நான் கடந்த ஒரு வருடமாய் என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பக் (BUG) போட்டும், இன்று Cognizant Technology Solutions (இனி சிடிஎஸ்) பில்லியன் டாலர் கம்பெனி ஆகியிருக்கிறது. இத்தைகய சந்தோஷ தருணத்தைக் கொண்டாட கிட்டத்தட்ட 18,000 ஊழியர்களுக்கு (மொத்தம் 24 ஆயிரத்து சொச்சம்) ஐபாட் ஒன்றை பரிசாக அளித்திருக்கிறது. சாஃப்ட்வேர் உலகில் இன்றைக்கு சூடான செய்தி இது தான் என்று நினைக்கிறேன். நான் பெங்களூரில் டெல்லில் டெபுடேஷனில் இருந்த போது, சிடிஎஸ்ஸில் இருந்து ஒருவர் டெல்லில் சேர்ந்தார். அவர் சிடிஎஸ்ஸில் ஒவ்வொரு வருடமும் பரிசு வழங்குவார்கள் என்பதை என்னிடம் சொன்ன அடுத்த நிமிடம் என்னுடைய ரெஸ்யுமை அவருக்கு அனுப்பி வைத்தேன். அப்போது சத்தியத்தில் ஒழுங்காய் சம்பள உயர்வே கிடைக்காத நிலை! (அடங்குடா..உனக்கு எல்லாம் வேலை கிடைத்ததே அதிகம் என்று உள்மனது சொல்கிறது!) அதன் விளைவு இன்று நான் சிடிஎஸ்ஸில்...

உங்களுக்குத் தெரியுமோ, இல்லையோ, சிடிஎஸ் ஒவ்வொரு வருடமும் தன்னுடைய ஊழியர்களுக்கு ஒரு பரிசு கொடுப்பதை வழக்கமாய் கொண்டிருக்கிறது. மூன்று பரிசுப் பொருட்களில் தங்களுக்குப் பிடித்ததை தேர்வு செய்து கொள்ளலாம். போனவருடம் செல்ஃபோன், மைக்ரோவேவ் ஓவன், விஐபி சூட்கேஸ், இந்த மூன்றில் ஒன்றை தேர்ந்தெடுக்கச் சொன்னதாக கேள்விப்பட்டேன். இந்த முறை ஜூன் 31ம் தேதிக்கு முன் சேர்ந்தவர்களுக்கு ஐபாடும், அதற்கு பிறகு சேர்ந்தவர்களுக்கு
சாம்சொனைட் ஸ்ட்ரோலியும் போன மார்ச்சில் இருந்தே நான் சிடிஎஸ்ஸின் வளர்ச்சியில் பங்கு கொண்டதால் (அப்படி அவர்கள் நினைப்பதால்) அடியேனுக்கும் ஐபாட்!

பில்லியன் டாலர் கொண்டாட்டங்கள் ஏகபோகமாய் நடந்தன. Thanks a Billion என்று screen server சில நாட்கள் எல்லோருடைய கனினியிலும் ஓடியது. அதே மாதிரி இன்னொரு முறை நன்றி தெரிவித்து இரு சிறு அட்டைகளில் ஒரு photo standம், calendarம் ஒவ்வொரு டெஸ்க்கிலும் வைத்தார்கள். இதைக் கொடுக்க வந்தவரிடம் இது தான் இந்த வருட கிஃப்டா என்று கலாய்த்தோம், நான் என் பங்குக்கு இந்த photo standல் நமிதா படம் ஒட்டி வச்சுக்கலாமா என்று கேட்டேன்.

