இன்னைக்கு நேரமே சரியில்லை! யார் முகத்துல முழிச்சேனோ தெரியலை. எல்லாமே தப்பு தப்பா நடக்குது. எல்லாம் தப்பு தப்பா நடக்குறது எனக்கு ரொம்ப நார்மல் தான், ஆனா இன்னைக்கு பாருங்க கொஞ்சம் ஜாஸ்தி ஆயிடுச்சு! ஏதோ படத்துல வடிவேலு சொல்வானே, ஒரு மனுஷனுக்கு ஒரே நாள்ல எத்தனை சோதனைடா சாமின்னு, அந்த மாதிரி! வழக்கம் போல காலம்பொற எந்திரிச்சி சவரம் பண்ணலாம்னு ஆரம்பிச்சேன், கழுத்தை லேசா கீறிண்டேன். மார்கழி மாசம் பனி ஜாஸ்தியா இருக்கேன்னு சுடு தண்ணியில குளிக்கலாம்னு நான் ஹீட்டரை போட்றதுக்கும் கரண்ட் கட்டாகுறதுக்கும் சரியா இருந்தது! என்ன எழவோ ஆயிட்டு போறதுன்னு பச்சத் தண்ணிய மடக் மடக்குன்னு ஊத்திகிட்டு, உடம்பை துடைச்சிட்டு பனியனை போட்றேன், ஏற்கனவே சல்லடையா இருந்த பனியன்ல மூணாவதா ஒரு கை வந்திடுச்சி. சனியனை கழட்டி போட்டு முந்தாநாள் போட்ட சட்டையை எடுத்து [ரொம்ப மெல்லமா ஜாக்கிரதையா] போட்டுட்டேன், கொஞ்சம் சுருக்கமா தான் இருந்தது...அதான் கரண்ட் இல்லையே எப்படி அயன் பண்றது? மேலே கேளுங்கோ...

ஒரு வழியா மானத்தை மறைச்சிட்டு வயித்தை கவனிக்கலாம்னு பாத்தா தீஞ்சு போன உப்புமாவை வச்சுட்டு மாலதி, கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க என்று வழிந்தாள். அவளுக்கும் நேரம் சரியில்லையோ என்னமோ? நானும் பெருந்தன்மையா [உண்மையா சொல்லனும்னா ஒரு பயம் தான், அவ கத்த ஆரம்பிச்சுட்டா யாரு என்ன பண்ண முடியும்?]அதை உள்ளே தள்ளிட்டு ரோட்ல கெடக்குற எல்லா கழிசடைகளையும் கடந்து ஒரு வழியா பஸ் ஸ்டாப் வந்து நின்னா, கோனி மூட்டையில எதை எதையோ வச்சி அமுக்கினாப்ல பஸ் வந்தது. நல்லா மூச்சை இழுத்து விட்டுட்டு [உள்ளே போய் எப்போ விட முடியுமோ] உள்ளே நுழைய முயற்சித்து இப்போதோ அப்போதோ என்று இருந்த செருப்பு அறுந்து போய் நான் என்ன கத்தினாலும் ஒரு செருப்போடு என்னை உள்ளே திணித்து, திணித்தே விட்டார்கள். அதே வேதனையுடன் யார் யாரிடமோ பாஸ் பண்ணி ஒரு வேர்வை தோய்ந்த டிக்கட்டை எடுத்ததில் மிச்சம் அப்புறம் தர்றேன் என்ற கண்டெக்டரின் எரிச்சை கலந்த சைகை புகை மண்டிய என் கண்ணாடி வழியாய் மங்கலாய்த் தெரிந்தது. என் அருகில் இருந்த சீட்டில் வாய் பிளந்து ஆழ்ந்த உறக்கத்தில் இருவர் இருந்தனர்! எனக்குத் தெரியும், அப்படி இருந்தாலே அது லாஸ்ட் ஸ்டாப் கிராக்கிகள் தான்! இடம் கிடைக்க வாய்ப்பேயில்லை.

