சனிக்கிழமை மதியம் டிவி பார்த்துக் கொண்டிருந்தேன். தம்பி பட விமர்சனம். மாதவன் விழிகளை உருட்டி மிரட்டிக் கொண்டிருந்தார். மணி பார்த்தேன். 2 அடித்து 5 நிமிடம். சரி என்று கிளம்பி திருவான்மியூர் ஜெயந்தி தியேட்டருக்குக் கிளம்பினேன். ஆஹா! என்னே ஒரு தியேட்டர்..நவீனமும், பழமையும் ஒருங்கே அமைந்த தியேட்டர். கொட்டகையை இருட்டாக்குவதற்கு பழங்காலத்தில் கதவை சாத்தி விட்டு ஒரு நீல நிற திரையை மூடுவார்கள். அது இன்றும் அங்கு இருக்கிறது. டிடிஎஸ் சவுண்டுடன்...தம்பி படம்!

நல்ல விஷயங்களாய் எனக்குப் பட்டது, படத்தின் கருவும், மாதவனின் நடிப்பும், இளவரசுவும், ஆங்காங்கே சில நச் வசனங்களும்!

1. உபதேசம் பண்ணா எவன் கேக்குறான்; ஒதச்சா தான் கேக்குறான்
2. நம்ம நாட்ல சைலன்ஸ் கூட சத்தம் போட்டு தானே சொல்ல வேண்டி இருக்கு
3. வீரன்றவன் அடுத்தவன் உசுர எடுக்குறவன் இல்லை; அடுத்தவனுக்காக உசுரையும் கொடுக்க தயாரா இருக்குறவன்!
4. பஸ்ல பத்து பைசா டிக்கட் விலை ஏத்திட்டா வயிரு பத்திகிட்டு எறியுது; இவன் பஸ்ஸை எறிக்கிறான், வேடிக்கை..வேடிக்கை!

ஒரு நல்ல தரமான படத்தை விறுவிறுப்பாய் கொண்டு செல்லத் தெரியாமல் தொதப்பி இருக்கிறார்கள் என்றே எனக்குப் பட்டது. முன் சீட்டில் கால் வைக்கக் கூடாது என்று தெரிந்தும் என் கால்களால் முதல் பாதி படத்தை அப்படித் தள்ளினேன். அரைகுறையாய் அந்தரங்கத்தில் நிற்கும் பல காட்சிகள்! இடைவேளைக்குப் பிறகு அம்மா, அப்பா, தங்கை பாசம். தாங்கமுடியவில்லை. எந்த வீட்டில் அண்ணன்காரன் தங்கச்சியை தங்கச்சி என்று கூப்பிடுகிறான் என்று எனக்குத் தெரியவில்லை. ஹீரோ தம்பியிடமோ, தங்கையிடமோ ஏதாவது வம்பிழுத்து விட்டு ஓடுவது, குடும்பத்தில் எல்லாரும் ஸ்லோ மோஷனில் துரத்துவது மாதிரி இனிமே யாராவது படம் எடுங்க, துரத்தி துரத்தி அடிப்பேன்! மாதவன் பாஷையில் சொல்லனும்னா ஒதப்பேன்! ஒதப்பேன்! நிறுத்துற வரை ஒதப்பேன்....ஆமா! என்னை பொறுத்தவரை சமீபத்திய படங்களில் கில்லியில் தான் அம்மா, அப்பா, தங்கை பாசம் இயல்பாக இருந்தது!

நான் இந்தப் படத்தை பார்க்கப் போன காரணம், என்னம்மா, தேவி ஜக்கம்மா உலகம் தலைகீழா தொங்குதே ஏனம்மா? என்று மாதவன் கேட்கும் கேள்வியை நான் தினமும் பல முறை எனக்கு நானே கேட்டுக் கொள்கிறேன். சரி, அதற்கு இந்தப் படம் பார்த்தால் தீர்வு கிடைத்து விடுமா என்று அர்த்தமல்ல, சரி நமக்குள் இருக்கும் கேள்வியே இந்த இயக்குனருக்கும் இருக்கிறதே என்ற ஒரு நட்புணர்வு தான் அன்றி வேறொன்றுமில்லை.

அது படம் என்பதாலும், அவர் படத்தின் நாயகன் என்பதாலும் எங்கு பிரச்சனை நடந்தாலும், அங்கு சென்று ஒரு அடி..ஒரே அடி அடித்து எதிரிகளை விரட்டி விடுகிறார். ஆனால் இது வாழ்க்கை என்பதாலும், இதில் நான் என்பதாலும் என்னால் அப்படி எல்லாம் செய்து உலகைத் திருத்த முடியவில்லை! நானும் கண்ணாடி முன் நின்று என் கண்களை எல்லாம் உருட்டி இப்போ நான் என்ன செய்ய என்று மாதவன் மாதிரி கத்திக் கொண்டிருந்தேன்..வா, வந்து இத பொறுக்கு! என்று பக்கத்து வீட்டில் இருந்து ஒரு குரல்! இதெல்லாம் எனக்குத் தேவையா?