பில்லியன் டாலர் கொண்டாட்டங்களில் ஒன்றாக ஐபாட் தரப்போகிறார்கள் என்று அலுவலகத்தில் ஒரு செய்தி பரவுவதற்கு முன் எனக்கு ஐபாட் என்றால் என்னவென்று சத்தியமாய் தெரியாது. சிலர் ஆப்பிள் வெப்சைட்டில் பார்த்து விட்டு எத்தனையோ டாலர் சொன்னார்கள். எனக்கு டாலரில் விலையை சொன்னால் எரிச்சலாய் வரும். யார் அதை 45 ஆல் பெறுக்கிக் கொண்டிருப்பது? கிட்டத்தட்ட 10,000 ல இருந்து 20,000 வரை வரும்..மெமரி பொறுத்து மாறும் என்றார்கள். சரி அது என்ன பண்ணும் என்று சிலரிடம் கேட்டதில், ஒருவன் ஐபாடில் MP3 songs கேட்கலாம், படம் பார்க்கலாம் அவ்வளவு தான் என்று முடித்துக் கொண்டான். இன்று செல்ஃபோனில் எல்லா கருமமும் வந்து விட்டது. அதுவும் காசு அதிகமா? சரி 75 ரூபாய்க்கு மூர் மார்க்கெட்டில் ஒரு ட்ரான்சிஸ்டர் வாங்கினால் போதும். 24 மணி நேரமும் வித விதமான பாட்டு கேக்கலாம். நாம் சேமித்து வைத்த பாட்டு 2 நாட்களில் போர் அடித்து விடும். ரேடியோ அப்படி இல்லை. அடுத்து என்ன பாடல் வருகிறது என்று தெரியாமல் இருப்பது தான் சுவாரஸ்யமே.. சரி படம் பார்க்கலாம்ல என்றான் ஒருவன். அந்த தம்மாத்துண்டு இடத்தில் நயந்தாரா இடுப்பு கூட சிம்ரன் இடுப்பு மாதிரி தான் தெரியும். நாம் ஒரு நாளைக்கு படம் பார்க்காமல் இருப்பதே ஆபிஸில் இருக்கும்போது தான்..மற்ற எல்லா நேரங்களிலும் வீட்டில் டி.வி. அழுகிறது. இதை தவிர்த்து டிவிடி ப்ளேயர்....எங்கேயாவது ஊருக்கு போகனும்னு கெளம்பினா அந்த பஸ்லயும் படம் போட்றான். எதுக்கு நான் ஐபாட்ல படம் பாக்கனும்? உங்களுக்கு அவ்வளவு நோகுதுன்னா உங்க ஐபாடையும் எனக்கே கொடுத்துடுங்கன்னான் அவன். அவனுக்காவது ஒன்று ஏற்கனவே கிடைத்தது. என் டீமில் சிலரைத் தவிர எல்லோரும் புதிதாய் சேர்ந்தவர்கள். ஐபாட் எனக்கு கிடைத்தும் நான் ஏதோ அதை வெறுப்பது போல் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து கிடைக்காதவர்கள் பொருமிக் கொண்டிருந்தார்கள். அதுவும் நியாயம் தானே? இதில், ஒருவாரத்தில் ஐபாடை கோட்டை விட்டேன் என்று ஒருவன் என்னிடம் அங்கலாய்த்தான். நான் சொல்ற மாதிரி செய் என்று அவனுக்கு நான் ஒரு யோசனை சொன்னேன். Internal discussion forum போ, அங்கே உன்னை மாதிரி ஒரு வாரத்துல ஐபாட் கோட்டை விட்டவங்க எல்லாரும் சேர்ந்து ஒரு discussion ஆரம்பிச்சிருக்காங்க. அவங்ககிட்ட போய் பேசினா, உனக்கு ஆறுதலா இருக்கும்னேன். அவன் என்னை என்ன செஞ்சுருப்பான்னு நினைக்கிறீங்க? 10 நாள் பட்டினியா இருக்குறவன்கிட்ட போய், டேய் வான்கோழி பிரியாணி சாப்ட்ருக்கியா? சூப்பரா இருக்கும்னு சொல்லிப் பாருங்க...அப்புறம் தெரியும் உங்களுக்கு! இப்படி அளவில்லாமல் பேசி, பலரின் சாபத்திற்கு ஆளானேன். ஒருவன் மகாமுனி போல் கண்களை மூடி தன் நெஞ்சில் முஷ்டியை மடக்கி, கண்களைத் திறந்து என்னைப் பார்த்து, கைகளை உதறி உன் ஐபாட் வேலை செய்யாமல் போகக் கடவது என்று சபித்தே விட்டான்.


