3 பதிவு போட்டும் ஒரு கமெண்டும் இல்லை; நான் என்ன கமலஹாசனா, வைரமுத்துவா? பாராட்டுகளைக் கேட்டுக் கேட்டு சலித்துப் போயிருக்க? தூக்கமே இல்லை. என்னடா இது, மகளீர் தினத்திற்காக ஸ்பெஷலாய் ஒரு ஓவியப் பதிவு, தம்பி படத்தைப் பற்றி என்னுடைய நடையில் ஒரு விமர்சனம், CTSல் கொடுத்த i-Pod பற்றி நகைச்சுவையாய் ஒரு பதிவு..பயன் என்ன? ஒரு கமெண்டும் இல்லை! வெறுத்தே போனேன். ஒருத்தரும் சீண்டாத அளவுக்கா நாம் எழுதுகிறோம் என்று எனக்குள் ஒரு சந்தேகம். பார்த்தால் நான் என்றோ என் ப்ளாகர் செட்டிங்கில் கை வைத்த பலன்.

ஒன்னு English தெரியனும், இல்லை கை காலை வச்சுட்டு சும்மா இருக்கனும். Moderate Commentsஆமே, சரிப்பா என்னுடைய பதிவுகளுக்கும் இதை செய்யுங்க என்று தெரியாத்தனமாய் சொல்லி விட்டேன். நீங்கள் இட்ட பின்னூட்டங்களை எல்லாம் ப்ளாகர் பிள்ளை அடக்கமாய் எடுத்து வைத்துக் கொண்டு நான் எப்போது வந்து அதை ஆமோதித்து பதியப் போகிறேன் என்று காத்துக் கொண்டிருக்கிறது. யாராவது பின்னூட்டம் போட்டால் உனக்கு ஒரு மெயில் பண்றோம்பா என்று ப்ளாகரில் அப்போதே சொன்னார்கள். கேட்டால் தானே, எல்லாம் எனக்குத் தெரியும் என்று அந்த பயன்பாட்டை பயன்படுத்தவில்லை. அவஸ்தைப் படு! நான் என்ன செய்யட்டும்னுது ப்ளாகர். இதோ, இன்னைக்கு புலம்பிட்டு இருக்கேன்.

முக்கியமான பதிவாய் இருந்தால் தான் நான் என் நண்பர்களுக்கு மெயில் அனுப்பி, பாத்திரம் தேய்ச்சது தேய்ச்ச வரைக்கும் இருக்கட்டும், உடனே இங்கே வா என்று புருஷன்காரன் அதட்ற மாதிரி, எந்த கோட் அடிச்சிட்டு இருந்தாலும் மொதல்ல என் ப்ளாகை படிங்கப்பா என்று அனுப்புவேன். இல்லையென்றால் அவர்களாகவே திறந்து படித்து பின்னூட்டம் அளித்து விட்டுப் போவார்கள். உங்களுக்குத் தான் தெரியுமே, கடந்த 3 பதிவா பின்னூட்டமே இல்லாம, போஷாக்கு குறைந்து இருந்த கொஞ்ச நஞ்ச தெம்பை வைத்துக் கொண்டு என் நண்பர்களுக்கு மெயில் பண்ணி பாத்திரத்தை போட்டதை போட்டபடி..ஐய்யோ, அடிச்சது அடிச்சபடி இருக்கட்டும் வந்து படிச்சுட்டு போங்கப்பா என்று மெயில் அனுப்பினேன்.

அப்போது தான் என் நண்பன் நான் ஏற்கனவே போட்ட பின்னூட்டம் எல்லாம் ஏன் வர்ல என்று கேட்டான். ஆஹா! அப்போ நம்ம ப்ளாகுக்கு கமெண்ட் வருதுரா, ஏதோ ஒரு தில்லு முல்லு நடக்குதோன்னு இன்னைக்கு வந்து Moderate Comments sectionல் பாக்குறேன். 33 கமெண்ட்ஸ் தேமேன்னு தூங்கிட்ருக்கு! இங்கே பார்றா!! பிறகு என்ன ஒரே குஷி தான். எல்லாத்தையும் சகட்டு மேனிக்கு செலக்ட் செய்து பதிந்ததில் எல்லாம் ஒழுங்காய் தெரிந்தது! அப்பாடா..வீட்டில் சாப்பிடக் கூப்பிடுகிறார்கள். வயிறு என்ன? மனசு வரைக்கும் நெறைஞ்சு கெடக்கே...

