ன train பேரை எழுதிட்டு அவளுக்கு thanks சொன்னதோட சரி, அவகிட்ட பேசலை..எப்படா பொண்ணுங்க பேசுவாங்க, எப்படி bracket போடலாம் என்று இருப்பவர்கள் மத்தியில் இவன் கொஞ்சம் Gentle தான். அவனிடம் மெதுவா பேச்சு கொடுத்தேன், வயசாயிடுச்சுல்ல..சும்மா இருக்க முடியாது...

இவ்வளவு கூட்டம் இருக்கேன்னு அங்கலாய்த்தேன், அவன் அதற்கு coolஆ இல்லை, சீக்கிரம் முடிஞ்சுடும் இங்கே service நல்லா இருக்கும்..என்றான். கொஞ்சம் விட்டவுடன் அந்தப் பெண் அந்தப் பையனை பிடித்துக் கொண்டாள்..ஏதேதோ அவனைக் கேட்டாள், இவன் ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து where are you from என்றேன், அதற்கு அவன் திருச்சி என்றான்...do you know tamil then? என்றேன்..எனக்கு நல்லா தமிழ் தெரியும் என்றான். என்னால் நம்ப முடியவில்லை. சில நேரங்களில் நம்முடைய ஆட்களை நமக்கு அடையாளம் தெரியாமல் போய் விடுகிறது. அவனுடைய வெள்ளைத் தோலைப் பார்த்து நான் ஏமாந்து விட்டேன், பிராமணனாய் இருப்பானோ என்னவோ..

நான் - திருச்சியில் எங்கே?
அவன் - தில்லை நகர்.
நான் - இங்கே என்ன பண்றே?
அவன் - software engineer
நான் - எங்கே?
அவன் - IBM
நான் - இப்போல்லாம் எல்லாரும் software ல தான் வேலை பாக்குறீங்க..இல்லையா?
அவன் - MCA, BE படிச்சவொன்னே நேரா bangalore தான்..bangalore is major target. [அவளைப் பார்த்து சிரிக்கிறான், இது என்ன அவளும் சிரிக்கிறாள்!!]
நான் - nowadays callcenters are in high boom.
அவன் - ம்ம்..daily recruitment இருக்கு, நீங்க வந்தா கூட உங்களையும் எடுப்பான். [அவள் சிரிக்கிறாள்!]
நான் - என்ன Qualification அதுக்கெல்லாம்?
அவன் - +2 pass. that's it!! [அட, இதுக்கும் ஒரு சிரிப்பா?]

கொஞ்சம் மெளனம்....அவரவர் என்ன பேசுவது என்று யோசித்துக் கொண்டிருந்தோம்...

நான் - ஆமா, திருச்சியில மழை பெய்யுதா? [Land Mark question! if you don't know what to talk? you can always start with this!!]அவன் - எங்கே சார், நல்லவங்க எல்லாம் இங்கே வந்துட்டோமா, மழையே இல்லை..[எனக்கு புரியலை..இதற்கும் ஏன் அவள் சிரிக்கிறாள்? இந்த முறை கொஞ்சம் கூட]

நாங்கள் முதல் rowல் இருந்தோம். அவன் ஏதோ அந்தப் பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்தான். இந்தப் பெண் குழந்தைகளுக்கு விவஸ்தயே இல்லை..எதுக்கெடுத்தாலும் கெக்கே புக்கேன்னு சிரிக்க வேண்டியது..அப்புறம் அவன் கண்ணடிக்கிறான், பின்னாடி வர்றான்..கையைப் பிடிச்சி இழுக்கிறான் என்பது.. சரி மிச்சத்தை அப்புறம் கேக்கலாம்..நான் டிச்கெட் reserve பண்ணிக்கிறேன்..

3 பேரும் 3 counter ல் நுழைந்தோம்..அவன் reserve செய்து விட்டு அவளிடம் மட்டும் see you pa! என்று சொல்லிக் கொண்டு என்னைப் பார்க்காமல் போகிறான்!!அவளும் சிரித்து வழி அனுப்புகிறாள்..[அதற்குள் சினேகமா? கலிகாலம்]


இரவு விளக்கணைத்து
போர்த்திக் கொள்ளும் போது
ஒரு நாளும்,
ஒரே முறையில்
கால்கள் போர்வைக்குள்
போவதில்லை...

மழைக்கு ஒதுங்கினோம்

மழைக்கு ஒதுங்கிய
உன்னை ரசித்துக் கொண்டிருக்கிறேன்!

இதோ நின்று விடுவேன்
என்று என்னை அழவைத்துக் கொண்டும்

இப்போதைக்கு நிற்க மாட்டேன்
என்று உன்னை எரிச்சலூட்டிக் கொண்டும்
பெய்து கொண்டே இருக்கிறது மழை!

2 நாட்கள் சென்னை சென்று குதியாட்டம் போட்டு வந்த களைப்புடன் பதியும் பதிவு இது! என் நண்பனின் தங்கை கல்யாணத்திற்கு எங்கள் சென்னை நண்பர்களை அழைக்கச் செல்கிறோம் என்ற ஜமுக்காளத்தில் i mean போர்வையில் இங்கிருந்து ஒரு 9 பேர் சென்றோம்.. சரி இனி over to சென்னை!

எனக்கும் சென்னைக்கும் ஏதோ ஜென்மாந்திர தொடர்பு இருக்கிறதென்று நினைக்கிறேன்! அல்லது, சினிமாவை எனக்குப் பிடிப்பதால் சென்னை எனக்கு மிகவும் பிடிக்கிறதோ என்னவோ! சென்னையில் இருக்கும் ஒரு பிச்சைக்காரனைப் பார்த்தும் நான் பொறாமைப் படுவதுண்டு..அந்தப் பிச்சைக்காரன் கேட்டால் என்னை கயிதே, கஸ்மாலம், சாவுகிராக்கி என்று திட்டிக் கொண்டே தன் திருவோட்டாலேயே அடிப்பான் என்று நினைக்கிறேன்! [தயவு செய்து இதை யாரும் கற்பனை செய்து பார்க்க வேண்டாம் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்!]