[image courtesy: TechTree]

ஒரு வழியாய் ஐபாட் கைக்கு வந்தது. கருப்பு நிறத்தில், 30 GB மெமரியுடன், கைக்கு அடக்கமாய், பின்னால் COGNIZANT என்ற எழுத்துக்கள் பொறித்து,
ஆஹா..என்ன அழகு, என்ன அழகு. ஐபாடில் உள்ள தொழில் நுட்பம், அதன் வேலைத்திறனை விட அதை அவர்கள் பேக் செய்திருந்த நேர்த்தி..மிக அற்புதம்.அந்த சிறிய பெட்டிக்குள், அழகிய சின்ன வெள்ளை நிற head phone, அதை USB portல் கனக்டி சார்ஜ் செய்ய ஒரு கனக்டெர், iTUNES என்ற சாப்ஃட்வேர் சிடி, ஒரு சிறு user manual. எல்லாமே சிறிது, பில்லியன் டாலர் சந்தோஷத்தைக் கொண்டாட இதை பலருக்கு அருளிய காக்னிஸண்ட்டின் மனம் பெரிது! (என்னா டயலாக்! சான்ஸே இல்லை!)

ஐபாட் கொடுக்கவில்லை என்றால் நாங்கள் யாரும் நாளை ஸ்ட்ரைக் செய்யப்போவதில்லை. எல்லோரும் அவரவர் வேலையை பொறுப்பாய் பார்க்கத் தான் போகிறோம், இருந்தும் ஊழியர்களின் மகிழ்ச்சியை மனதில் கொண்டு இதைச் செய்த சிடிஎஸ்ஸிற்கு ஒரு ராயல் சல்யுட்! என்ன தான் ஐபாட் ஒன்றை கையில் வைத்துக் கொண்டிருந்தாலும், இது என்ன பெரிய கிஃப்ட் இன்ஃபோசிஸ் பில்லியன் டாலர் ஆனப்போ, எல்லாருக்கும் 1000 டாலர் கொடுத்தான் தெரியுமா? இது என்ன பிஸ்கோது, சாக்லேட்டு என்று சிலர் புலம்பத் தான் செய்கிறார்கள்! ஹும்...(உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு..)

சரி அந்த மாமுனியின் சாபம் என்னவாயிற்று என்று நீங்கள் கேட்பீர்கள்? சொல்கிறேன். அவர் சாபம் விட வேண்டியதே இல்லை. அதுவாகவே வேலை செய்யாமல் போய் விடும். நம் ராசி அப்படி. இதோ வீட்டில் ஒரு கனினி வாங்கினேன். அசெம்பிள் போனால், ப்ராப்ளம் வரலாம் சார்..ப்ராண்டட் போங்க, பிரட்சனையே இல்லை என்றான் கடைக்காரன். நானும் போனேன். 10 நாட்கள் ஒழுங்காய் வேலை செய்தது. ஒரு நாள் கீ போர்டில் a அடித்தால் w விழுந்தது. z அடித்தால் L விழுந்தது. ஐ, இது நல்ல விளையாட்டா இருக்கேன்னு நானும் என்னை மறந்து கொஞ்ச நேரம் விளையாடிட்டு இருந்தேன்னா பாத்துக்குங்க. ஒரு வழியாய் ஒருத்தன் சர்வீஸுக்கு வந்து புது கீபோர்ட் வைத்து விட்டுப் போனான். இன்று வரை a அடித்தால் a தான் விழுகிறது. நாளை என்ன நடக்குமோ!

பிறகு ஃப்ளாப்பி ட்ரைவ், வந்தவன் அதுவும் போச்சு சார், புதுசு மாத்தித் தந்துர்றோம் என்றான். இவ்வளவு பிரச்சனை இருக்கு, அப்புறம் என்ன பெரிய ப்ராண்டு என்றேன். அதற்கு அவன் 1000 பீஸ்ல ஒரு பீஸ் இப்படி ஆயிருது சார்..உங்களுக்குப் பரவாயில்லை, பக்கத்துத் தெருவில் ஒருத்தருக்கு hard disk போயிடுச்சுன்னான். இப்போ நான் வருத்தப்படனுமா, சந்தோஷப்படனுமன்னு எனக்குப் புரியலை..கஷ்டம்! பிறகு திடீரென்று ஒரு நாள் புதிதாய் வீட்டுக்கு வந்திருக்கும் நண்பர்களிடம் புதிதாய் வாங்கியிருக்கும் கம்ப்யுட்டரைக் காட்டினோம். UPS லிருந்து ஒரு மெல்லிய புகை..அதைத் தொடர்ந்து ஒரு தீய்ந்த வாசனை. அதை சரி செய்து விட்டு, internet connection வாங்கினேன். ஒரு சுபயோக சுபதினத்தில் அந்த மினுக் மினுக் லைட் எரியவே இல்லை. பவர் வரவேயில்லை. பார்த்தால் அடாப்டர் காலி. என் நெலமைய கொஞ்சம் யோசிச்சு பாருங்க? ஒரு மனுஷனுக்கு வாழ்க்கையில சோதனை வரலாம், சோதனையே வாழ்க்கையாயிட்டா? எப்படியோ ப்ராண்ட் என்னை பிராண்டி விட்டது தான் மிச்சம். அது எப்படியோ தெரியல, என்ன மாயமோ தெரியல..அந்த 1000த்தில் ஒரு பீஸ் எப்போதும் என்னையே வந்தடைகிறது.

