இரவு 11 மணிக்கு மேல் எ·ப் எம் ரேடியோவில் பழைய பாடலைக் கேட்டுக் கொண்டே தூங்கும் சுகம் இருக்கிறதே..ஆஹா! தேவாம்ருதம்!! நேற்று ஒலிபரப்பான
எனக்கு மிகவும் பிடித்த பாடல்; டி.எம்.எஸ், பி.சுசீலா குரலில்..

ஆண்: நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்
என் மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

பெண்: நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்!

ஆண்: நீ வருகின்ற வழி மீது யாருன்னைக் கண்டார்
உன் வளை கொஞ்சும் கை மீது பரிசென்ன தந்தார்
உன் மலர்க் கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்
உன் வடிவான இதழ் மீது சுவை என்ன தந்தார்!

பெண்: பொன் வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளை கொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற!

ஆண்: நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்
என் மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

பெண்: நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்!

எத்தனை கருத்தாழமிக்க பாடல். காதலன் என்று சொல்லிவிட்டு, அந்தப் பெண்ணின் மீது சந்தேகப் படலாமா என்ற கேள்வியெல்லாம் கேட்காமல் பாட்டை
கேட்டால்..[சீதாவையே சந்தேகப்பட்ட ராமன் இருந்த இடம் தானே இது..]

அந்தப் பெண் பாரதியில் புதுமைப் பெண்ணாக இருக்க முடியாது..அப்படி இருந்திருந்தால், போடா நீயுமாச்சு உன் காதலுமாச்சு என்று தூக்கி எறிந்து விட்டு
போயிருப்பாள்! பழைமை ஊறிய பெண்ணாகவும் இருக்க முடியாது..அப்படி இருந்திருந்தால், கண்ணைக் கசக்கிக் கொண்டு காதலனின் காலில் விழுந்திருப்பாள்!
இரண்டு பேருக்கு இடைபட்டவளாய் இருப்பவள் இவள்!

சந்தேகக் கண் கொண்டு நோக்கும் காதலனை நோக்கி சங்கீதமாய் தக்க பதிலளிக்கிறாள் இவள்! இதில் எனக்கு ரொம்பப் பிடித்த வரி "உன் இளமைக்குத்
துணையாக தனியாக வந்தேன்!" ஆஹா! ஒரு வரியில் காதலும் காமமும் இவ்வளவு அழகாகச் சொல்ல முடியுமா என்ன? அவள் தனியாக வருவது அவனுடைய
இளமைக்குத் தானே துணை!!

கவியரசு கவியரசு தான்..ஆமா, பாட்டு நான் புரிந்து கொண்ட கருத்தைத் தானே சொல்கிறது? என் சிறு மூளைக்கு எட்டாத வேறு கருத்திருந்தால், அதை
யாராவது தெரிவித்தால் மகிழ்வேன்!

கொஞ்சம் இருங்க! இந்தக் காலத்து பாட்டு ஒன்னு கேக்குதே?!

கட்டு கட்டு கீரக் கட்டு
புட்டு புட்டு ஆஞ்சுப்புட்டு
வெட்டு வெட்டு வேரவிட்டு
ஓ! பப்பைய்யா?

திருவிளையாடல் செண்பகப் பாண்டியன் ஸ்டைலில்:

ஆஹா! அற்புதமான பாட்டு! ஆழ்ந்த சொற்கள்! தீர்ந்தது சந்தேகம்! யாரங்கே...

[குறிப்பு: நான் இந்தக் காலத்து எல்லா பாட்டுக்களையும் குறை சொல்லவில்லை!]

13 Responses
  1. Suresh Says:

    லியோனியின் நிகழ்ச்சி பார்த்தது போல் அருமையாக இருன்தது.


  2. Pavals Says:

    தல... ஒரு கோணார் நோட்ஸே போட்டடுட்டீங்க.. இப்படி ஒரு தெளிவோட இந்த பாட்டை கேட்டதேயில்லைங்க.. கலக்கல்..


  3. Suresh Says:

    >>கட்டு கட்டு கீரக் கட்டு
    >>புட்டு புட்டு ஆஞ்சுப்புட்டு
    >>வெட்டு வெட்டு வேரவிட்டு
    >>ஓ! பப்பைய்யா?


    உங்களுக்கு இதற்கு பொருள் விளங்கவில்லையா?