முதல் நாள் MGM, இரண்டாம் நாள் மகாபலிபுரம்..அவ்வளவு தான் எங்கள் plan..அந்த EAST COAST ROAD ல் கட்டிப்பிடித்து பைக்கில் செல்லும் ஜோடிகளைப் பார்க்கும் போது..ஹ¤ஹ¤ஹ¤ஹ¤ம்ம்ம்ம்ம்ம்ம்ம்!! வேறென்ன பெருமூச்சு தான்..

1. நாங்கள் தங்கி இருந்தது திருவல்லிக்கேணி, சிறிய பெரிய தெரு [இது தான் தெருவின் பெயர்]வில் ஒரு லாட்ஜா, மேன்ஷனா இல்லை இல்லை ஒரு ஸ்டே ஹோம்..நன்றாகவே இருந்தது..குழாய் திறந்தால் கோபமாய் சீற்றத்துடன் தண்ணீரார் பாய்ந்தார். [சென்னையில் தண்ணிப் பஞ்சம்னு யாருப்பா சொல்றது..]தெருவில் இருந்து வெளியே வந்தால் ஒரு பெரிய பஜார். வலது பக்கம் நேராய் போனால் அண்ணா சாலை, இடது பக்கம் நேராய் போனால் மெரினா கடற்கரை! ஆஹா..

2. சென்னையில் ஏழை பணக்காரன் என்ற எந்த ஒரு வித்தியாசமுமின்றி செயல்படும் ஒரே ஆள் நம்ம சூரியன் சார் தான்! [நிலா மேடம் இல்லையா..அதான் சூரியன் சார்!] பிரிக்கிறார்! சார், சார் நான் பெங்களுரிலிருந்து ஊர் சுத்திப் பாக்க வந்துருக்கேன் சார், என்னை மட்டும் விட்ருங்க சார் என்று நாங்கள் கெஞ்சினாலும் அவர் காதில் போட்டுக் கொண்ட மாதிரியே தெரியவில்லை! software engineer கள் அத்தனை பேரும் வியர்வை சொட்ட சொட்ட ஊர் சுற்றிப் பார்த்தோம்! என்னோட சென்னை நண்பன் எங்களுக்காக AC Tempo ஏற்பாடு செய்திருந்தான்!![எப்போ இருந்து நமக்கு வருது இந்தத் திமிரெல்லாம்?]

3. சென்னையில் எனக்கு மிகவும் பிடித்தவைகள்:
1. சினிமாவும், சினிமா சார்ந்த இடங்களும்.[ஹிஹி..புத்தி!]
2. விசாலமான சாலைகள்
3. எப்போதும் எங்கேயோ ஓடிக் கொண்டே இருக்கும் துறுதுறுப்பான மக்கள்[அப்படி எங்கே சார் போறீங்க?]
4. ஒவ்வொரு fly over லும் வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான HORDINGS! [ப்ரியாமணி கொள்ளை அழுகு!]
5. இப்போது FM Radio! 4 to 5 FM radio இருக்கிறது! [இரவு 10 மணிக்கு "மலர்ந்தும் மலராத பாதி மலர் போல" பாட்டு ஒலிக்கிறது!!!]
6. மிக முக்கியமாக பரந்து விரிந்து கிடக்கும் வங்காள விரிகுடா! [கடல் இருந்தாலே அந்த ஊர் அழகு தான் இல்ல?]

4. இந்த முறை அண்ணா சாலை பக்கம் போகாததால் புதுப் படங்களின் விசாலமான கட் அவுட்களை பார்க்க முடியவில்லை..4 வருடத்திற்கு முன் project தேடி அலைந்து கொண்டிருந்த போது நண்பர்கள் அண்ணா சாலையின் ஒரு கம்பெனி விடாமல் ஏறி இறங்கிக் கொண்டிருப்பார்கள். நான் மட்டும் அங்கு வைத்திருக்கும் கட் அவுட்களை வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருப்பேன்! [எப்படி project கிடைக்கும் சொல்லுங்க?]

5. சென்னையைப் பார்த்தால் இந்தியாவின் பாதி நரிக்குறவர்கள், பிச்சைக்காரர்கள் இங்கு தான் இருக்கிறார்களோ என்று தோன்றுகிறது! இங்கு நாம் சொந்த வீடு கட்ட யோசித்துக் கொண்டிருக்கிறோம், அங்கு பலருக்கு வாடகை வீடு கூட இல்லை..ஒரு கூடாரம் கூட இல்லாமல் ப்ளாட்பாரத்தில் படுத்துக் கிடக்கிறார்கள்! மறுநாள் வழக்கம் போல் எங்களுக்கு விடிந்து விட்டது..ஆனால் இவர்களுக்கு என்று விடியுமோ தெரியவில்லை!!

6. சென்னை சென்று கடலில் கால் நனைக்காமல் வருபவர்களுக்கு சொர்க்கத்தில் இடமில்லை என்று வள்ளுவர் ஒரு குறளில் சொல்கிறார்! [முழிக்காதீர்கள், துரதிர்ஷ்டவசமாய் அந்தக் குறள் நமக்கு கிடைக்கவில்லை! காலவெள்ளத்தில் அது அழிந்து விட்டதாக்கும்!!] அதனால் மகாபல்லிபுரம் சென்று கால் நனைக்க முயன்று உடல் முழுதும் நனைந்து திரும்பினோம்! [இயற்கை அன்னை கடலென்னும் சாம்பாரில் உப்பை சற்று அளவுக்கதிமாகவே போட்டு விட்டாள்! கவிதெ, கவிதெ!!]

7. மகாபலிபுரம் நான் திரைப்படங்களில் பார்த்த மாதிரி இல்லை. நான் என் கண்களின் வழி காண்பதை விட என் காமெரா கண்ணின் வழியே நிறைய பார்த்தேன்..அது கழுவி வந்தவுடன் தான் தெரியும்!! கல்லைக் குடைந்து குடைந்து மிக அற்புதமாய் பல சிற்பங்களை செதுக்கியிருக்கிறார்கள்! இளவரசியாரைப் போல எனக்கு அதன் வரலாறு தெரியவில்லை..கல்வெட்டுக்கள் ஒன்றும் கண்ணில் படவில்லை..அதைத் தொடாதீர்கள், இதை அசுத்தப்படாதீர்கள் போன்றவைகளைத் தவிர இதை யார் கட்டினார்கள், இதன் சிறப்பு என்ன ஒன்றும் இல்லை..கைடுகள் தங்களுக்குத் தெரிந்த கதைகளையெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்!

