தமிழ் கூறும் நல்லுலகிற்கு வணக்கம். இவ்வளவு சீக்கிரம் ஒரு பதிவுடுவேன் என்று நினைக்கவில்லை. அதுவும் மிகச் சரியான நேரத்தில், மிக அருமையான பதிவு இது. தேர்தலைப் பற்றிய ஒரு ஆவணக் குறும்படம்! தேர்தல் களை கட்டியிருக்கும் இந்த நேரத்தில் இப்படி ஒரு குறும்படத்தில் வேலை செய்தது மனதுக்கு இதமாய் இருந்தது. அதுவும் டுபுக்காருடன் வேலை பார்ப்பது என்றால் கசக்குமா? முதலில் படத்தைப் பாருங்கள், பிறகு சொல்கிறேன்.


நான் இதுக்கு மேல ஒன்னும் சொல்ல வேண்டியதில்லை. படமே எல்லாம் சொல்லிடுச்சு. என்ன உடனே ஓட்டு போடணும்னு கை அறிக்குதா? இதை தானே எதிர் பார்த்தோம். படம் ரொம்ப நல்ல வந்துருக்கே, நீ வேலை பாத்தேன்னு சொல்றே, எப்படின்னு தானே முழிக்கிறீங்க? சொல்லிடறேன்! நான் இந்தப் படத்துல அப்படி ஒன்னும் பிரதானமா வேலை பாக்கலை! [அதானே கேட்டேன்!] ராமருக்கு அணில் உதவின மாதிரின்னு வச்சுக்கலாம். படம் எல்லாம் முடிஞ்சு டைட்டில் கார்ட்ல என் பேரை பாத்தீங்களா? அதுக்கப்புறம் தான் என் வேலையே வருது! மை வச்ச கை ஒன்னு வருதே? பாத்தீங்களா? என்ன பாக்கவே இல்லையா? ஹலோ, அது தாங்க நான் போட்ட படம்! 

அதாவது, டுபுக்கார் அவரை உன்னால் முடியும் தம்பி கமல்ன்னு அடிக்கடி சொல்லிக்கிறாரே, ஏன் இவருக்கு இந்த விளம்பரம்னு நெனைசுருக்கேன், அவர் கூட வேலை பாக்கும் போது தான் அது தெரியுது! கமல் மாதிரி தான் வேலை வாங்குறாரு! அவ்வளவு டீடைலிங்! லண்டன்ல உக்காந்துட்டு அந்த விரல் மேல என்ன ஒரு கரை, அந்தக் கலர் இல்லையே இதுன்னாரு! உங்களுக்கு பார்வையே இல்லை; ஜோதின்னு சொன்னேன்! எப்படியோ, என்னையும் ஒரு ஆளாய் மதித்து, ஏதோ நான் ஸ்கூல் படிக்கும் போது டிராமால ஒரு ராணி வருவா, அதுக்கு சாவரி போட்ருக்கேன்னு சொன்னதை கேட்டுட்டு எனக்கு இவ்வளவு பெரிய ரோல் கொடுத்துருக்காரு!  எதோ என்னால முடிஞ்சதை செஞ்சுருக்கேன். உங்ககிட்ட இன்னும் நிறைய எதிர்பார்க்குறேன்னு காதல் பட டைரக்டர் ரேஞ்சுக்கு சொல்லியிருக்கார், மைன்ட்லையும் வச்சுருக்காரு! பாப்போம்!

Jokes apart, படத்தை பார்த்து விட்டு, தங்களின் மேலான கருத்துக்களை சொன்னால் தன்னியர்களாவோம்! எனக்கு கமெண்ட் போடுகிறீர்களோ இல்லையோ, ஒழுங்காய் சென்று ஓட்டாவது போடுங்கள்! சொல்ல மறந்துட்டேன், இந்த குறும்படத்தை தங்களின் வலைதளத்தில், ட்விட்டரில், ஃ பேஸ்புக்கில் தாராளமாய் பகிர்ந்து கொள்ளலாம்!
6 Responses
  1. Anonymous Says:

    நாம தான் மாற்றா இருக்கணும்..இளைஞர்கள் அரசியலுக்கு வரணும்..சும்மா சாக்கடை இன்னு சொல்லகூடாது..இறங்கி வேலை பாக்கணும்..நீ பண்ணுவியா? எத்தன நாளைக்கி? ஒரு வருஷம்?ரெண்டு வருஷம்? ...மக்கள்கிட்ட நம்பிக்கை வர்ற வரைக்கும் பண்ணனும்! முடியுமா?

    சும்மா அய்யா ஆட்சில இருந்த அவர விட்டுட்டு அம்மாவுக்கு, அம்மா ஆட்சில இருந்த அய்யாவுக்கு மாத்தி மாத்தி போட்ட விளங்காது!

    வெங்கடேஷ்


  2. venky,

    sari da, sari da...cool! nee soldrathellam sari thaan! ipo naan enna thappa sollitten. vote podrathai valiyuruthi oru padam thaaneda eduthurukkom. athu sari, namma collage padikkira kaalathula irunthu naan politics la poga porennu sonnavan nee oruthan thaan! nee epo poga pore? athai sollu...


  3. எப்பவும் ஒழுங்க மறக்காம போய் முதல் ஆளா போட்டுடுவேன்.கண்டிப்பா ஓட்டு போட்டுடறேன். விரல் அதுவும் மை வெச்ச விரல் அற்புதம். அழகு. அருமை.


  4. thanks pinnokki! feels good somebody appreciates our work! you made my day...


  5. Unknown Says:

    well done pradeep..my wishes to ur team too...