படம் ஓடுதோ இல்லையோ, அந்தப் படம் பாக்குற நேரத்துலயாவது மாதவன் சொல்றது நியாயம் தானே என்று நமக்கு ஒரு கணம் தோன்றினால் அதுவே இயக்குனருக்கு ஒரு பெறும் வெற்றி தான்..

என்னம்மா தேவி ஜக்கம்மா உலகம் தலைகீழா தொங்குதே ஏனம்மா?

14 Responses
  1. Anonymous Says:

    //நானும் கண்ணாடி முன் நின்று என் கண்களை எல்லாம் உருட்டி இப்போ நான் என்ன செய்ய என்று மாதவன் மாதிரி கத்திக் கொண்டிருந்தேன்

    Classic :-)

    -- Vignesh


  2. >>சமீபத்திய படங்களில் கில்லியில் தான் அம்மா, அப்பா, தங்கை பாசம் இயல்பாக இருந்தது! <<

    ஆமாம்... அதுல செம நாட்சுரல் அதனால்தான் இரசிக்க முடிந்தது..


  3. Anonymous Says:

    un blogsil naan eludiya palaya comments ellam enna kaanamal poivittadu...

    check that

    Balaji K.R.S.


  4. Sivakumar Says:

    நானும் பாக்கனும்ன்னு நெனச்சிகிட்டு இருக்கேன். சில வசனங்கள் உண்மையாவே நல்லா இருக்கு.

    "ஆயுதம் வாங்கின காசுக்கு அரிசி வாங்கி இருந்தா இந்த நாட்லே பஞ்சமே இருக்காது" நல்ல வசனங்கள்.

    சொல்ல மறந்துட்டேன். நம்ம வெங்கடேஷ் அவன் தங்கச்சிய தங்கச்சின்னு தான் சொல்வான். இப்பவும் சில பேர் சொல்லி கிட்டு இருக்காங்க!

    நீ சொன்னமாதிரி கில்லி படத்தில குடுப்பத்தை இயல்பா காட்டல. அப்படி காட்டறது இயல்பாக்கிட்டாங்க. இப்ப கில்லி இயல்பு தான் குடும்ப இயல்பாயிடுச்சு!


  5. Anonymous Says:

    What happend to your hollow scan Comments...
    Balaji K.R.S.


  6. samudayatha pathi kavalaye padama ore vettum kuthuma eduthurukka aadhi, paramasivan, madarasi pondra padathukku Thambi better.

    Pooja va rowdynga tease pandrappo.

    "Ippo nan ennatha seiyya"nnu ketkura scene than class.

    sila edarthamana visayangal missing adu unmai than.


  7. Anonymous Says:

    testing...


  8. hello dha, i guessed that the movie will be a crap! neways, I appreciate your boldness in going for such movies ;-)


  9. "Thambi" vimarsanam nalla irukku.I liked this dialogue in thambi,"Lanjam vaanginen,ulle pottargal.Lanjam kodutthen viliye vittaargal"..And in the jakkamma song..I couldn't remember the exact line.."Kaatrukke moochu muttudhu" has power in it..


  10. நேர்மையான விமர்சனம்.


  11. நல்ல விமர்சனம் !! ஆனா, மாதவன் லெவலுக்கு நீங்களும் கண்ணாடி பாத்தெல்லாம் கத்தியிருக்க
    வேணாம் :-))


  12. நல்ல விமர்சனம்.

    தம்பி அந்நியன் மாதிரி நமக்குள்ள எங்கயோ ஒளிஞ்சுட்டுதான் இருக்கார்.
    அவரை வெளிய கொண்டு வந்தா நம்மள கும்பியில அடிச்சு கம்பியில தொங்க விட்டுருவாங்க.
    அதுனால நம்மாளு செஞ்ச மாதிரி வீட்டுக்குள்ளயே (அட பக்கத்து வீட்டுல கமெண்டு குடுக்குற ஆளா இருந்தா மனசுக்குள்ளயே) சொல்லிக்கிற வேண்டியதுதான்.

    இல்லையா, இருக்கவே இருக்கு நம்மள மாதிரி ஆளுகளுக்குன்னே தூக்கம். கனவுல மாதவன் என்ன ஜோதிகா மாதிரி கூட கண்ணை உருட்டிக்கலாம்.


  13. //எந்த வீட்டில் அண்ணன்காரன் தங்கச்சியை தங்கச்சி என்று கூப்பிடுகிறான் என்று எனக்குத் தெரியவில்லை.//

    இல்லையே,
    நிறைய வீட்டில இப்பிடிக் கூப்பிடுகிறார்களே?


  14. சீனு Says:

    நானும் படம் பார்த்தேன். ஆனால், மாதவனை சீமானாக பார்க்க வேண்டும் (உதா, "பெத்தவங்க உன்னை கல்லூரிக்கு படிக்க அனுப்பியிருக்காங்க"). இந்தப் படம் முழுக்க சீமானின் படம்.

    படம், பழைய திரைக்கதை (அம்மா தங்கச்சி பாசம் etc) தான், ஆனால் வசனங்கள் அருமை (அதுவும் மாதவன் மேடையில் பேசுவது).

    நான் ரசித்தது, போலீஸ் தமிழில் "உன் பெயர் என்ன?"-னு கேட்கும் பொழுது மட்டும் பதில் சொல்வது...