இன்று கணினியின் முன் உட்கார்ந்து நான் ஏதோ தட்டிக் கொண்டிருக்கும் போதும் என் மனம் வங்காள விரிகுடாவில் அலையாடிக் கொண்டிருக்கிறது...


வருடம் 2178. நியான் மாதம். காலை 8 மணி. வானத்தில், பறக்கும் காரில் signalக்காக காத்திருக்கும்போது ஜேஸ்145 ஜுரி146 யிடம் "நான் என் மனசை தொறந்து சொல்லிட்டேன்! அவ மனசுல என்ன இருக்குன்னு தான் புரியலை!" என்றான்!! signal சிவப்பையே காட்டிக் கொண்டிருந்தது!!

மேலே சொல்லப் பட்டிருப்பது ஒரு விஞ்ஞான ஒரு வரிக் கதை என்பது வருடம், மாதத்தின் பெயர் கொண்டு உங்களுக்குப் புரிந்திருக்கும்! ஆனால் இதில் நான் என்ன சொல்ல வருகிறேன் என்று எனக்குப் புரிகிறது! உங்களுக்கு என்ன புரிஞ்சதுன்னு பின்னூட்டமிடுங்கள்!

இப்போ நீங்க comment கொடுத்து தானே ஆகனும்! இப்போ என்ன செய்வீங்க, இப்போ என்ன செய்வீங்க!!

மூளைக்கு ரொம்ப வேலை கொடுத்து பாத்துட்டேன்! ஹ¤ஹ¤ம்..சார் கண்டுக்கவே மாட்றார்! மூளை சார், மூளை சார் எழுதி ஒரு வாரத்துக்கு மேலே ஆச்சு சார், என்னோட ரசிகர்களுக்கெல்லாம் என்னோட ப்ளாக் படிக்காம [இதையெல்லாம் கண்டிச்சி திட்றவங்க கமெண்ட்ஸ்ல போடாம எனக்கு தனியா மெயில் அனுப்பும்படி இரு கரம் கூப்பிக் கேட்டுக் கொள்கிறேன்!] சோறு தண்ணி இறங்காது சார்..இப்படி என்னன்னவோ சொல்லி பாத்துட்டேன்! நல்லா அடிச்சி போட்ட மாதிரி படுத்துருக்காரு! இதனால் சகல ஜனங்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால், இந்த வாரம் என்னால எதுவும் புதுசா எழுத முடியலை..[யாருய்யா அங்கே கை கொட்டி சிரிக்கிறது?]

அப்பாடா! என்று பெருமூச்சு விட்டவர்களுக்கு ஒரு கெட்ட செய்தி!
நம்ம ஆள் இப்படி சருக்கிட்டாரே என்று நினைப்பவர்க்கு ஒரு நல்ல செய்தி!!

புதுசா ஒன்னும் எழுதலையே தவிர, பழசான ஒன்னை புதுசா காப்பி அடிச்சி வச்சிருக்கேன்! பாரதியோட "வீணையடி நீ எனக்கு" பாட்டு..இது ரொம்ப ஈஸியா இருக்கே..நம்மளும் எழுதலாமேன்னு எழுதி பாத்தேன்! நிறைய எழுதலாம்னு நினச்சேன்..ஒன்னும் வர்லை! இது எப்பவோ எழுதுனது..[அதான் உங்களுக்குத் தெரியுமே, இந்த வாரம் மூளை சார் கோமால போயிட்டாருன்னு?] இதுல ஒரு basic concept உனக்கு அவ ஏதாவதா இருக்கனும், நீ அவளுக்கு ஏதாவதா இருக்கனும்! that's it...கவிதை ரெடி!!

அகரமடி நீ எனக்கு
சூடும் ஆரமடி நானுனக்கு

நிலவடி நீ எனக்கு
நீளும் இரவடி நானுக்கு

காமமடி நீ எனக்கு
கொல்லும் காதலடி நானுனக்கு

மழையடி நீ எனக்கு
மண்னின் வாசமடி நானுனக்கு

வித்தையடி நீ எனக்கு
வீழும் வேட்கையடி நானுனக்கு

அன்புச் சின்னமடி நீ எனக்கு
ஆசை முத்தமடி நானுனக்கு

வானமடி நீ எனக்கு
சுவாசமடி நானுனக்கு

எங்கே யாரையும் காணோம்?


எச்சரிக்கை: உங்களுக்குத் தலை சுத்தினா நான் பொருப்பல்ல!!

அவன் ரொம்பவே வித்தியாசமானவன். அவனைப் பொருத்தவரை எல்லாவற்றிலும் தன்னை வித்தியாசமாய் காட்டிக் கொள்ள வேண்டும்! எவ்வளவு பெரிய
கூட்டத்திலும் தான் தனித்தன்மை வாய்ந்தவன் என்பதில் அவன் உறுதியாய் இருந்தான். சில சமயம் அவன் கிருக்கனோ என்று கூட உங்களுக்குத் தோன்றும். அப்படி ஒரேடியாய் நாம் முடிவு கட்டி விடவும் முடியாது! உங்களுக்கு எப்படி உணர்த்துவது என்று எனக்குப் புரியவில்லை! சரி அவன் செய்த சில எதிர்பாராத செயல்களை சொன்னால் உங்களுக்கு ஓரளவுக்கு புரியலாம்!

பஸ்ஸில் சென்று கொண்டிருப்பான்! திடீரென்று முன்னே இருப்பவரைக் கூப்பிட்டு ஸாரி சொல்வான். அவர் புரியாமல் விழிப்பார்! இவன் ஜன்னலை நோக்க ஆரம்பிப்பான்! அவர் திரும்பியதும் மறுபடியும் அவரை அழைத்து ஸாரி சொல்வான்! அவர் எதுக்குப்பா ஸாரி என்று பொறுமையிழந்து கேட்பார். அதற்கு அவன் இல்லை சார், உங்களுக்கு என்னை தெரியாது..ஆனா எனக்கு உங்களை நல்லாத் தெரியும். உங்களுக்கே தெரியாம நான் ஒரு தப்பு பண்ணிட்டு இருக்கேன்! எனக்கு அது தப்புன்னு தெரிஞ்சும் பண்றேன்! ஆனா என்னால பண்ணாம இருக்க முடியலை. நீங்க எதையும் மனசுல வெச்சுக்காதீங்க சார் என்பான். அவர்
பையைத் தடவி தன் பர்ஸ் இருக்கிறதா என்று பார்த்துக் கொள்வார். சே! சே! அந்த மாதிரி சீப்பான தப்பு இல்லை சார், நல்லா யோசிச்சு பாத்து உங்களுக்கு ஞாபகம் வர்றதுக்குள்ள நான் இறங்கிக்கிறேன் சார் என்று சொல்லி அடுத்த ஸ்டாப்பில் இறங்கிக் கொள்வான்! அவர் பாவம் தன் பெண்ணை லவ் பண்றானோ ரேஞ்சுக்கு யோசித்து பாவம் மண்டை காய்ந்து கொண்டிருப்பார்!

