"விடியல்" - என் முதல் குறும்படம். நேற்று தான் இதன் வேலைகள் அனைத்தும் முடிந்தது. இன்று உங்கள் பார்வைக்கு...2014 எனக்கு நன்றாய் விடிந்திருக்கிறது :-)

படத்தை பார்க்கும் "முன் குறிப்புக்கள்":

1. இது என் முதல் முயற்சி. ஒரு மிகச் சில நிறைகளும், பலப் பல குறைகளும் உங்களுக்குத் தெரியலாம். குறையோ நிறையோ, எதுவாயினும் எனக்குச் சொல்லுங்கள். அடுத்த படத்தில் அதை திருத்திக் கொள்கிறேன்! [அடுத்த படம் வேறயா?!]
2. உங்களுக்கு படம் புரியவில்லை என்றால் அது என் குறையே அன்றி உங்கள் குறை அல்ல! [இது எங்களுக்கே தெரியும்!] அதனால் மனம் தளராமல் இரண்டாம் முறை பார்த்து விடுங்கள்!
3. பத்து நிமிட படம் தான். நல்ல ஒரு ஹெட் ஃபோன் இருந்தால் காதில் மாட்டிக் கொண்டு படத்தை பாருங்கள். ["எத்தனை தடவை கூப்பிடறேன், காதுல எதாச்சும் வாங்குறீங்களா?" என்று உங்கள் மனைவி உங்களை திட்டினால் என்னை திட்டாதீர்கள்!]
4. இனி படம்.


7 Responses
  1. Anonymous Says:

    good ...
    some times screen/widow shakes??
    i liked the music ...


  2. அருமை... வரும் ஆண்டு மேலும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்...


  3. தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் உட்பட அனைவருக்கும் எனது மனமார்ந்த 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    அன்புடன் DD


  4. Anonymous Says:

    Good try.

    1. Why is he smiling at the towel and throwing it?

    2. When did he become blind? Because he don't seem to remember old Rajini... But guessing it. If he didn't know the new Rajini then it is logically correct....



  5. Anonymous Says:

    Good One! இரண்டாவது முறை பார்த்தேன். ராஜ பார்வை பாட்டு, துண்டு, கண்ணாடி, கண் கலங்குவது, காசு, அனுமதிச்சீட்டு, ரஜினி,எதுவும் முடிவைச் சொல்லவில்லை. நடிப்பு.,
    இசை, ஒலி, ஒளிப்பதிவு, தொகுப்பு, அனைத்தும் அருமை.
    வாழ்த்துக்கள்!


  6. pradeepa Says:

    Really nice nice feel . I get this kind when I opened my eyes after I finished my laser treatment for minus power. I look everything in my own eyes without spects and lens . I look each and every thing similar to this