இதன் மூலம் நான் சகல லோகத்திற்கும் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால் இன்னைக்கு தான் உங்க கமெண்ட் எல்லாம் படிச்சேனுங்கோ!! கோ!! கோ!!! (எதிரொலிக்குதா?) என்னுடைய ஓவியத்தைப் பார்த்து இத்தனை பேர் கருத்து கூறியிருப்பீர்கள் என்று நான் நினைக்கவில்லை. நீங்கள் தெரிந்தோ, தெரியாமலோ ஒரு மிகப் பெரிய தவறுக்கு அடித்தளம் இட்டு வீட்டீர்கள். இனிமே அடிக்கடி இப்படி ஓவியம் எல்லாம் போட்டு உங்களுக்கு ஏதாவது புரிந்தால் சொல்லுங்கள் என்பேன், எல்லாம் சமத்தா சொல்லனும் தெரியுரதா? இதுல சிவமுருகன் அவர்களுக்கு நான் பதில் சொல்லலைன்னு கோவம் வேற! நிஜமாவே நீங்கள் தான் என் ஓவியத்தை புரிய வைத்தீர்கள்! மிக்க நன்றி! காயத்ரி சந்திரசேகரும் தங்லீஷில் என் ஓவியத்தை அலசியிருக்கிறார். உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக! அனுசுயா வேறு ஒரு இன்ப அதிர்ச்சியை எனக்கு அளித்து விட்டுப் போயிருக்கிறார். சென்ற வாரம் என் பதிவு தினமலரில் வந்ததாம். இது எனக்கே தெரியாத விஷயம். இது உண்மை தானா? அப்படி என்றால் தயவு செய்து யாராவது எனக்கு அந்த சுட்டியைத் தந்தால் தன்னியனாவேன்!

போன ஒரு மாதமாய் சுலேகா டாட் காமில் இருந்து எனக்கு மெயில் வந்து கொண்டே இருக்கிறது. என்னுடைய பதிவுகளை அவர்களுடைய வலையில் போட்டுக் கொள்வதாக. எனக்கு வலிக்குமா சொல்லுங்க. இருந்தாலும் ஒரு பிகு இல்லைன்னா எப்படி? சரி உங்க வலையில போட்றதால எனக்கு என்ன பயன்? என்று இப்போது தான் ஞான பீட விருது வாங்கின கையோடு வந்தது போல் மெயில் செய்தேன்..சர் தான் போடா, நீயும் ஆச்சு உன் ப்ளாகும் ஆச்சு என்று என்னை உதைக்காமல், பொறுப்பாய் காரணங்களைச் சொல்லி எனக்கும் ஒரு இடம் கொடுத்திருக்கிறார்கள். என்ன கொஞ்சம் பெயரை திருப்பி போட்டு விட்டார்கள். இங்கு espradeep.blogspot.com அங்கே pradeepes.sulekha.com!

என்னடா இவன் இன்னும் தலைப்புக்கு வரவே மாட்றானேன்னு நினைக்கிறீங்களா? இதோ வந்துட்டேன்...இன்னைக்கு காலையில ஒரு மெயில் வந்தது. நமக்கு கமெண்ட் வரனும்னா இது தான் சரியான வழி என்று நினைத்துக் கொண்டேன். இவரைப் போட்டா உலகம் பூரா வசூல் மழை, நம்ம வலைப்பதிவுக்கு பின்னூட்ட மழை வராதா என்ன? இன்னைக்கு இவரோட பவரை நம்ம டெஸ்ட் பண்ணிட வேண்டியது தான் என்ற முடிவுக்கு வந்தேன். உங்களுக்குத் தெரிந்திருக்கும் நான் யாரைப் பற்றி பேசுகிறேன் என்று! சாட்ஷாத் நம்ம தலைவர் சூப்பர் ஸ்டார் தான். வந்த மெயிலின் தலைப்பு SIVAJI - THE BOSS Stills..ஆஹா, போன தடவை இப்படி தான் ஒரு மெயில் வந்தது ஒரு ஜிப் ஃபைலில்..ஆர்வமாய் டவுன்லோட் செய்து பார்த்தால் நடிகர் திலகம் சிவாஜி அழுவது மாதிரி, சிரிப்பது மாதிரி, அழுது கொண்டே சிரிப்பது மாதிரி..எனக்கு எப்படி இருந்திருக்கும்? அதைப் பார்த்து நானும் அழுது கொண்டே சிரித்தேன்!!