இப்படியே அவன் வேறொருவரிடம் பஸ்ஸில் ஸாரி கேட்டுக்கொண்டே இருந்ததில் வெறுத்துப் போய் அவர் சரிப்பா மன்னிச்சி விட்டுட்டேன். போதுமா என்றார். அதற்கு இவன் ஏன் சார் நான் தான் எந்தத் தப்பும் செய்யலையே, நீங்க எதுக்கு என்னை மன்னிக்கனும் என்று கேட்பான்! இப்படி படுத்துரதுக்குன்னே அந்த மாதிரி நோஞ்சான் ஆசாமிகளையே புடிப்பான்! பாவம் அவர்கள்...

இன்னொரு கொடுமையான விஷயம் பஸ்ஸில் யாராவது தூங்கிக் கொண்டே வந்தால் போதும், அவர்களை எழுப்பி ஏன் சார் நீங்க லாஸ்ட் ஸ்டாப்ல இறங்கப் போறீங்களா என்று கேட்பான்! ஆமா ஏன் கேட்குறீங்கன்னு அவர் கேட்டா, இல்லை எனக்கு உட்கார இடம் கிடைக்காதே நான் அடுத்த சீட்டுக்குப் போறேன்! என்று சொல்லி விட்டு அடுத்த சீட்டுக்கு போய் விடுவான், அவர் மறுபடியும் தூங்க ஆரம்பித்தவுடன் மறுபடியும் தட்டி எழுப்பி "தாங்க்ஸ் சார்" என்பான்! அதுக்கப்புறம் அவர் தூங்குவார்னு நினைக்கிறீங்க?

ரோட்டில் போகும் முன்பின் பார்க்காத பெண்ணிடம் உங்க பேர் என்ன என்று ஆரம்பிப்பான். அது உங்களுக்கு எதுக்குன்னு அந்த பொண்ணு கேட்டா "என்னங்க? பேர் தெரியாமயாடா லவ் பண்றேன்னு பசங்க கிண்டல் பண்றாங்கல்ல" என்று ஒரு குண்டைத் தூக்கிப் போடுவான்!! அவள் அதிர்வதைப் பார்த்து, ஐய்யய்யோ சும்மா சொன்னேங்க சத்தியமா நான் உங்களை லவ் பண்ணலை, அப்புறம் உங்க friend என்னை சும்மா விடுவாளா என்பான்! அவள் புரியாமல் இவனைப் பார்ப்பாள். என்னங்க இன்னுமா புரியலை, என்ன நீங்க போங்க!! என்பான். அவளும் மாலாவோட.... என்று இழுப்பாள்! அப்பா!!! இவ்வளவு நேரமா என்று
ஒரே போடாகப் போடுவான்! அப்படி அந்த பெண் சொல்லவில்லையென்றால் என்ன செய்வான் என்று நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது..அவன் 10 பெண்களிடம் கேட்டால் ஒரு ரெண்டு பெண் தான் இந்த பதிலைத் தரமாட்டார்களாம்..இப்படியே அவன் பல பேரை friend பிடித்து வைத்திருந்தான்னா பாத்துக்குங்க!

காலேஜில் யாராவது பெண் இவனை ராக்கி கட்ட வந்தால், அவள் வந்து பக்கம் நின்றவுடன் அவள் கண்ணோடு கண் வைத்து ஐ லவ் யு என்பான்!

இப்படிப் பட்ட ஒருவனோட வாழ்க்கையில திடீர்னு ஒர் அதிர்ச்சிகரமான விஷயம் நடந்தது!!

அட வாங்க சார், இவ்வளவு நேரமா வர்றதுக்கு..என்ன கதை முதல்ல இருந்தா..சொல்லிட்டா போச்சு!!

அவன் ரொம்பவே வித்தியாசமானவன்.....அவனைப் பொருத்தவரை எல்லாவற்றிலும் தன்னை வித்தியாசமாய் காட்டிக் கொள்ள வேண்டும்!...................................



மழை, மழைன்னு எழுதி எழுதி blog யே சொத சொதன்னு ஆயிடுச்சுப்பா!! ஒரு change க்கு கொஞ்சம் wague ஆ எழுதிக்கிறேன்!

எழுத ஆரம்பிக்கும்போது இதன் கரு என்னுடைய ஒரு நொடி எண்ணமாக இருந்தது..அது வளர்ந்து இந்த நிலையை எட்டி உள்ளது!

இது ஒரு வரிக் கதை இல்லை
இது sudden ficationa? இல்லை
இது ஒரு கட்டுரையா? இல்லை
இது சுயசரிதையா? இல்லை
ஒரு கவிதையை உரைநடை படுத்த முயற்சிக்கிறாயா? இல்லை!

நான் எழுதி இருக்கும் இந்த பத்திகளுக்கு என்ன பெயர் வைப்பது என்றே எனக்குத் தெரியவில்லை..அதையும் உங்களிடமே விடுகிறேன்! பல எழுத்தாளர்கள் சொல்வதைக் கேட்டிருக்கிறேன்!! ஏதாவது எழுதுங்கள் என்று!! அப்படி ஒரு முயற்சி தான் இது..

