நான் எழுதிய ஹைக்கூக்கள் சில உங்கள் பார்வைக்கு:

கூட்டைத் திறந்ததும்
கலவரப்பட்டது
ப்ராய்லர் கோழி

போக்கிரித்தனமாய் ஒரு
விசில்
சமையலறையில் குக்கர்

இரு சட்டைகளும்
ஒரு கார்சட்டையும்
உலர்ந்து கொண்டிருந்தன
கல்லரையில்

பூனையின் குறுக்கே நான்
அதற்கு
எலி கிடைத்ததோ என்னவோ

0 Responses