நீ இருக்கும்போதை விட
இல்லாத போது அதிகமிருக்கிறது
உன் இருப்பு!சும்மா இருப்பதே சுகமென்றாலும்
ஏதாவது ஒன்றாய் எப்போதும்
இருக்க வேண்டியிருக்கிறது!ஒரு காந்தி தாத்தாவும்
இரு பாரதியார்களும்
ஒரு ஆண்டாளுக்காக அடித்துக் கொள்கிறார்கள்
மாறுவேடப் போட்டி!

இந்தக் கவிதைக்கு இரு முடிவுகளை கொடுத்திருக்கிறேன். இதில் கவிதைக்கான சரியான தருணம் எது என்று எனக்குத் தெரியவில்லை, உங்களுக்குத் தெரிகிறதா பாருங்கள்!
குழந்தையிடமிருந்து பிடுங்கிய பொம்மையை
என் முதுகுக்குப் பின்னால் மறைத்து கொண்டு
"காக்கா தூக்கிட்டு போச்சு" என்றேன்!

குழந்தை ஒன்றும் சொல்லாமல் மேலே பார்த்தது!
சட்டென்று பொம்மையை அதன் முன் நீட்டினேன்.

ஆவலோடு பொம்மையை வாங்கி கொண்டது

1. காக்கா எங்கே என்று அதுவும் கேட்கவில்லை,
நானும் சொல்லவில்லை!

2. அதை வாங்கித் தூக்கிப் போட்டு விட்டு,
"காக்கா எங்கே?" என்றது குழந்தை!
3 Responses
 1. Sivakumar Says:

  துரதிஷ்டவசமாக முதல் பதில் தான் சரி. குழந்தைகள் எல்லாம் கேள்வி கேட்க ஆரம்பித்திருந்தால் நாம் (தந்தை உள்பட) எப்போதோ முன்னேறியிருப்போம்.

  அந்த காந்தி பாரதி ஓவியம் சரியாக புரியவில்லை. பாரதி மீசை எனக்கு தெரிகிறது (இதெல்லாம் எப்டிங்க உங்களுக்கு தெரியுது - காதலா காதலா)

  மரத்தில் உட்கார்ந்து சும்மா இருக்கும் ஓவியம் - சூப்பர்.


 2. siva,

  gandhi thaathoda mandai kannadi teriyalai? DD la poduvane, antha mathiri...

  appuram right sidela irukkurathu aandaloda kireedam!

  paravaillaye, ennaala kooda modern art ellam poda mudiyuthe!

  aama, first art la 2 per mutham kodukkura mathiri irukke, teriyutha?


 3. Sivakumar Says:

  காந்தியோட தலை கழுத்து வர்ற எடத்துல இன்னும் வளைவு இருக்கலாம்.

  ஆண்டளோட கிரீடம்? நான் யோசிச்சு பாத்தேன். ஆனா, உன் கவிதைய சரியாய் படிக்கலா போல. அதான் புரியல.

  மாடர்ன் ஆர்ட் நல்ல இருக்கு. தொடர்ந்து செய்.

  அத நான் பட்டம்பூச்சின்னு நெனச்சேன்.