திடீரென்று அவனுக்கு அந்த பயம் வந்தது..அதை பயம் என்று சொல்ல முடியாது! அதை எப்படி எடுத்துக் கொள்வது என்று அவனுக்குப் புரியவில்லை. காலையில்
எழுந்து கண்ணாடி பார்க்கும் போது முதன்முதலாய் தோன்றியது அது. "அட, நம்ம hero மாதிரி இருக்கோமே" என்ற நினைவைத் தொடர்ந்து வந்தது அந்த நினைவு! அந்த கன நேர நினைவை அவனால் ஏனோ அலட்சியப்படுத்த முடியவில்லை. அதை மறுபடி மறுபடி யோசித்துப் பார்த்தான். அது நடந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து கொண்டே இருந்ததால் அந்த நினைவு இவனிடம் நெருக்கமாகி இருக்க வேண்டும் என்று அவன் நினைத்தான். இப்பொழுது
அதை நினைத்தால் அவனுக்கு எரிச்சல் வருகிறது. அவன் மீதே அவனுக்கு கோபம் வருகிறது..ஏன் தேவையில்லாததைப் பற்றி இவ்வளவு யோசித்தோம் என்று அவனே அவனைத் திட்டிக் கொள்கிறான்! ஏனோ அவன் படும் பாட்டை அவனுடைய மனசாட்சி ரசித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் வேறு எதைப் பற்றியோ யோசித்துக் கொண்டிருக்கும் போது, "இல்லை, நாம் இதைப் பற்றி யோசிப்போம்" என்று எடுத்துக் கொடுத்து அவனை எரிச்சல் படுத்துமா? மனம் ஒரு குரங்கு என்று இதற்குத் தான் சொன்னார்களோ, அவனுக்கு என்னமோ அவன் மனம் ஒரு குரங்கல்ல..ஒரு குரங்குக் குடும்பமே தனக்கு மனமாய் வாய்த்திருப்பதாய் அவனுக்குப் பட்டது! அது தன் தோள்களிலும், தலையிலும் ஏறி உட்கார்ந்து தன்னைப் பார்த்து நகைப்பதாகத் தோன்றியது!

எனக்கு அது உறுதி, எனக்கும் கட்டாயம் அது நடக்கும் என்று தெரியும், ஏதோ நான் தெரியாமல் அதைப் பற்றி யோசிக்க ஆசைப்பட்டேன், என்னை விட்டு விடு என்று கெஞ்சினான். அது அவ்வளவு சீக்கிரத்திலா மசிந்து விடும். மாறாக இவனை நோக்கி எள்ளி நகையாடியது. ஏய், போச்சுடீ, அது உனக்கு நடக்கும்
பாரு..என்று அவனுக்கு பூச்சி காட்டியது. ஐய்யய்யோ அதற்குள் நாம் ஏதாவது உறுப்படியாய் செய்தாக வேண்டுமே என்று அவனுக்கு எண்ணத் தோன்றியது! அது அவனுடைய நிழல் வரை வந்து விட்டதாயும், ஒரு சிறிய காலத்திற்குள் அது அவனைப் பிடித்து விடுவதாயும் அவனுக்குத் தோன்றியது.

இதை 2 வகையாக முடிக்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது!!

முடிவு 1:

இனி இதை நம்மால் ஜெயிக்க முடியாது, ஒரு மனோதத்துவ நிபுணரிடம் போவது தான் சரி என்று அவனுக்குப் பட்டது. இதுவும் அந்த குரங்குக் கூட்டத்திலிருந்த ஒரு குரங்கு தான் அவனுக்குச் சொன்னது..அது நல்ல குரங்கு போலும்!! வழியெங்கும் அந்தக் குரங்குகள் கும்மாளம் போட்டுக் கொண்டே வந்தன!! அவன் அந்த
நல்ல குரங்கை அந்த கூட்டத்தில் விடாமல் தேடிக் கொண்டிருந்தான்! ஆனால் அது எப்போதேனும் ஒரு முறை "வழியில் இருக்கும் அழுக்குப் பிச்சைக்காரனைப் பார்த்தோ, சாலை கடக்கும் வயதான கிழவியைப் பார்த்தோ இவனிடம் அவர்களுக்காக பரிதாபப்பட வந்து போய்க் கொண்டிருந்தது!! அது என்ன செய்யும், பாவம் அந்த ஒரு நல்ல குரங்கின் எதிரிகளாய் ஒரு கூட்டமே இருக்கிறதே.. சில சமயங்களில் அவை போடும் இரைச்சலில் நல்ல குரங்கு என்ன சொல்கிறது என்றே அவனுக்குப் புரிவதில்லை!! அவனுக்கு நல்ல குரங்கிடம் பிடிக்காத ஒரு விஷயம் அது சீக்கிரமே தன் தோல்வியை ஒப்புக் கொள்கிறது!! இப்படி எல்லாம் அசை போட்டுக் கொண்டே அங்கு போய் சேர்ந்தவனுக்கு ஒரு ஆச்சர்யாம் காத்திருந்தது...

உங்களுக்கே இன்னேரம் புரிந்திருக்கும்.....ஆம், அந்த மனோதத்துவ நிபுணருக்கும் அது நேர்ந்திருந்தது!!

முடிவு 2:

அவன் அதுகளிடம் பேசிப் பேசி ஓய்ந்து விட்டான்! குரங்குகள் என்றைக்கு மனிதன் பேச்சைக் கேட்டது என்று அவனுக்கும் புரியத் தான் செய்தது..

ஒருநாள் திடீரென்று, ஒரு வேளை நமக்கு பைத்தியம் பிடிக்கிறதோ என்ற சந்தேகமும் அவனுக்கு வந்தது! "இல்லை, இல்லை..இதைப் பற்றி நான் அதிகம் யோசிக்கப் போவதில்லை, இதுவும் அந்த குரங்குகளின் வேலை தான்!!" என்று அவன் நினைத்துக் கொண்டான்! அப்படி அவன் மீறி யோசித்தால் அது அவனை உண்மையிலேயே பைத்தியம் ஆக்கி விடும் என்று அவன் உறுதியாக நம்பினான்! ஆகவே நீங்களும் அதைப் பற்றி நிறைய யோசிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்!

இப்பொழுதெல்லாம், அந்த நினைவு வந்தாலே அவன் மாறாக "சிம்ரனை" யோசித்துக் கொள்வதாய் கேள்வி!!


இன்னொரு மழை நாள்!

நள்ளிரவு!

பெரிய மாடு ஒன்று சடசடவென மூத்திரம் பெய்வதைப் போல பெரும் சத்தத்துடன் மழை பெய்கிறது.