பசங்களின் திருவிளையாடலுக்கு ஒரு அளவே இல்லையா? நான் மட்டும் என்ன சலைத்தவனா..உடனே அதை எல்லோருக்கும் அனுப்பினேன். உடனே ஒருவனிடம் இருந்து ரிப்ளை..மகனே சிவாஜி ஸ்டில்லா அனுப்புற? கைல கெடச்சே தீந்தே!! கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், சிவாஜியை பிடித்த எனக்கே அவ்வளவு எரிச்சல் வந்ததே..அவன் இந்தக் காலத்து யுவன்! எப்படி இருந்திருக்கும். அந்த "மகனே சிவாஜி ஸ்டில்லா அனுப்புற? கைல கெடச்சே தீந்தே!!" அப்படியே அவன் இதயத்தில் இருந்து வந்திருக்க வேண்டும். சரி அதை விடுங்கள். இன்றைய மெயிலை திறந்தேன். எடுத்தவுடன் எழுதி இருந்தது. Scroll down..சரி நானும் Scrollனேன். கொஞ்ச தூரம் போனதும் Scroll down slowly..ஏண்டா நான் இப்போ வேகமா scroll பண்ணா உங்களால என்னடா பண்ண முடியும்? சூப்பர் ஸ்டாரை விட இவர்களுடைய பில்டப் இருக்கிறதே..தாங்க முடியவில்லை! சரி நீ ஓவரா பில்டப் கொடுக்காதே படத்தைக் காட்டு என்று நீங்கள் சொல்வது எனக்குப் புரிகிறது. இனி படம்!

கார்ல இருந்து இறங்கி கண்ணாடியை ஸ்டைலா மாட்றாரு!
Image hosting by Photobucket

ஸ்லோ மோஷன்ல ஸ்டைலா நடந்து வர்றாரு!

அப்படியே மிட் ஷாட்ல முடி ஆட்றதை காட்றோம்!

வச்சுக்க நீ ன்னு பூ கொடுத்து ப்ரபோஸ் பண்றார்!
[இங்கே ஒன்னு கவனிச்சேளா, ஷ்ரேயா கொழந்தைக்கு சத்த வயசானாப்ல இல்ல?
தலைவருக்கு அக்கா மாறின்னா இருக்கா?]

தோ பார் கண்ணு..நம்ம பெர்சனாலிட்டி, ஸ்டைல் பாத்து நம்ம பின்னாடி நெறைய..நெறைய பப்ளீஸ் வந்தாங்க..ஆனா நம்மள யாரும் டச் பண்ண முடியலை! நமக்கு இந்த ரோஜா கொடுத்து தாஜா பண்றது எல்லாம் வராது கண்ணா..ஆனாலும் கொடுக்கிறேன். டக்குன்னு ஒன்னு சொல்றேன், நெஞ்சுல வச்சுக்க..இதுல பூவும் இருக்கு;முள்ளும் இருக்கு. ஒரு ஆம்பளைக்கு வேண்டியது வாழ்க்கை பூரா நிம்மதி. ஒரு பொம்பளைக்கு வேண்டியது ஒரு நல்ல புருஷனோட அன்பும் பாதுகாப்பும்! நீ இந்த பூ மாதிரி என் வாழ்க்கையில சந்தோஷத்தையும் நிம்மதியையும் தரனும். நான் இந்த முள்ளு மாதிரி உன் வாழ்நாள் பூரா பாதுகாப்பா இருப்பேன்! இது எப்படி இருக்கு?

18 Responses
  1. யோவ் சிவம்,

    நான் தான் ஓவர்னா, நீர் எனக்கும் ஓவரா இருக்கீறே?

    தலைவர் எனக்குப் புடிக்கும், அதுக்காக என் ஷ்ரேயா குட்டிய ஓவரா ஓட்டாதீர்! ஹிஹி..

    ஷ்ரேயான்ன எனக்கு கொஞ்சம் இஷ்டம். ஹிஹி..