ஏன் இன்று இப்படியெல்லாம் நடக்கிறது என்று யோசித்துக் கொண்டே இருக்கும் போதே ஒரு வழியாய் இறங்க வேண்டிய இடம் வந்தே விட்டது! மணியடித்ததும் ஸ்கூலிலிருந்து ஓடும் குழந்தைகளைப் போல விட்டால் போதும் என்று ஒரே குதி...குதிக்கிற வயசா இது? வெறும் காலில் சிறு கல் குத்தி வலி பின்னியெடுத்தது...எப்படியோ தப்பி பிழைத்து ஆபிஸில் என் இடத்தில் உட்கார்ந்து மூச்சு விடுவதற்குள் மேனேஜரிடமிருந்து அழைப்பு. நல்ல வேளை மேனேஜர்களுக்கெல்லாம் தனி ரூம் கொடுக்கிறார்கள், இல்லையென்றால் நம் மானமே போய் விடும்! உச்சி கால பூஜை முடிந்து சீட்டுக்கு வந்து அப்பாடா என்று உட்கார்ந்ததும் அவளை பார்த்தேன். கையில் பெரிய ஸ்வீட் பாக்ஸ், எல்லோரிடமும் சிரித்தபடி நீட்டிக் கொண்டிருந்தாள். எல்லோரும் தங்களால் இயன்றதை அள்ளிக் கொண்டிருந்தனர். அந்த பாக்ஸை பார்த்தவுடன் காலையில் சாப்பிட்ட தீய்ந்த உப்புமா ஞாபகம் வந்தது. உடனே வயிறு சிக்னல் கொடுக்க வாயில் ஜலம் ஊறத் தொடங்கியது. இரண்டு சீட் தள்ளியிருக்கும் சீதாராமனுக்கு கொடுத்துக் கொண்டிருந்தாள்! ஸ்வீட் வாங்கினோமா, சாப்பிட்டோமா, வேலையை பார்த்தோமான்னு இருக்கானா...ஒரு பொண்ணு புதுசா சேந்துரக்கூடாதே இவனுக்கு...எப்படியோ தப்பித்து என் சீட்டுக்கு வந்தவளின் கையில் உள்ள ஸ்வீட் பாக்ஸில் ஒரே ஒரு ஸ்வீட் மிச்சம் இருந்தது...!!!

அந்த ஸ்வீட்டை நான் எடுத்ததும் காலி டப்பாவையும் என்னையும் பார்த்து விட்டு, அழகாய் சிரித்த படி அவள் யு ஆர் வெரி லக்கி சார் என்றாள்!

7 Responses
  1. Unknown Says:

    சார்,

    உங்க வலைக்கு முதல் தடவையா வரேன். இந்த பதிவு நல்லா இருக்கு.

    //நல்லா மூச்சை இழுத்து விட்டுட்டு [உள்ளே போய் ....ன்ன கத்தினாலும் ஒரு செருப்போடு என்னை உள்ளே திணித்து, திணித்தே விட்டார்கள்//

    அட்டகாசமான ஹுயுமர்.அட நம்மஆளு.மற்றபதிவுகளும்படித்தேன்.
    ரொம்ப நல்ல இருக்கு.இவ்வளவு நாள்
    மிஸ் பண்ணிவிட்டேன்.

    நமக்கும் நகைச்சுவை வரும்(?).

    என் வலைக்கு வாருங்கள்.கருத்துச்சொல்லுங்கள்.
    சாத்தலாம்/வாழ்த்தலாம். கருத்து கண்டிப்பாக சொல்லுங்கள்


  2. ரவி,

    என்னோட வலைப்பதிவின் லட்சணம் எனக்கு நன்றாய் புரிகிறது! 4 வருஷமா தொடர்ந்து எழுதுறேன், நீங்க இன்னைக்கு தான் வர்றேன்னு சொல்றீங்க...உடம்பெல்லாம் புல்லரிக்குது போங்க!! உங்களைச் சொல்லிக் குற்றமில்லை, என்னைச் சொல்லிக் குற்றமில்லை...

    இதோ, உங்க பதிவுக்கு வந்துர்றேன்!


  3. Unknown Says:

    பிரதீப்,
    /என்னோட வலைப்பதிவின் லட்சணம்/4 வருஷமா தொடர்ந்து எழுதுறேன்/

    நீங்க எழுதறீங்க.ஆனால் நா வந்தது
    oct-08லதான்.”புல்லரிப்ப்பை” மற்றும்
    ”குற்றமில்லை”ரிவர்ஸ் செய்துக்
    கொள்ளலாம்.

    கடந்த ஒரு மாசமாகத்தான் இந்த வ்லை எக்ஸ்பிரஸில் S1 to S5 வரை வந்து look விட்டுக்கொண்டிருக்கிறேன் மேலும் போக வேண்டும்.

    வந்த புதிசில் என் வ்லையில் யாருமே
    வராமல் வெறிச்சோடிப் போய், பேய்
    வீடு மாதிரி இருந்த்து.

    "comments - 0" அந்த ஜிரோ வளையம் என்னை கழுத்தில் மாட்டி வாட்டியது.நல்ல quality பதிவுகள் போட்டு காமெண்டுகளைத் தேத்தினேன்.“ஸ்வாமி ஒம்கார்” கூட நம்முடைய விசிறி.

    நம்ம கதையெல்லாம் படிச்சு சொல்லுங்க பரதீப்.ஏன்னா விமர்சனம்
    நேர்மையா இருக்கும்.


  4. Sivakumar Says:

    Good narration... Next book fair-le nee oru book podalam.... try pannu!


  5. siva,

    book...still very long way to go!


  6. Unknown Says:

    www.espradeep.blogspot.com. I know this address by heart(English peter vidraannu pakkadeenga, Tamil typing sariya varamattengudu)..

    You have a simple writing style. Narration glues the reader. In this post you would have avoided the within bracket item "Ulle poi eppo vida mudiyumo". Meaning is conveyed even without that...

    I am your less frequent visitor since 2007..


  7. krishna,

    thx for byhearting my address. and thx a lot for ur comments. mm, neenga soldrathu sari thaan, naan antha bracket potrukka avasiyamillai...already the message is conveyed!

    keep visiting...