வழக்கம் போல் இன்றும் late ஆகி விட்டது. ஒரு வழியாய் சாலையில் என் வண்டியில் வழுக்கிக் கொண்டு என் வீடு சேர்ந்தேன். வண்டியை நிறுத்தியவுடன் தான் அது துல்லியமாய் கேட்டது! நான் என் வீட்டு கேட் நோக்கிப் போகிறேன். அந்த சத்தம் மிக நெருங்கி விட்டதாக உணர்வு. யாரோ ஒரு ப்ரகஸ்பதி நள்ளிரவு 12:00 மணிக்கு அலாரம் வைத்திருக்கிறான். என் வீட்டில் தற்போது கட்டட வேலை நடப்பதால் watch man என் வீட்டின் veranda வில் குடித்தனம் நடத்துகிறார். அவர் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறார். அவருடைய அருகாமையில் தான் அந்தச் சத்தம் கேட்கிறது. இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. நான் என் கையிலிருந்த tube light ஐ [அதாங்க 2100!!] போடுவதற்கும் என் நண்பன் கதவைத் திறப்பதற்கும் சரியாய் இருந்தது. அவன் மிகவும் எரிச்சலுடன் "டேய் first அதை off பண்றா! அப்போ இருந்து தூங்க விடாம!" அவன் veranda light போட்டவுடன் அந்த குட்டி கடிகாரத்தைக் கண்டு பிடித்தோம். அவன் அதை கையில் எடுத்தவுடன் அது கப்சிப் ஆகி விட்டது. [கவனிக்க: watch man இன்னும் அயர்ந்து தூங்குகிறார்!] அவன் வெறுப்புடன் "நல்ல அலாரம்!" என்று இருந்த இடத்தில் வைத்து விட்டு வீட்டுக்குள் நுழைந்தோம்.

அவன் போய் தூங்கப் போய் விட்டான். நான் என் நனைந்த ஆடைகளை மாற்றிக் கொண்டு அப்பாடா என்று தூங்கப் போனேன். தலை சாய்த்ததும், அது வரை காத்திருந்தது போல அந்த சத்தம் மறுபடியும் ஆரம்பித்தது..அடடா, இது நம்மை தூங்க விடாது போலிருக்கிறதே என்று நான் எழுந்தவுடன் என் நண்பனும் எழுந்து விட்டான். மறுபடியும் veranda light போட்டு, அதை இந்த முறை நான் கையில் எடுத்தேன். [கவனிக்க: watch man இன்னும் அயர்ந்து தூங்குகிறார்!] கையில் எடுத்தவுடன் மறுபடியும் அதே போல் சமத்தாய் கப்சிப்!! "இது ஆவுரதில்லை" என்றான் என் நண்பன். நீ உள்ளே கொண்டு வா, என்று சொல்லி இருவரும் சேர்ந்து battery ஐ எடுத்து விட்டோம். ஏதோ ஒரு சாதனை செய்தது போல இருவரும் சிரித்துக் கொண்டே படுக்கச் சென்றோம்! இருட்டில் அந்த கடிகாரம் என்னைப் பார்த்து "என் சத்ததை நிறுத்திட்டே இப்போ இந்த சத்ததை என்ன செய்வே?" என்று கேட்பது போலிருந்தது!! என்ன சத்தமா?

பெரிய மாடு ஒன்று சடசடவென மூத்திரம் பெய்வதைப் போல பெரும் சத்தத்துடன் மழை பெய்கிறது.

இதை நான் எழுத முக்கியமான இரு காரணங்கள்!

1. பேய் மழை தரும் சத்தத்தில் கூட நம்மால் நிம்மதியாய் தூங்க முடிகிறது, ஆனால் ஒரு சின்ன அலாரம் உண்டாக்கும் சத்தம் நம் தூக்கத்தைக் கெடுக்கிறது.
2. அலாரம் watch man க்கு மிக அருகில் இருந்தாலும் அவரால் நிம்மதியாய் தூங்க முடிகிறது! உள்ளே fan சத்தத்துக்கு நடுவே படுக்கும் நம்மால் தூங்க முடியவில்லையே! [Important Note: இந்த வாக்கியத்தை படிக்கும் போது கண்டிப்பாய் சிவாஜி தோரணையில் படிக்கக் கூடாது!!!
]


ஒரு மழை நாள்!

ஜன்னலின் வழியே மெல்லிய சாரலோடு ஒரு குளிர் காற்று என் முகத்திலறைந்தது..கையில் சூடான coffee! அடிக்கடி பெயர் மறந்து போகும் வடநாட்டுக் கலைஞரின் சிதார் இசை டேப்பிலிருந்து காற்றில் தவழ்ந்தது. மழையின் பேரிரைச்சலுடன் அந்த சிதார் இசை கலந்தது, வெகு நாட்களுக்குப் பிறகு ஒன்று கூடிய இளம் காதலரை எனக்கு ஞாபகப் படுத்தியது. அது அந்த சூழலை மேலும் ரம்மியமாக்கிக் கொண்டிருந்தது..நான் நாற்காலியை ஆட்டிக் கொண்டே ஜன்னலின் வழியே மழை நனைக்கும் என் தெருவை ரசித்துக் கொண்டிருந்தேன்! "இங்கே நான் சுத்தம் செய்தால் உண்டு" என்று பொருமிக் கொண்டே வீட்டை சுத்தம் செய்யும் அம்மாவைப் போல் மழை பேரிரைச்சலுடன் தெருவை சுத்தம் செய்து கொண்டிருந்தது.. என் வீட்டுக்கு சற்று தள்ளி ஒரு மார்க்கெட் இருப்பதால் ஜன்னல் வழியே வருவோர் போவோரை வேடிக்கை பார்ப்பதே எனக்கு மிகவும் பிடித்தமான பொழுது போக்கு...