    >>கட்டு கட்டு கீரக் கட்டு
    --இதற்கு வாழ்க்கை ஒரு கீரைக்கட்டு போன்றது என்று பொருள்.

    >>புட்டு புட்டு ஆஞ்சுப்புட்டு
    --இதற்கு வாழ்க்கையில் தேடல் முக்கியம்.

    >>வெட்டு வெட்டு வேரவிட்டு
    --இதற்கு கெட்டவற்றை விட்டுவிட்டு நல்லவற்றை மட்டும் வாழ்க்கைக்கு எடுத்துக்கொள் என்று பொருள்.

    >>ஓ! பப்பைய்யா?
    'பப்பையா' விற்கு எனக்கு அர்த்தம் விளங்கவில்லை.
    :-)


  4. சுரேஷ்

    லியோனி இந்தப் பாட்டைப் பற்றி ஒரு பட்டிமன்றத்தில் பேசியதாக எனக்கும் ஞாபகம் வருகிறது.

    பாப்பைய்யா என்றால் தெரியவில்லை? நீங்கள் பாப்பாய் கார்ட்டூன் ஷோ பார்ப்பீர்களா? அதில் தான் அவர் கட்டு கட்டாய் கீரை சாப்பிடுவார்! அதைத் தான் பாட்டு சொல்கிறது..புரியுதா?

    ராசா

    நான் சொன்னது பாதி - கேட்டுப்
    பார்த்தால் தெரியும் மீதி!


  5. vaada-vaada vaada-vaada one day cricket-u!
    aadiputtaa kaaliyaakum rendu wicket-u!

    Enna imagination? itha vida ungalukku vera enna venum?
    thirumba thirumba
    'vaadi-vaadi vaadi-vaadi
    malar mugame
    unnoda koonthal thaane
    meka koottame'
    appadinne ezhuthikittu irukka mudiyuma? ;) Bore adikkaatha!


  6. நான் ஒன்னும் அதையே எழுத சொல்லலையே! இன்னைக்கு கூட ஒரு பாட்டு கேட்டேன். என்ன படம்னு தெரியலை..

    "நான் மாடி வீடு, நீ மேலே ஏறி வாடா"

    இப்படி ஒரு வரி! புதுமையை வரவேற்க வேண்டியது தான்..அதுக்காக அசிங்கத்தை புதுமைன்னு சொல்றது தான் சரியில்லை!

    பிரதீப்


  7. ponniyin selva,

    "appan panna thappule, AththA petha vethalai"..ippadi ezhuthuna ungalukku appadiye puththunarchiya irrukka?

    sagikkale intha maathiri pAttu.


  8. athaye "sinthiya venpani sippiyil muthaachu en kannammaa" appadinnu kavithai nayamaa ezhuthinaa mattum nallaa irukkaa? ;)


  9. nalla irukko illayo, aabasama illaye.


  10. That song is the higher most symbol of MALE SAUVANISM. You are upraising that as " wow.. what a song.. highly poetic.. etc., etc.,. At the time of romance itself that hero suspecting the heroin.. and that mad girl also answering that fellow that i am coming alone for your youth..

    Hero kizhavana irunthaa - appo
    gumbalaa varuvaangalaama? enna oru foolish thought.

    Highly idotic poem and dicussing about that poem in a grand manner is the A class male sauvanism.
    Pls dont be a male sauvanist, poonga poyi pozhappa paarunga pradeep.


  11. Siragugal,

    It seems you have not read my post properly. I have commented on the wrong thought of that lover and i appreciated that gal for giving him a proper answer..

    If that poet was a male chavenist, the gal would have cried for his thoughts instead of giving him this kind of answer..

    -pradeep


  12. Agnibarathi Says:

    Intha pAttai knojam thalaikIzhA padichu pArunga. The girl says that a bee had mistook her face for a flower and rushed at her. So she had tried to save herself by her hand and came running with her hair flustered to see the hero. So, when the hero sees her she looks frightened, worried and her hair is dishevelled, her hands are near her face. The hero seeing this wants to know who had the courage to play with his lover and asks so that he may do justice to that guy. He is genuinely concerned about his lover's fear. Inge chauvinism, santhEgam ellAm enge varuthu? MakkaLe, be(e) positive!!!!


  13. Anonymous Says:

    Pradeep,
    Nice analysis. Agnibarathi thanks for clarifying. That makes sense.