என் கவிதைகளுக்கு 13 வயது.. நான் 9வது படிக்கும்போது கவிதை எழுதத் துவங்கினேன். school ல் தனித் தனியே உட்கார்ந்து படிக்க சொல்வார்கள். எனக்குத் தெரிந்து top rank ல் உள்ள மாணவர்களைத் தவிர வேறு யாருமே அப்போது படிப்பதில்லை..

யாராவது ஒருவன் புது படம் பார்த்து விட்டு வந்திருப்பான். அவன் கதை சொல்வான்..எனக்கு ஒருவன் 'சின்னக் கவுண்டர்' கதை சொன்னான்..சிறிது நாள் கழித்து அந்தப் படத்தைப் பார்த்தேன்..ஒரு scene பிசகாமல் சொல்லி இருந்தான். நான் மிகவும் ஆச்சர்யப்பட்டுப் போனேன்.

சரி கவிதைக்கு வருவோம்..முதலில் என் கவிதைக்கு பழி ஆனது obviousely நிலா தான்..இன்று நினைத்துப் பார்க்கிறேன்..நிலவுக்கு மட்டும் வாயிருந்திருந்தால் எல்லா கவிஞர்களையும் மெட்ராஸ் பாஷையில் திட்டி இருக்கும்..அவ்வளவு படுத்துகிறோம் நிலவை..பாவம்!!

என் நினைவில் உள்ள வரை நான் எழுதிய முதல் கவிதை:

நிலவைப் பெண் பார்க்க மேகத்தில்
நட்சத்திர ஊர்வலம்!


[கவனிக்க: அது 'வானத்தில்' என்று இருக்க வேண்டும், எனக்கு அப்போது மேகத்துக்கும், வானத்துக்கும் வித்தியாசம் தெரியாதோ என்னவோ!!]

வெள்ளித் தட்டு போல் உள்ள நிலாவே
உன்னை யாராவது தூக்கிச் சென்று விடுவார்
என்று தான் இந்த நட்சத்திரக் காவலா?!
[யாருமே சொன்னதில்லை!!.. கவிதெ கவிதெ!!]

ஏழை என் கடன் அடைக்க
எனக்கொரு யோசனை!
வெள்ளி நிலவே உன்னை அடகு வைக்க!!


[இந்தா நிலாக்கண்ணு..கோச்சுக்காதேமே..நான் இன்னா பண்றது, உன்னை நெனைச்சா கவிதை அருவி மாதிரி கொட்டுது, ஆனா அது எழுதனும்னு உட்கார்ந்தா..இந்த எழுத்து..வார்த்தை..]

இப்போ சொல்லுங்க, நிலா திட்டுமா? திட்டாதா?

அப்புறம் மெல்ல காதல் பக்கம் போனேன்..

பெண்ணுக்கு பஞ்சு போன்ற மென்மையான உடல் கொடுத்து
அதில் ஏன் இரும்பாலான இதயம் கொடுத்தாய்?


[அடஅடா..தேவதாஸ் range க்கு எழுதியிருக்கேன்யா!! இதெல்லாம் சத்தியமா cinema பாத்து கெட்டுப் போனதால வந்தது தான்..இல்லைன்னா 9வது படிக்கிற பையனுக்கு எப்படிய்யா இதெல்லாம்!!]

விலைவாசி ஏற்றத்தால்
அவள் மானமும் விலை ஏறியது


[ஒரு வேளை பிஞ்சுலேயே பழுத்திட்டேனோ?]

இப்படி ஆரம்பித்தது என் கவிதைப் பயணம்! பிறகு +1, +2 வில் கதை/கவிதை எழுதுமாறு தலைப்பு ஒன்றை கொடுப்பார்கள். கவிதையின் தலைப்பு பெரும்பாலும் குயில், மயில், நிலா [நம்ம ஆளு], வானவில் என்று இருக்கும்..எனக்கு வார்த்தைகள் எங்கிருந்தோ சரம் சரமாய் வந்து விழும்..எழுதித் தீர்த்திடுவேன்..வாத்தியார்களும் 10 க்கு 7, 8 என்று போட்டு விடுவார்கள். ஆனால் இதுவரை எந்த வாத்தியாரும் என்னை ஊக்குவிப்பது இருக்கட்டும், நல்லா இருக்குப்பா என்று ஒரு பொய் கூட சொன்னதில்லை..ஒரு வேளை அவர்களுக்கு கவிதை பிடிக்காதோ என்னவோ!

இனிமே அப்பப்போ என் கவிதைகளுடன் உங்களை முற்றுகை இடுவேன்..ஜாக்கிரதை!!