எனக்கு ஐபாட் தரப்போகிறார்கள் என்று நண்பர்களிடம் ஃபோன் போட்டு பீத்தலாம் என்று நினைத்து விஷயத்தை சொன்னவுடன், ஒரு சுவாரஸ்யமும் இன்றி, சரி வாங்குன அடுத்த நாள் புகை தான் வரப்போகுது, நீ ஏன் அவ்வளவு பீத்துறேன்றான் ஒருத்தன்! சரி இன்னும் விஷயத்துக்கு வரலையேன்னு நீங்க சொல்றது எனக்குத் தெரியுது. என்னுடைய ஐபாடில் ஒரு 65 இளையராஜாவின் பாடல்களும், ரகுமானின் ஜனகன மண வீடியோவும், ஒரே ஒரு ஃபோட்டோவும் லோட் செய்திருக்கிறேன். இன்றைய நிலவரத்தின் படி இன்ன நிமிஷம் வரைக்கும் புகை எதுவும் வரவில்லை..(யாரு அங்கே.... இப்படி சப்புன்னு ஆயுடுத்தேன்றது? இதோ வர்றேன்!)

என்ன தான் ஹை ஃபையாக இருந்தாலும், அந்த சின்ன head phoneல் காதில் மாட்டிக் கொண்டு பாட்டு கேட்க வேண்டும் என்று நினைத்தாலே எனக்கு காதை வலிக்க ஆரம்பித்து விடுகிறது. இதோ என்னுடைய ஐபாட் full chargeல் ஓரமாய் உரங்கிக் கொண்டிருக்கிறது. ரேடியோ மிர்ச்சி பனியில்லாத மார்கழியா... பாடிக் கொண்டிருக்கிறது..ஐபாடாவது மண்ணாங்கட்டியாவது..ஒரு டிஜிட்டல் காமெரா கொடுத்துருந்தா...(உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு..)

22 Responses
  1. லாஸ்டா,

    அந்த ஒரே ஒரு போட்டோ யாருது?

    படிக்க படிக்க எங்களுக்கு காதுல புகை வருதே... அத என்ன பணறதாம்!


  2. அப்படியே பிளாக்ல வித்துடவேண்டியதுதானே.


  3. Anonymous Says:

    பாசு,
    ரேடியோவும் அதிலயே கேக்கலாம். அதுக்கு ரேடியோ அடாப்டர் இருக்கு. கீழ இருக்கிற லின்க்-அ பாருங்க. என்ன, மூர் மார்க்கெட் வெலய விட கொஞ்சம் அதிகம்.

    http://store.apple.com/1-800-MY-APPLE/WebObjects/AppleStore?productLearnMore=MA070G/A


  4. Anonymous Says:

    ராசா,
    Infosys-ல $1000, மேலும் பல பல குடுத்தாங்களே நாமளும் அந்த so called மேஜிக் நம்மரை தொட்டுடமே என்ன குடுக்கறீங்கன்னு கேட்டதுக்கு, இதெல்லம் 'Natural growth, what is there to celebrate?' அப்படின்னு எங்க Wipro பெருசுங்க சொல்லிடுச்சுங்க..
    ஒரு சின்ன அல்வா துண்டு கூட கெடயாதுப்பா :-(

    உங்களுக்கு iPod புளிக்குது...
    தீயர வாசனை வருதா? பொகையாவது தெரியும் பாருப்பா..