எத்தனை விதமான் மனிதர்கள்? ஒருவர் கூட மற்றவரின் சாயலில் இல்லையே..நான் பார்த்த வரை, தனியே செல்லும் பெரும்பாலோர் தனக்குத் தானே பேசிக் கொண்டே போகிறார்கள். ஒரு வேளை அவர்கள் பாடிக் கொண்டே போகிறார்களோ? ஜன்னலிலிருந்து பார்ப்பதால் எனக்கு அப்படித் தெரிகிறதோ என்னவோ? ஜன்னலில் நான் வேடிக்கை பார்க்க உட்கார்ந்து விட்டால் நான் கடவுள் என்று எனக்குத் தோன்றும். ஆண்டவன் நம்மை படைத்து விட்டு மேலே இருந்து நம்மைப் பார்த்துக் கொண்டு இருப்பதைப் போல், அவர்களுக்குத் தெரியாமல் நான் அவர்களைப் பார்த்து கொண்டிருக்கிறேன்..கடவுள் நம்பிக்கை உள்ள ஒரு சிலர் மேலே பார்த்து கடவுளே என்பது போல் ஒன்றிரண்டு பேர் நான் பார்ப்பதை பார்ப்பார்கள். அவ்வளவு தான்..இந்த உவமைக்கு மிகப் பொருத்தமான் இடம் மொட்டை மாடி தான்!!

ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் சிரிக்கிறார்கள் என்பது என் தாழ்மையான கருத்து..2 பெண்கள் சேர்ந்து போனால் என் ஜன்னலைக் கடப்பதற்குள் அவர்கள் இரண்டு முறை "கழுக்" கென்று சிரித்து விடுவார்கள்! "இன்னைக்கு என்னடி லேட்டு" என்று கேட்டு விட்டு சிரிப்பார்களோ? எப்படியோ மழை, மழலை, கவிதை, தென்றல், இயற்கை, நிலவு இந்த வரிசையில் வருவது பெண்களின் சிரிப்பு! அது கவித்துவமானது..இந்த சிதார் இசைக்கும் அவர்களின் குறுநகை எழுப்பும் சத்தத்திற்கும் நிறைய வித்தியாசம் இல்லை என்றே நினைக்கிறேன்.

குனிந்து மேலே பார்த்தேன்..வானம் எதிர் வீட்டுக் கண்ணன் வீட்டின் மொட்டை மாடியில் முடிந்து விடுவதைப் போலிருப்பதை நினைத்து எனக்குள் சிரித்துக் கொண்டேன்..அதற்கு வானம் ஒரு இடிச்சிரிப்பு சிரித்து "அடேய் மடையா..நீ ஒரு வட்டத்திற்குள்ளிருந்து என்னைக் காண்கிறாய், நான் விசாலமானவன் என்று உனக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை" என்றது..மேலும் "கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு" ஸ்டைலில் மேகங்கள் கங்கனம் கட்டிக் கொண்டு மழை ஊற்றிக் கொண்டிருந்தது..

தெருவில் செல்வோரில் பாதிக்கு மேற்பட்டோருக்கு மழையை பிடிக்கவில்லை..சிலர் புலம்பிக் கொண்டும், சிலர் முகத்தை அஷ்ட கோணலாக்கிக் கொண்டும் சென்று கொண்டிருந்தனர்..குழந்தைகள் மட்டும் தான் மழையை அனுபவிப்பதாகத் தோன்றியது. அவர்களின் முகத்தில் தான் மழையைக் கண்டதும் உற்சாகம் தெரிகிறது. மனிதன் தான் வளர்ந்ததும் எவ்வளவு மாறி விடுகிறான்!! எத்தனை தேவை இல்லாத பயங்கள் அவனைத் தொற்றிக் கொள்கிறது..மழையைக் கண்டதும் இவர்கள் நினைவுக்கு முதலில் வருவது VICKS, D-COLD தானோ? இந்தக் கவலையால் குழந்தைகளையும் இவர்கள் நனைய விடுவதில்லை.."டேய் வாடா இங்கே..தலை துவட்டு, அப்புறம் சளி புடுச்சுடும்" குழந்தைகளைக் கண்டால் எல்லோருக்கும் பிடிக்கும்..சளிக்கும் பிடிக்கிறது! எனக்குத் தெரிந்து மழையில் நனைந்ததால் இதுவரை எனக்கு சளி பிடித்ததில்லை..இன்றும் வழக்கம் போல மழையில் தொப்பலாய் நனைந்து தான் வந்தேன்..அம்மாவும் வழக்கம் போல அர்ச்சனை செய்தாள்! வாழ்வில் இப்படி எத்தனையோ எழுதாத சட்டங்கள் எல்லா வீட்டிலும் இருக்கத் தான் செய்கிறது.

மழையைப் பிடிக்காதவர்கள் அதனுடன் சமாதானம் பேசாமல் ஒரு கருப்புக் குடையுடன் மழையை எதிர்த்தால், மழை எப்படி சமாதானமடையும் சொல்லுங்கள்? "மழை கவிதை கொண்டு வருது யாரும் கதவடைக்க வேண்டாம், ஒரு கருப்புக் கொடி காட்டி யாரும் குடை பிடிக்க வேண்டாம்!" என்ற வைரமுத்துவின் கவிதை நினைவுக்கு வந்தது.. மனுஷன் ஒன்னு புதுசா யோசிக்க விட மாட்றாரே..எல்லாத்தையும் இப்படி யோசிச்சி எழுதி வச்சுட்டாரேன்னு அழுத்துக் கொண்டேன்! அட சிதார் இசை நின்னுருச்சே..அதுக்குள்ள "A" side முடிஞ்சுருச்சா என்ன? சரி நான் போய் "B" side வச்சுட்டு வந்த்ர்றேன்! no no..நான் வர்றதுக்குள்ள நீங்க இந்த நாற்காலியிலே உட்கார்ந்துட்டா? idea!! இங்க என்னைத் தவிர யாராவது உட்கார்ந்தா ஆயிரம் பாவம்!! டஸ் புஸ்...[க்ராஸ் போட்டுக் கொண்டே!!]

இளவரசியாரின் blog பார்த்தேன்..அட நம்மளும் படம் வரைவோமே, அதை ஏன் இவங்களை மாதிரி நாமளும் போடக்கூடாதுன்னு தோனுச்சு, அதன் விளைவு தான் இது...நான் எழுதியவைகளிலிருந்து என் கையெழுத்து நன்றாய் இருந்ததை நீங்கள் பார்த்தீர்கள்! [டேய்
[computer ல எல்லார் கையெழுத்தும் நல்லா தா ன்டா இருக்கும்..இந்த dialogeம் friend கிட்ட இருந்து சுட்டது தான்..ஹிஹி] இன்று இங்கே நான் வரைந்த படங்களில் சிலவற்றைப் பாருங்கள்!