  2. உங்களை மாதிரியே CTSல ipod வாங்குன நம்ம தோஸ்த் ஒருத்தன் சிவாஜி படங்களை நேத்து மெயில் அனுப்பியிருந்தான். நான் நீங்க போட்டிருக்க இதே தலைப்புல போஸ்ட் பண்ணலாம்னு நெனச்சிட்டே இருந்தேன்...திடீர்னு தமிழ்மணத்துல உங்க பதிவைப் பாத்து ஆச்சரியம். எனக்கும் எனுமோ உங்க ஸ்ரேயா குட்டி கொஞ்சம் வயசான மாதிரி தாங்க தோணுது. அப்புறம் உங்க மகளிர் தின ஓவியங்களையும் பாத்தேன்...நல்லா இருக்கு.Modern Artன்னா உங்களுக்கு ரொம்ப விருப்பம் போலிருக்கு?


  3. கைப்புள்ள

    ஆக மொத்தத்துல முந்திரி கொட்டை மாதிரி சிவாஜி பட ஸ்டில்ஸ் போட்டு மற்ற வலைப்பதிவாளர்கள் யாரையும் போட விடாமல் செய்து எல்லோருடைய வயித்தெறிச்சலையும் கொட்டிக் கொண்டிருக்கிறேன் என்று தெரிகிறது!
    இதானே வேணாங்கிறது? ஏங்க எல்லாரும் என் ஷ்ரேயா குட்டியையே இழுக்குறீங்க? எனக்கு அழுகாச்சியா வருது தெரியுமா?

    எனக்கு சின்ன வயசுல இருந்தே ஓவியங்கள் வரையிற பழக்கம் இருக்கு, ஆனா என்ன இந்த மாடர்ன் ஆர்ட் மட்டும் இன்னும் புரியலை. சரி நம்மளும் வரைஞ்சு பாக்கலாம்னு பண்ண முயற்சி தான் அது. நல்ல இருக்குன்னு வேற சொல்லிட்டீங்க? இனிமே பாருங்க? வலைப்பதிவில் ஓவியப் பதிவா போட்டுத் தள்ளி ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்திர்றேன்!

    மோகன்,

    அப்படி என்ன தெரியாத விஷயத்தை நீங்க இங்கே தெரிஞ்சுகிட்டீங்க?


  4. Anbu pradeep,

    Vanakkam pala urithakuga.Nalla tamil-i innaiyathil padithu mikuntha natkkal aakiyirutha samayam en nanban Ungal i-pod kathai-i annupi padika sonnan.Sivaji padangalum arumai...

    Ennpu.... yarrumae pinootam ootalainu varuthapattikaa....Appurama anuppi vaccha mohan thambiya kindal pannurikalae....?Idhu sariya..?


  5. //ஆக மொத்தத்துல முந்திரி கொட்டை மாதிரி சிவாஜி பட ஸ்டில்ஸ் போட்டு மற்ற வலைப்பதிவாளர்கள் யாரையும் போட விடாமல் செய்து எல்லோருடைய வயித்தெறிச்சலையும் கொட்டிக் கொண்டிருக்கிறேன் என்று தெரிகிறது!//

    சே! சே! அப்பிடியெல்லாம் ஒன்னுமில்லீங்க. யார் போட்டா என்ன? மக்கள் பாத்து ரசிச்சாங்கன்னா அது போதும்...என்ன நான் சொல்றது?


  6. // சிவாஜி - தி பாஸ் //
    அண்ணாச்சி, எது எப்படியோ, தலைப்பை கலக்கலா போட்டு எல்லாரையும் திரும்பி பார்க்க வைச்சுட்டீங்க !!! பாராட்டுக்கள் !!

    ****

    ஆமா, இந்த போட்டாக்களை நானும் மெயில்ல பார்த்தேன்.. நல்லாயிருக்கு.. இருந்தாலும் ஸ்ரேயா தலைவருக்கு அக்கான்னு சொல்றதெல்லாம் ரொம்ப ஓவர்.. ஆக்சுவலா ஸ்ரேயா தலைவருக்கு பாட்டி மாதிரி இருக்காங்க :-)) நீங்க என்ன சொல்றீங்க ???