  5. Anonymous Says:

    Pradeep,

    i used to read ur blogs and reall enjoyed ur narrative style.. its really good and enjoyable mann..

    // ஒரு நாள் கீ போர்டில் a அடித்தால் w விழுந்தது. z அடித்தால் L விழுந்தது. ஐ, இது நல்ல விளையாட்டா இருக்கேன்னு நானும் என்னை மறந்து கொஞ்ச நேரம் விளையாடிட்டு இருந்தேன்னா பாத்துக்குங்க

    //இப்போ நான் வருத்தப்படனுமா, சந்தோஷப்படனுமன்னு எனக்குப் புரியலை..கஷ்டம்!

    //எப்படியோ ப்ராண்ட் என்னை பிராண்டி விட்டது தான் மிச்சம்

    //அந்த 1000த்தில் ஒரு பீஸ் எப்போதும் என்னையே வந்தடைகிறது.

    Really kalakkal pa

    -- Vignesh


  6. Blogeswari Says:

    ha ha ha... congrats on the i-pod!
    ennoda purushan gift-a poana varusham Hongkong laerndu I-pod mini vaangittandaaru. vaangitaanda vudane pirichittu "idenna pisaatu i-pod.." nnu manasukkullaye nenachukittaen.. aprom rendu maasam kazhichi avaraa enaku ipod-la rahman, ilayaraja ithyadi ithyadi songs ellam load pannikuduthaaru... ipolaam naa i-pod um kaiyumaadan alayarean.

    Gym-la podara ondraiyanaa hindi 'himesh reshammiya' trash paataa vida, rahman paatu ketundae exercise pandradula semma fun!
    [cardio vukku rehman, cool down exercise kku illayaraja]

    Train la office pogumboadu pazhaya MSV -Kannadasan paatu ketunde porean!

    I-pod illa adu.. i-paadu!!

    super!


  7. Anonymous Says:

    absolutely fabulous - great piece - you are spot on about satyam. satyam also crossd one billion monthsback - NO INCENTIVE/GIFT TO ANYONE.


  8. :-) ஐபாட் கிடைத்ததற்கு வாழ்த்துக்கள்...நன்றாக எழுதியிருக்கிறீர்கள்...

    ஆனால் ஒன்று, அடுத்த மாதம், இதற்கு அடுத்த ஐபாட் மாடல் (full video!) வெளியானதும் கொஞ்சம் வயிறெரியும், கையில் உள்ளதை அற்பமாகப் பார்க்கத் தோன்றும. ஐபாட் கிடைக்காத உங்கள் நண்பர்களுக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும்...:-)


  9. Sivakumar Says:

    உன் எழுத்தின் சுவாரஸ்யம் வலிமை பெற்றுக் கொண்டே வருகிறது.

    i-Podன் கியாரண்டி எத்தனை வருஷம்ன்கிறத பார்த்து வச்சுக்கோ!


  10. நல்லா சொன்னிங்க போங்க.. ஐபாட் எல்லாம் வேஸ்டுங்க.. நாமே சொந்தமா பாத்து ஒரு ரேடியோ ட்ரான்ஸிச்டர் வாங்கினோம்னு வச்சிக்குங்க..அதுல ரேடியோ மிர்ச்சி கேக்கறதுல இருக்கற சொகமே தனிதான்.. -- ஒண்ணும் இல்லீங்கோ.. எல்லாம் பொறாமை தான்..


  11. rv Says:

    நல்ல பதிவு. (இத இப்ப நிறைய பேர் எழுதறது இல்லியே, ஏன்? ) :)

    ஐ-பாட் க்கு வாழ்த்துகள்.

    // ஒரு நாள் கீ போர்டில் a அடித்தால் w விழுந்தது. z அடித்தால் L விழுந்தது. ஐ, இது நல்ல விளையாட்டா இருக்கேன்னு நானும் என்னை மறந்து கொஞ்ச நேரம் விளையாடிட்டு இருந்தேன்னா பாத்துக்குங்க//

    :))))))


  12. ஹூம்.. கொடுத்து வச்ச மகராசனுங்க நீங்க..

