விருமாண்டியில் கதை சொன்ன விதம் எனக்கு மிகவும் பிடித்து விட்டது..ஒவ்வொரு மனிதனுக்கு உள்ளும் ஒரு கொத்தாலத் தேவர், விருமாண்டி உண்டு..நான் 5 நாள் leave ல மதுரை போறேன்..so no blogs for 5 days!! :(( அதை விருமாண்டி கதையோட்டத்தில் சொன்னால் எப்படி இருக்கும் என்ற கற்பனை தான் இது..!

கொத்தாலத் தேவர் :

அந்த பயலைப் பத்தி பேசவே நாக்கு கூசுது! யாருன்னு கேக்குறீகளா, அதான் விருமாண்டி..விருமாண்டி!

Blog எழுதுறேன்னு எத்தனை பேரை கொன்றுப்பான்..அவனும் அவன் எழுத்தும். மனசுல சுஜாதா, அசோகமித்திரன், ஜெயகாந்தன்னு நெனைப்பு!
இவனை எல்லாம் படிக்க வைச்சாங்களே அவங்களைச் சொல்லனும்..அதாங்க அந்த சாமியே தண்டனை கொடுத்துருச்சு..1 மாசமா இருமிட்டு இருக்கானே, அவனுக்கு குணமாகுதா? bangalore ல தானப்பா இருக்கான். இங்கே இல்லாத doctor ஆ? போனானே, பெரிய ஆஸ்பத்திரிக்குத் தான் போனான்..doctor ஐ பார்த்தான்..அந்த பொம்பளை doctor ம் அவ கழுத்துல கிடந்ததை, அது என்ன கருமம்..என்னவோ scope ம்பாய்ங்க..வாயிலே நுழைய மாட்டேங்குது, கழுதை!! அதை எல்லம் எடுத்து அவன் நெஞ்சுல வச்சு மூச்சை இழுத்து விடு, அங்குட்டு திரும்பு, இங்குட்டு திரும்புன்னா..1 மாசமா இருக்குன்னு சொன்னவுடனே அந்தப் புள்ள நீ எதுக்கும் x-ray, blood test பண்ணிக்கோன்னு ஒரு போடு போட்டுச்சு..நம்ம ஆள் கிட்டத் தான் ஊரை அடிச்சி சேத்து வைச்ச காசு இருக்கே..சரி எதுக்கு வம்புன்னு எடுத்தான்..அவ சாதரணமா report வாங்கி பாத்துட்டு, ஒண்ணுமில்லை..அலர்ஜியா இருக்கும்னா!! நம்ம பயலுக்கு ஒண்ணும் இல்லயேன்னு சந்தோஷப்பட்றதா, இல்லை 500 செலவழிக்க வச்சுட்டு இப்ப இப்படி சொல்றாலேன்னு வருத்தப்பட்றதான்னு தெரியலை..இதோ அவ எழுதிக் கொடுத்த மருந்து மாத்திரை கூட தீந்து போச்சு..இன்னும் இருமிட்டு தானேப்பு இருக்கான்..

தோ, இப்போ ஐய்யா leave போட்டு ஊருக்கு போறாராம்..தன்னை குணப்படுத்திக்க..இவன் எக்கேடு கெட்டுப் போனா நமக்கென்னங்க? blog எழுத முடியாதேன்னுகவலையாம் இவருக்கு..ரொம்ப முக்கியம்!! இவன் blog படிக்கலைன்னா நமக்கு தூக்கம் வராதா? சோறு தண்ணி இறங்காதா? போப்பு!! உன்னை மாதிரி ஆயிரம் பேரை பாத்துருக்கோம்!! மக்களே நீங்க ஒன்னும் கவலை படாதீங்க!! இவனுக்கு இருமல் குறையப் போறதும் இல்லை, இவன் திரும்பி வந்து blog எழுதிநம்மளை கஷ்டப்படுத்தப் போறதும் இல்லை..சாமி நம்ம பக்கம் தான்..அவனுக்குத் தெரியும், யாரை எங்கே வைக்கணும்னு.. போடா!! போவியா!!


விருமாண்டி :

Blog எழுதுறேன்னு உங்களை எல்லாம் கொல்றேன்னு சொல்லி இருப்பாங்களே? சுஜாதா, அசோகமித்திரன், ஜெயகாந்தன்னு எனக்கு மனசுல நெனைப்புன்னு சொல்ல இருப்பாங்களே? அவங்கள்ளாம் யார் தெரியுமா? என்னோட குருக்கள்!! இன்னைக்கு நான் எதோ எழுதுறேன்னா அதுக்கு இவங்கள்ளாம் தான் காரணம். நான் இவங்க books எல்லாத்தையும் படிச்சதில்லை..ஆனா நான் படிச்ச கொஞ்சமே என்னை இந்த அளவுக்கு தூண்டி இருக்கு..நான் வாழ்க்கையை தேடிட்டு இருக்கேன்..சுஜாதா கூட, "எல்லா பிரபலம் ஆனவங்க கிட்டயும் ஒரு false start இருக்கும்னு சொல்றாரு.." அவங்களுக்கு வேண்டியதை கிடைக்கும் வரை அவங்க ஏதாவது புதுசு புதுசா முயற்சி பண்ணிட்டு தான் இருப்பாங்க!! அந்த மாதிரி தான் நான்..நான் எழுத்தாளனா, ஓவியனா, பேச்சாளனா, நடிகனா, பாடகனா, இந்த சமூகத்தையே மாற்ற வந்த பெரிய கொம்பனா...[நான் ஒரு நல்ல software engineer இல்லை என்பது எனக்குத் தெரியும்..so அந்த கேள்விக்கே இடமில்லை!] இப்படி ஆயிரம் கேள்விகளுக்கிடையில் என் பங்கு வாழ்க்கையை நான் தேடிக் கொண்டிருக்கிறேன்!

நான் எழுதும் blog ற்கு பாராட்டு கிடைக்கும் போது நீ ஒரு நல்ல எழுத்தாளன் என என் மனம் மார் தட்டிக் கொள்கிறது..
நல்ல ஒரு ஓவியம் வரையும் போது, நீ சிறந்த ஓவியன் என்று நினைத்து பெருமைப் பட்டுக் கொள்கிறது..
எப்படி இப்படி எல்லாம் பேசுகிறாய் என்று நண்பர்கள் வியக்கும் போது, இது தானே எனக்குத் தெரியும் என்று சந்தோஷம் கொள்கிறது..

இப்படி எல்லா வித முயற்சிகளுடன் என் வாழ்க்கை நதி ஒரு பேரிரைச்சலுடன் வளைந்து நெளிந்து போய்க் கொண்டே இருக்கிறது..நடுவில் சில சிறிய
பாறைகளாய் இந்த இருமல், காய்ச்சல் எல்லாம்..என் வேகம் தெரியாமல் என்னை அடக்கப் பார்க்கின்றன!! பாவம், அதுங்களுக்கு என்ன தெரியும், கால வெள்ளத்தில் அது என்னுள்ளே தொலைந்து போகும் என்று..

என்னடா இவன் தான் கொஞ்சம் light ஆ எழுதுவான்! இவனும் leave போட்டுட்டு போயிட்டான்னு நினைக்காதீங்க!! இதோ நீங்க 'ம்' சொல்றதுக்குள்ளே [ஒரு 5
நாள் கழிச்சி சொல்லுங்க!] வந்துருவேன்!! தினமும் இவன் இன்னைக்கு என்ன எழுதியிருப்பான்னு என் பக்கத்தில் எட்டிப் பார்க்கும் உள்ளங்களுக்கு என் நன்றி!!