யாரும் பார்க்காத
வேளையில் - அதைப் பற்றி
எந்தக் கவலையுமில்லாமல்
மொட்டு ஒன்று
மெல்ல பூக்கிறது!

நின்ற நிலை கடந்து
அமர்ந்த நிலை அற்று
தவழ்ந்து வரவும் தெம்பின்றி
தனியே - பசியில்
சாகிறது ஒரு ஜீவன்

ஜாதியின் பெயராலோ
மதத்தின் பெயராலோ
ஒரு அழகிய காதலை
தீயிட்டுக் கொளுத்துகிறது
ஒரு கூட்டம்

எங்கோ ஒரு இடத்தில்
யாரோ ஒரு பெண்ணை வன்புணர
துரத்திக் கொண்டு
ஓடுகிறது ஒரு கூட்டம்!
அவளின் மரண ஓலம்
செவிட்டில் அறைகிறது!!

முந்தானையை பிடித்துக் கதறும்
குழந்தையின் கையை விலக்கிவிட்டு
சத்தமில்லாமல் அழுது கொண்டே
போகிறாள் ஒரு தாய்

கிழக்கே இரவை நோக்கியும்
மேற்கே பகலை நோக்கியும்
நாட்கள் உருண்டோடுகின்றன

தொட்டிலில் உறங்கிக் கொண்டிருக்கும்
குழந்தை ஒன்று - சிறிதாக
ஒரு புன்னகை பூக்கிறது...
7 Responses
  1. Sivakumar Says:

    kathalil ezhuthu valimai perumo?


  2. காலம் - நடக்கும் நிகழ்வுகளை அழகாக, எளிமையான சொற்களால், நச்சென்று சொல்லும் திறமை பாராட்டத்தக்கது. இறுதியில்

    //தொட்டிலில் உறங்கிக் கொண்டிருக்கும்
    குழந்தை ஒன்று - சிறிதாக
    ஒரு புன்னகை பூக்கிறது...//

    என்று ஆக்கபூர்வமாக எழுதி இருப்பது சிந்திக்க வைக்கிறது.


  3. siva,

    vazhvai kaathalithaal nichayam ezuthu valimai perum!

    cheena,

    athanai kodoorangalin mathiyilum oru nambikkai thuli athu...


  4. //கிழக்கே இரவை நோக்கியும்
    மேற்கே பகலை நோக்கியும்
    நாட்கள் உருண்டோடுகின்றன//

    முறன்பாடுகள் தானே வேண்டுதலும், தூண்டுதலும்.

    ஏன் இயற்க்கைக்கு முறன்பட்டு செல்ல வேண்டும்?


    கவிதை நல்லா இருக்கு.


  5. siva murugan,

    vaanga enga romba naala aalaye kanom? nandri for your comments :)


  6. Anonymous Says:

    //எங்கோ ஒரு இடத்தில்
    யாரோ ஒரு பெண்ணை வன்புணர
    துரத்திக் கொண்டு
    ஓடுகிறது ஒரு கூட்டம்!
    அவளின் மரண ஓலம்
    செவிட்டில் அறைகிறது!!//

    matra para-voda compare pannum pothu ithu romba normal lines-a irukku.
    You should remove/modify these lines...
    but except this para... all others are simply touching my heart... i mean ITHAYATHI pidithu oru sec ulukkuvathu pola irukku....

    Yrs,
    Elango.S


  7. elango

    i tried to make that line better, but couldnt find the exact wording...thats why i kept as it is..

    neengal solvathu pol konjam neelamaaga thaan irukkirathu...