வானுயர்ந்த கண்ணாடி கட்டிடங்கள் - வாழ்க்கை
தொலைந்து போகும் கருஞ் சிறைகள்

வயிறு வரை தொங்கும் கழுத்துபட்டை கெளரவம் - ஒரு
நாள் மறந்தால் உள்ளே அனுமதி மறுக்கும் கேவலம்

சுற்றிலும் பராமரிக்கப்படும் அழகு - பார்வை
கணினியைத் தாண்டாது, பிறகு?

சுழலும் நாற்காலியின் சொகுசு - முதுகுத்
தண்டை பதம் பார்க்கும் பிறகு

இணையத்தினால் கைக்குள் உலகம் - ஆனால்
பக்கத்தில் இருப்பவனுக்கு மின்னஞ்சல்

உடல் உழைப்பின் அசதியில்லை - நெஞ்சு
சட்டென்று நின்று போகும் வரை, பயமில்லை

வேண்டிய மட்டும் பணம் - அள்ளி 
அள்ளிக் கொடுத்தாலும் திரும்பாத காலம்

ஆயிரத்து ஐநூறு ரூபாய்க்குச் சட்டை - முப்பத்தைந்து 
வயதில் தலை முழுதும் சொட்டை

ஐம்பது லட்சத்தில் வசதியாய் வீடு - படுக்கை
அறை தெரியாது, அசதியாய் வரும்போது

வெள்ளைக்காரனின் பெயர்கள் மனப்பாடம் - மனைவி
மக்களின் பெயர் மறந்து போகும் 

விலையேற்றத்துக்கான பிரதான காரணமென்று தூற்றும் - இருந்தும் 
ஒட்டு மொத்த சமுதாயமும் கூடிச் சுரண்டும்


17 Responses
  1. Anonymous Says:

    கலக்கிட்ட! கலக்கிட்டடா! ரொம்ப நல்ல வந்துருக்கு...சான்ஸே இல்ல!

    வெங்கடேஷ்


  2. en en inda kola veri..

    unmai kasakkum..


  3. thanks da venki, when i started i didnt have any idea...am happy it has come well. ukkanthu ezhuthina ezhutha mudiyuthu...have to do...

    en kashtam enakku thaaneda teriyum. naan sonnathellam unmai, unmaiyai thavira veru ondrum illai :)


  4. Usha Says:

    super ponga, correct-a solli irkeenga...



  5. Thamizhachi Says:

    Pradeep,
    Nidharsanathai solli irukinga pa.
    "Chocolate Vaazhthukal!"...





  6. Unknown Says:

    உடல் உழைப்பின் அசதியில்லை - நெஞ்சு
    சட்டென்று நின்று போகும் வரை, பயமில்லை

    வேண்டிய மட்டும் பணம் - அள்ளி
    அள்ளிக் கொடுத்தாலும் திரும்பாத காலம்
    Nice one......:)


  7. thanks for the comments MOM :)



  8. "ஐ.டி. - க்கு பிரதீப்பை தந்து ஒரு கவிஞனை இழந்துவிட்ட தமிழ் நாடு"


  9. siva,

    naane eppovaavathu ezhuthuren,nee ennadanna romba eppovaavathu vanthu padichuttu comment podre pola...anyways, thanks :)


  10. unmaiyana varigal...rasiththu padiththen!



  11. தனியாகப் படித்தாலும்,
    மொத்தமாகப் படித்தாலும்
    தெளிவாகப் பொருள் தருகிறது.

    வரிக்கு வரி உண்மையை உடைத்திருக்கிறீர்கள்.


    வாழ்த்துக்கள் ப்ரதீப்!