நேற்று AID group ல் ஒரு கூட்டம் இருந்தது. திரு. பாமரன் அவர்கள் வந்திருந்தார். நீங்கள் எல்லோரும் பாமரனைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். சமூக சிந்தனை, சமுதாய முன்னேற்றம், ஜாதி ஒழிப்பு போன்ற நல்ல எண்ணங்களைக் கொண்ட குறைந்த பேர்களில் அவரும் ஒருவர்.
அவர் ஒரு நல்ல எழுத்தாளரும் கூட.

நான் அவருடைய படைப்புகளை நிறைய படித்ததில்லை. அவருடைய சினிமா விமர்சனங்களை சிலவற்றை படித்திருக்கிறேன். பாலச்சந்தரையும்,
மணிரத்னத்தையும் திட்டும் ஒரே மனிதர்! இதனாலேயே அவர் பிரபலம் ஆகிவிட்டதாக அவரே கூறுகிறார். 'நான் யாரையாவது பாராட்டி எழுதுனா
பத்திரிக்கையில போட மாட்டாங்க' என்கிறார்.

அவருக்கு எங்களை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி! Being a Software Engineers, சமூக நலனைப் பற்றி இவ்வளவு அக்கறை எடுத்துக் கொண்டு நீங்கள் வேலை செய்வது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். Software Engineers எத்தனை பேர் இன்னைக்கு society பத்தி யோசிக்கிறாங்க என்று சாடினார். [வழக்கம் போல!]

என்னைப் பொறுத்த வரை நான் சமூக சேவை செய்வதாயும், என்னை எல்லோரும் புகழ வேண்டும் என்றோ நான் நினைத்ததே இல்லை. நான் ஒவ்வொரு குடிமகனும் செய்ய வேண்டிய சமூக கடமையைத் தான் செய்கிறேன்! சமூக சேவைக்கும் சமூக கடமைக்கும் வானத்திற்கும், பூமிக்குமான வித்தியாசம் இருக்கிறது! என்னைப் பொறுத்தவரை சமூக கடமை செய்யாத எல்லோரும் குற்றவாளிகளே ஆவர்!

ஜாதியை அறவே ஒழிப்பது
மதச் சண்டை
எல்லோருக்கும் கல்வி [இன்று உள்ள கல்வி முறையை மாற்றி அமைப்பது!]
மக்கள் தொகையை கட்டுப்படுத்துவது
நல்ல வேலை வாய்ப்பு
ஏழ்மையை ஒழிப்பது
சுற்றுப்புறத்தை தூய்மையாய் வைத்துக் கொள்வது

இப்படி பல வேலைகள் நமக்கு இருக்கிறது! ஆனால் நமக்கு weekend வந்தவுடன் vcd ல் 4 படம் பாக்கணும், bar, pub போய் நல்லா தண்ணி அடிக்கணும்.

கொஞ்சம் யோசிங்கப்பா! [பாமரனின் பேச்சு கேட்டவுடனே நானும் அவரை மாதிரி ஆயிட்டேனோ?]

நான் சொல்ல வந்ததை விட்டு விட்டு எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறேன்!

பல சிந்திக்கும்படியான விஷயங்களை அவர் பேசினார். மணிரத்னம், பாலச்சந்தர், மதன், ஷங்கர், சுஜாதா, வாலி, வைரமுத்து, சேரன் எல்லோரையும் வாங்கு வாங்கு என்று வாங்கினார்.

1. பம்பாய் படத்தில் முஸ்லீம்களைக் கொல்வதெல்லாம் close-up shot ஆக இருப்பதாகக் கூறினார். படம் பார்க்கும் மக்கள் அந்த கலவரக் காட்சியின் போது 'ஓம் காளி' என்று ஆக்ரோஷமாய் கத்துவதாயும் இதெல்லாம் மக்களை தூண்டி விடுவதாகவும் சொன்னார். இதை தொடர்ந்து கோவையில் கலவரம், குண்டு வெடிப்பு
பற்றிச் சொன்னார். "இப்படி சண்டை போடாதீங்க என்று சொல்ல அப்போ அர்விந்த சாமியோ, மணிரத்னமோ வர்லியே" என்றார்.

2. 'கன்னத்தில் முத்தமிட்டால்' விடுதலைப் புலிகள் பற்றிய படம் தான்..அது எப்படி வெளியே வந்தது. ஏன் 'குற்றப்பத்திரிக்கை' வெளியே வரவில்லை.
மணிரத்னத்துக்கு ஒரு நியாயம், செல்வமணிக்கு ஒரு நியாயமா என்று கேட்டார்!அது சிறந்த படம் என்று விருது கொடுக்கிறீர்கள். அப்படி என்றால் நீங்கள்
விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறீர்களா? என்று கேட்டார்.

3. தமிழ் சினிமாவை பொறுத்தவரை, முதலமைச்சர் என்றால் கடத்துவது [தேசிய கீதம்], பிரதமர் என்றால் காப்பாற்றுவது [மாநகர காவல்..பல படங்கள்!]என்ற ஒரு formula வைத்துள்ளார்கள் என்றார்.

4. Basically விஷயம் தெரிந்து கொண்டு படம் எடுக்க வேண்டும் என்றார்!

5. நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது, அறிவோடும் இருக்கணும் இல்லைன்னா ரஜினி மாதிரி ஆயிடும்ன்றார் :)

6. வேலை மட்டும் செய்தால் போதாது, நாம் நிறைய படிக்க வேண்டும் என்றார். நமக்கு உலக வரலாறு தெரிந்திருக்க வேண்டும் என்றார்.

7. அவருடைய 3 புத்தகங்களை [புத்தர் சிரித்தார், தெருவோர குறிப்புகள், சாட்டிலைட் சனியன்களுக்கு] எங்களுக்கு தண்டனை என்று சொல்லி கொடுத்தார்.

8. முடிந்தால் ஒரு net magazine ஆரம்பிக்கச் சொன்னார்!

மொத்தத்தில் ஒரு வித்தியாசமான கூட்டமாய் அமைந்தது.