    ஆமா.. கம்பெனி பத்தியெல்லாம் கருத்து சோல்லறீங்க.. ப்ளாக்கிங் பாலிசி எதும் இல்லியா CTSல ?

    எங்க கம்பெனியில ப்ளாக்கிங் பாலிசி ரொம்ப கடியானதுங்க.. கம்பெனி பத்தி சுதந்திரமா எதையுமே (தங்கமான கம்பெனின்னு கூட) வெளிய சொல்ல விடமாட்டாங்க

    கலக்குங்க


  13. கோபி,

    நீங்க சொல்றது நியாயம் தான். கம்பெனி பத்தியெல்லாம் இப்படி வலையில் பேசலாமா என்று தெரியவில்லை. என் நண்பர்களும் இதைப் பற்றி எச்சரித்தார்கள். நான் பாட்டுக்கு அடிச்சு விட்டுட்ருக்கேன்! நல்லதா சொல்றதால என்னை விட்டு வச்சுருக்காங்களோ என்னமோ?

    ஆனால் முகம் தெரியாத ஒரு மானேஜர் இந்தப் பதிவை கூகிள் மூலம் படித்து விட்டு எனக்கு மெயில் அனுப்பி பாராட்டி இருந்தார். அதோடு, உன்னோட இந்தப் பதிவை இன்று CTS ல் எல்லா முக்கிய நபர்களும் படித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று ஒரு இன்ப அதிரிச்சியையும் கொடுத்திருந்தார்!


  14. Blogeswari Says:

    nga ipod-kku accessories venuma?
    vandu paarunga


  15. //அந்த 1000த்தில் ஒரு பீஸ் எப்போதும் என்னையே வந்தடைகிறது//

    for (i=1;i<=100;i++)
    printf("ஹாஹா..');

    இந்த சிரிப்பு போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா :-) ???


  16. paiyya,

    adikkirathu nakkal, ithula programming veraya? en polappu ippadi sirippaa poche..


  17. கலக்கிப் போட்டிங்கப்பூ...
    எங்களுக்கும் இங்க அல்வாதான். இதை எல்லாம் சொல்லக் கூடாதுன்னுதான் சொல்லுவாங்க. ஆனா ஹைதராபாதில இருந்து தமிழ் வலைப்பூ படிக்கிற டேமேஜர்கள் (அதாங்க நம்ம வாழ்க்கையை டேமேஜ் பண்ற மேனேஜர்கள்) கம்மி...

    அங்கே ஒரு பிரதீப் ஐ பாடில் கலக்குகிறார். இங்கே ஒரு பிரதீப் தன் பாடு பெரும்பாடு என்கிறான்.

    வாழ்த்துகள்.


  18. //என்ன தான் ஹை ஃபையாக இருந்தாலும், அந்த சின்ன head phoneல் காதில் மாட்டிக் கொண்டு பாட்டு கேட்க வேண்டும் என்று நினைத்தாலே எனக்கு காதை வலிக்க ஆரம்பித்து விடுகிறது //

    You can get a FM transmitter for Rs.2000. With that you can transmit songs from your iPOD to your music system. OR you can get DVD players with USB play back.With that , you can watch stored movies in your TV screen. OR apple is selling music systems compatible with iPOD.

    :)))


  19. செந்தில்,

    நானே ஐ-பாட் ல புகை வந்துருக்கூடாதேன்னு பயந்துட்டு இருக்கேன், இதுல நீங்க வேற இதை வாங்கு, அதை வாங்குன்னு அட்வைஸ் வேற பண்றீங்க!


  20. Anonymous Says:

    I like ur blog..

    Hope u know abt this contest

    http://bhashaindia.com/contests/iba/


  21. Anonymous Says:

    இந்த photo standல் நமிதா படம் ஒட்டி வச்சுக்கலாமா என்று கேட்டேன்.


    For that you need a big screen flat panel TV, dont expect CTS
    to gift that too :)


  22. bala,

    thanks for intimating about bhashaindia.com. I also nominated my blog there.

    ini ungal kayyil!

    அனானிமஸ்,

    நீங்க சொல்றது 100% ரைட்! கொடுத்ததை வைத்துக் கொண்டு திருப்தி படுபவன் நான். ஃப்ளாட் டீவியும் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டேன். கொடுத்தால் வாங்கிப்பேன்! ஹிஹி...