  7. thamizha,

    thangaludaya varugaikkum, karuthukkum mikka nandri!

    aiyyo, naan kindal ellam pannalaipu, chumma velayattukku thaane, namma ellarum enna appadiya pazhagurom?

    kaipulle,

    aaha, enne oru paranthu virintha ennam! rightu vidu :)

    paiyya (somberinnu koopida pudikkalaipa!)

    athaan naan firste ezhuthi irukkene, comments varumnu ethir paarthu thaanepu thalaivar perai pottu, poster ellam otti irukkom. ange nikkirom naangallam!


  8. Really a good post..Thalaivar looks younger than what he is in real. I dropped here from the link to you ipod comment..Really enjoyable while reading..


  9. Blogeswari Says:

    Super!! Thanks for the pics


  10. வயசான மாதிரி வயசான மாதிரின்னு சொல்லிட்டே எத்தனை தடவை குட்டின்னு கலாய்க்கறீங்க...

    மாப்பு, ரொம்ப ஓட்டினா சிவாஜி வைப்பார் ஆப்பு... :)


  11. ரஜினி ஸ்ரேயா பக்கத்துல நிக்கறதல் ஸ்ரேயாவுக்கு வயசு ஆன மாதிரி தெரியுதுங்கோ


  12. "rose + thorn" explanation - good creativity! pat on..


  13. kicha,

    thanks for that. i think you have only looked at that piece over rajini's charm :)


  14. Anonymous Says:

    உங்க தலைவரு ஏன் எல்லாப் பட்த்துலேயும் வாயைப் பொளந்துக்கிட்டே இருக்காரு


  15. அனானிமசு கண்ணு!

    அப்டி அல்லாம் தலைவர நக்கல் பண்ணக் கூடாது இன்னா! புர்தா...


  16. Sivabalan Says:

    Nice blog. Keep it up.


  17. Neodawn Says:

    Nice blog... In fact a Great blog...

    A link of interest about the offer by Suleka.com...
    http://www.selectiveamnesia.org/2006/04/06/not-done/


  18. கிரி Says:

    //முக்கியமான பதிவாய் இருந்தால் தான் நான் என் நண்பர்களுக்கு மெயில் அனுப்பி, பாத்திரம் தேய்ச்சது தேய்ச்ச வரைக்கும் இருக்கட்டும், உடனே இங்கே வா என்று புருஷன்காரன் அதட்ற மாதிரி, எந்த கோட் அடிச்சிட்டு இருந்தாலும் மொதல்ல என் ப்ளாகை படிங்கப்பா என்று அனுப்புவேன்//

    :-)))))))

    // இங்கே பார்றா!! பிறகு என்ன ஒரே குஷி தான். எல்லாத்தையும் சகட்டு மேனிக்கு செலக்ட் செய்து பதிந்ததில் எல்லாம் ஒழுங்காய் தெரிந்தது! அப்பாடா..வீட்டில் சாப்பிடக் கூப்பிடுகிறார்கள். வயிறு என்ன? மனசு வரைக்கும் நெறைஞ்சு கெடக்கே//

    ;-)

    //. இன்றைய மெயிலை திறந்தேன். எடுத்தவுடன் எழுதி இருந்தது. Scroll down..சரி நானும் Scrollனேன். கொஞ்ச தூரம் போனதும் Scroll down slowly..ஏண்டா நான் இப்போ வேகமா scroll பண்ணா உங்களால என்னடா பண்ண முடியும்? //

    ஹா ஹா ஹா

    // பழூர் கார்த்தி said...
    // சிவாஜி - தி பாஸ் //
    அண்ணாச்சி, எது எப்படியோ, தலைப்பை கலக்கலா போட்டு எல்லாரையும் திரும்பி பார்க்க வைச்சுட்டீங்க !!! பாராட்டுக்கள் !!

    ****

    ஆமா, இந்த போட்டாக்களை நானும் மெயில்ல பார்த்தேன்.. நல்லாயிருக்கு.. இருந்தாலும் ஸ்ரேயா தலைவருக்கு அக்கான்னு சொல்றதெல்லாம் ரொம்ப ஓவர்.. ஆக்சுவலா ஸ்ரேயா தலைவருக்கு பாட்டி மாதிரி இருக்காங்க :-)) நீங்க என்ன சொல்றீங்க ??? //

    ஹா ஹா ஹா ஹா