குறிப்பு: இது அத்தனையும் computer ல் Flash, Photoshop ல் வரைந்த படங்கள்..DIGITAL ART ம்பாங்களே அதே தான்..

Mickey

colorfulla இருக்கா?

Scenery

எனக்கு மிகவும் பிடித்த ஓவியம்..

Mummy

என்ன ஒன்னும் புரியலையா? ஒருத்தி தன் கைல குழந்தை வச்சுட்டு நிக்கிறா, நான் வரைஞ்ச லட்சணம் அப்படி!

SadLady

online ல் picasso ஓவியங்களைப் பார்த்து copy அடித்தேன்..ஏதோ ஒரு சின்ன குழந்தை கிறுக்கியதைப் போலிருக்கிறது அந்த ஓவியம்! picasso இப்படிப் பட்ட
ஓவியங்களையும் வரைந்திருக்கிறார்!

Head-Picasso

இது எனக்கு மிகவும் பிடித்த ஓவியம்..ofcourse copy தான்..

SisterWood


எப்படி? படம் காட்டிட்டோம்ல?


சமீபத்தில் அழகிய தீயே என்று ஒரு கவிதை பார்த்தேன்! ஆமாம், அது படம் அல்ல, கவிதை தான்..இயல்பான கவிதை.

காதல் எப்படி நமக்குத் தெரியாமல் உள்ளே சென்று ஒரு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமோ அதே போல் தான் இந்தப் படமும் என்னுள் எனக்கே தெரியாமல் ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது!

நான் இங்கு படத்தைப் பற்றி பேசப் போவதில்லை..அதனால் எனக்கு விளைந்த விளைவுகளால் நீங்கள் படத்தைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்!

Disclaimers: இதே போன்று உங்களுக்கும் ஆகுமென்று கட்டாயமில்லை..நான் கொஞ்சம் over தான்..

படம் பார்த்த மறுநாள் வண்டியில் office சென்று கொண்டிருந்தேன்..என் தம்பியை bus stop ல் விட்டுச் செல்வது வழக்கம். படத்தைப் பற்றி யோசித்துக் கொண்டே stop ஐ கடந்து போய்க் கொண்டிருந்தேன்..அவன் பின்னால் உட்கார்ந்து கதறிக் கொண்டிருந்தான்!! சுய நினைவு திரும்பி அவனை இறக்கி விட்டதும், என்னை கை நீட்டி ஏதோ சொன்னான்..நல்லவேளை helmet மாட்டி இருந்ததால் சரியாய் காதில் விழவில்லை!

இன்னொருமுறை வேறு வண்டியில் உட்கார்ந்து கொண்டு சாவி ஏன் உள்ளே போக மாட்டேங்குது என்று முழிக்கும் போது, டேய் நம்ம வண்டி அங்கே இருக்கு, யாராவது பாத்துரப் போறான் எறங்குடா என்றான்.................வேறு யார் சாட்சாத் என் தம்பி தான்..

தம்பியுடையான் படைக்கஞ்சான்!

அந்தப் படம் என்னுள் ஏற்படுத்தி இருக்கும் தாக்கத்திற்கு இந்த இரண்டு உதாரணம் போதுமென்று நினைக்கிறேன்! இனி நீங்களே படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்!!


தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமன் போல்..மீண்டும் ஒரு sudden fiction கதை..

சூலமங்களம் சகோதரிகள் பக்கத்து கோயிலிலிருந்து தலையில் தட்டி எழுப்பினார்கள்! விடிந்து விட்டதா? அதற்குள்ளா? இப்போ தானே படுத்தேன்..திடீரென்று
நேத்து ராத்திரி நடந்தது ஞாபகம் வந்தது!! நினைக்கவே குஜாலா இருக்கே..எப்படி நான் இப்படி எல்லாம் பண்ணேன்? நான் சாதுவாச்சே..நேத்து ராத்திரி நீ
பண்ண கூத்தைப் பாத்தா உன்னை யாராவது சாதுன்னு சொல்வாங்களாடா? என்று மனசாட்சி திட்டியது..

மனசாட்சி அன்னாத்தே, இதெல்லாம் உன்னை பக்கத்துல வச்சுட்டு செய்ய முடியாது..நீ கொஞ்சம் ஓரங்கட்டிரு, ஆமாம் என்றேன்!

எல்லாம் அவன் பண்ண வேலை, அவனுக்கு அது தான் வேலையே..தெய்வாதீனமா எனக்கு இப்படி ஒரு friend..திடீர்னு நேத்து evening phone பண்ணி டேய்,
ரொம்ப நாளா ஏங்கிகினு கிடந்தியே, இன்னைக்கு night ஒரு 12:30 க்கு அப்பால அத்தெ ஓட்டிட்டு வர்றேன்..உன்னோட தாகம் எல்லாம் இன்னைக்கோட close
இன்னா? என்றான்..அவனும் அவன் தமிழும்!! எனக்கு தலை கால் புரியவில்லை...office இருந்து சீக்கிரமே கிளம்பி, எல்லாம் ரெடி பண்ணனும்ல? ஹிஹி..

அவனுக்காக wait பண்ணி பண்ணி தூங்கி போயிட்டேன்..கதவு தட்டும் சத்தம்..தூக்கி வாரி போட்டது..அவன் தான்..என்னைப் பார்த்து குறும்பாய் சிரித்தான்..கீழே
தான் நிக்குது..ஜமாய்னான்!!! அப்பாடா, ஒரு 1 மணி நேரம் பெண்டு கழண்ட்ருச்சுப்பா....

சிகெரட் கையை சுட்டது, oh flashback முடிஞ்சுட்டதா என்று பாத்ரூம் நோக்கிப் போனேன்! மனசில் இன்னும் பட்டாம்பூச்சி பறந்தது!!

பாத்ரூமைத் திறந்தேன்..எல்லாவற்றிலும் தண்ணீர் நிரம்பி வழிந்தது!! அந்த ஆண்டவானாப் பாத்து தான் எனக்கு தண்ணி லாரி ஓட்றவனை friend ஆ
அனுப்சிருக்காரு என்று ஒரு கும்பிடு போட்டு, "குத்தால அருவியிலே குளிச்சது போல் இருக்குதா?" ஹிஹி..குஷி வந்துட்டா நான் பாடுவேன்.ஹிஹிஹி...